அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சிறு பொறிகள் - நிலாந்தன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது திருக்குறளில் உள்ள ஒரு வார்த்தை. ஊரில் நீரை நுகரும் இடம் அவ்வாறு என்றழைக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் இருந்து தொடங்கி நல்லூர் வளாகத்துக்குள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள புடவைக் கைத்தொழில் திணைக்கள வளாகத்தில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அங்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சிக்கூடாக வடக்கின் நீரைப் பாதுகாப்புக்கான அமைப்பும், வடக்கின் இளம் நீர் வாண்மையாளர்களும் இணைந்து முன்னெடுத்த மேற்படி கலந்த…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? செய்தியாளனின் நேரடிச் சாட்சியம் அ.நிக்ஸன் சந்திரிகாவின் ஆட்சியில் 1999. 2000 ஆம் ஆண்டுகளில் நான் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ரெலோ இயக்க முதல்வர் சிறிகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன். ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோரை நேர்காணல் செய்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எழுதினேன். அதே காலப்பகுதியில் தினக்குரல் பத்திரிகையில் ரவிவர்மன் என்ற செய்தியாளர் இவர்களைத் தொடர்ச்சியாகப் பேட்டி கண்டு எழுதினார். விடுதலைப் புலிகளை விமர்சிப்பதைவிட சந்திரிகா ஆட்சியின் ஏமாற்றுக்களையே இவர்கள் தமது நேர…
-
- 4 replies
- 1k views
-
-
கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை, அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது; அவர்கள் காலாவதியாகி விட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம்; அதில் தவறில்லை. ஆனால், கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை, அவ்வாறு வாழ முயன்றால், யதார்த்தம் அவர்கள் முகத்தில் அறையும். ஆனால், பலர் கற்பனையிலும் கனவிலு…
-
- 0 replies
- 626 views
-
-
ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவின் பின்புலத்துடன் தொடர்ச்சியாக செல்பட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். சமகால அரசியல் போக்கு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் களம் குறித்தும் மேலும் பல அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் அவர் எம்மோடு பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, https://www.ibctamil.com/srilanka/80/144776?ref=home-imp-parsely
-
- 0 replies
- 465 views
-
-
சென்னையில் 3-2-2013 அன்று மக்கள் நல்வாழ்வுக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட “தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கத்தின் காணொளி மற்றும் நிழற்படப்பதிக் காண http://www.chelliahmuthusamy.com/2013/02/blog-post_8.html
-
- 3 replies
- 595 views
-
-
கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்ப்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கிமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்த முக்கியமான தடைகளில் ஒன்று இல்லாமற் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் இராணுவ வல்லமை தொடர்பில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தது. தமிழ் மக…
-
- 0 replies
- 459 views
-
-
மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் – மட்டு.நகரான் 110 Views கால்நடையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. இதுதான் எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை, எங்கள் உலகம். இதனை இல்லாமல் செய்வதன் மூலம் எங்களை அழித்து விடலாம் என சிங்களவர்கள் நினைக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வரும் விடயமே மேய்ச்சல்தரைப் பிரச்சினையாகும். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினையானது, சர்வதேசம் வரையில் பேசுபொருளாக இருந்தது. அரசியல் கட்சிகளின் அரசியல் பொருளாகவும் இருந்தது. ஆன…
-
- 0 replies
- 520 views
-
-
நல்லாட்சி அரசின் எதிர்காலம் " ஒருபுறம் இப்போக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கிகள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தமது சீற்றத்தையும் அடிக்கடி இந்த அரசாங்கத்தின் மீது காட்டி வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஒற்றையாட்சி முறையிலான தீர்வை நாம் ஏற்கத் தயாராகயில்லை. இணைப்பற்ற ஒரு அரசியல் தீர்வு அர்த்தமற்றது என்ற தமது தீர்க்கமான முடிவுகளையும் சொல்லி வருகின்றார்கள். ஆனால் ஜனாதிபதியவர்கள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் மூலம் தீர்வுகாண வேண்டியது எனது தலையாய பொறுப்பு. அதிலிருந்து நான் விலகிப் போகமாட்டேன் என சத்…
-
- 0 replies
- 575 views
-
-
கைவிட்டுப்போன கிழக்கு முனையம் -சுபத்ரா “கிழக்குமுனையம் இந்தியாவுக்கே வழங்கப்படும் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்த ராஜபக்ஷவினரின் அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடித்து கடைசியில் காலை வாரியிருக்கின்றது. இதனால் இலங்கையிடம் மீண்டும் ஒரு தடவை ஏமாந்துள்ள பிராந்திய வல்லரசாககாட்டிக்கொள்ளும் இந்தியாவுக்கு இம்முறை ‘மரணஅடி’ விழுந்திருக்கின்றது”. கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு வியூகங்களும், மோடியின் ‘வக்சின்’ இராஜதந்திரமும், இலங்கை அரசாங்கத்தினால், தோற்கடிக்கப்படும் நிலைக்கு வந்திருக…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்க…
