Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக.... ”காலம் ஆகிய” ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த, தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....

    • 4 replies
    • 951 views
  2. இவ்வார ஆனந்தவிகடனில் "உயிர்த்தெழும் சாட்சியங்கள்" என்ற தலைப்பில் ஈழத்து படைப்புகள் பற்றிய பார்வை (Facebook)

  3. திரையறிவுக்காய் கிளிநொச்சியில் பாலுமகேந்திரா நூலகம்.! ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தனர். ஓர் அழைப்பும் விடுத்தனர் “நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்” சரி என ஒப்புக்கொண்டேன் பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் …

  4. கிளிநொச்சி கலைஞர்களின் மண்குளித்து நாடகம் 13 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது! கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச நாடக குழு இணைந்து 2020ம் ஆண்டின் 48வது அரச நாடக விழாவை கடந்த பெப்ரவரி மாதம் நடத்தியிருந்தது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட ‘மண்குளித்து’ என்ற நாடகம் கடந்த 26.02.2020 அன்று எல்பிஸ்டன் திரையரங்கில் போட்டிக்காக அரங்கேறியது. குறித்த போட்டி நிகழ்வு மூன்று சுற்றுக்களாக இடம்பெற்றது. குறித்த நாடக போட்டிக்காக இவ்வருடம் 32 குறுநாடக பிரதிகளு…

  5. அண்மையில் கலையும் ,படைப்பும் சம்பந்தமான ஒரு பதிவை சில கேள்விகளுடன் பொது வெளியில் கலைஞ்சர்கள் மத்தியில் கேட்டிருந்தேன் .எம் கள உறவு வல்வை சகாறா அக்கா மிக அற்புதமான ஒரு பதிவை பதிந்திருந்தார் அதை கள உறவுகள் உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதல் இங்கே பதிவிடுகிறேன் .நன்றி சாகாறா அக்கா . எம்முடைய படைப்புகளை நாம் பெரும் சோதனைகளைச்சந்தித்தே வெளியே கொண்டு வர வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. குறுகிய மனம் படைத்த சூழலில் வாழும் கலைஞன் பெரிதாக எதனையும் சாதித்துவிடமுடியாது. பொருளாதாரப்பலமும் புறச்சூழலின் ஆதரவும் கணிசமாக இருந்தால் கண்ணாடிக்கற்களும் வைரங்களாக யொலிக்கலாம் அன்றில் போராட்டங்களில் யெயிக்கும் மன ஓர்மம் இருக்கவேண்டும் தளம்பல்களும் எம்மை எம்முடைய த…

    • 1 reply
    • 937 views
  6. "நிலவே என்னிடம்"~ கீபோர்ட் இன்னிசை விருந்தில் லண்டன் மாநகரில் என்னுடன் இணைந்து தபலா இசைத்து மகிழ்வித்த இளம் நல்கலைஞன்,ஜனன் சத்தியேந்திரன்!~மற்றும் நமது கலையுலக நண்பர்'ஆறுமுகம் ரவீந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    • 5 replies
    • 937 views
  7. கபிலன் வைரமுத்து கவிஞர், நாவலாசிரியர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் கபிலன்வைரமுத்து. சமீபத்தில் ‘மெய்நிகரி’ என்ற நாவலை வெளியிட்டிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் உருவாகும் ஒரு ரியாலிட்டி ஷோவை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் முதல் தமிழ் நாவல் இதுவே. நாவல் வெளியிடுவதற்கு முன் சமூக வலைதளங்கள் மூலமாக வாசகர்களுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி புதுமை செய்திருக்கிறார். ‘மெய்நிகரி’ குறித்தும் திரைத்துறை குறித்தும் அவருடன் ஒரு நேர்காணல். ‘மெய்நிகரி’ என்றால் என்ன? இந்தக் கதையமைப்பில் வரும் தொலைக்காட்சி அலுவலகத்தை ‘மெய் நிகரி’ என்று குறிக்கிறேன். மெய்க்கு நிகரான பிம்பங்களை உற்பத்தி செய்யும் தளம் என்பது பொருள். உங…

  8. ஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக.... 1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்? முதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது. 2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள…

