கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
பிள்ளை மனம் கல்லு "ஏம்மா உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அதான் மாச மாச பெட்ரோல் போட்டு உன்ன பாக்க வரோம்ல நீ ஏன் இப்படி வந்து நிக்கிற காலங்காத்தாலே அழுதுட்டு வந்து நிக்கிற உன் மூஞ்சியை பாத்தா வெலங்குமா என் பொண்டாட்டி காலையிலயே ராமாயணம் பாட ஆரம்பிச்சுட்டா தேவையா எனக்கு உன் வயித்துல பொறந்தேன் பாரு...ச்சே.'' இதை கேட்ட மூத்தவள் பங்கஜத்தின் நெஞ்சம் வெடித்து விடாதா என்று தன் கையாலாகாத நிலையை எண்ணி மருகினாலே தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. பெண்டாட்டி பேச்சை கேட்டு பணம் ஒன்றே பெரிது என்று கருதும் பிள்ளைகளை பெற்ற தன் இழிநிலை. பெண்பிள்ளையின் அருமை இப்போதல்லவா புரிகிறது? எவ்வளவு சந்தோஷத்துடன் பெற்ற இரண்டு…
-
- 0 replies
- 639 views
-
-
அண்று முழுவதும் நல்ல மழை. இப்படி சொல்லத்தான் மன துடிக்குது. ஒருவேளை மழை பெய்திருந்தால் இந்த கதை வேற மாதிரி இருந்து இருக்கும்... என் குடும்பம் அப்ப கொழும்பு "சிலேவைலன்" பகுதியில் "பரக்ஸ் லேனிலை" வசித்து வந்தது. முன்னாலை பொலீஸ் குவாட்டஸ், பின்னாலை "வத்தை", இல்லை "தோட்டம்" எண்று சொல்லும் சேரி பகுதி. கொழும்பு-2 கொம்பனி தெருவின் ஒரு ஒழுங்கை எண்ட வகையில் சுறு சுறுப்புக்கும் வாகன நெரிசலுகும் பஞ்சமே இல்லை. அதிகமாய் தமிழர் வசிக்கும் பகுதி, அனேகமானோர் இந்திய வம்சாவளிகள். அங்கை வெட்டு குத்து குழுக்களுக்கும் பஞ்சம் இல்லைத்தான்... 'காலை வேளை' நான் வெள்ளனவே தூக்கத்தால் எழுந்து குளித்து பள்ளிக்கு வெளிக்கிட்டு தயார்... வழமை போலவே காலை ஏழு மணிக்கு படசாலை, ஆறு மணி பஸ்ஸை பிடிக்க வேணும்…
-
- 17 replies
- 3.3k views
-
-
சின்னனில மாட்ச் கொழுவிறதண்டால் பெரிய விடயம்.கோயிலடியில ஒரு டீமை தொடங்கிபோட்டு பிறகு எதிர்த்து மாட்ச் விளையாட வேறுடீமை தேடி அலையிறது.அதே ஊரிலே பிறகு வடக்கு ,கிழக்கு என்று எங்கட சைசில இருக்கின்ற பெடிகளை தேடிப்போய் வாற சனி மாட்ச் விளையாடுவமோ என கேட்கின்றது ,ஒமேன்று பதில் வந்தால் பிறகு பதினோன்றை சேர்க்க பெரும்பாடு படவேண்டும்.ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் ஒழுங்காக விளையாடும் மிச்சம் எண்ணுக்கணக்குத்தான்.பிறகு சனி வர இரண்டு மணிபோல் ஒவ்வொன்றாய் போய் பிடித்து கோயிலடிக்கு கொண்டுவர மூன்று மணியாகிவிடும்.மற்ற டீம் வரமட்டும் களைக்ககூடாது என்று பந்த்தை தட்டிக்கொண்டு நிக்கிறது.அவர்கள் வந்து சேர பெரிய சந்தோசம்.நடுவர்கள் இல்லை, எனவே முதலே லைன் எல்லாம் காட்டி அளா ப்பக்கூடாது என்ற வாய்வழி ஒப…
-
- 42 replies
- 4.1k views
-
-
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார் அந்நியன் மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை. இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது. அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண…
-
- 0 replies
- 361 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்ட…
-
- 2 replies
- 448 views
-
-
வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. “”எப்படியிருக்கிறது உன் விடு தலை?” என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: “”வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.” அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்க…
-
- 0 replies
- 849 views
-
-
சோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதையினை இப்போது படித்துமுடித்தபோது, ஒரு சிறு குறிப்போடு பதிவிடத் தோன்றியதால் இப்பதிவு. எனது பதிவைப் படிக்கு முன் கதையைப் படியுங்கள்: http://www.shobasakt...basakthi/?p=936 பிரபஞ்சம் எங்கிருந்து எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் 'எவ்வாறு' என்பதற்கான வியாக்கியானங்கள் இருப்பினும், எதிலிருந்து என்பது விடைகாணமுடியாத கேள்வியாகவே இருக்கின்றது. இது தான் பிரபஞ்சம் தோன்றிய மூலப்பொருள் என ஒன்றைக் குறிப்பிட்டால், அந்த மூலப்பொருளின் மூலம் என்ன என்ற கேள்வி உடனே பிறந்துவிடும். அந்த வகையில் எது தொடக்கம் என்பது வரையறுக்கப்படமுடியாதது. ஆனால் தொடங்கி விட்ட உலகில் ஒவ்வொரு கதைகள் தொடங்குவதுபோலவும் முடிவதுபோலவும் தோன்றி வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. என்…
