அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் [ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வ…
-
- 0 replies
- 693 views
-
-
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம் நன்றி: http://kalaiy.blogspot.in 1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது….” (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.kaakam.com/?p=1234 புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா?-மான்விழி காலனியக் கல்வி பெற்று தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் காலனியடிமை மனநிலையின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோர், உடலுழைப்பை ஊரிற் செலுத்துவது மான இழுக்கென்று சிந்திக்கும் சிந்தையில் பார்ப்பனியத்தன்மை கொண்டவர்கள் சொந்த மண்ணில் உடலுழைப்பைச் செலுத்தாது வெளிநாடு சென்று பொருளீட்டலாம் என முடிவெடுத்துப் புலம்பெயர்ந்தோர், இனக் கலவரங்களின் தொடர்ச்சியால் தமது உயர் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை இலங்கைத்தீவில் பாதுகாப்பற்றதெனவுணர்ந…
-
- 0 replies
- 342 views
-
-
புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும் தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான். தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும். இந்தியா…
-
- 1 reply
- 555 views
-
-
புலி இளைத்தால் எலி…..? அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது. இதற்கு முன்னர் முல்லைத்தீவில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தின் போதும், இதேவிதமான அழைப்பொன்றை மற்றுமொருவர் அனுப்பியிருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன்- இது மக்கள் போராட்டமல்ல காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டம் என சொல்லுங்கள் என. அவரிற்கு கோபம் வந்துவிட்டது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும், அந்த விவகாரத்தையும் கொச்சைப்படு…
-
- 2 replies
- 1.5k views
-
-
சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தொடர்கின்றது என்பது இன்னும் அதிர்ச்சிகரமானது. அண்மையில் முகநூலில் புலி எதிர்ப்பு எழுத்தாளர் ஒருவர், புலிப் பாணி இலக்கியம் தற்போது வளர்ச்சியடைவதாக வருத்தத்துடன் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதற்கு இன்னொரு முகநூல் பதிவாளர், நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். புலி எதிர்ப்பு இலக்கியம் உங்களுக்கு இனிக்கிறது. ஆனால் புலிப்பாணி இலக்கியம்தான் கசக்கிறதா? என்று. புலி எதிர்ப்பு இலக்கியத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் வ…
-
- 0 replies
- 623 views
-
-
புலிகளால் மத்திய வங்கி தாக்கப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தி! தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கை மத்திய வங்கியின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 91 பேரின் உயிர்களை காவுகொண்டதுடன், ஆயிரத்து 1400 பேருக்கு காயம் ஏற்படுத்தியிருந்தது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றய தினம் முற்பகல் 10.45 அளவில் 200 கிலோகிராம் வெடிபொருட்களுடனான பாரவூர்தி இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் வெளியில் உள்ள இரும்பு வேலிகள் காரணம…
-
- 0 replies
- 715 views
-
-
புலிகளின் சிந்தனை முறை தேவைதானா? : சபா நாவலன் இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன. இலங்கையில் துவம்சம் செய்யப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை புதிய திசைவழி நோக்கித் திட்டமிடுவதற்கான ஆரம்பம் புலிகளின் சிந்தனை முறையையும், அதன் தொடர்ச்சியும் நிராகரிக்கப்படுவதிலிருந்தே உருவாக முட…
-
- 6 replies
- 1.1k views
-
-
புலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா? மனோ கேள்வி 78 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசா…
-
- 1 reply
- 692 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை பார்க்கிறது. மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும். முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் - மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத்…
-
- 2 replies
- 626 views
-
-
புலிகளுக்குச் சோதனைமேல் சோதனைதான் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டில், வேறு சில விடுதலைப்புலி இயக்க முன்னாள் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகிச் சிறையிலிருக்கின்றனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தனங்கிளப்புப் பகுதியில், வெடிப்பொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் சம்மந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத…
-
- 0 replies
- 466 views
-
-
புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….? -கே.சஞ்சயன் வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலா…
-
- 1 reply
- 702 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மிகப் பாரிய ராணுவ நடவடிக்கையில் இருசாராருமே சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும் ஐ. நாவின் அறிக்கை சொல்கிறது என்பது தான் கடந்த ஒரு வார காலமாக என் போன்றவர்களின் கவனத்தை, கருத்தை ஈர்த்து வைத்திருக்கிறது. ஒரு விதத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட இது பற்றி பேசுவது அந்த அறிக்கையை முழுமையாக 196 பக்கங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஐ. நாவின் செயலர் பாங்கி மூனுக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பிரித்தானியாவின் Channel 4 இன் ஈழம் குறித்த செய்திகள் பாராட்டப்பட வேண்டியவையே. எப்போதுமே மாற்றுக்கருத்தை தேடிப்படிப்பதில் ஓர் ஆர்வமும், சுவாரசியமும் இருப்பவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்க நலனும் இந்தியாவின் சர்வதேச இரட்டைக் கொள்கையும் புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு வன்னி போர் பற்றிய 2010 நிபுணர் குழு அறிக்கையும் காசா படுகொலைகளும் ஐ.நாவுக்குத் தெரியவில்லையா? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் …
-
- 1 reply
- 768 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளை பிரதி செய்த உக்ரைன் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM சுபத்ரா ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிம…
-
- 4 replies
- 751 views
- 1 follower
-
-
புலிகளை முற்றாக அழிக்கும் இந்திய மத்திய அரசு முடிவு
-
- 0 replies
- 447 views
-
-
புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெற்றியில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது. இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்…
-
- 13 replies
- 877 views
-
-
புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்' உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரங்களில் வழக்கம்போலவே, விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தான், விடுதலைப் புலிளையும் அவர்களின் எழுச்சிப் பாடல்களையும் தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தி வந்தன. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட, விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி- அவர்களின் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அற…
-
- 0 replies
- 459 views
-
-
புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா.? தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன. இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன். திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதி…
-
- 0 replies
- 574 views
-
-
-
-
- 3 replies
- 914 views
- 1 follower
-
-
இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில் இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோ…
-
- 0 replies
- 564 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எ…
-
- 10 replies
- 1.1k views
-