அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே, எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்பட…
-
- 3 replies
- 974 views
- 1 follower
-
-
திடிரென வந்து விழுந்த பேரிடி அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தை யெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு வெ ளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியை…
-
- 1 reply
- 974 views
-
-
நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மார்ச் 25 இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம். ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளிய…
-
- 2 replies
- 974 views
-
-
செப்ரெம்பர் 1, 1939 அதிகாலை நான்கு நாற்பதுக்கு ஜேர்மனி தனது தாக்குதலை ஆரம்பித்தது. திடீரென்று போர் தொடுக்க முடியாதே! அதற்காக ஒரு காரணத்தையும் ஜோடனை செய்து வைத்திருந்தார்கள். சமீப காலமாக, போலந்து சரியில்லை. எப்போதும் போர் குரோதத்துடன் இருக்கிறது. எல்லைப்புறத்தில் இருந்த அப்பாவி ஜேர்மனிய வீரர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலையில் நாங்கள் அவர்களை எதிர்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம். கவனிக்கவும் இது எதிர்த்தாக்குதல் மட்டுமே இது எதிர் தாக்குதல் மட்டுமே என்று காட்டுவதற்காக நாசிகளின் பிரச்சாரப்பிரிவு சிறப்பான முன்னேற்பாடுகளை ஓகஸ்ட் 31 திகதி இரவே செய்திருந்தது. ஓகஸ்ட் 31 மதியமே போலந்து மீதான தாக்குதலுக்கு ஹிட்லரால் கட்டளையிடப்பட்டு…
-
- 0 replies
- 974 views
-
-
யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன் தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும…
-
- 0 replies
- 973 views
-
-
சீன கடன்பொறியும், நவ காலனித்துவமும் ஒரு ஊர். அதிலொரு செல்வந்தர். தமது சுய முயற்சியில் சமீபத்தில் பணக்காரரான செல்வந்தர். இந்த செல்வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்கிறார். ஆற்றைத் தாண்டி மறுகோடியில் சில வறிய குடும்பங்கள். வறிய குடும்பங்களுக்கு செல்வந்தர் வாரி வழங்குகிறார். அந்தக் குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்களிடம் குறைகள் இருக்கின்றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வளரலாம். ஊரும் பயன் பெறலாம் என்கிறார், செல்வந்தர். செல்வந்தரின் வார்த்தைகளை வறிய குடும்பங்கள் நம்புகின்றன. அவரிடம் இருந்து வாங்குகின்றன. தமக்குத் தரப்படுவதை த…
-
- 0 replies
- 973 views
-
-
ஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 11 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (21/4), கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் களத்தில், முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இந்தக் குண்டுத் தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று, உரிமை கோரி வீடியோவை வெளியிட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பத்தாதி, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க கொமாண்டோக்களால் சில நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சம்பவமும், தேர்தல் காலத்தில் பரபரப்பைத் தோற்றுவித்தது. 21/4 தாக்குதல்கள் தான், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, வேறொரு தளத்தை நோக்கித் திருப்பியது எனலாம். அதற்கு முன்னத…
-
- 3 replies
- 972 views
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் …
-
- 0 replies
- 972 views
-
-
சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 06 , மு.ப. 03:57 எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், …
-
- 0 replies
- 972 views
-
-
சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை - தயாளன் எதைச் செய்தாலும் எங்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சிங்கள மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை சிறிலங்கா பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் இருக்கிறது. இதனை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் படுகொலைச் சம்பவம். சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே தவிர ஏனையோருக்கல்ல என்பது 1970 களில் நிகழ்ந்த பரராசாவின் படுகொலை முதற்கொண்டு தெளிவாகிறது. நாவற்குழியைச் சேர்ந்த பரராசா என்ற இளைஞன் கடமை முடிந்து யாழ்.செம்மணி வீதி வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். செம்மணிச் சுடலையருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை சும்மா ஜாலியாகச் சுட்டு…
-
- 0 replies
- 971 views
-
-
புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, சுமுகமான அரசியல் தீர்வொன்றை காணமுடியும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பைச் சென்றடைந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்த…
-
- 0 replies
- 971 views
-
-
முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான் 4 Views தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்கள் பல இழப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்தாலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மறக்கமுடியாத அல்லது இழப்பின் உச்சமாக அமைந்தது முள்ளிவாய்க்க…
-
- 0 replies
- 970 views
-
-
கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம். சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச…
-
- 3 replies
- 969 views
-
-
பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 “அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். இது சாத்தியமா? “இல்லை” என்றே கூற வேண்டும். பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன…
