அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர் பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. ‘தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை’ என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது. தேசியக் கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராகத் தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின்மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மௌனித்துப் போயுள்ளனர். விடுதலை கோரும் ஒரு இனத்தின் ஆன்ம பலத்தின்மீது எந்தச் சக்தியினாலும் சேதத்தை ஏற்படுத்த முடியாது என…
-
- 4 replies
- 1k views
-
-
”சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே. ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள். ‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும் குமுறல் கலந்த கேள்வி இது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ஆறு ஆண்டுகளில் வயது போய் இருக்குமா வந்திருக்குமா ? வரலாற்ற…
-
- 1 reply
- 1k views
-
-
குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது. அவர் இலங்கையின் பிரபலகுற்றவியல் வழக்கறிஞர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வாதடியவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்களின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 98வீதமான வழக்குகளில் எதிரிகளுக்காக தோன்றி வாதடியவர். கிருஷாந்தி கொலை வழக்கு மற்றும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் படுகொலை வழக்கு உட்பட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வழக்குகளில் தோன்றி வாதாடியவர். மனித உரிமைகளை மீறிவந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவரின் செயல்கள் சவாலாக இருந்தது. அரசு தலைவராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின…
-
- 0 replies
- 1k views
-
-
உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 06:44 Comments - 0 “ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த் தரப்புக்குள் சில பகுதியினரிடம் ‘எள்ளல்’ தொனியிலான உரையாடலையும் தென் இலங்கையிடம் எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்ம…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும்.…
-
- 1 reply
- 1k views
-
-
சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்? அ. நிக்ஸன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டால் வந்தது என கூட்டமைப்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பு கூடுதல் பங்காற்றியது என சுமந்திரன் நேரடியாகவே கூறுகின்றார். இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்களை கண்ட நேரடியான சாட்சியம் என்று அனந்தி சசிதரன் கூறுகின்றார்; ஜெனீவாவில் அனைத்தையும் கூறியதாகவும் அவர் சொல்கிறார். கூட்டுப்பொறுப்பு எங்…
-
- 4 replies
- 1k views
-
-
வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் கோப்புப் படம் முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது. ‘போர் உச்சக்கட்டத்தை அடைந்த தருணத்தில், எனது கணவரும் எனது மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். நான் தற்போது எஞ்சிய எனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நாம் எமது அன்றாட வாழ்வைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்’ என செல்வராஜி தெரிவித்தார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் வாழ்ந்து வரும் 47 வயதான செ…
-
- 1 reply
- 1k views
-
-
தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை. ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்…
-
- 0 replies
- 1k views
-
-
பொய்யான வாக்குறுதிகள்: பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்-அம்பிகா சற்குணநாதன் பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசானது பயங்கரவாத தடைச்சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது என கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்;யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை…
-
- 5 replies
- 1k views
-
-
சீனா – மஹிந்த கடன் பொறி சீனாவிடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நிதி, என்பது மிகவும் மோசமான அரசியல் நடத்தையாகவே பார்க்கப்படும். இதற்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறது அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது? என்பதை விவரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளியிட்ட கட…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு தொலைக்காட்சியால் என்ன செய்ய முடியும்? பதிவு செய்த நாள் - / மார்ச் 22, 2013 at 10:16:30 PM எந்தவொரு பொதுப் பிரச்சினையிலும் கருத்தொருமிப்பை உற்பத்தி செய்யும் வலிமை கொண்டவை ஊடகங்கள். உண்மையை ஊருக்குச் சொல்லுவதும் ஊடகங்களால் சாத்தியம்; உண்மையை மறைப்பதும் அவற்றால் சாத்தியம். ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கிளர்ந்தெழுந்த்த தமிழக மாணவர் சமூகத்திற்கு முகம் கொடுத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி. நீதிக்கான அறப்போராட்டம் பற்றிய தொடர் நேரலைகள், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் முக்கியப் பங்கு வகித்தன. 2009 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை…
-
- 1 reply
- 1k views
-
-
மறைமுக நிகழ்ச்சி நிரல் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாகும்;. இதன் காரணமாகவே வடக்கும் ,கிழக்கும் தமிழர்களின் தாயக மண் என்று உரிமை கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிரதேசத்தில் சமஷ்டி முறையிலான தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது ஒருபுறமிருக்க, அந்த பிரதேசங்களில் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறிக்கு ஆளாகும் வகையில் நிலைமைகள் மோசமடைந்து செல்வதையே காண முடிகின்றது. வரலாற்று வாழ்விடங்களில் தமது ஆட்சி உரிமையை நிலை நிறுத்தி கொள்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கை…
-
- 0 replies
- 1k views
-
-
