கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…
-
- 2 replies
- 1.4k views
-
-
எவளுக்கும் தாயாக..... எஸ். அகஸ்தியர் - சிறுகதை அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-] நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே…
-
- 0 replies
- 903 views
-
-
உஞ்சுக் உஞ்சு இது வேறை ஒண்டுமி;ல்லை எங்கட நாயைக்கூப்பிடுறபேர். எப்படி இந்தப்பெயர் வந்தது என்று எனக்குத்தெரியாது. எங்கட வீட்டில இருந்த எல்லா நாய்களையும் அப்படித்தான் கூப்பிட்டோம். எங்கட முதல் உஞ்சு ஒரு கறுப்பு வெள்ளையும் கலந்த நாய். அமைதியான நாய். நான் அது குரைத்ததை அதிகம் பார்த்ததே கிடையாது. ஆனால் வளவுக்கை யாரும் வந்த அமைதியாப்போய் கடித்து வைக்கும். அதிகமா தேங்காய் பிடுங்க வாறவனைத்தான் அது கடித்து வைக்கும். அதை எங்கட தாத்தாஎங்கையோ இருந்து பிடித்து வந்ததா அம்மா சொல்லுவா. தாத்தா இறந்த போது அந்த நாய் ஊளையிட்டு அழுததை நான் பார்த்திருக்கிறன். எண்பத்தி மூன்று கலவரத்தில ஆமி ரோட்டால போறவாற ஆக்களையெல்லாம் சுட்டபோது இது அவங்களைப்பாத்து பேய்தனமா குரைக்கும். அவங்கள் கோவ…
-
- 10 replies
- 2.1k views
-
-
எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள் கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் நிறைய பூ வைத்திருந்தாள். தெருவி…
-
- 0 replies
- 5k views
-
-
என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில…. அம்மா….அம்மா…அம்மா….எனக்கு அம்மாட்:டைப் போகவேணும்….. அவள் கதறக்கதற கொடிய கரங்கள் அவளை இழுத்துக் கொண்டு போகின்றன……என்ர பிள்ளை….என்ரை பிள்ளையை விடுங்கோ……என்ற அவளது கதறலையும் கேட்காமல் கார்த்தினி இழுபட்டுக் கொண்டு போனாள்….அவள் நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும் உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிற அவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்து நொருங்குகிறது. கமலினி…கமலினி….என்ன….பக்கத்த ில் படுத்திருந்த கணவனின் குரல் அவளை மீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவான அணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை….. என்ர பிள்ளையப்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
"உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். " என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் "எப்பிடித்தெரியும்?" என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் …
-
- 9 replies
- 1.7k views
-
-
ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…
-
- 2 replies
- 1.1k views
-
-
‘பங்க்’ குமார்: கல்லூரி மாணவர்..ரவுடி ஆன கதை ! | பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறிய மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, பாலியல் வல்லுறவு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டன இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டன ?