-
- 0 replies
- 969 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 16 இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும் அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது. முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அ…
-
- 4 replies
- 969 views
-
-
இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 31 திங்கட்கிழமை புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கூட்டணியும் பா.ஜ.கவுக்குப் பிடிக்காத சில கட்சிகள் ஒருங்கிணைந்து தனிக் கூட்டணியும் (உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ், ஒரிசாவில் நவீன் பட்நாயக்) அமைவதற்கான சாத்தியக்கூறுகளைப் புதுவருடம் …
-
- 0 replies
- 969 views
-
-
பொறாமை எனும் விஷம் கொட்ஸ் ஆலி - தமிழில்: ரஞ்சன் குறிப்பு : வரலாற்றாய்வாளர் கெட்ஸ் ஆலி-யின் “Why the Germans? Why the Jews? Equality, Envy and Racial Hatred 1800-1933″ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1808 முதல் 1812ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ப்ரஷய (ஜெர்மனியின் முன்னாள் பெயர்) சீர்திருத்தங்கள் அனைத்து குடிமக்களுக்கும் வர்த்தகம் செய்யும் சுதந்திரத்தை வழங்கின. மேலும், நிலவுடைமை சார்ந்த அடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யூதர்கள் காரணங்களின்றியும் தண்டிக்கப்படக்கூடும் என்று அதுவரை இருந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. . இருந்தும், யூதர்கள் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட…
-
- 1 reply
- 968 views
-
-
-
-
- 7 replies
- 968 views
- 1 follower
-
-
[size=2][/size] ராஜபட்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டும் விஜயராஜ் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வருகின்றன... தோழர் லெனின் சொல்லுவார்: "உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவுதான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம். அதிலிருந்து கற்றுக் கொள்ளப்படும் தோல்விகள், தவறுகளில் இருந்து நமது அனுபவம்தான் படிப்பினை பெற்று போராட்ட களத்தின் யுக்திகளை திருத்தி மாற்றி அமைக்கிறது . எனவே உரிமை போராட்டங்களில் புரட்சி சிந்தனையை உருவாக்க மக்களிடம் புத்திசாலித்தனமான, விவேகமான, வெற்றிகரமான சிந்தனை ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அரசியல் கற்பது அவசியம். போராட்ட யுக்திகளை அறிந்து கொள்வது அவசியம். எனவே கற்போம் அதை மக்களிடம் கற்ப…
-
- 0 replies
- 966 views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பங்கரில் பிடித்து வைக்கப்பட்டுப் பின் கொல்லப்பட்டது தொடர்பாகச் சமீபத்தில் "சனல் 4' வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைத்துத் தரப்பினரும் இதைக் கண்டித்துள்ளனர். ஹிட்லரின் நாசி அழித்தொழிப்புகளுடன் இதை ஒப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்."சனல் 4' வெளியிட்டுள்ள இப்படங்கள் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பதைக் கருணாநிதி கண்டித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நாளிதழான"இந்து' வில் என்.ராம் ஆசிரியராக இருந்தவரை ராஜபக்ஷக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…
-
- 0 replies
- 966 views
-
-
-
- 0 replies
- 966 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2011, 07:43 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அனைத்துலக விசாரணைக்கான ஆதரவு என்பது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அவதானிப்பாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு IPS இணையத்தளத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009 இல் சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்ப் பிரிவினைவாதிகள் தோற்கடிக்கப்பட்ட போது இடம்பெற்ற பல்வேறு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என…
-
- 1 reply
- 966 views
-
-
உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019 எல்லாமேவிதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடப்பதைநான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங். கோயில்களின் காலம் முடிந்துவிட்டதுஎன்றுமு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார்.ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றியமிகமுக்கியஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒருபுதுமதத்தை முழு மதத்தைஅவர் கனவுகண்டார். ஈழப்போர்க்களத்தில் எல்லாமதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்டஎல்லாத் தரப்புக்களும் மற்றையதரப்பின் ஆலயங்களைஅல்லதுவழிபாட்டிடங்களைத் த…
-
- 1 reply
- 966 views
-
-
லண்டன் வன்முறைச் சம்பவம் : மக்களை விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள் புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார். விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவ…
-
- 1 reply
- 965 views
-
-
ஆடுகளமும் அரசியல் களமும்: சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் தடை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் தமிழக முதல்வர் பதவியை ஏற்ற பின் தீவிர தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஜெயலலிதா. அது இன்று இந்தியாவில் பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியவர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் ஐ.பி.எல் 20-20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். விளைவாக ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க மாட்டா…
-
- 2 replies
- 965 views
-