அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
நீதிநியாயத்திற்கான போராட்டம் உலகத்தமிழர் பேரவைத் தலைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் அண்மையில் கலாநிதி போல் நியூமன் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலில் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவைபற்றிய சில குறிப்புகள். ஐ.நா.மன்றம் உட்பட்ட உலகின் வலிமைமிகுந்த நாடுகள் ஒன்றுதிரண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு நிதிஉதவியும், ஆயுதஉதவியும் செய்தன. அதன்மூலம் போராளிகளை மட்டுமல்லாது 40,000 பொதுமக்களையும் கொன்றொழித்தார்கள். இவற்றையெல்லாம் நன்றாகத்தெரிந்துகொண்டே, தமிழர்களாகிய நாம் தமிழினஅழிப்பில் ஒத்துழைத்தவர்களிடமே நீதிக்காக மன்றாடவேண்டியுள்ளது. அதன்மூலம் மேலான உலகஒழுங்கு உருவாக்கப் படும் என நம்புவோம். வன்னித்தலைமை திடீரென்று துடைத்தழிக்கப்பட்டதும…
-
- 1 reply
- 956 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்.கே. அஷோக்பரன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவிவிலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவிவிலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக …
-
- 0 replies
- 340 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்கள…
-
- 0 replies
- 331 views
-
-
போதை விற்பனையாளர்களாலும் உள்வீட்டார்களாலும் குறி வைக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் புலனாய்குத்துறை அதிகாரிகள். ஜேவிபி க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இந்தியா.அடுத்துவரும் தேர்தல்களில் கோடிகோடியாக பணத்தை கொட்ட தயாராகும் இந்தியா. அமெரிக்கா தனது தரப்பில் அரசுகளை பிரட்டக் கூடிய ஆளை அனுப்பி வைத்ததைப் போன்று இந்தியாவும் தனது அணியிலிருந்து ஒருவரை இறக்கியுள்ளது. கூடிய விரைவில் வடகிழக்கு இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில்.
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
நீதிபதிகளை அவமதிப்பதற்கான நாடாளுமன்றச் சிறப்புரிமை? நிலாந்தன். சரத் வீரசேகர மீண்டும் ஒரு தடவை முல்லைத்தீவு நீதிபதியை இழிவாகப் பேசியுள்ளார்.குறிப்பிட்ட நீதிபதியை அவர் அவ்வாறு அவமதிப்பது இது இரண்டாவது தடவை.அதுவும் அதை அவர் நாடாளுமன்றத்தில் வைத்துச் செய்கின்றார். இதையே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றமாகக் கருதப்படும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைக்குள் பதுங்கிக் கொண்டு சரத் வீரசேகர நீதிபத்தியை அவமதிக்கின்றார்.அப்படியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்குள்ள சிறப்புரிமைக்குள் மறைந்து கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? நாட்டின் சட்டங்களை இயற்றும் அதி உயர் சபை ஒன்றில், நீதிமன்றங்களை …
-
- 1 reply
- 730 views
- 1 follower
-
-
நீதிபதிக்கே கிடைக்காத நீதி? - நிலாந்தன் கடந்த வாரம் திலீபன். இந்த வாரம் ஒரு நீதிபதி. முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு. ” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கிய…
-
- 1 reply
- 626 views
-
-
நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும் நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக் கட்டமைப்பையோ விமர்சனத்துக்கு உள்ளாக்குவதென்பது, எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனாலும், மாறிவரும் சூழலுக்கு மத்தியில், தீர்ப்புகள் பற்றியும் ஒட்டுமொத்தமான நீதிமன்றக் கட்டமைப்புப் பற்றியும், கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது, நவீன சூழலில், ஆரோக்கியமானதொரு மாற்றமாகவே க…
-
- 0 replies
- 660 views
-
-
நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன் நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழு…
-
- 0 replies
- 897 views
-
-
நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம் December 29, 2020 40 Views தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக் கொண்டாட்டம். எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற அரசியல் ரீதியான வலிகள் நிறைந்த விளையாட்டாக மாறியிருக்கின்றது. மாற்றப்பட்டிருக்கின்றது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றச் செயற்பாடுகள் நத்தை வேகத்திலும் முக…
