அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும் தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும். இப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘பரமபதம்’ ஆடி, தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி, கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோற்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் 29ஆம் திகதி சனிக்கிழமை, வவுனியாவில்…
-
- 3 replies
- 575 views
-
-
-
- 3 replies
- 981 views
-
-
1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர். ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும் அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெ…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன? - ஒரு காலங்கடந்த கேள்வி விஜய் இந்தக் கேள்வி, அண்மைக்காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகளினால் உருவானதாகும். இந்த வகையில் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பிய வாழ்த்துச்செய்தி, நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி வந்தவேளையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அதன் விசேட அறிக்கையாளர் சாலோக பெயானி சமர்ப்பித்துள்ள அறிக்கை என்பன இந்தக் கேள்விக்கு அடிப்டையான அறிக்கைகளாகும். இரா.சம்பந்தன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில…
-
- 3 replies
- 1.4k views
-
-
பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர் பலஸ்தீனியர்கள் அன்று 1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக 65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத வீத சிறு நிலபரப்பிலிருந்து மீண்டும் விரட்டப்படாமல் நின்றுபிடிப்பதற்கான போராட்டமாகவுமே மாறியிருக்கிறது. பல நாடுகளில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலஸ்தீனர்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதற்காக ஏங்கிக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேர…
-
- 3 replies
- 695 views
- 2 followers
-
-
மன்னார் மாவட்ட காற்றாலைகளும் கரிசனைகளும் By DIGITAL DESK 5 03 SEP, 2022 | 08:30 PM -ஆர்.ராம்- மன்னார் மாவட்டத்தில் மன்னார்த்தீவு, மன்னார் பெருநிலப்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் மூன்று கட்டங்களாக காற்றாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாம் கட்டத்தில், மன்னார்த் தீவின் தென்பகுதியான தாழ்வுப்பாடிலிருந்து துள்ளுகுடியிருப்பு வரையில் இலங்கை மின்சார சபையினால் 30காற்றாலைகள் ஏலவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்ட முதலாம் கட்டத்தில் 50மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு 21காற்றாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன. அதில், 7காற்றாலைகள் தாழ்வுப்பா…
-
- 3 replies
- 678 views
- 1 follower
-
-
1991ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th battalion) சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி முத்துக்குமார் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளது. கூட்டமைப்பு மைத்திரி ஆதரவு நிலை எடுத்தமைக்கு மேற்குலகினதும் இந்தியாவினதும் அழுத்தம்தான் பிரதான காரணம். இவை ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றன என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேற்குலகத்தையும், இந்தியாவையும் பொறுத்தவரை இரண்டு வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது தனக்குச் சாதகமான ஆட்சியைப் பாதுகாப்பது. இரண்டிற்கும் முக்கியமான நிபந்தனை தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைய விடாமல் …
-
- 3 replies
- 2.6k views
-
-
தனியே நிற்கும் விக்னேஸ்வரன் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, மு.ப. 01:03 Comments - 0 தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் விவரத்தை கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வாரம் வெளியிட்டிருக்கின்றார். ஓய்வுநிலைப் பேராசிரியர், பொறியாளர், முன்னாள் அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளையும் பெரும்பாலும் உள்ளடக்கியதாக, மத்திய குழு அமைந்திருக்கின்றது. மொத்தமுள்ள 22 பதவிகளில் இரண்டு மாத்திரமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் ‘மகளிர் அணி’ என்கிற விடயத்துக்காகவே அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். விக்னேஸ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