  9. நேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன் ஞாயிறு தினக்குரலில் வெளியானது. நேர்கண்டவர் மல்லிகா. கேள்வி- எழுதத் தொடங்கிய ஆரம்பகாலம் பற்றிச் சொல்லுங்கள்? பதில்- நான் பிறந்ததும் வளர்ந்ததும் புத்தகங்களிற்கு மத்தியில்த்தான். எங்கள் வீட்டில் நிறைய இந்தியசஞ்சிகைகளின் சேமிப்பிருந்தது. பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதங்களில் வந்த தொடர்கதைகள் எல்லாம் தொகுத்து கட்டப்பட்டிருந்தன. வரலாற்று நாவல்கள் எல்லாம் இருந்தன. அதனால் சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. நிறைய வாசிப்பவர்கள் எல்லோரும் எழுதிப்பார்ப்பார்கள். அப்படித்தான் பாடசாலை நாட்களில் அம்புலிமாமா பாணிக்கதைகள் சில எழுதினேன். அவற்றை கொப்பியில் எழுதி சிறிய சிறிய புத்தகங்களாக தொகுத்தும் வைத்தேன். …

  10. நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை! வணக்கம் உறவுகளே !! மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் . இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன். வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது. அப்போது நான் பார்…

    • 3 replies
    • 930 views
  11. efc439d418dd0dd2db7f7b8cf4310a3a காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார். https://scontent-ord.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11038472_359598487572200_4554499654009845864_n.jpg?oh=7b6f75b48ca7a174fe9b999f55a9bfc1&oe=55C71C28

  12. ‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’ நேர்காணல்: தேவகாந்தன் நேர்கண்டவர்: கருணாகரன் (‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் …

  13. ? உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன? நான் பேர்னாட்ஷோவின் ரசிகன். உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என அவரை ஒரு நிருபர்; கேட்டார். 'முதலாவது சேர்;ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது' என ஷோ கூறினார். ? நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்? இது எதிர்மறையான கேள்வி. இளம் வயதில் அரச சேவையில் - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன். வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன். ? இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? மஹாகவியும் முருகையனும் செய்த „கவிதைச் சமர்... நினைவில் நிற்கிறது. „மார்க்ஸுன் கல்லறையிலிருந்து ஒரு குரல்... என்று வெங்கட் சாமிநாதன் எழுத…

    • 1 reply
    • 906 views
  14. கி.ராஜநாராயணன் புதுச்சேரி 99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா. கரோனா காலத்தில் தனது கையெழுத்தில் ’அண்டரெண்டப் பட்சி’ எழுதி முடித்து கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தொடர் எழுத்தில் மும்முரமாக உள்ளார். கி.ரா. என்றும் 'தாத்தா' எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப…

    • 1 reply
    • 906 views
  15. `குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா. ``ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. ஆனால் ஒரு நாள் நிச்சயம் எல்லாம் மாறும்" என்று ஒரு நேர்காணலில் திரு.மதிசுதா புன்னகைத்தபடி கூறுகிறார். தமிழ் ஈழத் திரையுலகின் முக்கியமான முகங்களுள் ஒன்றாகத் திகழும் இவர், தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலமாக ஈழத்தின் வாழ்வியலை, போராட்டக் களத்தை, போர் வன்முறைகளை, ஈழம் இழந்த அடையாளங்களைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். கலையெனும் ஆயுதத்தால் மட்டுமே மனிதனின் உடலை, …

  16. தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் 32 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வசித்து வரும் வைதேகி ஹெர்பர்ட் என்பவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரிய சாதனையை தமிழ் சமுதாயம் வியந்து பாராட்டவில்லை. ஆனால் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன. அவர் இதுவரை பதினெட்டு சங்க இலக்கியங்களில் பன்னிரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மற்ற ஆறு இலக்கியத் தொகுப்புகளும் விரைவில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றும் வைதேகி சார்லஸ் ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலப் பள்ளியில் படித்த போதும் இவருக்கு தமிழ் மேல் தணியாத ஆர்வம் இருந்தது என்று அவர் கூறுகிறார். கலிபோர்னியா…

