அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்? உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்? தயாளன் கடந்த 30 ஆம் திகதி மாற்றம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'நிலமும் நாங்களும்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதல்வரும் கலந்து கொண்டிருந்தார். மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் பிரித்தானிய மனித உரிமைகள் குழு 'ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்த முனைந்துள்ளது' எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக முதல்வர் கூறினார். அத்துடன் '1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் அடுத்த முதலமைச்சர்? அக்கரையூரான் யாழ்ப்பாண வீதிகளெல்லாம் ‘மாவை’ யாருக்கே நன்கு தெரியும்! அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். இன்றும் அம்மண்ணிலேயே வாழ்கின்றவரென்பதால் அவரையே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதமுடியுமே தவிர முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் ஒப்பீட்டளவில் அப்பதவிக்கும், பொறுப்பிற்கும் எந்தவகையிலும் அதற்குத் தகுதியானவரென்றோ மாவையாருக்கு நிகரானவரென்றோ கருதிவிடமுடியாதென அன்று …. வடபுலத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் ‘வேட்பாளராக யாரைக் களமிறக்குவதென்ற சர்ச்சைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மேலெழுந்து நின்ற வேளையில் மிகவும் அநாகரீகமான முறையில் தனது கருத்தை வாதத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்த தமிழரசுக…
-
- 1 reply
- 3.6k views
-
-
யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ? கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜே.வி.பி பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்ற நிலைக்கு இவர்களின் வளர்ச்சி உள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்த…
-
- 2 replies
- 563 views
-
-
யார் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள்? அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்ற நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான காய்நகர்த்தல்களும் அரசியல் நகர்வுகளும் மிகத்தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அதற்கான அறிவிப்பு செய்யப்படவேண்டும். அப்படிப் பார்த்தாலும் கூட இன்னும் 18 மாதங்கள் அதற்காக இருக்கின்றன. ஆனால் இவ்வளவு குறிப்பிடத்தக்க நீண்டகாலம் இருந்தும் கூட தற்போதே அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாரிய கவனம் செலுத்த ஆரம்பித்து…
-
- 0 replies
- 771 views
-
-
யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின. ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச…
-
- 0 replies
- 336 views
-
-
கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்) பற்றிய குறிப்பை முகநூலில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அதில் தெரிந்தோ தெரியாமலோ யாகரனின் சின்மயா மிசன் பற்றிய பகுதி தவிர்க்கப்ட்டிருந்தது. 2000களில் இந்த மிசனரிகளில் இருந்த கடுப்பில் இந்து கல்லுரியில் இருந்த ஒரு மாணவனும் இப்படி மாறிவிட்டதாக அறிந்த போது எம்முள்ளும் இப்படி தீவிர மதவாதம் ஆழமாக வேரூண்டிவிட்டதே என்ற கவலை இருந்ததது. விவிலிய மிசனரிகளை விட இந்த மிசனரிகள் பற்றி கடுமையான வி…
-
- 5 replies
- 3.4k views
-
-
நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார் அமித்ஷா. இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார். 2014 இந்திய பொதுத் தேர்தல் ஜூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் …
-
- 7 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார். ஆப்கானில் தனது முகாம்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
1991ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th battalion) சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு : கலையரசன் யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை. இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான தோரா, கிறிஸ்தவர்களால் பைபிளில் பழைய ஏற்பாடு என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் …
-
- 1 reply
- 3k views
-
-
இந்தியாவில் இருந்து அவரை நாடுகடத்தியநாள் இன்று1982,நவம்பர்,05-38,வருட்ம்அவர்தொடர்பான பதிவு இது1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார்.ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
யார் கண் பட்டதோ? அம்மா..! நீங்கள் சாப்பிடுங்கள் நான் உறங்கப் போகிறேன்” என, தனது ஹோட்டலில் இருந்து கொண்டுவந்த உணவை, மனைவியைப் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் நித்திரைக்குச் சென்ற ஷமிலவுக்கும் அவரது அன்பான குடும்பத்துக்கும் மாத்திரம், மறுநாள் பொழுது புலராமலே சென்றுவிட்டது. இம்மாதம் 20ஆம் திகதி, கண்டியில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், மனிதம் நிறைந்த அனைத்து உள்ளங்களையும் ஒரு கணம் உலுக்கியது. தனது மகளைப் பறிகொடுத்த 59 வயதுடைய ஜயந்தி குமாரி, இவ்வாறு தெரிவிக்கின்றார். “ வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகள். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவளாக அச்சலா பிறந்தாள். அவள், படிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
