Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும். https://thinakkural.lk/article/311831

  2. இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ள…

  3. இலங்கையின் மூத்த இலக்கியவாதி காவலூர் ராஜதுரை காலமானார் இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார். இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இவர் முன்னர் பணியாற்றியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்ட காவலூர் ராஜதுரை அவர்களின், கதை வசனத்தில் வெளியான ''பொன்மணி'' திரைப்படம் இலங்கையில் தயாரான தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தனது இறுதிக் காலத்தில், காவலூர் ராஜதுரை பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பி…

  4. இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் By T. SARANYA 21 OCT, 2022 | 11:56 AM இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார். இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் 'சாகித்திய ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virake…

  5. இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார். Image captionசற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி …

  6. Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 08:49 PM இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார். புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசி தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார். கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார். ஜோர்ஜ் அழகையா ஈராக், ருவ…

  7. பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழி…

    • 7 replies
    • 1.5k views
  8. ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை காலமானார் 36 Views கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரேசன் ஐயாவின் மறைவுக்கு “இலக்கு செய்தி நிறுவனம்” தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.o…

    • 9 replies
    • 1.2k views
  9. [size=4]மரண அறிவித்தல்[/size] திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) [size=3]தோற்றம் 19-10-1968[/size] [size=3]மறைவு 13-07-2012[/size] மரண அறிவித்தல் யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்தி…

    • 36 replies
    • 3.2k views
  10. எம் த‌லைவ‌ரை ஆத‌ரிச்ச‌ கார‌ண‌த்துக்கா 17மாத‌ம் சிறை வாழ்க்கையை அனுப‌வித்த‌வ‌ர் 2002ம் ஆண்டு , எல்லாரும் அன்போடு மாமா என்று அழைக்கும் மாமா எம்மோடு இல்லை என்று நினைக்கும் போது க‌ண்ணீர் ஆறா ஓடுது 😢😓 , மாமாவுக்கு ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல் மாமாவின் ஆத்மா சாதி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திப்போம் 🙏🙏🙏

  11. ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்! ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்க…

    • 8 replies
    • 1.4k views
  12. குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் கூட அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை. அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை. எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்…

    • 13 replies
    • 1.4k views
  13. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்.! ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையிலிருந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது இறுதிக்கிரியைகள் குறித்து விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/89556/

  14. ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜன் மாரடைப்பால் காலமானார்.! ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பணியாளருமான ந.கேசவராஜன் இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமானார். இந்திய சினிமா மோகத்தினை உடைத்து, இலங்கைத் தமிழர்களின் பேச்சுவழக்குப் பாணியை திரைப்படத்தில் வெளிப்படுத்தி வெற்றிகண்ட இயக்குனர்களில் முதல் நிலையில் அவர் திகழ்ந்திருந்தார். திசைகள் வெளிக்கும், பிஞ்சுமனம், கடலோரக்காற்று, அம்மாநலமா போன்ற போர்க்கால பிரபல திரைப்படங்களை இயக்கியிருந்தவர். போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் திரைப்படத் துறையில் செயற்பட்ட அவர், பெருமளவான குறும்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் நடித்…

  15. ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாள…

  16. ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 19:31 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு.தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்தி…

  17. ஈழத்தின் மூத்த குரலிசையாளர் சங்கீதபூசணம் சுப்பையா கணபதிப்பிள்ளை காலமானார்.! ஈழத்தின் மூத்த குரலிசையாளர் சங்கீதபூசணம் சுப்பையா கணபதிப்பிள்ளை இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். யாழ்.கல்விவலயத்தின் முன்னாள் அழகியற்பாடப் பணிப்பாளராக விளங்கிய அவர் ஆசியர் சேவையில் மிக நீண்ட காலமாக பணியாற்றி பெருமளவான குரலிசை மாணவர்களை உருவாக்கியவராக விளங்கி வந்திருக்கின்றார். இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீதபூசணம் பட்டம் பெற்ற கணபதிப்பிள்ளை வரகவி பொன்னாலை கிருஷ்ணபிள்ளையின் பெறாமகன் ஆவார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முதல் தர (A)ப் பாடகராக விளங்கிய பெருமைக்குரிய கணபதிப்பிள்ளை வரன்முறையான ஆற்றுகையாளராக விளங்கியதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பெருமளவான அரங்க…

    • 3 replies
    • 964 views
  18. ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார் ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் தனது 70 ஆவது வயதில் கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். கந்தபுராணம், திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் இவர் எழுதியிருந்தார். இவர் பல ஆன்மீக நூல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவரின் சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவையாகும். http://ww…

  19. ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்! ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற…

  20. Published By: VISHNU 17 JAN, 2025 | 08:49 PM ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்…

  21. வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த அரும்பெரும் கலைஞர் “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் ஜூலை 29ம் திகதி காலமானார். மேடை நாடகம், வில்லுப்பாட்டு என்பவற்றில் நகைச்சுவையால் மக்கள் மனங்களை வென்ற ஓர் உன்னதமான கலைஞராக ஐசக் இன்பராஜா விளங்கினார். ஈழத்தின் திரைப்பட இயக்குனர் நிரமலா புகழ் அருமைநாயகம் அவர்களின் இயக்கத்தில் பல நாடகங்களில் கலைஞர் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார். “லூஸ் மாஸ்ரர்” என்கின்ற நகைச்சுவையின் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலும் புகழ் பெற்று விளங்கினார். ஆடி, பாடி நடிப்பதில் வல்லவரான “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா அவர்களுக்கு ‘மாப்பிள்ளை தேவை’ என்ற நாடகம் மிகப்பெரும் புகழை ஈட்டிக்கொடுத்திருந்தது. செய்ய வேண்டும்…செய்யவேண்டும்….உடனடியாச் செ…

    • 21 replies
    • 2.5k views
  22. ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் மரணம் ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக’ வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி ‘சஞ்சீவ்’ இன்று காலை, வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மூன்றுமாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் ‘Drone Camera’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ யாழ்மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன். பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால்… 21 வயதில் இறப்பு…! பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-ப…

  23. இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார். அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொ…

  24. ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்! ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார். டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.