கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஸ்ராலின் மரணமடைந்ததும் குருசேவ் பிரதம மந்திரியானார். கட்சியின் உயர் அதிகாரக்குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “ஸ்ராலின் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதை நான் இப்போது ஒப்புக்கொண்டாக வேண்டும். நீங்கள் அவருடைய ஆதரவாளரா, எதிரியா என்ற ஒரே விடயம்தான் அவருக்குத் தெரியவேண்டும். எதிரியாக இருந்தால் மரணத்தைத் தவிர எதுவும் கிடையாது.” என்று குறிப்பிட்டார். அந்தக் கூட்ட அரங்கத்தில் பின்பக்கத்தில் இருந்து யாரோ ஒருவர் இப்படிக் கத்தினார், “இந்த நாற்பது வருடங்கள் முழுவதும் நீங்கள் அவருடன் இருந்து வந்தீர்கள். ஏன் வாய் திறக்காமல் இருந்தீர்கள்?” குருசேவ் சிரித்துக்கொண்டே சொன்னார், “இந்தக் கேள்வியை எழுப்பிய மதிப்பிற்குரிய அந்தத் தோழரை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் கொஞ்ச…
-
- 2 replies
- 960 views
-
-
இறந்து விடுவது இயல்பு... அது முடிவானது . யாராலுமே தவிர்க்க முடியாதது. இது இயல்பாய் நடந்துவிட வேண்டுமா ? எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவது போல உங்களுக்கும். நீங்கள் யார் ? எல்லோரையும் போலசா..தா..ர..ண..மா..ன..வ..ர்..க..ளா ? நீங்கள் சாதாரணமாக இறந்து போகலாமா ? இறந்தும் வாழ வேண்டும் . இறப்பு அதன் பின்பே உன்னத வாழ்க்கை இறந்தும் நீங்கள் எல்லோரும் வாழ்வீர்கள் . திட்டுக்கிட்டு விழித்தான் அவன். அன்று தத்துவ உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்தும் அவன் நினைவுகளிலும் கண்களை மூட கனவுகளிலும் " இறத்தல் " பற்றி விளக்கமளித்து கொண்டிருந்தார். பக்கத்தில் அதனை அணைத்தபடி படுத்திருந்தான் இரண்டு நாள் நண்பன். அவனும் வெறித்த பார்வையுடன் இருந்தான். நேற்று இவனுக்கும் உரை நிகழ்த்தி இருப்பார்க…
-
- 3 replies
- 959 views
-
-
ஒரு நிமிடக் கதை: பார்வைகள் வீட்டுக்குள் ஏறி வந்த கணவன் முகுந்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஜோசியர் என்ன சொல்லியிருப்பார் என்று கல்யாணிக்குப் புரிந்தது. அவரே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தாள். ‘‘கல்யாணி! நம்ம காவ்யா ஜாதகமும் பையனோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்காம். ஒரு மாசத்துக்குள்ளே கல்யாணம் நடத்திடலாம்னு ஜோசியர் சொன்னார். ஆனால், எனக்கென்னவோ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு செய்யலாம்னு தோணுது. நம்ம ரோஷினிக்குச் செய்ததைவிட அம்பது சவரன் நகை அதிகம் போட்டு, ரெண்டு லட்சம் ரொக்கம் கொடுத்து, பெரிய கல்யாண மண்டபம் எடுத்து காவ்யாவை நல்லமாதிரி கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன். அதுக்கு பணம் ஏற…
-
- 4 replies
- 959 views
-
-
உன்னை வாழ்த்தி பாடுகிறேன். -சண்முகம் சிவலிங்கம் எனக்கு மனம் கொதித்தது. நாங்கள் பியர் குடித்து மகிழ்ந்த வாடி வீடு இப்போது இந்தியன் வசம் ஆகிவிட்டதே என்று. எதிரே கடல். ஓங்கி எழும் அலைகள் தெரிகின்றன. அலைகளின் இரைச்சல் நிரந்தரமாக எங்கும் நிறைந்திருக்கிறது. கடல் காற்று வீசிச் சூழன்று இதோ இந்த அரசமரத்தில் மோதித் துடிக்கிறது. அரசமரத்தை ஒட்டியிருக்கிற ‘போச்’ இல் நிற்கிற ஜீப் யாருடையது? அதுதான் அந்த மேஐரின் ஜீப்பா? மேஐர் இப்போது எங்கே இருப்பான்? ‘போச்’ ஐ தொட்டிருக்கும் போட்டிக்கோவை மையமாகக் கொண்டு இரண்டு பக்கமும் ஓடும் அந்த கொரிடோர்’களில் நாம் எத்தனை முறை ஸ்ற்றூலையும் கதிரைகளையும் இழுத்துப் போட்டு கடலையும் காற்றையும் இடையில் உள்ள வெள்ளை மணல் வெளியையும் அனு…
-
- 1 reply
- 958 views
-
-
(கிட்டத்தட்ட முடியக்காத்திருக்கிற எழுதிக்கொண்டிருக்கிற என் நாவலொன்றிலிருந்து சில குறிப்புக்கள் ) ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது. ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொ…
-
- 2 replies
- 957 views
-
-
