அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
இனவாதியா விக்னேஸ்வரன்? இரண்டு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து, அதற்குத் தலைமை தாங்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இனவாதியாகச் சித்திரிக்கும் போக்கு, தென்னிலங்கையில் அதிகரித்திருக்கிறது. இனவாதம் பேசுவதாகவும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவதாகவும், மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர்கொடுக்க முனைவதாகவும், அவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இனவாதம் பேசும் வடக்கு மாகாண முதலமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. அவரைக் கைது செய்யக் கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளும் செய்யப்…
-
- 1 reply
- 344 views
-
-
"கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA" 28 அக்டோபர் 2013 குமரன் கார்த்திகேயன் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கேட்டதா என்பதல்ல தற்போதைய பிரச்சனை, பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் நான் கேட்கிறேன் படை அதியாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்' என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்துள்ளார். வடக்கின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தெரிவானோருக்கு நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இட…
-
- 1 reply
- 454 views
-
-
கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தேசியவாதிகள் – மட்டு.நகரான் November 9, 2021 கிழக்கில் தமிழ்த் தேசியக் கவசத்தைக் கொண்டுள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகள்: தமிழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமானதாக மாறிவருகின்றது. தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகள் முற்றுமுழுதாக அழிக்கப்படும் அல்லது அழிந்து செல்லும் நிலைமைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நாங்கள் கடந்த காலத்தில் எழுதியுள்ளபோதிலும், இன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலைமையினையும், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுத்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லமுடியும் என்பதையும் எழுதவேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகள் தொ…
-
- 1 reply
- 397 views
-
-
இந்தியா இல்லாத தீர்வு ? - யதீந்திரா கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக, இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம், சம்பந்தன், இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான், இந்திய தூதரகம், நீண்ட நாட்களாக இவ…
-
- 1 reply
- 590 views
-
-
பொறாமை எனும் விஷம் கொட்ஸ் ஆலி - தமிழில்: ரஞ்சன் குறிப்பு : வரலாற்றாய்வாளர் கெட்ஸ் ஆலி-யின் “Why the Germans? Why the Jews? Equality, Envy and Racial Hatred 1800-1933″ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1808 முதல் 1812ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ப்ரஷய (ஜெர்மனியின் முன்னாள் பெயர்) சீர்திருத்தங்கள் அனைத்து குடிமக்களுக்கும் வர்த்தகம் செய்யும் சுதந்திரத்தை வழங்கின. மேலும், நிலவுடைமை சார்ந்த அடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், யூதர்கள் காரணங்களின்றியும் தண்டிக்கப்படக்கூடும் என்று அதுவரை இருந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. . இருந்தும், யூதர்கள் சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட…
-
- 1 reply
- 968 views
-
-
வரலாறு என்பது எப்போதுமே தற்சார்பற்ற குறிக்கோளை கொண்டிருந்ததில்லை, அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கும், நலன்களுக்கும் ஏற்றவாறே தற்சார்பான முடிவுகளை எடுக்கும் விதத்தில் ஆராய்ச்சி முறைமையில் வடிவமைக்கப்பட்டது. தேசியவாத அரசியலில் எம்.ஜி. சுரேஷின் 'யுரேகா என்றொரு நகரம்' நாவல் மிகவும் நாசூக்காகவும், துல்லியமாகவும் தொல்லியலை மையப்படுத்திய வரலாற்றியல் கட்டமைப்பையும் அதன் அரசியலையும் சொல்ல முற்படுகின்றது. வரலாற்றுத் திரிபுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை வரலாற்றில். வரலாற்றை எழுதுவதற்கு யாரிடம் அதிகாரம் இருந்திருக்கின்றதோ, இருக்கிறதோ என்பதன் அடிப்படையில் வரலாற்றின் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன. சிறிலங்காவை பொறுத்தவரையில் வரலாற்றுப் புனைவுகள் அறிவுப்புல உத்தியோடும் முறைமையோடும் வரலாற…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம் - கே.சஞ்சயன் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஏ…
-
- 1 reply
- 336 views
-
-
இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு - யதீந்திரா சமீபத்தில் தமிழ்நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், முதல் முதலாக கூட்டமைப்பு எவ்வாறானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியாவிட்டாலும் கூட, இந்திய ம…
-
- 1 reply
- 352 views
-
-
இனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்…. October 21, 2019 தேர்தல்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குரிமை. மக்கள் தமக்குரிய ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கு இந்த வாக்குரிமையின் மூலம்தான் வழிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுரிமை சுதந்திரமானது. நிர்ப்பந்தங்கள் அற்றதாக அமைந்திருத்தல் அவசியம் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆட்சியை நிலைநிறுத்தக் கூடிய தேர்தல் முறையிலான இந்த வாக்குரிமையை மக்கள் அடிக்கடி பயன்படுத்த முடியாது. தேர்தல்களின்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போதுதான் அது மிகவும் வலிமை பெற்றிருக்கும். ஜனநாயகத்தின் இந்த உன்னதமான அம்சத்தை, உன்னதமான உரிமையை மக்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. ஏனெனில் ஆட்சிமைப்பதற்கு உள்ள ஒரேயொரு …
-
- 1 reply
- 1.1k views
-
-
“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை என்னிடம் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பிக்கப் போகின்றது. இனிவரப் போகும் இரண்டு மாதங்களுக்கும் இதுதான் கதையாக இருக்கப் போகின்றது. இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர், சம்பந்தன் மற்றும் சுமந்திரனை திடீரென்று சந்தித்திருக்கின்றார். நிச்சயம் அது ஜெனிவா தொடர்பான உரையாடல்தான். அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்ட நிலையில், இலங்கை தொடர்பான விடயங்களை இங்கிலாந்தே க…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன? பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் ந…
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் December 29, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதுடன் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன. கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வா…
-
-
- 1 reply
- 218 views
-
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த சுழ்நிலையிலும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான ஐக்கிய முன்னணி எந்தடிப்படைகளில் கட்டமைக்கப்படவேண்டும் என சிந்திப்பது முன்நிபந்தனை…
-
- 1 reply
- 692 views
-
-
குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன? கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும…
-
- 1 reply
- 698 views
-
-
புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல தங்களது அமைப்பின் மத்திய குழுவிலுள்ளவர்களின் நிலைப்பாடும்தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் பேசுகின்ற போதும் சித்தார்த்தன் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தன் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வ…
-
- 1 reply
- 578 views
-
-
அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!மா.பாஸ்கரன் யேர்மனி Posted on March 18, 2020 by சிறிரவி 49 0 தமிழருக்கானதொரு தலையமற்ற வெற்றிடத்தில் எவரும் சவாரி செய்யலாம் என்றதொரு நிலையிற் கடந்த பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் தமிழரது அரசியலில் மூன்று அரசுத்தலைவருக்கான தேர்தலையும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள சூழலில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் இவ்வேளையில் கடந்தகாலத்திற் பதவிக்கு வந்த அரசுகளும் தமிழ்க்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினவா அல்லது குறைந்தபட்சம் ஏதாவது முனைப்புகளை மேற்கொண்டனவா என்றால் எம்மிடம் இருப்பது வெறும் சுழியமேயாகும். இந்தச் சுழியத்துள் சுற்றியவாறு அழி…
-
- 1 reply
- 666 views
-
-
ஒபாமாவின் வெற்றி - மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடையாளம் அரவிந்த கிருஷ்ணா மீண்டும் அமெரிக்க அதிபராகிவிட்டார் பாரக் ஹுசேன் ஒபாமா. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அவருக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னிக்கும் பலத்த போட்டி இருந்தது. கருத்துக் கணிப்புகளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓடிக்கொண்டிருந்தனர். யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பரபரப்புக்கு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை உயிர் இருந்தது. ஆனால் பல மாகாணங்களில் ரோம்னியை விட அதிக வாக்குகளைப் பெற்று வசதியான வெற்றியைப் பெற்றுள்ளார் ஒபாமா. தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில் அவரது அடுத்த ஆட்சிக் காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவை மட்டும் பாத…
