அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9221 topics in this forum
-
புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. …
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
இலங்கைக்குக் கிடைத்த ‘நிதஹஸ்’ இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு, இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தெரிந்திருக்கலாம். இலங்கையின் 70ஆவது சுதந்திர நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடரில், இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்குகொண்டன. ஒப்பீட்டளவில் பலமான அணிகளான இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இறுதியில், இந்தியாவும் பங்களாதேஷும் தான் தகுதிபெற்றன. அத்தொடரில் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு என்ன காரணம் என்பதெல்லாம், கிரிக்கெட் நிபுணர்கள் ஆராய வேண்டியது. ஆனால், இலங்கையின் அண்மைக்கால நடப்புகளை…
-
- 0 replies
- 486 views
-
-
ஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி! ஜாலியன் வாலா பாக் படுகொலையை தூத்துக்குடி துயரம் நினைவுபடுத்துவதாகவே அநேகமான தமிழகத் தமிழர்களும் கூறுகின்றனர். ஈழத் தமிழர்கள்கூட அப்படியே கருதுகின்றனர். கடந்த ஆண்டு ஜாலியன் படுகொலைக்கு பிரிட்டன் அரசாங்கம் 99 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னிப்புக் கோரியது. (அப்போது குளோபல் தமிழ் வெளியிட்ட கட்டுரை http://globaltamilnews.net/2017/46558/) அத்தகைய மிருகத்தனமான கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஈழத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன. ஆக அத்தகைய கொலைகளுக்கு மன்னிப்பும் எதிர்ப்பும் எழும் ஒரு காலத்தில் தமிழக அரசு நிகழ்த்திய தூத்துக்குடி படுகொலை ஒரு சாதாரண நிகழ்வல்ல. தி இந்துவில் …
-
- 0 replies
- 712 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ] ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை. மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிகளிலும் பார்க…
-
- 6 replies
- 654 views
- 1 follower
-
-
நரேந்திர மோடி- -ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்: அ.நிக்ஸன்:- அன்று ஈழப்போராளிகளை சமாதானப்படுத்தி இந்தியாவின் ஒற்றை ஆட்சி முறை பாதுகாப்புக்காக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இன்று சீனாவின் செல்வாக்கை குறைத்து பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை கோரப்படுகின்றது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே தயாரிக்கப்பட்ட விடயங்களைத் தான் இந்திய இலங்கை ஒப்பந்தமாக ராஜீவ்- ஜே.ஆர் 1987இல் கைச்சாத்திட்டனர். -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை தீர்;வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது பிரதமர் நாரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள் எழுவது இயல்பானது. ஏ…
-
- 1 reply
- 749 views
-
-
-
- 0 replies
- 733 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலும் பிரதான வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை தடுப்பதில் ஜனாதிபதியின் வல்லமையும் - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மனதிற்கொண்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் எற்பாடுகளையும் தந்திரோபாய நகர்வுகளையும் செய்துகொண்டிருக்கின்றன. அத்தகைய நகர்வுகளில் ஒன்றுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நன்கு பிரபல்யப்படுத்தப்பட்ட கடந்த மாத வடக்கு விஜயம்.தமிழர்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கணிப்பீடுகளாக இருக்கின்றன. இருக்கவேண்டும். 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியில் முஸ்லிம் வாக்குகள் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பதை மிக நன்றாக உணர்ந்துகொண்டவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்…
-
- 0 replies
- 393 views
-
-
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]" கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்…
-
-
- 5 replies
- 634 views
-
-
தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன் September 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே த…
-
- 1 reply
- 375 views
-
-
இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.
-
-
- 5 replies
- 843 views
- 1 follower
-
-
கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம் நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன் என்பதால், அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி இது. சாத…
-
- 1 reply
- 583 views
-
-
இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள் October 18, 2024 — கருணாகரன் — பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்…
-
- 0 replies
- 414 views
-
-
தீர்மானிக்கும் சக்தியாக இம்முறையும் சிறுபான்மை லங்கையின் அரசியல் வரலாற்றில் அதிக ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலை நாடு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு 41பேர் கட்டுப்பணங்களைச் செலுத்தியிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை 35வேட்பாளர்கள் மாத்திரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். ஆறு பேர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் முழு மூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமையவுள்ளது. அதிகமான வேட்பாளர்கள் க…
-
- 0 replies
- 465 views
-
-
காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 17 , இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. “என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார். “அங்கு தலைமையில…
-
- 0 replies
- 505 views
-
-
எதிர்பார்த்தது போலவே நடந்தது; அடுத்த வேலையைப் பார்க்கலாம் எதிர்பார்த்ததே நடந்துள்ளது; எதிர்பாராதது நடந்ததுபோல, காட்டப்படும் பாவனை, கோமாளிக்கூத்தன்றி வேறல்ல. தமிழரசுக் கட்சி, தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ, எதிர்பாராதது நடந்தது என்று சொல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களை விட, அதிக விசுவாசமானவர்களைக் கொண்டதொரு கட்சி, வேறொரு தெரிவை எடுக்க நியாயமில்லை. அப்பாவிகளுக்கும் அதிலும் குறிப்பாக, அப்பாவி போல் காட்டிக் கொள்ளும் அயோக்கியர்களுக்கும் இம்முடிவு, எதிர்பாராத முடிவாக இருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்தைக் குறிப்பாகப் போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில், அதன் இயலாமையை அறிந்தவர்…
-
- 0 replies
- 719 views
-
-
இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1987இல் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ராஜீவ் காந்தி சிறிலங்காவிற்குப் பயணம் செய்த நிகழ்வுக்கும், சீனாவின் கடன்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அண்மையில…
-
- 0 replies
- 390 views
-
-
அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன் ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரி…
-
- 0 replies
- 225 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக் குழுவை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் தனது கருத்தின் ஊடக வலியுறுத்த முனைந்திருந்தார். எனினும், பொறுப்புகூறல் முறை எவ்வாறானதாக இருக்கப் போகிறது. என்ற கேள்விக்கான விடையை அரசாங்கம் இதுவரை அளிக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் இணங்கிக் கொண்டபடி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம்இதுவரை நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 326 views
-
-
வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரசியல் கைதிகள் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான கவனம், மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியவுடன், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டமையையும், அது ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்நிலையில் தான்,“நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் எங்கே?” என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது, தமிழ் மக்களுக்கான அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று என்பது, காலாகாலமாகச் சொல்லப்பட்டு வருகின்…
-
- 0 replies
- 538 views
-
-
2020 தேர்தலில் மேலும் மோசமடைந்துள்ள பெண்களின் பிரதிநிதித்துவம் - என்.சரவணன் நடந்து முடிந்தத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர். எட்டு பேர் பொதுஜன முன்னணி சார்பிலும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா ஒவ்வொருவரும் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. சென்ற பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77%) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 4.4.% வீதமாக சுருங்கிவிட்டது. இம…
-
- 1 reply
- 716 views
-
-
அதிபராகும் ஹிலாரியின் கனவு கலைந்தது எப்படி?
-
- 0 replies
- 479 views
-
-
-
மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1 இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறத…
-
- 14 replies
- 2.1k views
-
-
ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம் 44 Views ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி, சிவில் நிர்வாக, ஜனநாயக நிலைமைகளிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் காரசாரமாக விபரித்திருந்தார். இதனால் அவருடைய அறிக்கை பரந்த அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அரசாங்கம் உள்ளிட்ட பலதரப்பினருக்கு அது அதிர்ச்சியளிக்கத்தக்காக அமைந்திருந்தது. பாதிக்கப்பட்ட தரப்பினராகிய த…
-
- 0 replies
- 282 views
-