துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 35 replies
- 3.6k views
- 2 followers
-
-
எம் தலைவரை ஆதரிச்ச காரணத்துக்கா 17மாதம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் 2002ம் ஆண்டு , எல்லாரும் அன்போடு மாமா என்று அழைக்கும் மாமா எம்மோடு இல்லை என்று நினைக்கும் போது கண்ணீர் ஆறா ஓடுது 😢😓 , மாமாவுக்கு ஆழ்ந்த இரங்கல் மாமாவின் ஆத்மா சாதி அடைய கடவுளை பிராத்திப்போம் 🙏🙏🙏
-
- 26 replies
- 3.6k views
-
-
ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 19:31 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு.தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்தி…
-
- 6 replies
- 3.6k views
-
-
பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தா…
-
- 12 replies
- 3.6k views
-
-
9.7.2006 சிங்களத்து சமாதானப் புறா வேடமிட்டு வந்த சந்திரிக்க அரசால், 141 அப்பாவித் தமிழ்மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நாள் ஆகி இன்றோடு 11 வருடங்கள் கழிந்து விட்டன! தேவாலயமாக இருந்தபோதும், அங்கே பாதுகாப்பிற்கு மக்கள் தங்குவார்கள் என்று தெரிந்தபோதும், குண்டு வீசி அவ்வுறவுகளைச் சின்னபின்னமாக்கிய நாளை எப்படி மறக்க இயலும்!! தமிழன் என்பதற்காக கொல்லப்பட்ட, அந்த உறவுகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள்!!
-
- 14 replies
- 3.5k views
-
-
யாழ்.கள உறவான... poet என்ற பெயரில் உள்ள, வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் சகோதரி, அண்மையில் காலமாகி விட்டதாக அறிந்தோம். அவரின் பிரிவால் துயருறும் ஜெயபாலன் அவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 24 replies
- 3.5k views
-
-
படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா
-
- 16 replies
- 3.5k views
-
-
யாழ் கள உறுப்பினரான K. VETTICHELVAN அவர்களின் தம்பியான கப்டன் தமிழ்க்குமரன் என்றழைக்கப்படும், திருமலை மாவட்டத்தை சேர்ந்த கனகசூரியன் ஜெயகாந்தன் அவர்கள் திருமலை மாவட்டத்தில் கடந்த 7ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவரோடு வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 12 replies
- 3.5k views
-
-
சுண்டலின் மாமாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் சுண்டலுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 3.4k views
-
-
வீரவணக்கம் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன்
-
- 17 replies
- 3.4k views
-
-
இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார். அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொ…
-
- 31 replies
- 3.4k views
-
-
யாழ் கள உறவு ஜஸ்ரினது மாமனார் (மனைவியின் தந்தை) 'விக்ரர் ஞானந்தராஜா' அவர்கள் கடந்த ஞாயிறு அன்று காலமானார். அன்னாரை இழந்து வாடும் ஜஸ்ரினதும், அவர் மனைவியினதும், குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். -------------------- யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் ஞானந்தராஜா அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, மரியப்பிள்ளை(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ருக்மணி(சுருவில்) அவர்களின் அன்புக் கணவரும், சுபாஷினி, சிலோஷினி ஆகியோரின் அருமைத் தந்தையும், ஜொனத்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும், …
-
- 32 replies
- 3.3k views
- 1 follower
-
-
[Wednesday, 2011-07-06 21:51:16] பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.
-
- 28 replies
- 3.3k views
-
-
தமிழ்ச்செல்வன் அண்ணா இருந்திருந்தால் மக்களிடம் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது. எப்படியாவது தெம்பூட்டும் வார்த்தைகளால் மக்களை அரவணைத்திருப்பார். அவர் இல்லை என்பது சோகமானதாக இருந்தாலும், அவரின் இலட்சியப்பாதையில் வெற்றி பெறுவதே அவரின் ஆத்மாவிற்கு செய்யக் கூடிய ஒரே ஒரு கடமையாகும். காலம்காலமாக எம் போராட்டத்தில் பல மூத்த தளபதிகளை இழந்தபோதும், அது மீண்டும் வீறு கொண்டு எழுந்ததே வரலாறு. இம்முறையும் அது மாறாது.
