அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான், தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரணையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால் இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே இலங்கை அரச…
-
- 1 reply
- 643 views
-
-
ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவும் தமிழர்களும் - நிலாந்தன்:- 16 மார்ச் 2014 உத்தேச ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன. சிங்கள மக்கள் அதை மேற்கின் மிரட்டல் என்று எதிர்க்கிறார்கள். தமிழர்களோ தாங்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதி எதிர்க்கிறார்கள். குறிப்பாக, டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருப்பவற்றின் அடிப்படையிற் கூறின் இம்முறை ஜெனிவாத் தீர்மான வரைவுக்கு எதிரான பிரதிபலிப்புக்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பரப்பில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன எனலாம். ஒன்றில் அமெர…
-
- 1 reply
- 438 views
-
-
ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...! இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல். இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிரு…
-
- 1 reply
- 503 views
-
-
அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ஏன் சொன்னார்? அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், தனது அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது எனக் கூறியதற்குள் அவரின் இயலாமை தெரிகிறதா? அல்லது தேசிய அரசாங்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது என்பதைக் குறிக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. கூடவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு ஆளுமையற்றது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக அரசு கீழ் இறங்கிப் போகின்றது என்ற வார்த்தையை ஜனாதிபதி மைத்திரி பிரயோகித்தாரா? என்றெல்லாம் எண்ணத்தோன்றும். எதுவாயினும் மகிந்த ராஜபக் இருந்த கதிரையில் இன்னொருவர் இருப்பதாக இருந்தால், அவர் மகிந்தவைவிட மிகவும் வல்லமை பொருந்தியவராக, அதிரடியான …
-
- 1 reply
- 349 views
-
-
இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள் அக்டோபர் 2024 - Uyirmmai Media · அரசியல் இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர். இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு…
-
- 1 reply
- 385 views
-
-
கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் அமைச்சரவை கூட்டம் முறையாக ஆரம்பமாவதற்கு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அமைச்சர்கள் ஆராய்ந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவிருந்தது தொடர்பாக அமைச்சர்கள் தம் கவனத்தை முதலில் செலுத்தினார்கள். குற்றப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மேற்கொண்டும் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் ஆராய்ந்தார்கள். அதில் ஒரு தீர்மானம் புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்பதாகும். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் வருமாறு: * பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொட…
-
- 1 reply
- 584 views
-
-
ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கினார். நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிரிட்டன் முன…
-
- 1 reply
- 997 views
-
-
விக்கியின் வியாக்கியானங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “...சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன...” என்று, தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலான விக்னேஸ்வரனின் மேற்கண்ட கூற்றில், பெருமளவு உண்மையுண்டு. அது, சுய அனுபவங்களின் சார்பில் வருவது. ஏனெனில், இன்றைக்கு விக்னேஸ்வரன் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, மாற்றுத் தலைமைக்கான போட்டியில் இருப்பதற்கு ஒரே காரணம், சம்பந்தன் மட்டுமே! 2015ஆம…
-
- 1 reply
- 707 views
-
-
உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்…
-
- 1 reply
- 680 views
-
-
சமந்தா பவரை இலங்கைக்கு அனுப்புகிறது வொஷிங்டன் By VISHNU 23 AUG, 2022 | 05:23 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது. ஏழு நாட்களுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளது சீன இரா…
-
- 1 reply
- 848 views
- 1 follower
-
-
புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.
-
- 1 reply
- 543 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம் என வலியுறுத்தப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. அவரின், இந்த அழைப்பு பொதுவானதே என்றபோதும், இந்த அழைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்குக்கூட சந்தேகத்தை – நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரமளிக்கப்படாத தலைவர் சுமந்திரன் எம்.பிதான். அவரது முடிவே – அவர் ஏற்கும் முடிவே கட்சியின் முடிவு. என்பதுதான் 2010 ஆம் ஆண்டின் பின்னரான நிலை. தமிழரின் பலமாக – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டாக இருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு – பிரிந்துபோய் நிற்கிறது என்றால், அதற்கு அதன…
-
- 1 reply
- 869 views
- 1 follower
-
-
54 ஆண்டு கால அன்பர் ஐ. தி. சம்பந்தன் ஐயாத்துரை திருஞானசம்பந்தன் அவர்களை யாராவது அறிவீர்களா? ஐயாத்துரை சோமாக்கந்தமூர்த்தியை அறிவீர்களா? காரைநகரார், சைவத் தமிழ்த் தொண்டர், தொழிற்சங்கத் தலைவர், தமிழ் அகதிகளின் காப்பாளர், சிறை சென்றவர், எண்பதாண்டு அகவையைக் கடந்தவர். தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன், உலகறிந்த அவர் பெயர் ஐ. தி. சம்பந்தன். இலங்கை, தமிழகம், அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியா எனப் பரந்து வாழும் தமிழரின் நெஞ்சங்களில் அன்பராயும் தொண்டராயும் நிறைந்து நிற்பவர். 1962இல் சிற்பி சரவணபவன், வித்துவான் ஆறுமுகம், புலவர் சிவபாதசுந்தரம் ஆகியோர் கலைச்செல்வி இதழை வெளியிடத் தொடங்கினர். என் தந்தையாரின் ஸ்ரீ காந்தா அச்சகத்தில் முதல் இதழ் அச்சாயிற்று. தொடர்ந்து பல இத…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 771 views
-
-
