கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…
-
- 1 reply
- 680 views
-
-
பாஸ்”போர்ட்”- கோமகன் யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான ஒரு அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே “சமரசங்கள்” என்ற பரம்பரையலகு அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இ…
-
- 5 replies
- 1.4k views
-
-
பாஸ்வேர்டு சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிங்க் - சிறுகதை அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண…
-
- 1 reply
- 2.5k views
-
-
பிசாசுகளின் இராச்சியம் தமிழீழத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வன்னிப் பிரதேசம் அது. அங்கே ஓங்கி உயர்ந்த பல வகைமரங்கள். அவற்றுக்கிடையே பல விழுதுகள் தாங்க, பரந்து, விரிந்த கிளைகளைத் தாங்கிய பல ஆலமரங்கள். ஆலமரங்களிலே கூடு கட்டி, உள்ளாசமாக கொஞ்சிக் குலாவி வாழும்; குருவிக் கூட்டங்கள். மரத்துக்கு மரம் தாவும் மந்திக் கூட்டங்கள். மரங்களுக்கிடையே துள்ளி ஓடும் மான் கூட்டம். சுழண்டாடும் மயில் கூட்டம். மந்தைகள் எங்கும் பரந்து மேயும். முல்லையும் மருதமும் இணைந்து வளங் கொழிக்கும். இப்பிரதேசம், 2009 மே மாதம் 18ம் திகதி, புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன நடந்தது? அங்கே வாழ்ந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? என, ஒருவராலும் அறிய முடியவில்லை. சிலநாட்களுக்குப்பின், அப் பகுதியை முற்ற…
-
- 7 replies
- 2.6k views
-
-
பிச்சை ஏ.எம். சாலன் அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்…
-
- 1 reply
- 948 views
-
-
ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …
-
- 1 reply
- 955 views
-
-
நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள். ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா…
-
- 9 replies
- 2.2k views
-
-
அன்பு நண்பர்களே இது என் மனதில் உள்ள முதல் கிறுக்கள், எழுத்து & சொற் பிழைகள் இருந்தால் மன்னித்து அறியத் தாருங்கள் மாலை நெருங்குகின்றது என்பதை குளக்கட்டில் இருந்து நம்மட ஊர் கறுப்பியில் இருந்து பமிலா அண்டர்சன் வரை கிளு கிளு கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருந்த எங்களை கொக்குகளும் நாரைகளும் போட்ட சத்தம் கன நேரம் அவைகள் கூட்டுக்கு கூட்டமாக பறந்து போவதை திரும்பி பார்க்க வைத்தன. தூக்கணங் குருவிகளும் குளக்கட்டில் நின்ற பனை ஓலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கூடுகளில் இருந்து எங்களின் ஆபாசக் கதைகளை தங்கள் குஞ்சுகள் கேட்கக் கூடாது என்று கூட்டம் கூட்டமாக பறந்து பறந்து கீச்..கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. வாய்க்கால் ஓரங்களில் காய்த்திருக்கும் நரி பயந்தங்காய்களை ப…
-
- 8 replies
- 2.9k views
-
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 2 replies
- 2.6k views
-
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 0 replies
- 2.9k views
-
-
பிடிமானம்: உமாஜி ‘கடவுளே. பஸ்ஸை நிப்பாட்டி என்னை அவமானப் படுத்திடக்கூடாது’ தலையை உயர்த்திப் பார்த்தவாறு குப்புறப் படுத்திருந்தவன் மனதிற்குள் அலறினான். ஆனாலும் இக்கட்டான தருணங்களில் கடவுளைப்போலவேதான் பேரூந்தும். அவனுக்கு முன்னால் இருபதடி தூரத்தில் நின்றுவிட்டிருந்தது. அது இறுதி யுத்த காலம்தான். ஆனாலும் அவன் ஒன்றும் பேரூந்துக்குக் குண்டு வைக்க எல்லாம் படுத்துக்கொண்டு காத்திருக்கவில்லை. சில வினாடிகளுக்கு முன்னர்தான் அந்தப் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக நடத்துனர் பதட்டமாக இறங்கு வர, அவசரமாக எழுந்து கொண்டான். சடுதியான அதிர்ச்சியை எதிர்கொண்ட உடல், உடனடியாகவே ஒன்றும் நடந்துவிடவில்லை என்று சமாதானம் செய்துகொள்வதைப் போலவே மனதோடு இ…
-
- 1 reply
- 803 views
-
-
பிணக்கு - ஜெயகாந்தன் மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது. கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்! கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
பின் நவீனத்துவச் சிறுகதைகள் – எம்.ஜி.சுரேஷ் பின் நவீனத்துவம் என்பது தொகுக்கப்பட்ட சிந்தனை முறை. அதை ஒரு பகுப்பாய்வு அணுகுமுறை என்றும் சொல்லலாம். அது ஒரு மனோபாவம்.ஓர் அறிதல்முறையும் கூட. 1966ஆம் ஆண்டு ழாக் தெரிதா என்ற ஃபிரெஞ்சுக்காரர் அமெரிக்காவிலுள்ள ஹாப்கின்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் உச்சரித்த வார்த்தை : Deconstruction. அந்த வார்த்தையையும் அதற்கான பொருளையும் அவர் விவரித்து, அது வரை அறியப்பட்டிருந்த மேற்கத்திய தத்துவ, கலை இலக்கிய வரலாற்றைக் கொட்டிக் கவிழ்த்த போது பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் கால்களுக்குக் கீழே இருந்த தரை நழுவியதைப் போல் உணர்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து சமூகவியலில் ஃபூக்கோ, இலக்கியத்தில் ரொலாண் பார்த், உளவியலில் ழாக்…
