அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
லீ குவானும் மதசார்பின்மையும் அபிவிருத்தியும் நாட்டின் முக்கியமான அரசியல் விடயங்களில், மதங்களினதும் மதத் தலைவர்களினதும் தலையீடு என்பது, இலங்கையைப் பொறுத்தவரை வழக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கு மத்தியிலும், அண்மையில் இந்தத் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைக்கு, புதிய அரசமைப்புத் தேவையில்லை என, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிக்க, அதன் பின்னர் மறுநாள் ஒன்றுகூடிய அனைத்து மகாநாயக்கர்களும் ஏனைய முக்கிய பௌத்த மதத் தலைவர்களும், புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புத் திருத்தமோ இலங்கைக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த முடிவு, சிறுபான்மை இனத்தவர்களைப்…
-
- 0 replies
- 359 views
-
-
லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை! மார்க்ஸ். அ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவரது இறுதி அஞ்சலி அமைந்தது. தமிழகத்திலும் கூட ஆங்காங்கு தன்னிச்சையாக மக்கள் ஃப்லெக்ஸ் போர்டுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீவிரத் தமிழ்த் தேசியவாதியாகிய வைகோ கண்ணீர் ததும்ப அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். “நல் ஆளுகைக்கான” விளம்பர மாதிரியாக (poster boy of good governance) ‘ஃபைனான்சியல் டை…
-
- 2 replies
- 841 views
-
-
பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான். மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் …
-
- 0 replies
- 493 views
-
-
லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. ச…
-
- 4 replies
- 645 views
-
-
வக்சினே சரணம் ? நிலாந்தன்! September 5, 2021 “அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண. எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமய…
-
- 0 replies
- 415 views
-
-
வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்! August 22, 2021 பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந…
-
- 0 replies
- 640 views
-
-
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பெரும்பாலும் இடதுசாரிகளின் ஆட்சியில் இருந்தது. தலைசிறந்த அறிவுஜீவிகளும், இலக்கியவாதிகளும் அங்கிருந்து வந்தனர். அவர்களின் முற்போக்கு அரசியல் சாதிபேதம் அற்றது என்பது ஒரு பொதுவான பார்வையாக இருக்கின்றது. இந்தக் கட்டுரை இன்னொரு உண்மையை முன் வைக்கின்றது. இதை சுபஜீத் நஸ்கர் எழுதியிருக்கின்றார். வ. ரங்காச்சாரி அவர்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து, 'அருஞ்சொல்' இதழில் இக்கட்டுரை பிரசுரம் ஆகியிருந்தது. *********************************************** வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா? சுபஜீத் நஸ்கர் 26 Mar 2024 மேற்கு வங்கத்தில் அரசியல் முற்போக்கானது – சாதி பேதம் அற்றது என்று போற்றப்படுகிறது, அதேசமயம், வட இந்தியாவின் இந்தி பிராந்த…
-
-
- 1 reply
- 564 views
-
-
வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும். பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. இவ்வாறான ஆடுகளங்களில் நடைபெறும் ஆட்டங்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போல பலவகைப்பட்டன. சில டெஸ்ட் கிரிக்கெட் போல ஆறுதலாக, நிதானமாக, மூலோபாய ரீதியில் காய்நகர்த்தல்களின் ஊடு நடைபெறும். சில இருபதுக்கு இருபது போல, சில மணித்துளிகளில் நிகழ்ந்து முடிந்த…
-
- 0 replies
- 765 views
-
-
வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம் ஒரு அலசல் – மாயமான் கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல. பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம். …
-
- 17 replies
- 1.7k views
-
-
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி - அவர் ஒரு வெள்ளைக்காரர் - ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார். அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார். அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள், அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என…
-
-
- 3 replies
- 470 views
-
-
வசந்த முதலிகேயின் யாழ் விஜயம்! நிலாந்தன். கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார். போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போத…
-
- 0 replies
- 756 views
-
-
வசூல்ராஜாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…??? ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றிபெற்ற தமிழ்த்தலைவர்கள் பலர் கட்சிக்குள் ஏற்பட்ட சாதி, சமூக வேறுபாடுகள் காரணமாக பிளவுபட்டனர். இதன் விளைவாக அவர்கள் காலத்திற்கு காலம் புதிய புதிய லேபள்களில் தேர்தல்களைச் சந்தித்து வந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரேநேரத்தில் இலங்கை அரசாங்கத்தினையும், தமிழ்த்தலைவர்களையும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லை. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சமர்வரை தமிழ்த்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