"சிங்கள கடும்போக்குவாதிகள் தலைதூக்கியுள்ளனர்" தமிழீழத்தை உருவாக்கும் நிராயுத பொறி முறையில் நாடு கடந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் செயற்படுகின்றனர். இவர்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களையும் சாட்சியங்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றின் நிழலாகவே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலும் காணப்பட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது வெறும் 26 பேர் மாத்திரமே இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனதாக தகவல்கள் உள்ளது. பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுவது புலம்பெயர் விடுதலைப் புலி …
-
- 1 reply
- 1k views
-
-
இந்திய ஆட்சி மாற்றம் தமிழர் பிரச்சனையில் தாக்கங்களை ஏற்படுத்துமா? யதீந்திரா சமீபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். அதன் மறுதினமே அவரது சந்திப்பிற்கு பதிலளிப்பது போன்று, இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசமும் பி.ஜே.பியின் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியிருந்தார். அடுத்த ஆண்டு, இடம்பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி அதிக ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடிய சாதக நிலைமையும் காணப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஒருவேளை நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பினால்…
-
- 1 reply
- 685 views
-
-
காஸா: எரிந்து கொண்டிருக்கும் நேரம் சேரன் கன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும். சரியாகப் பதினோராவது நிமிடம் உங்களுடைய வீடு ஏவுகணையால் தகர்க்கப்படும்.” இஸ்ரேல் படையினரிடமிருந்து தொலைபேசியில் இந்த எச்சரிக்கை வந்ததும் மைஸா சலீம் தர்ஸாவின் மாமா, மாமி, உறவினர்கள், குழந்தைகள் என இருபது பேர் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். மைஸாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஹமாஸ் அமைப்புடனோ அல்லது காஸாவில் இயங்கும் மற்றொரு அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கும் எத்தகைய உறவும் இல்லை. காஸாவில் இருப்பவை வீடுகள் அல்ல. பெரிய கட்டிடத் தொகுதிகளில் தொடர் குடியிருப்புகள். மாடியிலிருந்து இறங்கித் தெருவுக்கு வருவதற்கே ஆறு அல்லது ஏழு …
-
- 1 reply
- 910 views
-
-
வழிஞ்சோடி வாக்குகள் ? நிலாந்தன் November 10, 2019 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. ‘ப்ரைட் இன்’னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி இருக்கலாம். அல்லது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். மனசார வாழ்த்தி இருப்போம் ‘நல்ல இருங்கடா தம்பிமாரே’ என. ஐந்து கட்சி முடிவு என சொல்லிட்டு இப்ப தனித்தனியாக முடிவை அவங்க அறிவிச்சுட்டு இருக்கிறாங்க……..’ ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கி விட்டு பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் அறிக்கை விடு…
-
- 1 reply
- 998 views
-
-
புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா? முத்துக்குமார் வட மாகாணசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல்வாதிகள் தமது கடமைகளில் சுத்துமாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது. உலக வரைபடத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காண்பதே மிகவும் கடினம். ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும். அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக்கூட தட்டியிருக்கின்றது. த…
-
- 1 reply
- 891 views
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 எதற்கு? சில தமிழ் கட்சிகள் அரசியல் தீர்வுக்கு 13 ஐ நடைமுறைப்படுத்தக் கோருகின்றன. அது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
-
- 1 reply
- 342 views
-
-
தமிழ் சசியின் வலிப்பதிவில் இந்த ஆவணப்படத்தை கண்ணுற்றேன்.புலத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழனும் பாத்து தெளிவு பெற வேண்டிய ஒரு ஆவணம். எவ்வாறு அமெரிக்க ஊடகங்கள் இசுரேலியரினால் கட்டுப் படுத்தப்படுகின்றன என்பதை வெகு நேர்தியாகச் சொல்லி இருகிறார்கள்.எவ்வாறன யுக்திகளை இந்த சர்வதேசம்(மேற்குலக) ஊடகங்கள் பாவித்து செய்திகளை தமது மக்களுக்கு வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து உள்ளார்கள். கட்டமைவுரீதியாக எவ்வாறு இது நடை பெறுகிறது என்பதையும் செய்திகள் எவ்வாறு மறைக்கப் பட்டும் திரிக்கபட்டும் மக்களுக்கு இசுரேலியரின் சார்பாக வழங்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆக்கிரமிப்பாளன் என்கின்ற தோற்றத்தை எவ்வாறு மறைத்து பலஸ்தீனையரை பயங்கர வாதிகளாக எவ்வாறு காடுகிறார்கள் என்பதையும் இந்த சர்வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
பழைய யாழ்க்களத்தில் இருந்த சில தலைப்புக்களை மீண்டும் இங்கே இணைகிறேன் புதிதாக வந்தவர்களுக்காக. எமது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமானால் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால் தான் அது எங்கணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.இங்கே ஒருவர் வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே திரிப்பதற்காக சில விசமத் தனமான சொல்லாடல்களை திராவிட அரசியல் சம்பந்தமாகச் செருகி வருகின்றார்.மேலும் இங்கு இது சம்பந்தமாக அறிய பலர் ஆவலாக இருப்பதாகப் புலப்படுகிறது. பெரியார்! http://www.yarl.com/forum/viewtopic.php?t=10028 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -**…
-
- 1 reply
- 23k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
விக்கினேஸ்வரன் தலைமையில் ஒருமாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான கலந்துரையாடல்கள் கடந்த ஒரு வருடமாகவே இடம்பெற்றுவருகின்றது ஆனாலும், இன்னும் ஒரு உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில் விக்கினேஸ்வரனை மீளவும் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச வெற்றிபெற்றிருக்கின்ற சூழலிலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேக்களின் கட்சியான சிறிலங்காபொதுஜனபெரமுரன அதி கூடிய ஆசனங்களைபெற்று, ஆட்சியமைக்கக்கூடியநிலைமை காணப்படுவதாலும், யாழ்ப்பாணத்திலுள்ள சில சிவில் சமூக பிரமுகர்கள், இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஈடுபடும் சிலர் ஏற்கனவே தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 424 views
-