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. அபிவிருத்தி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால், பெருந்தெருக்கள், அதிவேகச் சாலைகள், துறைமுக நகரம் என்ற பெரிய வேலைத் திட்டங்களை நோக்கியதாகவே அபிவிருத்தி காணப்படுகின்றது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கட்சிகளின் சந்திப்புகள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தினமும் சந்தித்து உரையாடுகின்றன. தங்கள் பலத்தை எப்படி …
-
- 6 replies
- 1k views
-
-
பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால் -ஹரிகரன் ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்ப…
-
- 0 replies
- 1k views
-
-
உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லிவருகின்றன. [size=3][size=4]ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற ஒரு தொழில் வளமான, முன்னேறிய நாட்டில், இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.[/size][/size] [size=3][size=4]அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. [/size][/size] [size=3][size=4]போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , ம…
-
- 5 replies
- 1k views
-
-
பொறிக்குள் சிக்கியுள்ள கோத்தபாய!! பதிவேற்றிய காலம்: Apr 20, 2019 போரை வழி நடத்தியவர் என்ற வகையில் போர்க் குற்றங்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாயவே பொறுப்புக் கூற வேண்டுமெனப் பன்னாட்டு சட்ட நிபுணரான ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளமை பன்னாட்டு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இறுதிப்போரின் போதும் அதன் பின்னரும் இலங்கையில் போர்க் குற்றங்களே இடம்பெறவில்லையெனக் கூறப்பட்டு வரும் நிலையில் போர்க் குற்றம் தொடர்பான இந்தக் கருத்து வௌியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
முஸ்லிம் சமூகமும் உணர்ச்சி அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:17 அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும். அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. …
-
- 0 replies
- 1k views
-
-
சர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட பெருந்தொற்று -என்.கே. அஷோக்பரன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலை, நிக்கோலோ மாக்கியாவலி என்ற இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ‘இளவரசனுக்கு’ சொல்லிக்கொடுத்தார். ‘மனிதர்கள், தாம் அச்சம் கொள்பவர்களை விட, தாம் நேசிப்பவர்களை அவமதிக்கக் குறைவான தயக்கத்தையே காட்டுவார்கள். ஏனெனில், நேசம் என்பது கடப்பாட்டுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகும். ஆயினும், சுயநலம் மனிதனின் தன்மையாதலால், சுயநலம் குறுக்கீடு செய்யும் போது, அந்தச் சங்கிலி தகர்ந்துவிடும். ஆனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம், எப்போதும் பலமாக இருக்கும்’ என்று, தன்னுடைய ‘இளவரசன்’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகார அரசியலின், சர்வாதிகாரிகளுக்கான பாலபாடம் இது. ஜனநாயகத்தின், குறிப…
-
- 0 replies
- 1k views
-
-
சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் ஜனகன் முத்துக்குமார் சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட …
-
- 0 replies
- 1k views
-
-
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? மொஹமட் பாதுஷா / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0 - 42 அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது. அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ர…
-
- 0 replies
- 1k views
-
-
குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:33 Comments - 0 - அகிலன் கதிர்காமர் பதினொரு நாள்களுக்கு முன்னர், அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர், அவரால் போடப்பட்ட திட்டங்களின் உச்சநிலையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அது தொடர்பான உத்தியாக, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் குழப்புதலும், பின்னர் இயக்கச் செயற்பாடுகள், தேர்தல்கள் மூலமாக, அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் என்ற வகையில் அமைந்திருந்தது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ராஜபக்ஷ பிரிவினர் பெற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
பரி யோவான் பொழுதுகள்: பரி யோவானில் ஈபிகாரன்கள் 1989 ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, Yarl Hallல் ஒகஸ்ரின் மாஸ்டரின் Tution வகுப்பு முடிந்து, பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நல்லூர் பக்கம் போகும் நண்பர்கள் கோயில் வீதியடியில் விடைபெற, பரி யோவான் கல்லூரி தாண்டிப் போக வேண்டிய நாங்கள் நால்வரும் சைக்கிளை வீடு நோக்கி உழக்கி கொண்டிருந்தோம். பிரபுவும் திருமாறனும் முன்னால் போக இளங்கோவோடு நானும் அவர்களிற்கு பின்னால் வந்து கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த கொடிய காலமது. இந்திய இராணுவத்தோடு இணைந்து செயற்பட்ட ஈபிக்காரன்கள், பிள்ளை பிடிக…
-
- 1 reply
- 1k views
-
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும், சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "சம்ஸ்கிருதம் மற்றும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்ற…
-
- 0 replies
- 1k views
-
-
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக அமையுமா? அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்ப…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன். ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். அதன் பின் அவரும் இணைந்திருக்கும் குத்து விளக்கு கூட்டணி, மன்னாரில் நடந்த கட்சிகளின் கூட்டத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக விக்னேஸ்வரனும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு பொது தமிழ் வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இதே காலப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன…
-
-
- 4 replies
- 1k views
- 1 follower
-