Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு August 28, 2020 தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்தின் ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் உச்சத்தை பறைசாற்றி நிற்கின்றது. இதனை “முள்ளிவாய்க்கால் – 2” என அழைக்கலாம். தமிழ் மக்கள் முன் எப்போதும் கண்டிராத பாரிய இராணுவ தோல்வியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. அது நிகழ்ந்து 11 ஆண்டுகளின் பின்பு , அந்த இராணுவ தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாரிய அரசியல் தோல்வியாக 2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காட்சி அளிக்கிறது. அளவாற் சிறிய தமிழினம் மேலும் மேலும் சிறிதுசிறிதாயாத் துண்டாடப்படுகிறது. ஆனால் அளவாற் பெரிய சி…

  2. மிகச்சரியான மாற்றம் – விக்டர் ஐவன் தற்போது நாட்டை ஆளும் அரசும், அதன் சமூக அரசியல் முறையும், அதன் பொருளாதாரமும் முழுமையாக முடங்கி விழுந்துள்ளது. அதுவும் வங்குரோத்து நிலை மற்றும் அராஜகத்தின் இருண்ட நிழல்கள் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. துரதிஷ்டவசமான கொவிட்-19 இன் பாதிப்பும் இந்த சந்தர்ப்பத்தில்தான் நாட்டை காவு கொண்டுள்ளது. இந்த நிலை நாட்டின் பொது மக்களது அன்றாட வாழ்க்கை ஓட்டத்துக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பினும் அதை பொருத்துக் கொள்ளும் நிலையில்தான் நாட்டு மக்கள் உள்ளனர். எனினும் அந்த நிலை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. அதன் விகிதாசரத்துக்கேற்ப சமூகம் சிந்தனைத் திறனுடன் செயல்படும் ஆற்றலையும் இழந்துவிடும்…

  3. தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 750 லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள். நடப்பது இனப்படுகொலை என்பதைச் சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன…

  4. சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன் கள ஆய்வு யாழ். மாவட்ட எம்.பி.க்களான எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் செய்திருந்தார்கள். வடபகுதியில் சீனா கால் பதிப்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் தயராக இருக்கவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளும் பிரதிபலித்தார்கள். அதே வேளையில், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, பொருளாதார நலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை அனுமதிக்கலாம், ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தாமல் அது செயற்பட வேண்டும் என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்வைக்கப் பட்டிரு…

  5. அகிம்சைப்போர் அடக்கப்பட்டதன் பின் ஆயுதப்போர் ஒன்று வெடித்தது அது முடிவாக்கப்பட்ட தாக பேசப்படும் நிலையில் இராஜ தந்திரப்போர் ஒன்றுக்குள் நம்பிக்கை கொண்டி ருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குறியீடாக பிள்ளையவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. நவநீதம்பிள்ளையவர்களின் இலங்கை விஜயமானது தமிழ் மக்கள் மத்தியிலும் அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில் இந்த விஜயத்தின் பிரதிபலிப்பாக சர்வதேச அளவில் அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பது பற்றியே இன்றைய நிலையில் எல்லோருடைய முணுமுணுப்பாக இருக்கின்றது. பிள்ளையவர்களுடைய வரவு காரணமாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஒரு திசைப்பட்டதாகவும் அதேேவளை சிங்கள மக்கள் மற்றும் அவர்களின் …

  6. இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம் பேராசிரியர் கணேசலிங்கம் கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய தனித்துவத்தை இழந்து விட்டது. காரணம் புறமயமாகப் பார்த்தால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் எண்ணப் பாங்குகளை அல்லது இலங்கை இந்திய ஒப்…

  7. விபரீதமாகும் விவகாரம் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­தி­லுள்ள அவ­நம்­பிக்­கைகள் அபிப்­பி­ராய பேதங்கள் என்ற எதிர் ­மனப் போக்­குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்­க­ளுக்கு இடையே அடிக்­கடி முனைப்பு பெற்றுக் கொண்­டாலும் மாற்று தகை­மை­க­ளுக்­கான சிந்­த­னை­க­ளையோ எண்­ணங்­க­ளையோ தோற்­று­விக்­காத போக்கே இருந்து வந்­துள்­ளது. இந்த போக்­குக்கு ஒரு மாற்று நிலை உரு­வாக வேண்­டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்­ளி­க­ளி­லி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது என்­பது ஒரு நிதர்­ச­ன­மான உண்மை. அந்த புள்­ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஒன்று வட­மா­காண சபைத் தேர்­த­லுக்­காக வர­வ­ழைக்­கப்­பட்ட ஆளுமை. இன்­னொன்­று தமிழ் தேசியம் தடு­மாறிப் போகி­றது என்…

