அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பத்தாவது மே பதினெட்டை எப்படி நினைவு கூரலாம்? பத்தாவது மே பதினெட்டு இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடும். ஜெனீவாவை எப்படி தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்களோ அப்படித்தான் மே பதினெட்டை நினைவுகூரும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. நினைவு கூர்தலை யார் ஏற்பாடு செய்வது? எப்படிச் செய்வது? என்பவை தொடர்பில் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் ஒரு பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அவ்வாறு ஒரு பொது உடன்பாடு எட்டப்படாமைக்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம்- நினைவுகூர்தல் என்றால் என்ன என்பது தொடர்பில் ஓர் ஒருமித்த கருத்து ஏற்பாட்டாளர்கள் மத்தியில் இல்லை. இரண்டாவது காரணம்- அவ்வாறு ஒருமித்த கருத்தைக் கொண்டிராத புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புக்களின் தலையீடு. …
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனா: ஒரு பட்டை ஒரு பாதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது. எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன. இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கிறது அரசியலமைப்பு வரைவு - பி.கே.பாலச்சந்திரன் இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழுவின் அறிக்கை சகல வல்லமையும் பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து அதற்குப் பதிலாக பலம்பொருந்திய பிரதமரையும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியையும் கொண்ட வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையை விதந்துரைக்கிறது. அரசியலமைப்பு வரைவு என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படமாட்டார். பதிலாக இரு சபைகளைக்கொண்ட சட்டவாக்கசபையினால் ( 233 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் 55 உறுப்பினர்களைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இயக்கம் என்று கூறுதலும் அதன் அடிப்படைக் கோரிக்கைகளை ஒட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள் ஆக 5, 2013 1 “புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களு…
-
- 12 replies
- 1.1k views
-
-
புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!! மடல்:::: (புலிப்பார்வை படக் காட்சி) இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன…
-
- 5 replies
- 1.1k views
-
-
வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் -க. அகரன் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும். எனினும் வடக்கு, கிழக்கு என்பதைத் தமிழர்களின் தாயகமாகச் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டமைந்த ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இது மீண்டும் முகமலர்ச்சிக்கும் கைகுலுக்கலுக்குமான ஒரு தருணம். அசட்டை மனப்பான்மையுடனான பல வருடகால உறவுகளுக்குப் பிறகு, இந்தியாவும் மாலைதீவும் பாரம்பரிய நட்புறவின் நல்லியல்பான தோழமைப் பண்புக்கு திரும்பியிருக்கின்றன.கடந்த அக்டோபரில் எதிர்பாராத வகையிலான தேர்தல் வெற்றியைப் பெற்ற மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலீ இவ்வாரம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.தனது நாட்டின் " மிக நெருக்கமான நட்பு நாடு " என்று இந்தியாவை அவர் வர்ணித்தாார். ஜனாதிபதி சோலீயின் புதுடில்லி விஜயமும் அறிவிப்புகளும் அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த கடுமையான இந்திய எதிர்ப்பாளரான அப்துல்லா யாமீனினால் கடைப்பிடிக்கப்பட்ட உறுதியான சீனச்சார்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
'இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்' -சபேசன் (அவுஸ்திரேலியா)- இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில், அண்மைக்காலத்தில், மேற்குலகம் சில அதிரடிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை மேற்கொள்ளுகின்ற மேற்குலகம், அதேவேளை, விடுதலையைக் கோரி நிற்கின்ற தமிழர் தரப்புமீதும் சில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. உள்நாட்டுப் பிரச்சனை என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று உலக மயமாக்கப்பட்டு விட்ட இவ்வேளையில், சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிப்பது அவசியமானது என்று நாம் கருதுகின்றோம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குச் சார்பாக விவாதங்கள் நடைபெறுவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர் பலஸ்தீனியர்கள் அன்று 