அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
வடமாகாணசபை தேர்தலும் கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும் முத்துக்குமார் வடமாகாணசபை தேர்தலுக்கான திகதியை தேர்தல் திணைக்களம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றே தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுகின்றார். சர்வதேச அழுத்தங்களின் வீரியத்தைப் பொறுத்து தேர்தல் அறிவிப்புதினம் வெளியாகலாம். சர்வதேச அழுத்தங்கள் இல்லாவிட்டால் தேர்தல் நடைபெறாமலும் போகலாம். மாகாணசபை முறையில் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் இல்லை. வெறும் தோற்றப்பாட்டளவிலேயே சில விடயங்கள் அங்குள்ளன. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாணசபை முறையில் உண்டு எனக் கூறப்படுபவை எல்லாம் வெறும் தோற்றப்பாடுகளே. இந்த தோற்றப்பாட்டு நிலையில் இருப்பவற்றை முழுமையாக நீக்கிய பின்…
-
- 2 replies
- 892 views
-
-
ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்? (நிலா)விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே . என்னதான் தங்களத…
-
- 3 replies
- 892 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 891 views
-
-
ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது என கூறியுள்ளது. ஆம், இந்தியா போன்று அடிக்கடி கடன் வழங்குவோர் மறுத்திருந்தனர். ராஜபக்ஷவின் கீழ் இலங்கையின் கடன் துரிதமாக ஊதிப் பெருத்தது. சைனா ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியுடன் நிர்மாணம் மற்றும் மீள் பேச்சுவார்த்தை வருடக்கணக்காக மேற்கொண்டதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் சீன அரசுக்குச் சொந்தமான பாரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தக் கம்பனி அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆயினும், எதிர்வு கூறப்பட்டதன் பிரகாரம் அத…
-
- 1 reply
- 891 views
-
-
துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்கேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம் மு.திருநாவுக்கரசு சிலம்பிற்கு மகிமை கண்ணகியால் கிடைத்தது. சிம்மாசனத்திற்கு மகிமை அதில் வீற்றிருக்கூடியவரின் தரத்தால் கிடைக்கும். கண்ணகியின் காற்சிலம்பு உடைந்தேனும் நீதியை உரைத்தால் அது வரலாற்றில் அழியாவரம் பெற்றது. திரு.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் சளையாது ஒலித்தன் மூலம் தமிழ் மக்களின் பாதுகாவலனாய் வரலாற்றில் ஓர் இடத்தை தனக்கென பதித்துள்ளார். திரு.விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சராய் பதவியில் இருந்த இந்த ஐந்தாண்டு காலங்களிலும் அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு மதிப்பீடாகவே இக்கட்டுரை அமைகிறது. அரசியல் நடவடிக்கைகளை அதன் விள…
-
- 0 replies
- 890 views
-
-
இரண்டாம் உலக யுத்தத்தின் தலைவிதியை மாற்றிய டி டே டி டே தரையிறக்கத்தின் 75வருடத்தினை நினைவுகூறும் நிகழ்வுகள் இவ்வாரம் இடம்பெறவுள்ளன. பிரிட்டிஸ் மகாராணி உட்பட உலகின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர் டி டே என்பது என்ன? அமெரிக்க பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படையினர் 1944 யூன் 6 ம் திகதி பிரான்சின் கரையோரப்பகுதியில் நிலைகொண்டிருந்த ஜேர்மனிய படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். அதுவரை முயற்சிக்கப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக அது காணப்பட்டது. வடமேற்கு ஐரோப்பாவை ஜேர்மனிய படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாகவும் அது காணப்பட்டது. நோர்மன்டியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்த…
-
- 0 replies
- 890 views
-
-
தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 22 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. உலகில் பிரபலமானதும் பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழை…
-
- 0 replies
- 890 views
-
-
வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன் நித்தியபாரதி தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்ச…
-
- 2 replies
- 890 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 890 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. …
-
- 0 replies
- 889 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றம்: அதிகரித்த நிறைவேற்று அதிகாரங்கள்!- நடக்கப் போகும் விளைவுகள் என்ன? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களுடனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் 22.10.2020 அன்று நிறைவேறியது. இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சிறிய தேசிய இனங்களுக்கு அச்சுறுத்தலான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தனிச் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடுவோம் என ராஜபக்சக்கள் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. வாக்கெடுப்பு விடுவதற்கு முதல் பேரம் பே…
-
- 4 replies
- 889 views
-
-
-
- 4 replies
- 889 views
-
-
ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் என்.கே. அஷோக்பரன் இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது. 1965இல் மலேசியா பாராளுமன்றத்தில் ஓர் எதிர்ப்பு வாக்குக்கூட இல்லாமல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டபோது, அந்தக் குட்டி நகரம், தனித்ததொரு சுதந்திர நகர அரசாகியது. மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் எனப் பல்வேறு இ…
-
- 3 replies
- 888 views
-
-