உதறல்-சப்னாஸ் ஹாசிம் ஓவியம் : எஸ்.நளீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள் கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந…
-
- 1 reply
- 956 views
-
-
அது... இது... எது? வங்கியில், குணசுந்தரியை தற்செயலாக பார்த்தார், பரந்தாமன். அவளது அப்பா காலத்திலிருந்தே குடும்ப நண்பர் என்பதால்,''என்னம்மா இந்த பக்கம்...'' என்று உரிமையுடன் விசாரித்தார். சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு, அருகில் நின்றிருந்த கணவனை பார்த்தாள், குணசுந்தரி. ''ஒண்ணுமில்ல... பொண்ணுக்கு வரன் அமைஞ்சிருக்கு; மூணு மாசத்துல கல்யாணம். பட்ஜெட் அதிகமாகும்ன்னு தோணுது; அதான் வீட்டை அடமானமா வெச்சு, கடன் வாங்க வந்திருக்கோம். குணசுந்தரி பேர்ல வீடு இருக்கு,'' என்றார், அவளது கணவர், குமார். ''வீட்ட வெச்சா...'' கவலையும…
-
- 0 replies
- 956 views
-
-
பெரியாத்தா வீட்டுவாசலிலேயேபெரியாத்தாஉட்கார்ந்திருப்பார்.வீட்டுக்கு வருபவர்களின்கண்களில் சட்டென படவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம்.தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு. தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை. “வாங்க தம்பி! உட்காருங்க” “நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க” “நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியேசெத்துட்டாருயா” “எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?” “எல்லாம் குடிதான…
-
- 2 replies
- 955 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் 18 வயது ‘‘பிறந்த நாள் அதுவுமா ஏன்டா சோகமா இருக்க?” என்ற நண்பனிடம், ‘‘எனக்கு 18 வயசு ஆகிருச்சுடா... இனிமே போலீஸ், கோர்ட் எல்லாம் பார்த்து, ரொம்ப பத்திரமா இருக்கணும்டா” என்றான் முருகன்! - உதயகுமார் ஆசுவாசம் தேர்வு முடிந்ததும் துள்ளிக்குதித்து விளையாடியது, பாடம் சொல்லிக்கொடுத்த அம்மாவின் மனம்! - கி.ரவிக்குமார் இது சத்தியம் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் பகவத் கீதையைக் காட்டி, `‘இதன் மீது ஆணையாக...’’ என சத்தியம் செய்யச் சொன்னார்கள். ‘`நான் இதைப் படித்ததே இல்லையே, பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் கூண்டில் நிற்பவர்! - எம்.ஆர். மூர்த்தி விளம்பரம் …
-
- 0 replies
- 954 views
-
-
"நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன். எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு? ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும் குணங்களும் கலந்த கலவை போல. ஏன…
-
- 0 replies
- 954 views
-
-
கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்! ஜீ. உமாஜி pro Created: 27 November 2016 செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்ச…
-
- 0 replies
- 954 views
-
-
ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …
-
- 1 reply
- 954 views
-
-
துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …
-
- 2 replies
- 953 views
-
-
நிலையற்ற வாழ்வுடன்..... [ கதை கருத்துக்களம் அரட்டை பகுதிக்கு அல்ல...! ] பாகம்-1 தொடர்கதை ::... நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நிமிடங்களில் அருகில் வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய் இருங்க.…
-
- 1 reply
- 953 views
-
-
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு `அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ…
-
- 0 replies
- 950 views
-
-