  8. தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. கொவிட்19 பெருந்தொற்று தொடக்கிவைத்த நெருக்கடியை, அளவில்லாத ஊழலும் வளக் கொள்ளையும் அதிகாரத் துஷ்பிரயோகமும், இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. ஊழலும் இனவாதமும் வெளிப்படையாகவே செயற்படுகின்ற ஒரு சூழலை, அன்றாட இலங்கையர்களால் காண முடிகிறது. ஜனாதிபதி விதந்துரைத்த ‘ஒழுக்கமான சமூகத்தின்’ இலட்சணத்தை, அன்றாடம் காணக் கிடைக்கிறது. பொதுமக்க…

  9. சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி என் மீதும், எனது மனச்­சாட்­சி­யின் மீதும் நம்­பிக்கை வையுங்­கள் என வேண்­டிக் கொள்­கி­றேன். நான் பிர­புக்­கள், கோடீஸ்­வ­ரர்­கள் குடும்­பத்­த­வ­னல்ல, விரி­வு­ரை­ யா­ளரோ, பேரா­சி­யரோ அல்ல. இந்த நாட்­டின் விவ­சாயி ஒரு­வ­ரது மகன். நான் நீண்ட கால­மாக அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு வரும் ஒரு­வன். நான் எனது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஐந்­து­பே­ரி­னது உயிர்­க­ளைப் பண­யம் வைத்தே அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளேன். இந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பல சவால்­களை எதிர்­நோக்க நேரும் என்­பதை நான் நன்­க­றி­வேன். பொது வேட் பா­ள­ரா­கத் தெரி­வாகி 12 மணித்­தி­யா­லங்­கள் கழி­யு­முன் எனக்­கான பாது­காப்பு நீக்­கப்…

  10. புவிசார் அரசியல் உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாடுகளுக்கு இடையிலான சொந்த நலன் அடிப்படையில் முலோபாய இராயதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப மாற்றங்களோடு மாறிக்கொண்டே இருகின்றன. ஆதிக்க சக்திகளாக அருகில் இருக்கும் பெரிய அரசுகள் தமது அரசியல் பொருளாதர பாதுகாப்பு நலன் சார்ந்து எப்பொழுதும் அருகில் இருக்கும் சிறிய தேசங்களும் அரசுகளும் தமது கட்டுப்பாட்டில் இருக்கவே செய்கின்றன. கியூபா ஏவுகணை நெருக்கடி பதட்டத்தின் போது ,1962 அக்டோபரில் அமெரிக்கக் கரையிலிருந்து வெறும் 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில் அணு ஆயுதம் ஏந்திய சோவியத் ஏவுகணைகளை நிறுவுவது தொடர்பாக பதட்டமான, புவிசார் அரசியல் மூலோபாய மற்றும் இராணுவ மோதலில் ஈடுபட்டனர். அக்டோபர் 22, 1962 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், ஜனாதிபதி ஜான் எஃப்.…

  11. இலங்கையில் அதானி மின் திட்டம்: மோதி பற்றிய சர்ச்சையை விளக்க வலுக்கும் கோரிக்கைகள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள நிலையில், அந்த திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க எட்டப்பட்ட தீர்மானம், இன்று இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழுத்தங்களை கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக…

  12. ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா. கடந்தவாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்‌ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை இஸ்‌ரேலின்…