ஈழத்தமிழராகிய நாம் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளோம். அதாவது நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் பலவாய்ப்புக்களினை அறுவடைசெய்யாமலேயே நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முதிர்ந்த தமிழ் அரசியலாளருமான திரு.இராசம்பந்தன் அவர்களும் எமது இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வொத்தகருத்தினையே தெரிவித்திருந்தார். இந்நிலையில், எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. அதாவது குளிர் வலைய தெருக்களில் பனிச் சேற்றில் கால்புதைய, பதாகைகள் தாங்கிய கைகள் கனத்தி…
-
- 2 replies
- 888 views
-
-
புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா? முத்துக்குமார் வட மாகாணசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல்வாதிகள் தமது கடமைகளில் சுத்துமாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. உலக வரைபடத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காண்பதே மிகவும் கடினம். ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும். அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக்கூட தட்டியிருக்கின்றது. த…
-
- 1 reply
- 887 views
-
-
வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள் colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும் வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு) …
-
- 0 replies
- 887 views
-
-
சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? காரை துர்க்கா / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:24 Comments - 0 ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்? 2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 887 views
-
-
[size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size] [size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன : 1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் 2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம் 3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன. இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் : 01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size] [size=4]02. இரண்டா…
-
- 2 replies
- 887 views
-
-
பிரபாகரன் மக்களால் போற்றப்பட்டார் – அதிர்ச்சியடைந்த எரிக் சொல்ஹெய்ம் 30 வருடங்களாக இலங்கைத்தீவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நோர்வேயின் சமாதான மத்தியஸ்தராக இருந்த எரிக்சொல்கெய்ம் WION தொலைக்காட்சியின் நிரூபர் பத்மா ராவ் சுந்தர்ஜிக்கு அளித்த செவ்வியில், அவரது சர்ச்சைக்குரிய பாத்திரம் பற்றியமௌனத்தைக் கலைக்கிறார். பத்மா ராவ் சுந்தர்ஜி கடந்த 20 வருடங்களாக இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்த விடயங்களில் செய்தி சேகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1) கேள்வி: எவ்வாறு அல்லது எப்போது நோர்வே அரசு இலங்கையில் மத்தியஸ்தம் செய்ய முடிவெடுத்தது? அதற்கு நோர்வே அரசு ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? பதில்: நாங்கள் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவால் இரகசியமாக…
-
- 3 replies
- 886 views
-
-
ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள். முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்…
-
- 2 replies
- 886 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவும் ரணிலின் உத்தியும் 1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார். இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சீன அரசுகளுடன் சமாந்தரமான – நேரடியான உறவைப் பேண வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால விருப்பம். அ.நிக்ஸன்- 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியல…
-
- 3 replies
- 886 views
-
-
குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம் -எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது. இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தின…
-
- 0 replies
- 886 views
-
-
இந்தியா - சீனா: எல்லையில்லா எல்லைகள் எல்லைப்பிரச்சினைகள் எப்போதும் சிக்கலானவை. இரண்டு வீட்டாருக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளே தீராத பகையாகி தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கிறபோது, நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளின் தன்மைகளைச் சொல்லவேண்டியதில்லை. எல்லைப் பிரச்சினைக்கு எல்லையில்லை; அது எவ்வகையான வடிவத்தையும் தன்மையையும் எடுக்கவியலும். இதுதான் எல்லைகளின் எல்லையில்லாத தன்மை. நாடுகளுக்கிடையிலான எல்லை தொடர்பான சிக்கல் அதன் புவியியல் தன்மைகளுக்கும் மேலாக, அயலுறவுக் கொள்கை, தேசிய அரசியல், வரலாற்றைத் திரித்தல் போன்ற பல காரணங்களுக்காக தீர்ப்பதற்கு கடினமானதாகியுள்ளது. 1962 இல் நடந்து முடிந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர், இந்திய-…
-
- 0 replies
- 885 views
-
-
முத்த வெளியில் திரண்ட சனங்கள் - நிலாந்தன் இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன் ஏற்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் போரில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ஈழப்போரைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடப்பட்டன. அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து அதைக் கொண்டாடினார்கள். அது ஒரு மழை நாள். அன்று பின்னேரம் மழை விட்டுத் தந்தது. முத்த வெளியில் கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை காணாத சன வெள்ளம். அந்த இடத்தில் இதற்கு முன் வர்த்தகக…
-
- 2 replies
- 884 views
-
-
-
- 2 replies
- 884 views
-