Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பாலானவர்களை அது ஆச்சரியப்பட வைத்ததா அல்லது அதிர்ச்சியடைய வைத்ததா என்று கூறமுடியாது. அந்தளவுக்கு கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு. தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு இப்படியொரு தோல்வியை எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் இந்த வெற்றியை ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார். அதுபோல கருணாநிதி இதுபோன்ற தோல்வியையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்தளவுக்கு இது எதிர்பாராத முடிவைத் தந்துள்ளது. அதி…

    • 0 replies
    • 780 views
  2. தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …

  3. தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” ஓகஸ்ட் 3, 2021 ~ Vigetharan A.S அ. சி. விஜிதரன் தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” என்பது வித்தியாசமான தலைப்புப் போல தெரியலாம். ஆனால் முப்பது ஆண்டுகாலமாக இதுவே எதார்த்தமாக உள்ளது. இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய …

  4. தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி காந்தி தேசம், காந்தியை விட உறுதியுடன் போராடிய போராளிகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் போனது ஏன்? ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிக்கு ராஜீவ் காந்தி பலியாகியிருந்தார் என்று தான் சொல்ல முடியும். ஒப்பரேஷன் பூமாலை என்ற உணவுப் பொட்டலங்களைப் போட்டது. மற்றும் மில்லரின் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இவற்றிற்கிடையான காலப்பகுதியில் ஜே.ஆர். ராஜீவ் காந்தியை வசப்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல…

  5. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்… 15 Views 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. அதில் சிலவற்றை செயல்படுத்த முடியும். சிலவற்றை செயல்படுத்த முடியாதவை. இதில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதின் நோக்கம் என்னவென்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையின் செயலாக…

  6. தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்ம…

    • 3 replies
    • 1.1k views
  7. தமிழ்ப் பகுதிகளை விட்டு படையினரை வெளியேற்றம் செய்யக் கூடிய சக்தி தமிழ்க் கட்சிகள் மத்தியில் உண்டா?- நிலாந்தன் (கட்டுரை) புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில்…. “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும், இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. வட மாகாண முதலமைச்சர் கூறி வருவது போல பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான மூலகாரணம் படைமயப்பட்ட ஒரு சூழல்த…

  8. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்த…

  9. தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன் ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான …

  10. தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன் கடந்த மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது என்று மேற்படி சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைப்புகளைச் சாராத செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 46 பேர் பங்கு பற்றினார்கள். மதத் தலைவர்கள், கருத்து…

  11. தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினு…

  12. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யும…

  13. தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன். தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களைப் போல பகட்டாக, அட்டகாசமாக இருக்கவில்லை. அங்கே பிரம்மாண்டமான போஸ்டர்கள், பதாகைகள் எவையும் இருக்கவில்லை. பொது வேட்பாளரின் ஒரே ஒரு சுவரொட்டி மட்டும் இருந்தது. அதுவும் வீட்டுக்குள்ளே ஒரு குளிரூட்டியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்தச் சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒட்டப்படுகின்ற எல்லாச் சுவரொட்டிகளை விடவும் எளிமையானது. சிறியது... கவர்ச்சி குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தம்மைச் சந்தித்த மக்கள் அமைப்பினரிடம்…

      • Thanks
      • Haha
      • Like
    • 12 replies
    • 824 views
  14. தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரச…

  15. தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள்…

  16. (புருஜோத்தமன் தங்கமயில்) “...தாயகத்தில் இனியும் சம்பந்தன் காலத்து அரசியலை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் தாயக அரசியல் – சமூக செயற்பாடுகளில் புலம்பெயர் தரப்புக்கள் ஆளுமை செலுத்த விரும்பின; அதாவது, முடிவுகளை எடுக்கும் தரப்புக்களாக இருக்க நினைத்தன. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாடுகளை தாண்டி தாயகத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளை இலகுவாக கையாள முடிகின்றது. அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இப்போது, தாயக அரசியலை சுமந்திரன் ‘ஆதரவு – எதிர்’ அரசியலாக மாற்றுவதன் மூலம், இலகுவாக பிரித்தாளும் …

  17. தமிழ்ப்படகு மக்கள் 15 NOV, 2022 | 01:31 PM படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு மத்திய தரைக்கடலின் ஊடாக படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு. உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு இலங்கைத் தமிழர்களும் …

  18. [size=4] -கே.சஞ்சயன் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் முதன் முதலாக 109 தமிழ்ப் பெண்கள் கடந்தவாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் நிலைகொண்டுள்ள 6ஆவது பெண்கள் படைப்பிரிவில், இவர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்வு பெருமெடுப்பிலான பிரசாரங்களுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது. வன்னியில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பின் மூலம் 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட 350 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அதில் 240 பேர் மருத்துவ சோதனைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். மருத்துவ சோதனைகளிலும் தேறிய 109 பெண்களே கடந்தவாரம் தொண்டர் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப்பரிவில் தமிழ்ப் பெண்கள் எ…

    • 7 replies
    • 1.1k views
  19. தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு July 31, 2024 — கருணாகரன் — தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். 00 ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள். – ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்டத்துக்குப் பின்னான தற்போதய அரசியலும் தோற்றுப் போனதாகவே உள்ளது. இதிலும் இரண்டு வகை உண்டு. – ஒன்று நம்மைப் பிறர் – எதிராளர்கள் – தோற்கடிப்பது. –…

      • Like
    • 2 replies
    • 850 views
  20. தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா? September 3, 2024 — கருணாகரன் — பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன. பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர…

  21. தமிழ்மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் ஏன் தேவைப்படுகின்றது?

  22. தமிழ்மக்களுக்குள்ள தெரிவு மாற்று அரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே! சி.அ.யோதிலிங்கம் நேர்காணல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது பற்றி? அண்மைக்காலமாக அடுத்தடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இருக்கும் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் ஆரம்பமான இப்போக்கு கிழக்கிலும் மிகவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வடக்கில் வலி-கிழக்குப் பிரதேச சபையிலும், வல்வெட்டித்துறை நகரசபையிலும் வரவு-செலவுத்திட்டம் முதலில் தோற்கடிக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் கிழக்கிற்குப் பரவியபோது, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசபையிலும், காரைதீவு பிரதேசசபையிலும், திருக்கோணமலை …

  23. முடியப்பு றெமிடியஸ் என்ற பெயர் நினைவிருக்கிறதா? இவர் ஒரு சட்டவாதி. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர். மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றம் ஏறி வாதாடுபவர். அண்மையில் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகிய கையோடு ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி என்ற சிங்கள (அவரே சொல்வது) கட்சியோடு சங்கமமாகிவிட்டார். யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்தல் நடந்த போது ததேகூ சார்பாகப் போட்டியிட்டு றெமிடியஸ் வென்றார். அதிகப்படியான விரும்பு வாக்குகள் பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் கொலுவிருந்தார். அது கொஞ்ச நாட்கள்தான். பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். மாநகரசபையில் ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களு…

  24. தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்? இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் ம…

    • 1 reply
    • 483 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.