யார் கொள்ளையர்? யார் கொள்ளையர்? நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நாட்டின் அரசியல் சூழ்நிலை, கூட்டு அரசினது வசந்தகாலம் முடிவுற்று கொதிநிலை உருவாகியுள்ளதைப் புலப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இனிவரும் நாள்கள் அரசியலின் இருள் மற்றும் கடுங்குளிர் நிலை எம்மை சிரமத்தில் ஆழ்த்தக்கூடும். வௌியில் தெரியவராது, தம்மைச் சுற்றிச்சூழ்ந் துள்ள அரசியல் சிரமங்களே அரச தலைவர் மைத்திரியை தமது அரசதலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தா…
-
- 0 replies
- 355 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள் கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு! பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன்’ (க.வி.விக்னேஸ்வரன்) என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று, பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன். தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத வடிவில் முனைப்புப் பெற்றிருந்த காலத்திலும், அந்தச் சூழலுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தினால் மரியாதையோடு கொண்டாடப்பட்ட ஒரு சிலரில் தாங்களும் ஒருவர். அது, தங்களை 2013ஆம் ஆண்டு ஜுலை நடு…
-
- 1 reply
- 576 views
-
-
யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன் தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும…
-
- 0 replies
- 973 views
-
-
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்…
-
- 0 replies
- 2.4k views
-
-
யார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று ? -கபில் கொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்தமுறை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாதளவுக்கு, போட்டிச் சூழல் தென்படுவதால், எல்லாக் கட்சிகளுமே, தமக்கும் ஆசனம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்ற சூழல், ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்ற போதும், இனி அது தவிர்க்க முடியாத ஒரு போராகவே மாறி விட்டது. இந்தநிலையில் ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு சேறடிக்க முடியுமோ அந்தளவுக்கு நாறடிக்கத் தயாராகி விட்டனர். வழக்கம் போலவே, ம…
-
- 0 replies
- 819 views
-
-
மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும். இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல…
-
- 11 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 689 views
-
-
யார் யாருடன் கூட்டுச் சேர்வது? மு.திருநாவுக்கரசு அரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர். இது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது. ஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம். ஆனால் கடந்து ஒரு நூற்றாண்ட…
-
- 0 replies
- 507 views
-
-
'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்' இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் அவர் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறுவதற்கும் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு முன்பு சொல்கெய்மும் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவிலிருந்து தான் கடுமையான பாடங்களைக் கற்றிருப்பதாக. குறுகியகால இடைவெளிக்குள் இரு வேறு மேற்கத்தைய பிரதிநிதிகள் இவ்வாறு ஒரே தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இருவரையும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.ஒருவர் இலங்கைத் தீவில் ஒப்பீட்…
-
- 0 replies
- 656 views
-
-
யார் யார் இந்த தேர்தலில் வெல்ல வேண்டும்? -தமிழ்க் குரலின் தெரிவு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் யாரை வெல்ல வைக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரையாடல் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் கணிப்புக்களை நிகழ்த்தி வருகின்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களும் வெகுசன மக்களும்கூட தமது விருப்பங்களையும் காணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வெல்ல வைக்கும் போராட்டத்தில் தமிழரின் உரிமைக்குரலாக இயங்கி வரும் தமிழ் குரல், அரசியல்வாதிகளின் அராஜகங்களை இடித்துரைப்பதுடன், அவர்களின் சிறந்த விடயங்களைப் பாராட்டியும் வந்திருக்…
-
- 3 replies
- 784 views
- 1 follower
-
-
யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:00 - 0 - 89 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச் சந்தேகம் இருந்தது. பொதுஜன பெரமுனவை ஆரம்ப…
-
- 0 replies
- 744 views
-
-
யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 18 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:33 இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. இப்போதைய அரசியல் களத்தில், மூன்று பிரதான தரப்புகள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவையே அவை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோரில் ஒருவர் போட்டியில் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஜனாதிபதி வ…
-
- 0 replies
- 752 views
-