பழ.நெடுமாறன் ''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசிய…
-
- 3 replies
- 504 views
-
-
தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…
-
- 3 replies
- 1.1k views
-
-
தலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்! பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது. இந்தப் பயணத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது தொடங்கிய பிரச்சினை, முடிந்த பின்னரும் ஓயவில்லை. தமிழ்நாட்டின பிரதான கட்சிகள் இந்தக் குழுவின் பயணத்தால் பயன் ஒன்றுமில்லை என்று தமது பிரதிநிதிகளை விலக்கிக் கொண்டன. இதனால் 16 பேர் வருவதாக இருந்த குழுவில் 12 பேர் மட்டும் வந்தனர். இந்தக் குழுவின் பயணத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.அதுவும், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்தக் குழுவின் பயணத்தை வைத்து நெருக்கடிகளில் இருந்து மீளலாம் என்று அரசாங்கம் கருத…
-
- 3 replies
- 930 views
-
-
முன்னுதாரணம்மிக்க தமிழீழ மக்களும் கேள்விக்குறியாயுள்ள விடுதலைப் போராட்டமும்! சண்முகவடிவேல் ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன என்ற மிக எளிமையானதும் மிக அடிப்படையானதுமான இந்த வினாவை எழுப்பி இதற்கு விடைகாண முனைவார் யாருமில்லை. மேற்படி வினாவை எழுப்பி அதற்குப் பொருத்தமான பதிலைத் தேடாமல் சிலர் மனம்போனபடி பேசுகிறார்கள். சிலர் வெறும் விருப்பத்தின் அடிப்படையிற் பேசுகிறார்கள். சிலர் விரக்தியடைந்து ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். சிலர் எல்லாம் முடிந்துவிட்டது இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கைவிரிக்கின்றார்கள். சிலர் தம் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் பழிகூறலையும் திட்டித்தீர்த்தலையும் மேற்கொள்கிறார்கள். சிலர் தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் அல்லது எதிர்மறையாய் …
-
- 3 replies
- 681 views
-
-
சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்றொரு பழமொழி. இந்தப் பழமொழியைத் தான் இப்போது தமிழர்கள் நாடுகிறார்களோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்சியை மையப்படுத்தி வெளிவரும் கருத்துக்களில் இருந்தே, இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகையை சாதகமானதாக தமிழர் தரப்பிலும் சிலர் நோக்கத் தொடங்கியுள்ளதைப் பற்றிப் பார்க்கலாம். உள்ளூராட்சித் தேர்தலுக்கு…
-
- 3 replies
- 754 views
-
-
இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் இப்போது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றமடைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதே காலப்பகுதியில் போர் முடிவுக்கட்டத்தை அடைந்திருந்தபோது, குண்டுவீச்சுகள், உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தன. போரில் காயமுற்ற, சுகவீனமுற்ற பொதுமக்கள், நூற்றுக்கணக்கில் கடல் வழியாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு மூலம் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவினதும், ஐ.நாவினதும், செய்மதிகள் பிடித்த படங்கள், சூடு தவிர்ப்பு வலயங்களிலும் குண்டுகள் விழும் தடயங்களைப் புலப்படுத்தியபோதிலும், அப்போது போரை நிறுத்தும் முயற்சிகளிலோ, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத…
-
- 3 replies
- 760 views
-
-
பிரபாகரன் மக்களால் போற்றப்பட்டார் – அதிர்ச்சியடைந்த எரிக் சொல்ஹெய்ம் 30 வருடங்களாக இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நோர்வேயின் சமாதான மத்தியஸ்தராக இருந்த எரிக்சொல்கெய்ம் WION தொலைக்காட்சியின் நிரூபர் பத்மா ராவ் சுந்தர்ஜிக்கு அளித்த செவ்வியில், அவரது சர்ச்சைக்குரிய பாத்திரம் பற்றியமௌனத்தைக் கலைக்கிறார். பத்மா ராவ் சுந்தர்ஜி கடந்த 20 வருடங்களாக இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்த விடயங்களில் செய்தி சேகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1) கேள்வி: எவ்வாறு அல்லது எப்போது நோர்வே அரசு இலங்கையில் மத்தியஸ்தம் செய்ய முடிவெடுத்தது? அதற்கு நோர்வே அரசு ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? பதில்: நாங்கள் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவால் இரகசியமாக…
-
- 3 replies
- 885 views
-
-
அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி? ஒரு பார்வை ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தை வரும் அதை மாதம் பதவி ஏற்பார். அப்பொழுது தனது அமைச்சரவையில் பல மாற்றங்களை விரும்பியும் விரும்பாமலும் செய்தே ஆகவேண்டும். தற்போதைய இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் நான்கு வருடங்கள் இந்த பதவியை வகித்தவர். இப்பொழுது ஒபாமாவின் பின்னராக தன்னை சனாதிபதி தேர்தலில் நிறுத்த தயாராகி அதற்கு பலம்சேர்க்க இந்த தடவை தான் இந்த பதவியை வகிக்கமாட்டேன் என முற்கூட்டியே அறிவித்துள்ளார். அமெரிக்காவின் தற்போதைய ஐ.நா. தூதுவரான சூசன் ரைசும் மாசசூசட்ஸ் மாநில ஜனநாயக கட்சி செனட்டருமான ஜோன் கெரியும் கிலரியை மாற்றீடு செய்யக்கூடியவர்களாக கணிக்கப்பட்டது. இதில் சூசன் ரைஸ் தென் சூடான் ஐ.நா. வாக்கெடுப…
-
- 3 replies
- 1.1k views
-
-
கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்-19 நிதியமும் -அ.நிக்ஸன்- நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எழும் கேள்விகளில் நியாயம் இருக்கலாம். இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிரு…
-
- 3 replies
- 783 views
-
-
சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார். அதனால், எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன். இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதி…
-
- 3 replies
- 553 views
-
-
மீட்பருக்காகக் காத்திருப்பது - நிலாந்தன் “சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதைஎப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது. மெய்யாகவே, அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – மார்கரட் மீட் கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில், ”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்க…
-
- 3 replies
- 606 views
-
-
சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 06:38 போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன. ஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது. போர் உருவாக்கிய கதைகள், பதிலின்றிப் பதில்களை வேண்டி, பல குரல்களாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். முடியாத கதைகளின் களம், போரும் அதன் பின்னரான நிலமுமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிரியாவில் நடைபெற்று வந்த போர், முடிவுக்கு வந்திருக்கிறது. ஐந்து இலட்சத்துக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சிங்கள அரசினால் தமிழின ஒதுக்கல், தமிழர்தாயக நில அபகரிப்பும், தமிழர்தாயக கனிமவளச் சுரண்டலும் அதே நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடைய பாசாங்கு அரசியலும், அரசியல் வங்குரோத்துத்தனங்களும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் வளர்ச்சியடையத் தடையாக அமைந்துவிட்டன. இதேவேளையில் சிங்கள தேசம் தன்னை அரசியல் ரீதியாக இஸ்திரப்படுத்தியதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமிப்பதிலும் தொடர் வெற்றியடைந்துவருகிறது. ஆனால் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்காக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அது பிரயோகித்த பொருளாதாரம் என்பது மிகப்பெரியது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக தன்னுடைய முழு பொருளாதாரத்தையும் செலவழித்ததன் விளைவே இன்று இலங்கை பொருளாதா…
-
- 3 replies
- 764 views
-
-
அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன் ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார், இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை. தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்-வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி தமிழ்ப் பொது …
-
-
- 3 replies
- 543 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பி.கே.பாலசந்திரன் கொழும்பு (நியூஸ் இன் ஏசியா😞திர்வரும் ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுப் பலம்பொருந்தியதாக இருந்தால் மாத்திரமே தங்களால் ஆசனங்களை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கொண்டிருக்கும் சிலர், கடைசி நேரத்திலாவது கட்சிக்குள் பிளவு தவிர்க்கப்படுமென இன்னமும் நம்புகின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் பிளவு உறுதியாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தவாறு இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் (சமகி ஜனபல வேகய) தேர்தலில் போட்டியிடுவதற்கான அவற்றின் நோக்கங்களைத் தெரியப…
-
- 3 replies
- 1.1k views
-