-
- 21 replies
- 2.7k views
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானச் சொற்பொழிவில் பார்த்த வீடியோ காட்சி இது: ஒரு ஆபிரிக்கச் சிறுமி-பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். சில கட்டில்கள் மட்டுமே கொண்ட ஒரு பின் தங்கிய மருத்துவ நிலையத்தில் சோர்ந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளை எட்டத்திலிருந்து படம் பிடிக்கும் வீடியோவை நோக்கி தண்ணீர் எனச் சைகையில் கேட்கிறாள். தண்ணீர் வழங்கப் படுகிறது. ஆனால் ஒரு முறடு வாயில் வைத்ததுமே வேதனையில் முகம் கோண தண்ணீர் குவளையைத் தட்டி விடுகிறாள். தாதி மாரின் கரங்களை மெதுவாகக் கடிக்கவும் முயல்கிறாள். தாகமும் தண்ணீரின் வேதனைக்குப் பயப்படும் தவிப்பும் அவள் கண்களில் தெரிகின்றன. இவள் பாதிக்கப் பட்டிருக்கும் நோய் நிலைமைக்குப் பெயர் "நீர் வெறுப்பு நோய்" (hydrophobia) இந்த நிலைமைக்குக் கார…
-
- 8 replies
- 1.8k views
-
-
Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome .-Baudelaire. சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர். 'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து…
-
- 0 replies
- 836 views
-
-
ஆரம்ப உரை;- முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ எனக்கு நினைவு தெரிந்த…
-
- 24 replies
- 3.9k views
-
-
அது ஒரு மரண வீடு அதுக்குத்தான் போய் விட்டு வந்தேன் .அதனால் தான் என்னவோ மனசு என்னமோ மாதிரி இருக்கு. இறந்தவன் வேண்ட பட்டவனோ அல்ல.இருக்கும் பொழுது ஒரு நாளும் கண்டதில்லை .அவனை முதல் முதலாக பிணமாக பார்க்க வேண்டிய எனக்கு ஏதோ எழுத்து போலும்,எனக்கு வேண்ட பட்டவருக்காக போயிருந்தேன் , மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது இறந்தவனை பார்த்து அல்ல, அந்த மரண வீட்டு சடங்கு நடக்கும் சூழல் போய் விட்டு வந்தாலே ஒரு மாதிரி இருக்குமோ என்னவோ. இறந்தவன் இள வயதுக்காரன் என்ற படியால் அகலா மரணம் என்று நினைக்கலாம் ,அப்படி இல்லை வருத்தம் வந்து தான் இறந்து இருந்தான் . இது பற்றிய விசயங்களை நானே தேடி கேட்க வேண்டியதில்லை . அங்கு வந்தவர்களே பேசி கொண்டார்கள். அவர்களுக்கு தான் பேசிக்கொள்வதற்க்கு உந்…
-
- 6 replies
- 2.1k views
-
-
அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே …
-
- 4 replies
- 872 views
-
-
சுசீலாவுக்கு இன்று கொஞ்சம் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஒரு வருடமாக கொழும்பில் இந்தா அனுப்புறன் அந்தா அனுப்பிறன் என்று சொன்ன வெளிநாட்டு முகவர் இன்றுதான் இரண்டு நாளில் யேர்மனிக்கு அவளையும் மகளையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளான். கணவனுக்கு இன்று தொலைபேசியில் விடயத்தைச் சொன்ன போது அவனுக்கும் நின்மதியாகத்தன் இருந்தது. இரண்டு மூன்று முறை முகவர்களுக்குக் காசு கட்டி ஏமாந்து இப்பதான் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்துள்ளான். அரைவாசிக் காசு முதல் குடுத்தால் சரி. மிச்சம் மனைவி வந்து சேர்ந்தபிறகுதான். அதுகும் மனைவியின் தாயாரை கொழும்பில் பொறுப்புக்கு விட்டுவிட்டுத்தான் வரவேணும். ஒரு வருடமாக மனிசி கொழும்பில வீடெடுத்துத் தங்கிஇருக்கிற செலவு இனி இல்லை என்று காந்தனுக்கும் சற்று ஆறு…
-
- 30 replies
- 2.1k views
-
-
ஜோக் மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள். கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள். மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பா…
-
- 0 replies
- 2k views
-
-
