Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) – என்.சரவணன் Bharati பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் …

  2. பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள் அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் 28 டிசம்பர் 2020 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்க…

  3. ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்…

    • 1 reply
    • 568 views
  4. மேதகு சொல்லும் செய்தி என்ன?

    • 0 replies
    • 948 views
  5. -பண்டோரா பேப்பேர்ஸ்- -திறக்கப்பட்ட பெட்டகமும் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளும்-பா.உதயன் ————————————————————————————————————— ஆசை இல்லாத மனிதன் எவரும் இல்லை.ஆனால் அளவு கடந்த பணத்தின் மேல் இவ்வளவு ஆசை ஒரு மனிதனுக்கு ஏற்படுமா ஆசை கொண்ட மனிதர்கள் இத்தனை பில்லியன் டாலர் பணத்தை எப்படிச் சேர்த்தார்கள். வரி ஏற்பு, ஊழல், கருப்பு பணம் என்று மக்களின் பணத்தை ஏமாத்த எப்படி அந்த நாட்டின் தலைவர்களால் கூட முடிகிறது.சட்டத்தின் கண்களை எல்லாம் குருடாக்கிவிட்டு மக்களின் பணங்களை கொள்ளை அடித்து வெளி நாடுகளில் சொகுசு மாளிகைகள், சொகுசு வாகனங்கள், நட்ச்சத்திர விடுதிகள், பெரும் மாடி வீடுகள் இப்படிப் பல சொத்துக்களை சேர்த்த மோசடிக்காரர்களின் அதிசய பண்டோரா பெட்டகத்தின் கதவை (the International …

  6. மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன் November 24, 2021 நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்லும் நிலையில், அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு திட்டமிடப்படாத – அரசியல் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை எந்தவளவுக்கு மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதற்கு இலங்கை இப்போது உதாரணமாகியிருக்கின்றது. பின்கதவால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிதி அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட பஸில் ராஜபக்‌சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் இவ்வாறான ஒன்றாகத்தான…

  7. வல்லரசுகளைத் தோற்கடித்த 4 ராணுவ சாகசங்கள் ராமச்சந்திர குஹா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறான நான்கு பெரிய ராணுவப் படையெடுப்புகளைப் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. மிகப் பெரிய நாடுகள், ராணுவரீதியில் வலிமையும் வாய்ந்தவை, உலக அரங்கில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகக் கருதி, பெரும் அவமானத்தில் முடிந்த அந்த நான்குப் படையெடுப்புகளை மேற்கொண்டன. அத்தகைய பழைய வரலாறுகளை, நம் வாழ்நாளில் நிகழ்ந்தவையாகச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றால், இது - அந்த வரிசையில் நான்காவது படையெடுப்பு. வியட்நாமிலும் இராக்கிலும் அமெரிக்கா நடத்திய இருவேறு தனித்தனி படையெடுப்புகள், ஆப்கானிஸ்தான் மீது அன்றைய சோவியத் ஒன்றியம் தவறான கணிப்பின்பேரில் நிகழ்த்திய பட…

  8. இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஓருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார். விளம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி…

  9. ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத் தொடர் நடந்ததும் நடக்கப்போவதும் ச. வி. கிருபாகரன் –பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை சபை, தற்பொழுது தனது 50ஆவது கூட்டத் தொடரை நடத்தியுள்ளது. இக் கூட்டத் தொடரிற்கு ஆஜன்ரினாவின் ஐ.நா.பிரதிநிதி, . பெடிறக்கோ வீலீகஸ், பிராந்திய சுற்றின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டிற்கான தலைவராக கடமையாற்றுகிறார். ஐ.நா.மனித உரிமை சபை என்றவுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழீழ மக்களிற்கு, விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இச் சபையின் செயற்பாடுகள் பற்றி, தினமும் மிகவும் அக்கறையாக உன்னிப்பாக அவதானமாக…

    • 0 replies
    • 310 views
  10. இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி! மத்­தல விமான நிலை­யத்தின் மீது சில உரி­மைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமா­னப்­ப­டையின் தரப்பில் இருந்து விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ­சர தேவை­களின் போதும், தேசிய பாது­காப்பு பயன்­பா­டு­க­ளுக்­கா­கவும், மத்­தல விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தமக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்டும் என்­பது விமா­னப்­படை விடுத்­துள்ள முத­லா­வது கோரிக்கை. தேவைப்­பட்டால் இரா­ணுவத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கென, விமான நிலை­யத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்­பது விமா­னப்­படை முன்­வைத்­துள்ள இரண்­டா­வது கோரிக்கை. தேசிய பாது­காப்பு நலன்­களைக்…

  11. காணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை, ஓர் அரசியல் தோல்வி வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள். அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும்…