1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக 65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத வீத சிறு நிலபரப்பிலிருந்து மீண்டும் விரட்டப்படாமல் நின்றுபிடிப்பதற்கான போராட்டமாகவுமே மாறியிருக்கிறது. பல நாடுகளில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலஸ்தீனர்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதற்காக ஏங்கிக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடஇந்தியாவில் இருந்து அண்ணளவாக 2500 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையால் நாடுகடத்தப் பட்ட அரசகுமாரன் விஜயனும் கூட்டாளிகளும் இலங்கைக்கு வந்து மலைப்பாங்கான காட்டுப்பகுதியாய் இருந்த தென்னிலங்கையின் பெரும்பகுதியில் வாழ்ந்த பூர்வீக தமிழ்க் குடிமக்களோடு சேர்ந்து ஆட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து மேலும் வரவழைக்கப்பட்ட பெண்களுடன் பல்கிப் பெருகி காலப்போக்கில் கோட்டே, கண்டி என்ற இரு சிங்கள இராச்சியங்களை உருவாக்கினார்கள். பாளி சமஸ்கிருதம் தமிழ் என்பன கலந்து உருவானதே சிங்கள மொழியாகும். பின்னர் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பவுத்த மதத்தையும் பின்பற்றி சிங்கள பவுத்தர்களாக வாழ்ந்து வந்தார்கள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியான சமதரைப் பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த நாகரீகம் …
-
- 5 replies
- 1.1k views
-
-
புத்தரின் தர்மகோட்ப்பாட்டை நிலைநிறுத்த புனையப்பட்ட கதைகளே இனவழிப்புக்கு வித்திட்டுள்ளது என தொல்லியல் துறை மாணவன் மயூரன் (MA) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அக்கூட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்றின் சில நல்ல நிகழ்வுகள் பாதகமான விளைவுகளைத் தருவதுமுண்டு வரலாற்றுப்போக்கில் எழுகின்ற எழுச்சிகள் என்பது அவற்றின் நீண்டகால விளைவுகளினாலேயே எடைபோடப்பட வேண்டும். அந்தவகையில் இலங்கையின் பௌத்தம் பஞ்சசீலக் கொள்கையின்அடிப்படையில் கட்டி வளர்க்க முற்பட்டாலும் புத்தரின் தர்மக்கோட்பாடை நிலைநிறுத்த புனையப்பட்ட கற்பனைக் கதைகள் பின்னாளில் இனவழிப்பையும் பேரினவாதத்தைத் தூண்டிவளர்க்க உதவிற்று என்ற உண்மை மிகக் கசப்பானதே. அந்தவகையில் பௌத்த தர்மத்தை நிலைநிறு…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் -இலட்சுமணன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன. இத்தகைய பிற்போக்குத் தனமான நடத்தைகளால் உருவான அரசியல் சூழ்நிலைகளானது, தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான, நீண்ட கால அபிலாசைகளைப் புறந்தள்ளி, நாடாளுமன்றப் பிரதிநித்துவத்தை இல்லாமல் ஆக்கிவிடும் ஆபத்துகள் நிறைந்தவையாகும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி.. கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்.. உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி.. உலகத் தலைவர்கள் எல்லாம் மண்டியிட்டு அவருடைய வாசலில் நின்றதை கண்ணாரக் கண்டு மமதை கொண்ட மனித வடிவம்.. பிறந்தநாள் பரிசாக பலர்ஸ்கோனியிடமிருந்து ஐ.சி ரயில்வண்டியையே பரிசாகப் பெற்ற உலகின் ஒரே சர்வாதிகாரி.. இப்படியெல்லாம் இருந்தாலும் அவரின் மறுபக்கமோ கொடுங்கோன்மை நிறைந்தது.. அவர் செய்த அநீதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.. ஆனால் இப்படி ஒரு தண்டனை வழங்கப்படலாமா..? அவர் பிறந்த நகரான சிற்றாவில் அவர் மரணிக்க வைக்கப்பட்ட முறை கடாபியின் தவறுகளை மூடி மறைத்துவிட்டத…
-
- 3 replies
- 1.1k views
-
-
இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்…. October 21, 2019 தேர்தல்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குரிமை. மக்கள் தமக்குரிய ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமையின் மூலம்தான் வழிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுரிமை சுதந்திரமானது. நிர்ப்பந்தங்கள் அற்றதாக அமைந்திருத்தல் அவசியம் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய தேர்தல் முறையிலான இந்த வாக்குரிமையை மக்கள் அடிக்கடி பயன்படுத்த முடியாது. தேர்தல்களின்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போதுதான் அது மிகவும் வலிமை பெற்றிருக்கும். ஜனநாயகத்தின் இந்த உன்னதமான அம்சத்தை, உன்னதமான உரிமையை மக்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. ஏனெனில் ஆட்சிமைப்பதற்கு உள்ள ஒரேயொரு …
-
- 1 reply
- 1.1k views
-
-
20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும் இருபதாவது அரசியல் யாப்பு திருத்தம் யாரை பாதிக்கும். இதன் விளைவு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? இதனை ஆராய்கிறது இந்தப் பதிவு.