    • 0 replies
    • 897 views
  17. இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…

  18. இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு… இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும் அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல். இதனை எழுதும்போது கூட…. சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான் ஆரம்பிக்கிறேன் இதனை. நினைவு தெரிந்த நாளிலிருந்து…. “…திரை இசை இத்தோடு முடிந்தது. மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….” என்பதோடு என் வீட்டு வானொலியின் கழுத்து திருகப்பட்டு விடும். ஹம்சத்வதனியோ..கல்யாணியோ.. கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ… அணுவளவும் அறிந்ததில்லை நான். உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன். ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான். உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன். ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான். உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன…

  19. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள். 8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என ப…

  20. -இராமானுஜம் நிர்ஷன்- காதலைப் பற்றிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு காதல் தோல்வியைப் பற்றிய பாடல்களும் அதிகமான வரவேற்பை பெறுகின்றன. காதலியை நாசுக்காக கிண்டல் செய்வதும் காதல் தோல்வியின் விளைவுகளை ரசிக்கும்படியாகச் சொல்வதும் பாடல்களை மெருகேற்றச் செய்வதை பல சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம். காதல் தோல்வி, வலிகளை வார்த்தைகளுக்குள் அடக்கி அதற்குப் பொருத்தமான இசையும் காட்சியமைப்புகளும் சிறப்பாக அமையும் பட்சத்தில் நிச்சயமாக அப்பாடல் வெற்றியடையும் என்பது திண்ணம். அந்த வகையில் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு நம்நாட்டுக் கலைஞர்களால் அண்மையில் வெளியிடப்பட்டு வெற்றிநடை போடும் பாடல் பற்றிய குறிப்பை இவ்வார நம்மவர் களம் பகுதியினூடாக தருகிறோம். வி.பிரஜீவ் இன…

    • 0 replies
    • 868 views
  21. பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம். சமீபத்தில், ஒரு தமிழ்க் கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கிவந்தேன். கல்லூரியிலிருந்து களைத்து வந்த மகள் என் முன் வந்து உட்கார்ந்தாள். கவித்தொகுதியைக் கொடுத்து நான் வட்டமிட்டிருந்த கவிதை களையாவது படித்துக் கருத்துச் சொல்லும்படி கெஞ்சினேன். அட்டையையும் பின்னட்டையையும் பின்னட்டைக் குறிப்பையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பிறகு புத்தகத்தைப் புரட்டினாள். இதென்ன எழுத்துரு, குழந்தைகள் புத்தகம் மாதிரி என்றாள் எரிச்சலுடன். என் கெஞ்சல் கொஞ்சமும் பலனளிக்கவில்லை. புத்தகம் மீண்டும் என் கைக்கு வந்துவிட்டது. இளம் தலைமுறையினரிடம் பாரதியைக் கொண்டு செல்வது எப்படி என்று …

  22. 'காந்தள்பூவும், சோழக்காடும்' : வளர்ந்து வரும் இலங்கை கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு! அண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய இலங்கை பாடகர் ஆர்யன் தினேஷ் முதல் வளர்ந்து வரும் மேலும் பல உள்ளூர் தமிழ் இசைக்கலைஞர்கள் வரை அவர்களது தேடல்கள், முயற்சிகள், வளர்ச்சிப்படிகள் பற்றி அலசுகிறது இக்கட்டுரை. கல்யாண வீடுகள், கோவில் திருவிழாக்கள், தேனீர் கடைகள் என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த இசையும்- பாடல்களும் கணனிகளுக்குள்ளும், ஐபோட்டுக்குள்ளும், எம்.பி.3 சுழலிகளுக்குள்ளும் சுருங்கிவிட்ட காலம் இது. புதிய பாடல்களின் வரவை அறிய வானொலிகளைச் சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் மலையேறிவிட்டன. போட்டிபோட்டுக் கொண்டு ‘முதலில் புதிய படங்களின் பாடல்களை உங்களுக்கு…

  23. Started by யோக்கர்,

    ஈழத்தை சேர்ந்த இயக்குனர் சோமிதரனின் தராகி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.