அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்? யதீந்திரா வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன…
-
- 0 replies
- 664 views
-
-
சுமந்திரனை ஆதரிக்கும் சிவஞானம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல தமிழரசுக்கட்சி தேர்தல்.
-
- 0 replies
- 709 views
- 1 follower
-
-
ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினைஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது. சிங்களத்தின் தமிழர் விரோத செ…
-
- 0 replies
- 473 views
-
-
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? Hasanah Cegu isadeen on May 3, 2019 பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அ…
-
- 0 replies
- 956 views
-
-
THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். . இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது. . ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்ட…
-
- 14 replies
- 1.6k views
-
-
கடந்தவருடம், செப்டெம்பர் 2018, , தி பயனியர் எனும் இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த கட்டுரை ஒன்றினைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கட்டுரையின்படி, இந்திய பி ஜே பி அரசின் அமைச்சரான சுப்ரமணிய சுவாமி காங்கிரஸின் முன்னாள் தலைவி சோனியாவையும், ப சிதம்பரத்தையும் 2009 இறுதிக்கட்டப் போரின்பொழுது புலிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது புளொக்கில் அவர் எழுதிய கருத்துப்படி, இறுதிக்கட்டப் போரின்பொழுது, சிதம்பரம் பிரபாகரனுக்கு அனுப்பிய தகவலில், "இந்திய கடற்படை உங்களைக் காப்பாற்றும், ஆகவே பொறுத்திருங்கள்" என்று கூறியிருந்தாராம். ஆனால், வந்ததோ இலங்கை கடற்படை. வந்திருப்பது இலங்கையின் கடற்படை என்பதைத் தெரிந்திருக்காத பிரபாகரன், …
-
- 0 replies
- 481 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொ…
-
-
- 12 replies
- 754 views
- 1 follower
-
-
சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது - ஈழநாட்டுக்காரன் மௌனத்தைவிட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும். வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத் திட்டங்களில் குறை கண்டுள்ளனர். இந்தக் குறைகண்டு பிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்தல் -நிலாந்தன்.. December 28, 2019 நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற…
-
- 0 replies
- 700 views
-
-
அரசாங்கத்தின் நிலைப்பாடென்ன? மொஹமட் பாதுஷா சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளாலேயே, இந்த நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக, அரசாங்கம் அடிக்கடி சொல்லி வருகின்ற போதிலும், முஸ்லிம்களும் தமிழர்களும், தமது அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொருள்பட, ஜனாதிபதியும் பிரதமரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த தேர்தலில், முஸ்லிம் வாக்குகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, பொதுஜன பெரமுன கருதியிருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. இருந்தாலும் கூட, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிலைமையில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு உட்பட, நாட்டின் எ…
-
- 0 replies
- 565 views
-
-
செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா? ஏம்.எஸ்.எம்.ஐயூப் பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன. 1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன. தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்ல…
-
- 0 replies
- 175 views
-
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன். அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்…
-
-
- 7 replies
- 478 views
-
-
இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது அமெரி்க்க அரசின் உள்துறை அமைச்சக்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளி…
-
- 2 replies
- 904 views
-
-
ஒரே தினம் நேரெதிர் உணர்வுகள் Posted on May 22, 2020 by தென்னவள் 25 0 விடுதலைப்புலிகளை பேரினவாத அரசுகள் பயங்கரவாதிகளாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவுமே கருதுகின்றன. அந்த அடிப்படையில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு உள்ளுர் மற்றும் சர்வதேச இராணுவ ஒருங்கிணைவு ஒன்றின் மூலம் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டார்கள். தோல்வியடையச் செய்யப்பட்டார்கள். பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டிருந்தாலும்கூட, இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்காகவே அரச படைகளுடன் ஓர் ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேசமும் அதனை ஒப்புக்கொண்டிருந்தது. இதனால்தான் விடுதலைப்புலிகளைப் பயங…
-
- 0 replies
- 602 views
-
-
இந்தியாவின் எல்லைக்கோடும் தமிழர் தரப்பு செய்ய வேண்டியதும்? - யதீந்திரா அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஐபக்சவிற்கும் இடையில் கானொளி வாயிலாக, உத்தியோகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். மோடியின் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம், அயல்நாடுகள் தொடர்பில் கைக்கொண்டு வரும் சாகர் SAGAR doctrine (Security and Growth for All in the Region) கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு முன்னுரிமைளிக்கும் அறிவிப்பை இந்த சந்திப்பின் போது வெளியிட்டிருந்தது. இதனை சரியாக விளங…
