நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
பொது நோக்கு என்றால் என்ன? இது பற்றியதெளிவான பார்வை உள்ளதா? சுயநலவாதிகளும் சுயசிந்தனையற்ற அடிவருடிகளும் " பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " அல்லது " காட்டுத் தடியாச்சுக் கணக்கரின் மாடாச்சு " என்றதொரு புதிய நிலையொன்றினது தொடக்கமாகப் பல்வேறு புறநிலைகளிலும், இன்று பல்வேறு விதமான பின்னணிகளைக் கொண்ட நபர்களும், தமிழ்த் தேசியத்தினது சிந்தனைக்கு எதிரான சக்திகளும், தமிழ்த் தேசியம் என்ற போர்வைக்குள் நுளைந்து வெட்டியோடத் தலைப்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியத்திற்கு ஆரோக்கியமானதோர் சூழலை அமைத்துத்தராதென்பதை தமிழினம் தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திப்பதோடு, சமுதாய ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பழைமையிலும் புணைவுகளிலும் மூழ்கியுள்ள சக்திகள் தொடர்பாகவும், உண்மையென…
-
- 9 replies
- 1.6k views
-
-
எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய ஒரு கட்டுரை இது. தயவு செய்து ஆழ்ந்து படித்து கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் பேசும் மக்களுக்கான தெரிவுகள் எவை? ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் டிசெம்பர் 17ம் திகதி நடைபெறுகிறது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஆழும் கூட்டணி வேட்பாளர் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச, எதிர்ககட்சிகளின் பொது வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவரைத் தீர்மானிப்பதில் இத் தடவை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான பாத்திரம் உண்டு. இதனால்…
-
- 0 replies
- 430 views
-
-
ஈழத் தமிழர்களின் யூதக் கனவு புதன், 02 டிசம்பர் 2009 19:46 யதீந்திரா பயனாளர் தரப்படுத்தல்: / 0 குறைந்தஅதி சிறந்த தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம் - வரலாற்றியலாளர் டாயன்பீ 1 சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்…
-
- 6 replies
- 1.1k views
-
-
விழிப்பாய் இருப்பாய் தமிழா இந்தவாரம் சூரியர் விகடன் பத்திரிக்கையில் வந்த "நடிப்பு திலகம் ராசபக்சே" கட்டுரையில் வந்த படம்...நீங்கள் காண்பது கொலைக்காரன் ராசபக்சே தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டும் காட்சி சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ராசபக்சேவையும், பொன்சேகாவையும் தமிழர்களின் வோட்டு அவர்களை படுத்தும் பாட்டை பாருங்கள் சிங்களவனின் தந்திரத்திற்கு பலியாகாமல் விழிப்பாய் இருப்பாய் தமிழா இருவருமே கொலைக்காரர்கள்தான் எல்லாம் தமிழர்களின் ஒட்டுக்காக ஒருவன்(ரஜபக்சே) தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டுகிறான் தமிழர்களை கொல்ல சொன்னதே கோத்தபாய ராசபக்சேதான் - இது பொன்சேகா இருவருமே ஏதோ தமிழர்களுக்கு ரட்சகன் போல் பேசுகிறான்கள் சுர…
-
- 0 replies
- 549 views
-
-
மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை......... திருகோணமலையை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா, தனது அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டக்களப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா தொடங்கியிருந்தது. தமிழர் தாயகத்தில் மட்டக்களப்பு மண் இயற்கையின் எழில்கொஞ்சும் ஒரு மாவட்டமாகக் காணப்படுகிறது. அங்கு எழுவான்கரை, படுவான்கரை என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றை பிரித்து நிற்கும் நீரேரியை வாவி என்று சொல்வார்கள். இதனை நீண்ட அகலமுடைய ஆற்றுப் பகுதி என்றும் குறிப்பிடலாம். எழுவான்கரை மட்டக்களப்பின் நகர்ப் பகுதியாகவும் சிறீலங்கா அரசின் அரச நிர்வாகங்கள் இயங்கும் பக…
-
- 2 replies
- 680 views
-
-
இறுதி கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? என்று இந்த இனையதளத்தின் ஒரத்திலே ஒரு ஒளிபதிவைபோட்டிருக்கினம் பாருங்கோ... http://www.tamilnewsinfo.com/
-
- 2 replies
- 4k views
-
-
-
ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள். முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும்,பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே ச…
-
- 6 replies
- 705 views
-
-
நமது மண்ணினதும் மக்களினதும் விடிவுக்காக தமது இன்னுயிரினையும் ஈகைதந்த மாவீரச் செல்வங்களின் நினைவு தினத்தினை தமிழீழத்தின் மாவீரர் நாளாய்... தேசிய எழுச்சி நாளாய் அனுஷ்டித்தோம். எப்பொழுதும்போல் இல்லாமல் இம்முறை வித்தியாசமான எதிர்பார்ப்புகளோடும், உணர்வுகளோடும் அதை வரவேற்று அனுசரித்தோம்.அவை மிக எழுச்சிபூர்வமானதாகவும் அமைந்திருந்தன. மாவீரர் நிகழ்வின்பின்... உள்ள நிலைப்பாடுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய நிகழ்ச்சிநிரல் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன??? எமது போராட்டம் எவ்வகையில் தொடரவேண்டும்? என்பது பற்றி தமிழ் உறவுகளான நீங்கள் உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் முன்வையுங்கள். விழ விழ எழுவோமா...??? இங்கு முன்வைக்கப்படுபவை உங்களது தனிப்பட்ட கருத்துக்களாக அமை…
-
- 3 replies
- 882 views
-
-
<object type="application/x-shockwave-flash" height="300" width="400" id="live_embed_player_flash" data="http://www.justin.tv/widgets/live_embed_player.swf?channel=maveerar" bgcolor="#000000"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="allowNetworking" value="all" /><param name="movie" value="http://www.justin.tv/widgets/live_embed_player.swf" /><param name="flashvars" value="channel=maveerar&auto_play=false&start_volume=25" /></object><a href="http://www.justin.tv/maveerar" style="padding:2px 0px 4px; display:block; width:345px; font-weight:normal; font-siz…