  12. தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக காட்ட முனையும் ஜனாதிபதி, முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகிறார் என்பதை கூறவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு: நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10வது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒருவரவு செலவுத் திட்டமா…

  13. தொடர்கதையாகும் அமெரிக்காவின் விலகல்கள் வட­கொ­ரிய அதிபர் கிம்மை சந்­தித்து நேர­டி­யாக உச்­சி­ம­ா­நாடு நடத்தி உல­கையே அதி­ர­வைத்த அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஒரு மெகா வர்த்­தக பிர­முகர் - அர­சி­ய­லிலும் இரா­ஜ­தந்­தி­ரத்­திலும் மெகா வர்த்­தக செழிப்­புக்குக் கார­ண­மான தந்­தி­ரோ­பா­யங்­களை கடைப்­பி­டித்து வெற்றி பெறலாம்", என்­பதை உல­குக்கு நிரூ­பித்­துக்­காட்டி வரு­கிறார் என்ற புக­ழுக்கு உரித்­தா­ளி­யாவார். இப் பய­ணத்தில் மேலும் ஒரு குண்­டை வெடிக்க விட்­டி­ருக்­கிறார். 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 19 ஆம் திக­தி­யன்று அமெ­ரிக்க தூதுவர் ஐ.நா.சபை மனித உரிமைப் பேர­வையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையைக் கண்­டித்து உரை­யாற்­றிய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க நாடுகள் ஐ.…

  14. வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது - சாந்தி - 22 நவம்பர் 2014 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சீட்டுக்கட்டு வீடு போல பொலபொல எனச் சரியத் தொடங்கிவிட்டது வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது. முன்பெல்லாம் இந்த அரசாங்கம் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேசசபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு ம…

  15. மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…

    • 1 reply
    • 726 views
  16. அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:13 Comments - 0 ‘நல்லாட்சி’ என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த, ஒன்றிணைந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், முடிவடையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், மீண்டும் அரசமைப்புத் திருத்தம்; அதனூடான இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டம், அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்திருக்கின்றன. இவ்வாறிருக்கையில், அரசமைப்புத் தொடர்பாக, மேலோட்டமாகவே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமூகம், தற்போது கூடிய கரிசனை காட்டத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை முஸ்லிம்கள், ஒரு நாளும் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் அல்லர். இரண்டு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றோ, அதிக…

  17. இரு வேறு பாதைகளில் தமிழ்த்தேசியம்! June 20, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று, தீவிரமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே. (குரைக்கிற நாய் கடிக்காது). மற்றது, மென்தேசியவாத நிலைப்பாடுடையது. யதார்த்தம், நடைமுறை போன்றவற்றின் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற விளைவது. முடிந்தளவுக்கு மக்களின் நலன், மக்களுடைய தேவைகள், மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசுடன் இணையக் கூடிய புள்ளிகளில் இணைந்தும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் செயற்படுவது. பிற இன, மதப் ப…

  18. தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்…

  19. தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு இந்திய ஆதரவு கிடைக்குமா? கலாநிதி சர்வேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை 27.11.2015 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்றன. தமக்காக உயிர்நீத்த மாவீர்களுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதில் மக்கள் உணர்வுபூர்வமாய் ஈடுபட்டனர். மாவீரர்நாள் அறிமுகப்படுத்தப்பட்ட 1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை உலகமெங்கும் கவனத்தைப் பெறுவதாக அமைந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் 2008 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆற்றிய இறுதி மாவீரர்நாள் உரையை இவ் வருட மாவீரர் நாள் அன்று மீள வாசித்துப் பார்த்தேன். அதில் இந்தியாவுடன் நட்பினை ஏற்படுத்துவ…

  20. அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் - நிலாந்தன்:- 24 ஜனவரி 2016 அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மை வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வைத்துப்பார்த்தால் ஒரு புத…

  21. தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. நாங்கள் எவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியில் போகச் சொல்லவில்லை. அனைவரையும் கூட்டமைப்போடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தனது பேச்சில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்தான் சுமந்திரனுக்கு திடிரென்று ஒற்றுமையின் ஞாபகம் வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கடந்த ஜந்துவருட கால முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியடைந்திருக்கின்ற…

  22. உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ச.வி. கிருபாகரன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் பகிரங்க மடலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கட்கு, வணக்கம்! உங்களுக்கு என்னைபற்றிய அறிமுகம் தேவையில்லையென நம்புகிறேன்! சுருக்கமாக, எது எப்படியானலும் இன்று இக் கடிதத்தை உங்களுக்கு எழுதகூடிய நிலையில் உள்ளேன்! ஸ்ரீலங்காவின் நிறைவேற்று ஜனாதிபதியாக நீங்கள் அண்மையில் பெற்ற வெற்றிக்கு, எனது உணர்வு உ…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.