-
- 0 replies
- 557 views
-
-
நீதியரசரின் நியாயமான நீதி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புகள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. நீதிமன்றங்களில் சட்டமும் அதுசார் அடிப்படைகளுமே பிரதானமானவை. ஆனால், இம்முறை அவர் எழுத வேண்டிய தீர்ப்பு, சட்ட வரையறைகளை மாத்திரமல்ல, தார்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், அவர் இப்போது தீர்ப்பு எழுதப் போவது மக்கள் மன்றத்தில். அந்தத் தீர்ப்பு, தமிழ் மக்களை மக்கள் மன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இலங்கைக்கே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும். வடக்கு மாகாண அம…
-
- 1 reply
- 422 views
-
-
இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் வெளிவிவகார செயலர் லியாம் பொக்ஸ் அவர்களுக்கு அவரது கட்சிக்குள்ளேயும், அதிகாரிகளினாலும் , மனித உரிமை வாதிகளினாலும் மிகப்பெரிய நெருக்கடிகள் அண்மையில் எழுந்தன. போரில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவிக்கும் வேளையிலும், அதன் பின்னர் போர்க்குற்ற விசாரணைகளினை இலங்கை அரசு புறம் தள்ளும் வேளைகளிலும் சிறிலங்கா இனவாத தலைவர் மஹிந்த இராஜபக்ஷவை லியாம் பொக்ஸ் அவர்கள் சந்தித்துவந்துள்ளார். இதற்கு ஒருபடி மேலே சென்று மஹிந்த இராஜபக்ஷவை இலண்டனில் வைத்து சந்தித்தார். இந்த வேளைகளில் மஹிந்த இராஜபக்ஷவின் போர்க்குற்றத்திற்கு எதிராக தமிழர்கள் திரண்டு இலண்டன் மா …
-
- 0 replies
- 569 views
-
-
நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 25 புதன்கிழமை, பி.ப. 01:00 கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர். முல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு, நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த விகாரையின் விகாராதிபதி, அண்மை…
-
- 0 replies
- 938 views
-
-
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிக…
-
-
- 1 reply
- 239 views
-
-
[size=6]நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் [/size] [size=4]இளைய அப்துல்லாஹ்[/size] [size=4]இப்போதெல்லாம் எனது பிறந்த தினம் வரும் மே மாதம் அவ்வளவு விருப்பத்திற்குரியதாக இல்லை. அது துர்ச்சகுனமான மாதமாகவே இருக்கிறது.[/size] [size=4]நான் முல்லைத் தீவு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். அப்படியே பிஞ்சுக் குழந்தையாக கொண்டுவந்து வளர்த்தியது முள்ளியவளை வீட்டில். அப்போதிருந்தே வன்னி மண் என் வாழ்வோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நான் வன்னியில் பிறந்தவன்.[/size] [size=4][/size] [size=4]முள்ளியவளையில் இருந்து அய்யா [/size][size=4]அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார். அய்யாவின் பிரிவுக்குத் தங்கச்சி பிறந்ததுதான் காரணம் என்று என் கிராம மக்கள் …
-
- 1 reply
- 990 views
-
-
நீரும் நெய்யும்போல் நவாலி - பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் நவாலிக் கிராமத்தின் சிறப்புகள் குறித்து, பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறைத் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கருத்துரைக்கும் போது கூறியதாவது: “மேலைத்தேய கலாசாரத்தை உள்வாங்கிய அதேவேளை, பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பேணிக்கொள்ளும் ஒரு கிராமமாக நவாலி காணப்படுகின்றது. வடபகுதியில் இருந்த யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வௌியிடப்பட்ட நாணயங்கள் பெருமளவில் நவாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓர் இடமாக, நவாலி காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொலன்னறுவை இராசதானி கால வணிக நடவடிக்கைகள் நடைபெற்ற ஓர் இடமாகவும் நவாலி இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு சிறப்புகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்? உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுத…
-
- 0 replies
- 771 views
-
-