-
- 1 reply
- 426 views
-
-
ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில் 56 Views பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத் தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக் கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத வரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மை’யின் அடி…
-
- 0 replies
- 465 views
-
-
13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும். உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில…
-
- 6 replies
- 724 views
-
-
-
- 1 reply
- 500 views
-
-
எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…
-
- 2 replies
- 527 views
-
-
ஹிஷாலினியின் மரணம்: பல்வேறு பரிமாணங்களில் மலையகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது – பி.மாணிக்கவாசகம் July 29, 2021 சிறுமி ஹிஷாலினியின் மரணம், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு குற்றவியல் சம்பவமாகப் பதிவாகி இருக்கின்றது. ஆனால் அந்த மரணம் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வினாக்களும், ஏற்கனவே பலதரப்பினராலும் எழுப்பப் பட்டுள்ள வினாக்களும் மலையகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிமாணங்களை வெளிப் படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அந்தச் சிறுமியின் மரணம் இன மத சமூக நிலைமைகளைக் கடந்து நாடளாவிய ரீதியில் பலதரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அவருடைய மரணத்திற்கு ந…
-
- 0 replies
- 265 views
-
-
ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி. எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப் பெறுகின்ற சிந்தனைகள் நீண்டகாலத்துக்கு நிலைப்பது குறைவு. வரலாறு தனது கொடுங்கரங்களால் சிந்தனைகளின் செயலை நடைமுறையில் தோற்கடித்து சிந்தனைகளைக் காலத்துக்கு ஒவ்வாததாக மாற்றிவிடுகிறது. இதையும் தாண்டி ஒரு சிந்தனை காலமாற்றத்துக்கு நின்று நிலைக்குமாயின் அது மகத்துவமானது. அது அச்சிந்தனையின் சிறப்பை, மாறுகிற காலத்துடன் மாறுகின்ற செயன்…
-
- 1 reply
- 614 views
-
-
காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என கோரி நூறு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற உறவினர்களே இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதிக்கான …
-
- 0 replies
- 403 views
-
-
வட–கிழக்கில் தமிழர்களை ஒடுக்கும் வகையான இராணுவ கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள இராணுவச் செலவினங்கள் குறைக்கப்பட்டேயாக வேண்டும். இதனை ஓர் முன்நிபந்தனையாக வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் வேண்டுகோள் விடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையாளராகச் செயற்படும் இராணுவக் கட்டமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சத்தை நீக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயல்வார்களேயானால் நிச்சயமாக பாதுகாப்புச் …
-
- 0 replies
- 257 views
-
-
இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார…
-
- 0 replies
- 811 views
-
-
அகதிகள் உருவாக்கம் எழுதப்படாத விதியா? உலகம் முழுவதிலும் மனித குலம் அமைதியாக வாழ்ந்து வருகின்றதா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசுகளாக இருந்தாலும் சரி, மன்னராட்சி அரசுகளாக இருந்தாலும் சரி, சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் சகல உரிமைகளையும் பெற்று வாழ்கின்றனரா? பஞ்சம், பசி, பட்டினியின்றி உலக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாட்டுக்கு நாடு ஏற்படுகின்ற போர், உள்நாட்டுப் போர்கள், இனத்தின் மேலான அரசின் ஒடுக்குமுறைகள், மதப் பிணக்குகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் உலகத்தின் கண்முன்னால் தினமும் நடந்தேறி வருகின்றன. …
-
- 0 replies
- 739 views
-
-
யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி ஒரு போட்டி. இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் . அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .
-
- 35 replies
- 3.1k views
-
-
சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? எம்.எஸ்.எம். ஐயூப் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவும், இப்போது அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சிங்கள மக்களின் து…
-
- 0 replies
- 664 views
-
-
கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது. அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியா…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள துணை இராணுவக் குழுவினரை வெளியேற்ற அழுத்தம் கொடுப்போம் [செவ்வாய்க்கிழமை, 20 யூன் 2006, 20:02 ஈழம்] [பிரான்சிலிருந்து சி.யாதவன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார். ... ....... எனவே சில உயிரற்றுப் போன …
-
- 3 replies
- 1.9k views
-
-
மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…
-
- 0 replies
- 379 views
-