பட்ட மரமும் பாகல் கொடியும் கொல்லைப்புறத்து வீட்டுத் தோட்டம் புதுப்பொலிவுடன் பூத்துக் குலுங்கியது. அருகிருந்த கிணற்றுநீரை அள்ளிப் பருகிய கத்தரி, தக்காளி, வெண்டி, பச்சைமிளகாய் வகைக் காய்கறிச் செடிகொடிகள் யாவும், சுத்தமான பச்சையாடை கட்டிய சுந்தரிகளாய்ச் சுடர்ந்து மிளிர்ந்தன. பலவண்ணப் பூக்களும், பச்சையிளம் பிஞ்சுகளும், காலமறிந்து பழுக்கக் காத்திருக்கும் காய்களும் தாங்கிய தாவரங்கள் தத்தமது தாய்மையைப் பறைசாற்றியபடி! தேன் தேடும் வண்டுகளும், மகரந்தமணி பூசும் வண்ணத்துப் பூச்சிகளும், பழம் தின்னும் பசுங்கிளிகளும், காக்கை குருவிகளும் அத்தோட்டத்தின் காலைநேர அழைப்பில்லா விருந்தாளிகள்! கவனிப்பாரற்றுக் கிடந்த பின்வளவைக் காய்கறிக் களஞ்சியமாக்கியவன், இன்று தோட்டத்தின்…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஒட்டக மொழி சஞ்சயன் செல்வமாணிக்கம் இணைப்பு: http://visaran.blogspot.in/2014/03/blog-post_16.html வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள். நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனத…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள தான். நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்யலாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்கு பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் மாறி உயர் கல்லூரி சென்றான் அழகன். நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும் அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டத…
-
- 10 replies
- 2.1k views
-
-
தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் “தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம…
-
- 1 reply
- 914 views
-
-
கள நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா …
-
- 516 replies
- 65.7k views
- 1 follower
-
-
ரயிலில்… - ஜெயமோகன் ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று நிமிடம் மிச்சமிருக்கும். ஆனால் அத்தனை பேரும் பெட்டிகளும் மூட்டைகளும் வைத்திருப்பார்கள். சிலர் கைக்குழந்தைகள் இடுக்கியிருப்பார்கள் சின்னப்பிள்ளைகள் கிறீச்சிட்டு துள்ளிக்கொண்டிருக்கும். உள்ளிருந்து தேவையில்லாமல் இறங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட ஏறுபவர்களின் பதற்றமும், ஒவ்வொருவரும் முதலில் ஏறிவிடுவதற்காக முண்டியடிப்பதும் இரண்டு வாசல்களிலும் ஒரு சின்ன சுழிப்பை உருவாக்கும். மனிதர்களாலான ஒரு கார்க்கை வைத்து வாசலை அடைத்த…
-
- 3 replies
- 2.2k views
-
-
சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…
-
- 13 replies
- 2.9k views
-
-
மாட்டு வண்டி.... ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தின…
-
- 0 replies
- 1.8k views
-
-
1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது. இந்த வீடியோவில் உள்ளவர்கள்-ரொமேஷ் பண்டாரி (முன்னாள் வெளிவிவாகர செயலாளர் குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) – சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) – அமிர்தலிங்கம் (TULF) – உமாமகேஸ்வரன் (PLOTE) – வாசுதேவா (PLOTE) – வெற்றிச்செல்வன் (PLOTE) – கனகராஜா (PLOTE) – யோகி (LTTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – பிரபாகரன் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- – றொபர்ட் (TELO) – சிறீ சபாரட்னம் (TELO) – ? – ? – பத்மநாபா (EPRLF) – கேதீசுவரன் (EPRLF) – சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை) இந்த வீடியோவை இணைக்க அனுமதியும் மற்றும் தகவல்களும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிவாவின் அலுவலகம் அன்றும் வழமை போல பிசியாகவே இருந்தது தங்களிற்குரிய பணியை எல்லோரு ம்செய்து கொண்டிருந்தார்கள் மதிய உணவு இடைவேளை வரும்வரை எல்லோரும் மந்திரிக்கபட்ட மனிதர்கள் போல் கணணி,தொலைபேசி என்று ஒன்று தாவி இன்னொன்றிற்கு பணி புரிந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவு வந்தது கூட சிவாவிற்கு தெரியவில்லை.கம் சிவா வீ வில் கோ வோ லஞ் என்று ஸ்டெல்லா அழைத்ததும் அவனிற்கு மதிய உனவு ஞாபகமே வந்தது உடனே அவன் தனது உணவை மைகோரேவில் வைப்பதிற்கு எடுத்து செல்லும் போது அவனது மணம் நேற்று வைத்த இறால் குழம்பு,இறால் பொறியல் எல்லாம் இருக்கும் ஒரு சின்ன வெட்டு வெட்டலாமென்று நினைத்து கொண்டு மைகோரேவேவில் வைத்த சூடான உணவை திறந்து பார்த்த போது ஒரே ஏமாற்றம் தான் காத்திருந்தது அதில் இருந்ததோ மரகறி சைவ உணவுகள…
-
- 9 replies
- 2.2k views
-
-
மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில்…
-
- 1 reply
- 1.6k views
-