-
- 0 replies
- 353 views
-
-
தமிழ்த் தேசியமும் விக்னேஸ்வரனின் வருகையும் - யதீந்திரா தெற்கின் கடும்போக்குவாதிகளின் பலமான எதிர்ப்புக்களையும் மீறி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு பின்னால் வலுவான இந்திய அழுத்தம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வது கடினமான ஒன்றல்ல. வடக்கு தேர்தல் தெற்கில் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்கள், அதன் அரசியல் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க, நமது சூழலிலோ அது வேட்பாளர்களை அடிப்படையாககக் கொண்டிருந்தது. தெற்கில் இடம்பெற்றது போன்று 13வது திருத்தச் சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் எவையும் வடக்கில் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றவாறு விமர்சித்த சில குழுவினர் கூட, இறுதியில் நீதியரசர் விக்னேஸ்வரன் வருகையுடன் தங்கள் வி…
-
- 4 replies
- 931 views
-
-
ஆயுதப் போராட்டத்தில் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாடுகளில் நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை குறிப்பதே நிலைமாற்று நீதியாகும்.சமாதானம் மற்றும் நல்லாட்சியுடன் மாற்றமடைவதை இது சுட்டி நிற்கின்றது. இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்தலை இந்த நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் நாடி நிற்கின்றன. இழப்பீடுகளை வழங்குதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துதல் போன்றவை நிலைமாற்று நீதி நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களும் உள்ளடங்குகின்றன. துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாத அல்லது அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதே நிறுவன ரீதியான …
-
- 0 replies
- 468 views
-
-
கிளை பலமானது என்று பார்த்து எந்த பறவையும் அமர்வதில்லை. எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறக்க திடமான சிறகுகள் தன்னிடம் உள்ளன என்பதே பறவையின் பலம். அதுவே எமது பலமாகவும் இருக்கட்டும். கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். சிங்கள தேசத்தின் தேசிய அரசியலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்காகவேனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்தே ஆகவேண்டும். வேறுவழி எதுவுமே இல்லை. இருப்பதில் இப்போதைக்கு இதுவே சிறந்தது. மகிந்தர் இந்த தேர்தலை நடாத்துவது ஒன்றும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அல்ல. அவருக்கு இறுகிக்கொண்டே வரும் சர்வதேசத்து அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளவே என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த பெரிய உண்மையாகும். மேலும் இ…
-
- 1 reply
- 626 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி, ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்! ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் வாழ…
-
- 0 replies
- 676 views
-
-
முதலமைச்சரின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடுமா? கூட்டமைப்புக்கு விரோ தமாகச் சகல வகையிலும் செயற்பட்டுக்கொண்டு, நான் அந்த அமைப்புக்கு எதிரானவன் அல்லவென வடக்கு முதலமைச்சர் கூறுவதைக் கேட்டு அழுவதா? அல்லது சிரிப்பதா? எனத் தெரியவில்லை. இவர் இனியும் ஒன்றுமறியாத அப்பாவிபோன்று வேடம் புனைவது தேவையற்ற ஒன்றாகும். ஏனென்றால் , அவரது இரட்டை வேடம் ஏற்கனவே அம்பலமாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர், ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்பதென்பது அவருக்குக் கௌரவக் குறைவான தொன்றென நீதித்துறையுடன் தொடர்புபட்டவர்கள் கூறு கின்றனர். …
-
- 2 replies
- 719 views
-
-
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களைய…
-
- 6 replies
- 2.1k views
-
-
எங்கள் காலத்தில் தேசியவாதம் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் நவீன உலகத்திலிருந்து, பெருங்குழப்பமான தேசங்களின் இயல்பிலிருந்து பெறக்கூடிய பாடங்கள், அநேகமாக மறக்கப்படுகின்றன. ஆபத்தான தேசிவாத இயக்கங்களின் பிடியில் நாம் மீண்டும் சிக்கியுள்ளோம். அவ்வாறான கொள்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும், பொருளாதார நெருக்கடிகள் பங்களித்திருக்கலாம் என்ற போதிலும், தேசியவாதத்தின் எழுச்சிக்கு, அதை மாத்திரம் குறிப்பிட முடியாது. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கிறுக்குத்தனமான வசவுரைகளாக இருக்கலாம்; ஐரோப்பாவிலுள்ள இனவாத அலையாக இருக்கலாம்; சீனாவிலும் இந்தியாவிலும், அபிவிருத்தியிலும் இராணுவமயமாக்கலிலும் அதி…
-
- 0 replies
- 423 views
-
-
அரசியலா அபிவிருத்தியா? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-27#page-18
-
- 0 replies
- 294 views
-
-
சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை என். கே அஷோக்பரன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி, தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது. ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, ரணில் ஜனாதிபதியாகிய சில வாரங்களிலேயே, ஒரு மிகப்பெரிய இராஜதந்திர சவா…
-
- 1 reply
- 422 views
-
-
ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் ப…
-
- 0 replies
- 184 views
-