நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பொள்ளாச்சியை மையம் கொள்ளும் அரசியல் புயல்! பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் நட்பாகப் பழகி அவர்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கும் கொடூர செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த விவக…
-
- 0 replies
- 802 views
-
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன…
-
-
- 128 replies
- 8.5k views
-
-
ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான ச…
-
- 0 replies
- 548 views
-
-
சாதி கட்சியாக மாறுகிறதா நாம்தமிழர் கட்சி ? நாம்தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளர்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் என்பது உண்மையா?
-
- 0 replies
- 838 views
-
-
Friday, July 2, 2021 https://youtu.be/2oeotNpiNwY வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன் இறந்துவிட்டான். அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான். அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நம் ஒவ்…
-
- 19 replies
- 1.9k views
-
-
இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை September 6, 2021 — கருணாகரன் — இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள். ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உ…
-
- 16 replies
- 974 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார். முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்க…
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும் November 2, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடக ஆய்வாளர்களிற் சிலரையும் சந்தித்திருந்தார். இதன்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட 13வது திருத்தத்தைப் பற்றிப் பேசினர். கஜேந்திரகுமார் போன்றவர்களோ இதற்கப்பால் சென்றே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். ஏனையோர் தமது தனிப்பட்ட விவகாரங்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தைப் பற்றிய முறைப்பாடுகளைச் செய்வது வரையிலேயே அதிகமாக அக்கறை காட்டினர். வந்தவருக்குச் சற்றுத் தலைசுற்றினாலும் சமாளித்துக் கொண்டார். இத…
-
- 1 reply
- 311 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது. போராட்டத்தை முடக்குவதற்கு, ராஜபக்ஷர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கால கட்டுப்பாடுகளைக் காட்டி, நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற முனைந்தார்கள். அதுபோல, கொழும்பின் பிரதான நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து உள்வரும் வாகனங்களை சோதனையிட்டு போராட்டக்காரர்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தி…
-
- 1 reply
- 282 views
-
-
http://www.youtube.com/watch?v=htunBRp2x_o#t=747&hd=1
-
- 4 replies
- 795 views
-
-
தீர்வு திட்டத்தில் இருந்து நழுவி சென்ற இந்தியா! அடுத்த கட்டம் என்ன? கஜேந்திரகுமார் எம்.பி நன்றி - யூரூப்
-
- 1 reply
- 338 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான். பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தே…
-
- 1 reply
- 588 views
-
-
தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா? இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறை…
-
- 0 replies
- 539 views
-
-
பொறுப்புக் கூறலா � ஆட்சிமாற்றமா? அமெரிக்கா என்றாலும் சரி, பிரித்தானியா என்றாலும் சரி, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்றாலும் சரி, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை என்று தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட இதைப் பற்றிப் பேசியுள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் மூலம், சர்வதேசத் தலையீடுகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் அதைச் செய்தால், அமெரிக்காவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும் என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு வித…
-
- 0 replies
- 570 views
-
-
1) பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது. 2) வரலாற்றை அணுகும் பிரச்சினை: 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன. 3) தைவான் பிரச்சினை: ஜப்பானிய-தைவான் …
-
- 1 reply
- 955 views
-
-
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைற்றியில் உரையாற்றுவதற்காக இந்தமாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகளின் பேரின் லண்டனில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே, இந்தப் பயணத்தை அவர் ரத்துச் செய்திருப்பதாக வெளியான செய்திகள் தான் இந்தப் பரபரப்புக்கான காரணம். இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் தான் முதலில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்திய…
-
- 0 replies
- 987 views
-
-