-
- 0 replies
- 1.6k views
-
-
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் குறுங்கதைகள். http://www.kaasi.info/pages/kathai.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
ஓர் ஊரில் ஒரு கிழவி.. அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா. சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?” “சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்” “வரச்சொல்லுங்க” “நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…” “எத்தினை வருஷமா இங்க கடை வச்…
-
- 2 replies
- 1.5k views
-
-
என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்! தேதி : ஆகஸ்ட் 15, 1977 நேரம் : இரவு 9.00 மணி இடம் : நுகேகொட பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார். வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும் நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான். நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்? இதற்கு பதில் கூற வேண்டுமானால் உனக்கு பன்றி, பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும் என்றான் நண்பன். பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று. அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள். பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது. இருந்தும் தன்னை ஒருவரும் விரும்பமாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி. பசு கூறியது: நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன். ஓஷோ கூறுகி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ …
-
-
- 1 reply
- 853 views
- 1 follower
-
-
மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின. 2007 செப்டெம்பர் 08 அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள் அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின் 20வத…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் …
-
- 0 replies
- 659 views
-
-
கலந்துரையாடல் - சுரேஷ்குமார இந்திரஜித் என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா. பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உட…
-
- 4 replies
- 792 views
-
-
சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும் ஆர்.அஜய் சிறுகதையோ, நாவலோ அது தான் வெளிப்படையாக சொல்லும் விஷயங்களோடு, நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் கற்பனையையும் நுண்ணுணர்வையும் செயலிறங்கக் கோருகிற சில விஷயங்களையும், அவற்றுக்கான மௌனங்களையும் இடைவெளிகளையும் தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது, இது நல்ல படைப்பின் ஒரு அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. சிறுகதையை எடுத்தால், அதன் நீளமும் காலமும் குறுகியவை என்று துவக்கத்திலேயே வரையறுக்கப் பட்டுவிடுவதால் அது பல பாதைகளில் கிளைக்கும் சாத்தியத்தை தன்னுள் இயல்பாகவே கொண்டுள்ளது. ஆலிஸ் மன்றோ முதலானவர்கள் எழுதும் நெடுங்கதைகளைத் தவிர்த்து, பொதுவாக ஒரு சிறுகதையின் நீளம் ஐந்து முதல் பத்து பக்கங்கள் கொண்டதாகவும…
-
- 2 replies
- 1.1k views
-
-
என்னடி நிஷா நட்டு நடுராத்திரில எழும்பி இருந்து அழுகிறா... என்று.. தனது 6 வயதேயான.. மகளை வெறித்துக் கொண்டிருந்தார்.. அம்மா தனம். தனமும் குடும்பமும்.. ஜேர்மனிக்கு அகதி என்று போய்..15 வருசம் கழித்து இப்ப தான் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலையில்.. வந்த அன்றே நடுநிசியில்.. நிஷாவின் அழுகைக்கு காரணம் தெரியாமல் அம்மா தனம்.. காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தாள். சொல்லண்டி.. என்ன வேணும். உடம்புக்கு ஏதேனும் செய்யுதே. வாயத் திறந்து சொல்லண்டி.. சொன்னா தானே தெரியும். என்ன.. வெக்கையாக் கிடக்கே. அம்மா னேய்.. அங்கை இருந்து அனுப்பின காசுகளை என்னன செய்தனீ. உந்த வீட்டுக்கு கரண்டும் போட்டு.. ஒரு பானும் வாங்கி வைக்க முடியாமலோன இருந்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
தாய்மையே வெல்லும்! "அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். "நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள். வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள். "ரயில் எப்ப வரும்?'' "வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்'' இத்தகைய …