-
- 1 reply
- 809 views
-
-
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு - 2013: சிறிலங்காவுக்கு நல்வாய்ப்பா, சவாலா? [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 08:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவானது தனது நாட்டில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பின் மூலம், தன் மீது அனைத்துலக சமூகத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும் எனக்கருதுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Salma Yusuf எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நவம்பர் 2013ல் சிறிலங்காவில் முதன்முதலாக பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடானது பிறிதொர…
-
- 1 reply
- 789 views
-
-
காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம் ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட, " கடவுள் இருக்கிறாரா, இல்லையா?" என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்…
-
- 1 reply
- 835 views
-
-
-
- 1 reply
- 732 views
-
-
பலஸ்தீனியர்களின் 70 ஆண்டுகால அவலம் அஸ்தமிப்பது எப்போது? ஜனாதிபதி டோனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா தலைவராக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன்னர் பல வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாதை வேறு எனது பாதை வேறு என உலகத்திற்கு எடுத்துக்காட்டினார். வெளிநாட்டு கொள்கை மாற்றங்களில் மிகவும் பிரசித்தமானது என வர்ணிக்கப்படக்கூடியது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை மாற்றப்போவதாக விடுத்த அறிவிப்பு என துணிந்து கூறலாம். சென்ற ஆண்டு 2017ஆம் ஆண்டில் இச்செய்தியை வெளியிட்டார். பலஸ்தீனிய விவகாரத்தில் தொடர்பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட பலஸ்தீன அதிகாரசபை தாம் எதிர் க…
-
- 1 reply
- 994 views
-
-
பரிசுபெற்ற இராணுவக் கேள்வியும் சிறீலங்கா இராணுவ போக்கும்.. டென்மார்க்கில் இருந்து வெளிவரும் வரலாறு என்ற டேனிஸ் சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் சிறந்த வரலாற்றுக் கேள்விக்கு பரிசளித்து வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இராணுவ சக்தியை தப்பாக பயன்படுத்தும் நாடுகளுக்கு பயன்படக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வியும் பதிலும் : கேள்வி : இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றபோது ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிரான்சை கைப்பற்றினான். 1940 ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரான்ஸ் முழுவதுமே அவனால் வெற்றி கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பிரான்சை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை ஹிட்லர் விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சொல்லாமல…
-
- 1 reply
- 1.1k views
-
-
வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறிமலைக்கு? – நிலாந்தன் April 2, 2023 வவுனியா வெடுக்குநாறிமலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ்மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்று திரட்டியுள்ளது. இது தொடர்பாக சைவமகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவமதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. இது அண்மை நாட்களாக தமிழ்மக்கள் மத்தியில் மதரீதியான அகமுரண்பாடுகளைத் தூண்டிவரும் சக்திகளின் வேகத்தை ஒப்பீட்டளவில்தடுக்குமா? ஒருபுறம் சிங்களப…
-
- 1 reply
- 429 views
- 1 follower
-
-
யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன். adminMarch 17, 2024 பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை இருக்கு கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள். அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை. தமது மரபுரிமைச் ச…
-
- 1 reply
- 2.8k views
- 1 follower
-
-
ஈழப்பிரச்சினையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பது போன்ற தோற்றப்பாடு அண்மைக் காலமாக இந்திய - சிங்கள ஊடகங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததையும், அண்மையில் நிகழ்ந்தேறிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தையும் மையப்படுத்தியே இத்தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. வன்னிப் போரில் சிங்களம் மேற்கொண்ட தமிழின அழித்தொழிப்பு யுத்தத்திற்கு உறுதுணை நின்ற இந்தியா உண்மையில் இப்பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதா? இதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? இதுதான் இன்று எம்மவரிடைய…
-
- 1 reply
- 937 views
-