-
- 1 reply
- 555 views
-
-
ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார். கடல்வழியில் அகதிகளாக வரும் தமிழ்மக்கள் பாதிவழியிலேயே மணல்திட்டுகளில் இறக்கிவிடப்படுவதால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைக் கண்ணீருடன் சித்திரிக்கும் ‘தவிப்பு’ குறும்படத்தின் இயக்குநரான அவரது வாதம் நியாயமானது. இதற்கிடையே; கருணாநிதியின் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ காமெடி வேறு. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல, தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
மே 18 இனோடு விடுதலை புலிகளின் தலைமைத்துவமே சிங்கள இராணுவத்தினால் துடைத்தழிக்கப்பட்டு, தமிழீழ கனவுகளுடன் தம் எதிர்காலம், வாழ்வு, உறவுகளை தூக்கி எறிந்து அர்பணித்த பல ஆயிரம் போராளிகள் இன்று சிங்கள கொலை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உடபடுத்தப்பட்டும், கிரமமாக கொன்றொளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வட/கிழக்கு காடுகளில் ஓரிரு தளபதிகளுடன் சில நூறு போராளிகளே எஞ்சியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளை விடுதலை புலிகளின் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாக, இப்போராட்ட அழிவின் முதல் அங்கமாக கருணாவின் பிரிவு வழிவகுத்தது. புலிகளுக்கு போராளிகளை கிரமமாக வழங்கிய கிழக்கு பிரதேசம், ஏறக்குறைய விடுதலை புலிகள் தடை செ…
-
- 16 replies
- 2.3k views
-
-
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார். 2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.…
-
- 7 replies
- 5.1k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது. இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கி…
-
- 1 reply
- 1.1k views
-
-
'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. 'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம். …
-
- 0 replies
- 630 views
-
-
புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் - சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த வெள்ளி இரவு (20.11.09) அன்று நடத்தியது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொண்டார். இதன் ஆடியோ தொகுப்பை கீழே இணைத்துள்ளோம். ஈழம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தோழர் மருதையன் தெரிவித்த கருத்துக்கள் சுமார் இரண்டு மணிநேர உரையாடலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கேளுங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள். http://www.vinavu.com/wp-content/uploads/2009/11/Maruthaiyan_Interview_Nov_21.mp3 வினவு தளத்திலிருந்து -http://www.vinavu.com/2009/11/21/maruthaiyan-radio-discussion/ தொடர்பு…
-
- 4 replies
- 1.5k views
-
-
தேசிய வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படும் வழக்கம் - இந்தியா குடியரசாக மலர்ந்த பிறகு 1954-ல் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கியத் தளபதிகள் கு…
-
- 1 reply
- 800 views
-
-
என்னப்பா சுவிஸ்ல எல்லாரும் சந்திக்க போயினமாம் என்றொரு செய்தி வந்திருக்கிறது.. கூட்டனி கூட்டமைப்பு தேவாநந்தா பிள்ளையான் தொண்டமான் ஹக்கீம்.. சித்தார்த்ன்...
-
- 11 replies
- 1.4k views
-
-
புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம் திங்கள், 31 ஆகஸ்ட் 2009 19:39 டி.அருள் எழிலன் பயனாளர் தரப்படுத்தல்: / 46 குறைந்தஅதி சிறந்த 2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வ…
-
- 2 replies
- 1.8k views
-
-
எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் http://www.youtube.com/watch?v=JuJp0r3l7WE&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ptMHy1n56Oc&feature=player_embedded
-
- 1 reply
- 1.8k views
-
-
-
ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார். மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற…
-
- 6 replies
- 1.5k views
-
-
உம்மணா மூஞ்சி கூட ராஜபக்சவைக் கண்டால் பல்லிளிப்பதன் இரகசியம் என்ன?
-
- 4 replies
- 1.9k views
-
-
திஸ்ஸ விதாரண, சில தமிழர்கள், பொய்களின் கூட்டணி - விஜயகுமார் பழைய நாடகங்களில் மன்னன் மந்திரியைப் பார்த்து கேட்பான் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. நாட்டிலே மழை பெய்ததா இல்லையா என்று கூடத் தெரியாமல் இவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சிரிப்பு வரும். அண்மையில் லண்டனில் கூடிய சில தமிழர்கள் மகிந்தவின் நூற்றுக் கணக்கான மந்திரிகளில் ஒருவரான திஸ்ஸ விதாரணவை இந்த வகையான சில கேள்விகள் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றார்கள்; இலட்சக்கணக்கான மக்களைச் சிறை முகாம்களில் வைத்திருக்கிறார்கள். தமிழர் தாய்நிலம் முழுவதும் இராணுவக் காட்டாட்சி நடக்கிறது. முழு இலங்கைப் பொருளாதாரத்தையே தமது ஊழல்களிற்காக வல்லரசுகளின் வேட்டை நிலமாக்குகிறார்கள். ஆனால் இந்த தமிழ் மன்னர்கள் கொ…
-
- 0 replies
- 830 views
-
-
கடும் நெருக்கடியில் கருணாநிதி கடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர். 18.06.2006 நாளிட்ட “ஆனந்த விகடன்“ இதழுக்காக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை பற்றி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவ…
-
- 4 replies
- 1.5k views
-