-
- 0 replies
- 676 views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_20.html யாழ் குடாநாட்டில் ஒருவன் தடக்கி விழுந்தால் ஒரு பள்ளிகூடத்திலோ ஒரு கோயிலிலோ விழுவான் என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். கோயிலை சுற்றி வாழும் மத பண்பாட்டு கோலங்களினூடாக இவர்களின் வாழ்வின் அசைவும் இருந்தது. இந்த பக்தி மய கோசங்கள் ஜகதீகங்கள்,கர்ண பரம்பரை கதைகள் போன்றவற்றில் எங்கள் வீட்டு பெரிசுகளுக்கு ஈடுபாடு கொஞ்சம் கூட. இவர்கள் செய்யும் மூல சலவை செய்யும் கதைகளினூடாக வளர்ந்தாலும் பின்னர் இதில் நம்பிக்கை அற்றவனாக விட்டேன். இவர்கள் சொன்ன கதைகளில் ஒன்று ஞாபகத்தினூடு ஞாபகமாக
-
- 10 replies
- 2.7k views
-
-
தேவதைகளின் தீட்டுத்துணி காணிக்கை மலரின்ர புருசன்காரன் விட்டுட்டு போய் மூன்றாவது வருசம் பிறந்தவனான றொக்கட் அல்லது போர்ப்புலி என அழைக்கப்படுகின்ற கிறிஸ்துதாசன் ஒரு சிகப்பு கலர் லேலன்ட் பஸ்சில வந்து செட்டிகுளம் முகாமில இறங்கி வரிசையில போய் ஒரு சோத்துப்பாசல் வாங்கி ஒதுக்குப்புறமாக மர நிழலொன்று பார்த்துக் குந்தி சோத்துப் பாசலை விரிச்சு கழுவாத கையை வைக்கிறதோட இந்தக் கதைக்குள்ள என்ரராகிறான். நாலைந்து நாளாக அன்னந் தண்ணியை கண்டிராத பொடியன் அவக் அவக்கென்டு குனிந்த தலை நிமிராமல் பூசணிக்காயயும் சோத்தயும் திண்டு முடிச்சிட்டு அரை வயிறு கால்வயிற்றோட நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சத் தூரம் தள்ளி ஒரு வாகனத்தைச் சுற்றி சனம் நின்று முண்டியடிக்குது. இவன்ர மூளைக்குள்ள மின்னல் வெட்டி மறையு…
-
- 150 replies
- 17.8k views
-
-
கைது செய்யப்பட்டபோது என் மனைவி நளினி, 50 கிலோ எடை இருந்தார். நான் 60 கிலோ. இரண்டு மாத கர்ப்பிணியாக 'மல்லிகை’யின் குரூர அறைகளுக்குள் அடி எடுத்துவைத்த நளினி, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஜுடிஷியல் கஸ்டடியில் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நளினியின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 35 கிலோ. 15 கிலோ எடையைக் குறைக்கிற அளவுக்கு சித்ரவதைகள் குரூரமாகவும் கொடுமையாகவும் இருந்தன. நான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, வெறும் 30 கிலோதான் இருந்தேன். பாதியாக என்னைக் கழித்து, வெறி தீர்த்திருந்தார்கள். வெறும் வார்த்தைகளுக்காக இதை நான் சொல்லவில்லை. ராஜீவ் வழக்கில் நாங்கள் வளைக்கப்பட்டபோது எவ்வளவு எடை இருந்தோம், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எந்த அளவுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரியம் சமைக்கும் கூடு... உலகின் மிகத்தொன்மையான முதலாவது மனித நாகரீகத்தில் இருந்து இன்றுவரை வீடென்பது மனிதர்களிடமிருந்து இணைபிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களிடமும் சொந்தமாக வீடுகள் இருந்திருக்கின்றன.அந்தவீடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்க்காக அவர்களில் பலர் போர்க்களங்களில் போராடி வீழ்ந்திருக்கிறார்கள்.வீடுகளுக்காக உயிர்களைக்கூடக் கொடுக்குமளவிற்க்கு வீடுகள் மனிதர்களின் வாழ்வுடன் மிகமுக்கியமானவையாகப் பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. அப்படித்தான் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்திருந்தது அவர்களின் அந்த வீடு… பல ஆண்டுகளின் பின்னர் இப்பொழுதுதான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
Sunday, November 20, 2011 என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்! “டேய் கீர்த்தி .. அந்த பொண்ணு தாண்டா .. உடன திரும்பாதடா .. பொறு” “யாரடா? அந்த தேர் முட்டி மூலையில நிக்குதே அதா?” “அவளே தாண்டா, கொல்றாடா!” “டேய் அது கஜன்ட ஆளுடா” “அண்ணியை பற்றி பிழையா சொல்லாத, அவ இல்லடா, பக்கத்தில, பச்சை சாரி” “யாரு, கனகாம்பர பூ ஜடை போட்டதா”<a href="http://lh4.ggpht.com/-YmxaeNF98eo/TshHrnc5YHI/AAAAAAAAAik/NFeGz35pehQ/s1600-h/Picture%252520022%25255B6%25255D.jpg"> “அவளே தாண்டா, என்னா பொண்ணுடா!” “கண்ணாடி போட்டிருக்காளே மச்சான்” “அது தான் இன்னும் கொல்லுதடா!” “என்கிட்ட சொல்லீட்ட இல்ல? இப்ப பாரு” முருகன் கிழக்கு வாசலால் வெளியே…
-
- 3 replies
- 1.7k views
-