அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா? தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன? யதீந்திரா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி? 2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில்…
-
- 2 replies
- 985 views
-
-
உக்ரென் ரசியாவிடம் பெரியதொரு தோல்வியை சந்தித்திருக்கிறது போல. 12 நாடுகளின் கவச வாகனங்கள் ராங்கிகள் என பல வகையான கனரக ஆயுங்களை அள்ளிக் கொண்டு போய் மாஸ்கோவில் மே தின ஊர்வலத்தில் ரசிய மக்களுக்கு காட்டியுள்ளார்கள்.
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டிக்கட்டமைப்பின் அடிப்படையிலான அதி உச்ச அதிகாரப்பகிர்வே தீர்வாக அமையும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் இந்தத் தீர்வு அமையவேண்டுமென்றும், இதுவே நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டதும் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்…
-
- 0 replies
- 197 views
-
-
- இலட்சுமணன் முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்தான், தாம் முழுநேரப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் காலத்தில், பகுதி நேரமாகத்தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி, புதுக் கதையொன்றைச் சொல்லி வருகின்றது. இந்தக் கருத்துத் தொடர்பில், தமிழ் மக்களிடம் பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவூட்டும் வகையிலமைந்த, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, களுவாஞ்சிக்குடி, கிரான் ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (12) நடைபெற்றிருந்தது. இதன் முதலாவது கூட்டம், க…
-
- 0 replies
- 376 views
-
-
துறவி இராச்சியமாகும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது. இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04 இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்க…
-
- 0 replies
- 795 views
-
-
அகதி அரசியல் - அரசியல் அகதிகள் தொ. பத்தினாதன் ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்களிப்பு தமிழ்நாட்டுக்கும் உண்டு. தட்டையாக, நெட்டையாக, குட்டையாகப் பல பரிமாணங்களும் உடையன தமிழகப் போராட்டங்கள். அதேபோல் கறுப்பு - வெள்ளை என்று மட்டுமல்லாது பல வர்ணங்களையும் கொண்டது அது. இத்தொடர் போராட்டங்களை அவதானிக்கும்போது ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகத் தென்படுகிறது; அதாவது ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ஈழத்தமிழருக்குக் கிடைத்த நன்மைகளை விட போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுக்குத்தான் பல நன்மைகள் கிடைத்துள்ளன. விதிவிலக்காக …
-
- 0 replies
- 939 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்- கண்ணோட்டம்
-
- 0 replies
- 562 views
-
-
எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் April 20, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின…
-
- 0 replies
- 255 views
-
-
வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்? 16 Jun 2025, 9:33 AM ராஜன் குறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது. காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக…
-
- 0 replies
- 233 views
-
-
ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர். முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறி…
-
- 0 replies
- 361 views
-
-
ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன் மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை. இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்ல…
-
- 0 replies
- 162 views
-
-
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது. http://www.nanechozhan.com/ Recognition of the Tamil Genocide and Support for Self-determination Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party. Date lodged: Thursday, 09 October 2025 Motion type: Standard Motion Motion reference: S6M-19300 That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70…
-
-
- 3 replies
- 479 views
-
-
சட்டத்தரனி சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் அவர்களே- நீங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறைய ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயமானதாகக் காண்பித்து. அதனைச் சர்வதேசஅரங்கில் ஒப்புவிக்கும் வேலைத் திட்டத்தை நன்றாகவே செய்து வருகின்றீர்கள் என்பது புரிகிறது. அதாவது, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளை இலங்கையிலேயேநடத்த வேண்டும் என்பதுஇலங்கை- இந்திய அரசுகளின்குறிப்பாக இந்தியஅரசின் விருப்பம். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதைக் கூட இலங்கை அரசு, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே விரும்பவில்லை. இந்த நிலையில், 2…
-
- 0 replies
- 574 views
-
-