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்.. June 7, 2020 கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை எதுவோ அங்கே தாக்குவது. ஈழத் தமிழர்களின் உயிர் நிலை அல்லது குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் உயிர் நிலை கல்விதான் என்று கருதிய காரணத்தினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களின் உயிர்நிலை கல்விதானா என்ற கேள்விக்கு உரிய விடையைத் தனியாக ஆராய வேண்டும்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நம்பினார்கள். அதனால்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த அடிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
"நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்" வான்புலிகளை முன்வைத்து ஒரு விபரணம் -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த 26 ஆம் திகதி மாலைப்பொழுது அல்ஜசீராத் தொலைக்காட்சியின் ஆங்கில சேவை வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று சீரழியும் சிங்கள அபலைப் பெண்களின் கண்ணீர்க் கதைகளினூடாக சிங்களத்தின் வேறொரு முகத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் கொண்டிருந்தது. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு இரையாகி அல்லலுறும் எமது தமிழ்ப் பெண்களின் துயரத்திற்கு நிகரான வலியையும் கவலையையும் மனதில் விதைத்தன அந்தக் கண்ணீர்க் கதைகள். அந்த அபலைகளின் துயரத்திற்குப் பின்னான காரணமாக முன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவான சில பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டாலும் அதன் வழியே போகிறபோக்கில் சிங்கள அதிகார பீடம் கடும் வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?. இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல் November 13, 2013 at 11:22pm முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் உண்மைத் தமிழ்த்தேசிய அன்பர்களுக்கு தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்... இந்த நினைவிடம் நன்றேதான். அது அமைக்கப்பட்டவிதமும் அதற்காக உழைத்த ஓவியர் வீர சந்தானம் போன்றவர்களும் சிற்பிகள் முருகன் குழுவினரும் பாராட்டப் படவேண்டியவர்கள்தான். அவர் தேர்ந்த கல்லும் அதன் நிறமும் “மயமதத்திலோ” “சிற்பசாத்திரத்திலோ” முன்மொழியப்பட்டதைவிட அதிகம் முரண்படாத வகையில் அமைந்தவைதான். நினைவிடத்திற்காகன இருப்பிடமும் அமைந்த திசையும் நன்றேதான். இன்றைக்கான உலகில் தவறைச் செய்துவிட்டு அதை சரியானதாக்க முயல்வதை யாரும் கருணை கொண்டு பார்ப்பதில்ல…
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச காலத்தில் எதைக் கூறினாரோ–தேர்தல் பிரச்சாரங்களின் போதுஎதைக் கூறினாரோ–அதையே இப்போது ஜனாதிபதியாகிய பின்னரும் கூறிவருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்திருந்த கோட்டபாய, அதிகாரப்பகிர்விற்கான எந்தவொரு தேவையும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். அதிகாரப்பகிர்வு என்று கூறி, 70 வருடங்களாக அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர். பெரும்பாண்மை மக்களின் (சிங்களமக்களின்) ஆதரவின்றி அவ்வாறான ஒரு விடயத்தை செய்யமுடியாது. எனவே அதனை தன்னால் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கின்றார். கோட்டபாயவை பொறுத்தவரையில…
-
- 0 replies
- 1.1k views
-