Published By: VISHNU 07 NOV, 2023 | 11:26 AM ஆர்.ராம் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் தமக்கு கீழ்படியாது முரண்டுபிடித்தவர்களை களையெடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதை கடந்தவாரம் பார்த்திருந்தோம். களையெடுக்கும் முதலாவது அத்தியாயம் வவுனியாவில் அரங்கேற்றப்பட்டதோடு அதற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மா…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
நீர்த்துப் போகும் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் மீண்டும் நீர்த்துப் போகத் தொடங்கியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக இந்தப் போராட்டங்கள், காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன. அவ்வப்போது, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக உச்சநிலைக்குச் செல்வதும், வடக்கிலோ, அல்லது வடக்கு, கிழக்கிலோ முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதும், யாழ். பஸ் நிலையம், புறக்கோட்டை ரயில் நிலையம் என்பவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்துவதும் இவற்றைய…
-
- 0 replies
- 448 views
-
-
நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாக கிழக்குக்கு அரசாங்கம் கூறும் செய்தி இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த ‘தேசபிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற டி.எஸ்.சேனாநாயக்க நாட்டின் வளர்ச்சிக்கு பாரியளவிலான சேவைகளைச் செய்திருக்கின்றார். முக்கியமாக நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது. இவரது பேரன்தான் இலங்கை நாட்டின் தற்போதைய நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க. நீர்ப்பாசனம், நீர்வளத்துறை சார்ந்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை தொடர்ந்த வண்ணமும்தான் இருக…
-
- 2 replies
- 525 views
-
-
நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான …
-
-
- 134 replies
- 5.6k views
- 2 followers
-
-
நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன் புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம் தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம். மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்…
-
- 0 replies
- 64 views
-
-
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன். அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்…
-
-
- 7 replies
- 478 views
-
-
நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா எம்.எஸ்.எம்.ஐயூப் சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தன. அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகவும் குற்றஞ்சாட்டின. பொதுப் பணத்தில் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தனர். இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளினதும் அவர்களின் விதவைகளினதும் சிறப்புரிமை…
-
- 0 replies
- 134 views
-
-
நுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை -தழலி- தேசிய இனமொன்று தொடர்ச்சியான தனது இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு பல காரணிகள் இருப்பினும் அச்சமூகத்தின் அறிவுடைமையும் முதன்மைக் காரணிகளிலொன்றாக இருக்கின்றது. அந்த இனத்தின் அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம், வாழ்வியல் முறைமை என அனைத்தையும் தலைமுறைகளுக்கு கடத்தி, இனத்தின் இருப்பைக் கொண்டு செல்வதில் கல்வியும் முதன்மையானது. இனத்தின் அறிவு வளர்ச்சியும் அதன் சிந்தனை மரபும் அந்த இனத்தின் கல்வியின் தரத்திலேயே தங்கியிருக்கின்றன எனலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அறிவுமரபு என்பது, வரலாற்றினைக் கூறுவதாக இருக்கும் அதேவேளை வரலாற்றைக் காவுகின்ற காவியாகவும் தொழிற்படுகின்றது. எழுமைக்கும் ஏமாப்புடைத்து வரும் கல்வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள். மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமை மாறி முழு உலகமுமே சண்டையிட்டு மிகப்பெரும் அழிவைச் சந்தித்து இனிமேல் இப்படியொரு யுத்தம் தேவையில்லை என முடிவெடுத்தநாள். மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள். ஏன் இவைகள் எல்லாவற்றிற்கும் மோலாக உலகப் போரையே நிறுத்திய நாள். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்காக யுத்த பூமியில் விழுந்த வீரர்களை நினைவு கூரும் நூறாவது ஆண்டு நாளாகவும் அமைகிறது. …
-
- 0 replies
- 676 views
-