[size=4]சகோதரச் சண்டையால்தான் ஈழத்தில் தோல்வியும் அழிவும் ஏற்பட்டது என்ற பொய்யை திரும்பத் திரும்ப கருணாநிதி கூறிவருவதைக் கண்டித்து நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை [/size] [size=4]அவரை படாதபாடு படுத்திவிட்டது. உண்மை சுட்டதுதான் அதற்குக் காரணமாகும். தனது முரசொலி இதழிலும் பொதுக் கூட்டங் களிலும் கடந்த சில நாட்களாக எனக் குப் பதில் சொல்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.[/size] [size=4]"தி.மு.க.வையும் அதன் தலைவ ராகிய அவரையும் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை பழிப்பதும் இழித்துப் பேசுவதும் தவிர வேறு எதையும் கற்றதுமில்லை கடைப்பிடித்ததுமில்லை. புலிகளுக்கிடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும் அதனால் தளபதிகளும் மாவீரர்களும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு …
-
- 1 reply
- 850 views
-
-
வஞ்சம் - முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்க வாய்ப்பான ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 முஸ்லிம் சமூகம் மீது, வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கு, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாகச் சில கூட்டம் சித்திரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்கள், மிகவும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடன் இருக்கத்தக்கதாகவே, இவ்வளவு கூத்து…
-
- 0 replies
- 799 views
-
-
வஞ்சிக்கப்படும் தமிழ்மொழி என்.கே. அஷோக்பரன் கொழும்புத் துறைமுக நகரில், காட்சிப்படுத்த -ப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகையின் படம், கடந்த நாள்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெயர்ப்பலகையில் சிங்களம், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் வழமை போல, வஞ்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், சமூக ஊடகங்களில் ஏற்பட்ட கண்டனங்களைத் தொடர்ந்து, ‘சப்பைக்கட்டு’ அறிக்கையொன்றை, கொழும்புத் துறைமுக நகரை அபிவிருத்தி செய்யும் சீன நிறுவனம் வௌியிட்டிருந்தது. இது நடந்த சில நாள்களின் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலத்திரனியில் நூலகம் ஒன்று, சீனாவின் உதவியுடன் உருவாக்கப…
-
- 0 replies
- 734 views
-
-
வட - தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது. அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன…
-
- 0 replies
- 482 views
-
-
வட ஆபிரிக்காவில் படுகொலைத் திட்டத்தை அமெரிக்கா விரிவாக்குகிறது ஒபாமா நிர்வாகமானது அல்ஜீரியா மற்றும் பிற வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதனுடைய டிரோன் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மற்றும் CIA ஆல் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” விரிவுபடுத்தப்படுவதற்கான தயாரிப்பு யோசனைகளுக்கு இடையே இன்னும் பாதுகாப்பான முறையில் நிறுவனமயப்படுத்துவதற்கான உலகப் படுகொலைத் திட்டம் நடைபெறுகின்றன. சனிக்கிழமை வெளிவந்த Wall Street Journal இன் முதல் பக்க அறிக்கையின் தலையங்க அறிவிப்பின்படி, “அமெரிக்கா ‘கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை’ விரிவுபடுத்தும் முயற்சியான” டிரோன் விரிவாக்கத் திட்டத்தின் உடனடி இலக்கு…
-
- 1 reply
- 485 views
-
-
வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ? இக்பால் செல்வன் இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 11 பெப்ரவரி 2015 இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுகிறது. புதிய அரசாங்கம்கூட இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முடித்த பின்னரும் வட கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்த தீர்மானிப்பது ஏன்? புலிகளை அழிக்க வட கிழக்கில் இராணுவம் செறிவாக்கப்பட்டது எனில் தொடர்ந்தும் வடகிழக்கில் இராணுவ மயத்தை பேணுவதன் மூலம் தமிழ்மக்களை ஒடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறதா? தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியல் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் இராணுவ மயத்தை …
-
- 0 replies
- 412 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றிய தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothi அவர்கள்"
-
- 0 replies
- 819 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும் அரசியல் ஆய்வாளரும், ஈழ விடுதலைவரலாற்றில் ஒரு மூத்த பயணியும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தலைவருமான சட்டத்தரணி திரு ஜோதிலிங்கம் ஐயா SA Jothiஅவர்கள்" வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்எனும் தலைப்பில் ஆற்றிய உரை.{ "அரசியல் தீர்வில் தமிழர்களின் அடிப்படைகள்எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது}
-
- 0 replies
- 439 views
-
-
வட கிழக்கு இணைப்பும் முஸ்லிம் மக்களும்
-
- 0 replies
- 540 views
-
-
வட கொரியா ஒரு சவால் வடகொரியா ஐதரசன் குண்டொன்றை நிலத்துக்குக் கீழ் வெடித்து வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டிக் கொண்டுள்ள நிலையில், உலகம் எதிர்காலத்தில் பேரழிவை விளைவிக்கக் கூடிய அணு ஆயுத யுத்தமொன்றுக்கு முகம் கொடுக்க நேரிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. வெளியுலகத் தொடர்புகளை பெருமளவு துண் டித்த ஒரு மர்மமான நாடாக விளங்கும் வட கொரியா தான் பெரு நாசம் விளைவிக்கக் கூடிய அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருப்பதாக உரிமை கோருவது எந்தளவுக்கு உண்மை என்பது தொடர்பில் சர்வதேச புலனாய் வுக் குழுக்கள் மத்திய…
-
- 0 replies
- 506 views
-