கடந்த வாரங்களில் ஆசியாவில் அமெரிக்காவின் தீவிர இராஜதந்திரப் பிரசாரமானது அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால் சீனாவுக்கு எதிரான முழு மைதானத் தடுப்பு என்கிற மட்டத்திற்குச் சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாய் மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும் மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூகினி, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாய் சுற்றி வளைப்பதற்கு இருக்கும் கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கோ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை! வியாழன், 27 ஜனவரி 2011( 17:19 IST ) உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானார்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில்,அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவிகிதம் அதிகரித்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – கருணாகரன்.. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் போராட்டத்தில் பங்களித்த ஆதவனுக்கு இன்று ஒரு கால் இல்லை. போர்க்களத்தில் இழந்து விட்டார். கால் இழந்த பிறகும் தயக்கமோ தளர்வோ இல்லாமல் போராட்டப்பணிகளைச் செய்தார் ஆதவன். இறுதி யுத்தத்திற்குப் பிறகு தடுப்பில் (புனர்வாழ்வு முகாமில்) மூன்று ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த பிறகு விடுதலையான ஆதவன், .செஞ்சோலையில் வளர்ந்த ஸ்ரீதேவியைத் திருமணம் செய்தார். 2015 இல் திருமணம் செய்த ஆதவன் ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு வயது இரண்டரை. இரண்டாவது பிள்ளைக்கு மூன்று மாதங்கள். இயக்கத்திலிருந்தபோது (கால் இழந்த பிறகு) பயின்ற இலத்திரனியல்…
-
- 0 replies
- 382 views
-
-
மகிந்த சிந்தனை 2, 2010 தேர்தலில் வந்திருக்க வேண்டும். வெற்றியில் பெரு நம்பிக்கை கொண்டதால், அது குறித்து அவர் அலட்டிக் கொள்ள வில்லை. இம்முறையும் அது குறித்த கவலை இல்லாமல் தான் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மைத்திரியின் பிரவேசம் மகிந்த சிந்தனை இரண்டினை அவசரம் அவசரமாக கொண்டு வர வைத்து விட்டது. டிசம்பர் 26 ம் திகதி வெளியிட இருந்த அதனை, தீடீரென, அடடா, தபால் மூல வாக்களிப்பு 23ம் திகதி அல்லவா என்று நினைவுபடுத்த, முதல் நாளே அவசர அவசரமாக பல குளறு படிகளுடன் வெளியிடப் பட்டது. ஆங்கிலத்தில் இல்லாத சிங்களத்தில் மட்டும், சிங்கள வாக்காளரை பயமுறுத்தும் வகையில், 'அங்கே உலகம் முழுவதும், உறுமியபடி, தகுந்த தருணம் வரும் வரை, தமது இரையினை கவ்வ புலிப் பயங்கரவாதிகள் இன்னமும் இருகின்றார்கள…
-
- 0 replies
- 822 views
-
-
காங்கேசன்துறைமுகத்தின் விரிவாக்கத்தையும் விரைவுபடுத்துங்கள் வடக்கில் உள்ள பெரும் வானூர்தித் தளமான பலாலி வானூர்தித் தளத்தை விரிவாக்கி எதிர்வரும் -மார்கழி மாதம் அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு வானூர்திச் சேவையை வழங்குவதற்கான பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் மார்கழி மாதத்துக்குள் முதலாவது வானூர்திச் சேவை பலாலியில் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. அவ்வாறு நடப்பது மகிழ்ச்சிகரமானது.வரவேற்கத்தக்கது. வான் பறப்புப் பாதையில் உள்ள சிறிய சிக்கல்கள் தீர்க் கப்பட்டதும் பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் முழுமையடைந்துவிடும…
-
- 0 replies
- 277 views
-
-
செயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வு? Editorial / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:39 -இலட்சுமணன் 2019இல் இருந்தாவது, ஒற்றுமையாக எமது உரிமைகளை பெறுவதற்கும், பிரதேசம் அபிவிருத்தி அடைவதற்கும், நலிவுற்ற எமது மக்களுக்குச் சமூகப்பணி செய்வதற்கும் உறுதியேற்போமாக என்ற விதமான கருத்துகள், சிந்தனைகள் மக்கள் மத்தியில் முனைப்புப் பெற்றும் முக்கியத்துவம் பெற்றும் வருகின்றன. இலங்கையைப் பொறுத்த வரையில், வருடத்தின் இறுதிப்பகுதி அனர்த்தங்களின் அவலங்களை நினைவுகூர்வதான காலம் என்றாகிவிட்டது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26இல் ஏற்பட்ட, சுனாமி அனர்த்தமானது மிக கொடூரமான அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. நமது நாட்டில் சுனாமி ஏற்படுவதற்கு முன்னர், அனர்த்தம் தொடர்பான பாதுகாப…
-
- 0 replies
- 332 views
-
-
-
- 0 replies
- 815 views
-
-
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்ப்பெண்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து மேற்படி திணைக்களத்திடம் கேட்கப்பட்ட போதே அதன் ஊடகப்பேச்சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் குறித்த சர்வதேச நியமங்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கைபேசிச் சாட்சி – நிலாந்தன்! முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.சமூகவலைத்தளங்கள் எந்தளவுக்கு இது போன்ற விடயங்களில் வினைத்திறனோடு செயல்பட முடியும் என்பதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இது ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு.இதுபோன்று சிறுவர்களைத் தாக்கும் காட்சிகள்,முதியவர்களைத் தாக்கும் காட்சிகள் இடைக்கிடை சமூகவலைத்தளங்களில் யாராலாவது பகிரப்படும். பெரும்பாலும் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு நல்ல போக்கு.அதே சமயம் இந்த போக்குக்கு பின்னால் உள்ள உளவியலைய…
-
- 0 replies
- 192 views
-