கொவிட்-19 கூட்டத்தில் இனப் பிரச்சினையை பற்றிப் பேசலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மே 4ஆம் திகதியன்று, அலரி மாளிகையில் கூட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு புறமிருக்க, அதை கூட்டிய பிரதமரோ, அரசாங்கமோ என்ன தான் சாதித்திருந்தன? கூடினார்கள், சுகாதார அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் கொவிட்- 19 தடுப்புக்காகத் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். பலர், கொவிட்-19 தடுப்பு விடயத்தில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கத்தைப் பாராட்டினார்கள்; அவ்வளவுதான்; கலைந்து சென்றார்கள். அதிலிருந்து 10 நாள்கள் உருண்டோடிவிட்டன. அந…
-
- 0 replies
- 436 views
-
-
காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்ககூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்- புலம்பெயர் அமைப்புகளுடன் இதுவரை பேச்சுவார்த்தைகளில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகம் Rajeevan Arasaratnam May 26, 2020 காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்ககூடிய எவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்- புலம்பெயர் அமைப்புகளுடன் இதுவரை பேச்சுவார்த்தைகளில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகம்2020-05-26T10:47:16+00:00அரசியல் களம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்புகளுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல்போனவர்களின் அலுவலகம் தன்னுடைய ஆணைக்க…
-
- 0 replies
- 350 views
-
-
-
ஜனநாயகமும் கொரொனாவும் வி. சிவலிங்கம் நாம் இன்று வரலாற்றின் திருப்பு முனையில் நிற்கின்றோம். எமது மக்கள் உலகத்தினை உலுக்கிய முதலாம், இரண்டாம் உலகப் போர் அனுபவங்களைத் தற்போது நூல் வழியாகவே அறிய முடிகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் துன்பங்களைச் சுமந்தவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்கள் ஆண்டுகள் பல கடந்த போதிலும் அந்த அனுபவங்களைப் பகிரும்போது கண்ணீரைக் காண முடிகிறது. அவ்வளவு ஆழமான துன்பங்களை அவர்கள் அனுபவித்தார்கள். இவை ஒரு வகையில் போர் அனுபவங்கள் என்ற போதிலும் இப் போர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பாரிய மாற்றங்…
-
- 0 replies
- 616 views
-
-
நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்.. வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்.. ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்.. மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும்…
-
- 2 replies
- 853 views
-
-
கோத்தாபயவின் இருகளப் போர் – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி சர்வதேச நாணய நிதி தொடக்கம் உலக வங்கி ஊடாக உலக நாடுகளின் நிதி நிலைமைகளைப் பற்றிக் கண்காணிக்கும் பல உலகளாவிய இராட்சத நிறுவனங்கள் வரை எல்லாமே, ஒன்றன்பின் ஒன்றாக, இலங்கையின் கடன்பளு ஆபத்தான ஒரு நிலைக்கு அந்நாட்டின் பொருளாதாரத்தை வளரமுடியாமல் தடுக்கிறதென்றும் இந்த வருடக் கொள்ளை நோயால் ஏற்பட்ட மந்த நிலையிலிருந்து இலகுவாக மீழ்வது கடினமென்றும் இடையறாது எச்சரித்து வருகின்றன. அத்துடன் அவ்வாறு மீழ்வதற்குரிய பொருளாதார மாற்று மருந்துகள் கசப்பானவை எனினும் அவற்றைத் துணிந்து கையாளாகாதவரை பொருளாதாரப்பிணி தீராதென்றும் அவை மேலும் வலியுறுத்துகின்றன. ஆனால் இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சும் அந்த எச்…
-
- 0 replies
- 693 views
-
-
(நேர்காணல்: ஆர்.ராம்) பாராளுமன்றில் ஆளும், எதிர் தரப்பால் ஜனநாயக மறுப்பு ஐ.நா.வில் புதிய பிரேரணையால் மட்டும் நன்மை கிட்டாது தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு போலியானது தமிழ் மக்களின் ஆணை தம்மிடமுள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலக, இந்திய நலன்களுக்கு உட்பட்டு அவர்களின் முகவர்களாக செயற்படுகின்றதே தவிர தமக்கு ஆணை வழங்கிய மக்களின் நலன்களில் இறுக்கமாக செயற்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, http://cdn.vir…
-
- 1 reply
- 597 views
-
-
காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன் [ ஐநா தீர்மானத்தின் முக்கியமான பகுதிகள்: முதலாவதாக, இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா என்பதைத் தீர்மானிக்க ஜம்மு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இரண்டாவதாக, வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து தனது படையையும் மற்றவர்களையும் அகற்றிக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, பாகிஸ்தான் பகுதியிலிருந்து படை அகற்றப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டதும், இந்தியாவும் தனது படையை விலக்கிக்கொள்ள வேண்டும்; ஆனால் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எவ்வளவு படைவீரர்கள் தேவைப்படுகிறார்களோ அவ்வளவு வீரர்களை வைத்துக்கொள்ளலாம். நாலாவதாக, வாக்கெடுப்பு…
-
- 0 replies
- 983 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை. இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப்…
-
- 0 replies
- 519 views
-
-
-
மெதுவான பயணத்தின் மூலம் எதனை சாதிக்க முடியும்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-22#page-22
-
- 0 replies
- 380 views
-