-
- 0 replies
- 5.4k views
-
-
பிப்பிலிப் பேய் இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கதையின் காலம் 1984 ஆஆஆஆஆஆஆஆஆஆ..............ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஜயோ.........வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம் என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன்.(சிவா). டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை …
-
- 38 replies
- 3.5k views
-
-
சரோஜா அம்மா அன்று விடிந்ததிலிருந்து பரபரத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவரின் பரபரப்பை பார்த்த அவர் கணவர் சரோஜா அம்மாவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக „இங்க பாரு இப்படி ஓடி ஓடி எல்லாவற்றையும் தயார் படுத்திக்கொண்டு உம்முடைய உடம்பை கெடுக்க வேண்டாம் . நீ இப்படி எல்லாம் ஆர்ப்பரிக்கிறதுக்கு உன்னுடைய மருமகன் இன்று வருவானோ, என்னவோ தெரியாது . அவனுக்கு தானே எங்களை அவ்வளவாக பிடிப்பது இல்லை. ஆகவே இந்த ஆர்பாட்டங்களை விட்டு விட்டு எனக்கும் உனக்கும் கோப்பி போட்டுகொண்டு வந்து இந்த கதிரையில கொஞ்சம் அமரும்“ . சிறு கண்டிப்புடனும், கரிசனையுடனும் குமரேசன் கூறினார் . அதற்கு „என்னங்க சொல்றீங்க ? இன்றைக்கு உங்களுக்கு 80வது வயது பிறந்த நாள் . மகள் ரதி கட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரசன்னம் சிவநேசனுக்கு வயது அறுபத்தி நான்கு முடிந்து ஏழு மாதம் பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன. அன்றுதான் அந்த பிரசித்தி பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. நாம் நேரடியாகவே கதைக்குள் நுழைந்து விடலாம். சிவநேசனுக்கு கடவுள் நம்பிக்கை நிரம்பவே இருந்தாலும், சாமியார்கள், மந்திரவாதிகள் இன்னபிற‘கள்’ மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் எந்த சாமியார் எங்கே உதயமானாலும், கைக்காசில் பஸ் டிக்கெட் செலவழித்துப் போய் பார்ப்பார். ஆனால் அந்த சாமியார்/ரிணி ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டுபவராக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போ…
-
- 1 reply
- 571 views
-
-
சிவாவின் அலுவலகம் அன்றும் வழமை போல பிசியாகவே இருந்தது தங்களிற்குரிய பணியை எல்லோரு ம்செய்து கொண்டிருந்தார்கள் மதிய உணவு இடைவேளை வரும்வரை எல்லோரும் மந்திரிக்கபட்ட மனிதர்கள் போல் கணணி,தொலைபேசி என்று ஒன்று தாவி இன்னொன்றிற்கு பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவு வந்தது கூட சிவாவிற்கு தெரியவில்லை.கம் சிவா வீ வில் கோ வோ லஞ் என்று ஸ்டெல்லா அழைத்ததும் அவனிற்கு மதிய உனவு ஞாபகமே வந்தது உடனே அவன் தனது உணவை மைகோரேவில் வைப்பதிற்கு எடுத்து செல்லும் போது அவனது மணம் நேற்று வைத்த இறால் குழம்பு,இறால் பொறியல் எல்லாம் இருக்கும் ஒரு சின்ன வெட்டு வெட்டலாமென்று நினைத்து கொண்டு மைகோரேவேவில் வைத்த சூடான உணவை திறந்து பார்த்த போது ஒரே ஏமாற்றம் தான் காத்திருந்தது அதில் இருந்ததோ மரகறி சைவ உணவுகள…
-
- 9 replies
- 2.2k views
-
-
பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... தமயந்தி, ஓவியங்கள்: ம.செ., ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, 'என் இனிய பொன் நிலாவே...’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா... 'நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!' பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம் சும்மா தின்னக் கூடாது. வெல்லக்கட்டியைக் கடிச்சுக் கடிச்சுத் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம் ஓவியங்கள் : ரமணன் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’ …
-
- 1 reply
- 1.8k views
-
-
காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம் குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர. பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார். ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி நாட்டு வாழ்வுக்கே உரிய கால நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன…
-
- 15 replies
- 2.4k views
-
-
பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரபஞ்ச நூல் - ஷோபாசக்தி இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ இந்த அகராதியில் ஏதோ பிழை இருக்கிறது என்று எழுதியிருந்தாய். அதுதான் வாங்கிச் சரி பார்க்கப் போகிறேன்” என்றான். அன்றிரவே அவுஸ்ரேலியா திரும…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரபல ரவுடி 'குரங்கு குமார்': வளர்ச்சியும் & வீழ்ச்சியும் | செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார்
-
- 1 reply
- 4.9k views
-