-
- 11 replies
- 3.3k views
-
-
றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச
-
- 16 replies
- 3.3k views
-
-
படம்: தமிழ்நெற் அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள் தாகம் ஒன்றே ஈழமென்று பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே! எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே! ஈழமெங்கணும் உந்தனின் இறுதி ஊர்வலம். தமிழன் மனங்களெங்கணும் உன் பிரிவினால் ரணம். நாயின் வாலை நிமித்த முடியுமோ? சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ? பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ. பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே. சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே. தேசியத்தலைவரின் கருணையினால் சிங்களச்சிப்பாய் விடுதல்லை. காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை. ஊமையாய் இருக்கவோ நாங்கள்? உண்மை…
-
- 18 replies
- 3.3k views
-
-
ஓவியரும், ஒளிப்படக் கலைஞருமான கருணா வின்சென்ட் காலமானார்…. February 23, 2019 2017 தை 14 ,15 இல் கனடாவில் இடம்பெற்ற, கருணா வின்சென்ட்டின் கண்காட்சியை முன்னிட்டு வெளிந்த கட்டுரையை இங்கு நினைவு கூர்கிறோம்… கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து Jan 13, 2017 @ 13:52 Edit கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் த…
-
- 4 replies
- 3.3k views
-
-
தமிழ் மக்களின் வாழ்வுக்காக தன்னுயிர அர்ப்பணித்த லெப் கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீரவணக்கங்கள்
-
- 16 replies
- 3.2k views
-
-
எனது அத்தான் - என் அப்பாவின் அக்காவின் மகனும், எனது மூத்த அக்காவை திருமணம் செய்த எங்கள் சொந்த மச்சானும் ஆகிய திரு தம்பு சுப்பிரமணியம் நேற்று இலங்கையில் காலமானர். எனது 5 வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கும் எங்கள் குடும்பத்தையும் தனது சொந்த உறவாக கவனித்து வந்தவரின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னமும் நானும் எங்கள் குடும்பமும் அவரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். இந்தத் துயரச்செய்தியை எனது யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
-
- 37 replies
- 3.2k views
-
-
சிங்களத்திற்கு சிம்மசொப்பனமாய் இருந்த பிரிகேடியர் பால்ராஜ்சிற்கு எமது வீர வணக்கங்கள்.
-
- 13 replies
- 3.2k views
-
-
[size=4]மரண அறிவித்தல்[/size] திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) [size=3]தோற்றம் 19-10-1968[/size] [size=3]மறைவு 13-07-2012[/size] மரண அறிவித்தல் யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்தி…
-
- 36 replies
- 3.2k views
-
-
தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக…
-
- 16 replies
- 3.2k views
-
-
தாயகம் கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு கிட்டு பீரங்கி படையின் சிறப்பு தளபதி அம்பலவாணன் நேமிநாதன் சுன்னாகம் யாழ்ப்பாணம் பிறப்பு 30:05:1961 வீரச்சாவு 25:08:2002 மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே........ ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவு…
-
- 8 replies
- 3.2k views
-
-
ஆழ்ந்த அனுதாபங்கள் மயூராவின் குடும்பத்திற்கு! மயூராவின் இழப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். மிகவும் நட்பாக பழகக் கூடிய பண்பும் மிகவும் திறமையான மாணவியாகவும் பெற்றோர்களுக்கு ஆசை மகளாகவும் திகழ்ந்தார். இவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். ===>>நண்பர்கள்<<===== 9ஆம் மாத நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்தியமும் Date of Birth 1985-10-11 Date of Death 2007-03-09 செல்வி முருகையா மயூரா (முகாமைத்துவப் பிரிவு, யாழ். பல்கலைக்கழகம் 2007) பொன் மயிலே! புதுச்சரமே! புன்னகையே! புதுமலரே! பூமுகத்தைக் காண்போமா? புன்னகையை இரசிப்போமா? ஆசைச் செல்வமே! அன்பு மலரே! பாசம் மாறாத நேசத்தாமரையே! கைகள் கூப்புகின்றோம் கண்மலர்கள் த…
-
- 10 replies
- 3.2k views
-
-
முகமாலை முன்னரங்கச் சண்டையில் இன்னுயிர் ஈத்த கப்டன் இசைச்செல்வி உட்பட 10 வீரர்களுக்கு வீரவணக்கம்
-
- 15 replies
- 3.1k views
-