  13. சிரியா விட­யம் சின்­ன­தல்ல‌ சிரியா விட­யம் சின்­ன­தல்ல‌ சிரியா விட­யம் இன்று உல­கின் அனைத்து மக்­க­ளை­யும் பாதித்து விட்­டது என்­ப­தற்­கப்­பால், மனி­தத்தை நேசிக்­கும், சுதந்­தி­ரத்தை விசு­வ­ாசிப்­ப­வர்­களை மட்­டும் தான் அது கவலை கொள்ள வைத்­துள்­ளது, மாறாக இன அழிப்பை மேற்­கொள்­ளக் கார­ண­கர்த்­தா­வாக இருப்­போ­ருக்கு சிரிய விட­யம், சிறிய விட­ய­மா­க­வும், சிரிப்­புக்­கு­ரிய விட­ய­மா­க­ வுமே அமை­யும். உலக வல்­ல­ர­சு­க…

  14. 2018 இல் ஸ்ரீலங்கா சு. கட்சி எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் பாதையில் முக்கியமான திருப்பு முனையில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவில்லாப் பிரச்சினை இலங்கையின் ஜனநாயகத்திலும் தாக்கத்தை செலுத்துகிறது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தவறுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியில் இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியதுடன் நாட்டில் அரசியல் கட்சி முறையையும் வலுப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆயுட்கால பிரச்சினையை எதிர்கொள்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அண்மைய நம்பிக்கையில்லா தீர்மான முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதன் உள்ளார்ந்த பிரச…

  15. அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா? -அதிரதன் பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான்,…

  16. வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதைச் செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக கடந்த நாள்களில், பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்க…

  17. “நல்லாட்சி” அரசாங்கம் கொண்டுவந்த புதிய அரசியல் கலாசாரத்தின் இலட்சணம் இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சினை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக்காண்பதற்கான அரிதான வாய்ப்பு ஒன்று தோன்றியருந்ததாக மக்கள் நம்பினார்கள். அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், இறுதியில் இன்று ந…

    • 2 replies
    • 487 views
  18. நைஜரின் ஒளிரும் யுரேனியம் sudumanal 1 நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, ந…

    • 6 replies
    • 1.1k views
  19. புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா? — 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.1947 இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய கொடி எது?– அ.நிக்ஸன்- 1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் …

  20. "பொறுத்திருந்து பாருங்கள்" மகிந்த ராஜபக்ஸ - விசேட தமிழாக்கம் ரஜீபன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளார் என்கின்றனர் அவரது உதவியாளர்கள். இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய பழுத்த அரசியல்வாதியான ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றார், தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை அவர் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஆதராவாளர்களை சந்தித்துவருகின்றார், மேலும் அவர் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மாகாணசபை மற்றும் ஊள்ளுராட்சி அமைப்புகளின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர…

  21. தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன். தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் …

  22. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன். தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது. தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் …

    • 1 reply
    • 418 views
  23. நடுத்தர வயதினரின் அரசியல்? - நிலாந்தன் அண்மையில் மருத்துவ நிபுணரான ஒரு நண்பர் கேட்டார்“என்னுடைய பிள்ளை தான் ஏன் வெளிநாடு போகக்கூடாது என்று கேட்டால், அந்தப் பிள்ளைக்கு நீ ஏன் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு பொருத்தமான காரணம் ஏதும் உண்டா?” என்று. இந்தக் கேள்வி யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கப் பெற்றோர் பலர் மத்தியில் உண்டு. இக்கேள்விக்குப் பொருத்தமான விடை எத்தனை தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு? பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு புலப்பெயர்ச்சி அலை ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மே 18ஐ முன்னிட்டு “தமிழ் ம…

    • 1 reply
    • 389 views
  24. "பணம்" "பணம் விளையாடும் அரசியல் இங்கே படித்தவர் கூட விலை போவார்! படுக்கை அறைக்கும் கதவு திறப்பார் பகட்டு வாழ்வில் எதுவும் நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பேதங்கள் ஒழிப்போம்" "தாழ்வு மனப்பான்மையை தள்ளி வைத்து வாழ்வு சிறக்க திமிரோடு நின்றால் ஆழ் கடலிலும் தரை காண்பாய்!" "மதம், சாதி வேறுபாடு தாண்டி இதயசுத்தியுடன் மனிதம் நாம் வளர்த்து வாதங்கள் விட்டு பேதங்கள் ஒழிப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................ "அறியாமை விலகட்டும்" …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.