ஞாயிறு என்பது விடுமுறை நாளல்ல... காலை நேர பரபரப்பில் உழவர் சந்தை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காய்கள் வாங்கிய பையை எடுத்துக் கொண்டு சந்தையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தான் சிவகுமார். ""சார் ...சார் ...சாரோய் ...'' யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தன்னைத் தான் கூப்பிடுகிறார்களா என்றபடி மெல்ல திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தவன், தன்னைத்தான் என்பதை உணர்ந்து ""என்னம்மா என்னையா கூப்பிட்டே?'' என்றவாறு அங்கே கடை போட்டிருக்கும் பெண்மணியைப் பார்த்துச் சென்றான். என்ன சார் ...போன வாட்டி வந்தப்பவே நாட்டு பப்பாளி இல்லையான்னு கேட்டே... இன்னிக்கு ஒனக்காகவே வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் கண்டுக்க…
-
- 0 replies
- 950 views
-
-
நிலம் (பாரதிபாலன்) நிலம் பாரதிபாலன் மா சானமுத்துவுக்கு நிற்க முடியவில்லை. வெயில் வெள்ளையாக எரிந்துகொண்டு இருந்தது. ஊமை வெயில். உடம்பெல்லாம் ஊறியது. உடல் இடுக்குகளில் எல்லாம் ஈரம் மிதந்தது. கால் கடுக்கும்போது, காலை மாற்றிப்போட்டு நிற்பான். அடிக்கொரு தரம் உடலைச் சற்று இப்பாலும் அப்பாலும் நீட்டி, வளைத்துச் சோம்பல் முறிப்பான். காலை நீட்டி உதற வேண்டும் போல் இருக்கும். வெகு நேரம் இந்த வரிசையில் நின்றிருப்பதால், சற்று விலகி எங்காவது போய் உட்…
-
- 0 replies
- 949 views
-
-
காய் மார்க்ஸ்... கவ் ஆர் யூ.. ஐ அம் பைன் டானியல்.. எப்படிப் போய்க்கிட்டு இருக்கு ஆராய்ச்சி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.. அணுக் கருச்சேர்க்கை தொழில்நுட்பம்.. நடைமுறை சாத்தியம் ஆகிட்டா.. ஆபத்தான அணுக் கருப்பிளவு தொழில்நுட்பத்தை உலகம் கைவிடலாம் இல்லையா. என்னுடைய ஆராய்ச்சி அதுக்கு கொஞ்சம் என்றாலும் உதவினா.. நிச்சயம் மகிழ்வன்..! அதுக்காததான் கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கன். இதென்ன கையில.. சிலேட்டுக் கணணியோட..??! லைவ் அப்டேட் பார்த்திக்கிட்டு இருக்கேன் மார்க்ஸ்..! எங்க இருந்து வருகுது டானியல்.. கூடங்குளத்தில் இருந்து...! என்ன சொல்லுறீங்க அதைப் பற்றி... தமிழ்நாட்டை மிகப் பெரிய ஆபத்தில தள்ளிக்கிட்டிராங்க என்று நினைக்கிறன். ஏன் அ…
-
- 3 replies
- 949 views
-
-
https://www.youtube.com/watch?v=SHI_aTAVwGI மனதை தொட்ட பதிவு . நேரம் உள்ள போது பார்க்கவும்
-
-
- 3 replies
- 949 views
- 1 follower
-
-
பிச்சை ஏ.எம். சாலன் அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்…
-
- 1 reply
- 948 views
-
-
கப்பல் எப்பவரும் கருணை ரவி முள்ளிவாய்க்கால் அ.த.க.பாடசாலையில்தான் நிலானியை கண்டேன். பாடசாலையில்தான் வைத்தியசாலை இயங்குகிறது. சின்னக்கட்டடம். அதுக்குள் உயிருக்காகப் போரடிக் கொண்டிருப்பவர்கள் சிலர் தனித்துமாய்… சிலர் உறவினர்களோடும்… சிலர் உயிர் பிரியும் தறுவாயிலும் கிடந்தார்கள். வெளியில், மர நிழல்களில் கால் கைகளை இழந்தவர்களும் இறந்தவர்களும் குற்றுயிராய்த் துடிப்பவர்களுமாய்… வெறும் நிலத்திலும் தறப்பாள்களிலுமாய்க் கிடந்தார்கள். நான் சஜீத்தை இறந்தவர்களிலும் காயப்பட்டவர்களிலும் தேடிக்கொண்டிருக்கையில்தான் நிலானியைக் கண்டேன். கறுத்திருந்தாள். முன்னைய வடிவெதுவுமில்லை. இரண்டு பின்னல்கள். முன் மயிர் மங்கிக்கட். சிரித்த முகம். இப்போ எதையோ தொலைத்தவளாய் அரைச்சுவரில் முகத…
-
- 0 replies
- 946 views
-
-
கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்
-
- 0 replies
- 945 views
-
-
ரம்போ – ப.தெய்வீகன் EditorOctober 17, 2023 (1) தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம். ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவ…
-
- 1 reply
- 944 views
-
-
கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…
-
- 2 replies
- 943 views
-
-
கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும் காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்! சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது. “பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி. “நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை. “தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல …
-
- 4 replies
- 943 views
-