நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4198 topics in this forum
-
தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்? நிலாந்தன்.. சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் ‘இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே தேவைப்படுகிறது’ என்று கூறியிருந்தார்.அதாவது ஒரு புலமையாளர் தனது ஆன்மாவை இழந்து பதவிகளையும் பொறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வதை விடவும் தனது பதவிகளையும் சுகங்களையும் துறந்து தனது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்படவே அவர் அவ்வாறு கூறியிருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான குருபரனுக்கும் அறிவியல் செயற்பாட்டுச் சுதந்திரமா? அல்லது உத்தியோகமா? என்ற முடிவை எடுக்க வேண்டிய ஓர் அறிவியல் ம…
-
- 0 replies
- 389 views
-
-
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுக…
-
- 2 replies
- 524 views
-
-
தமிழீழம் சாத்தியமா .??.. மக்கள் தொலைகாட்சியில் இருந்து..
-
- 0 replies
- 1.6k views
-
-
-
தமிழ் அரசியல் களத்தில் தற்போது தமிழ் தேசிய அரசியல் தேக்கநிலை காணப்படுகிறது. இந்த தேக்கநிலையை மாற்றி அமைப்பதற்கு தாயகத்தமிழ் மக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இணைந்து தமிழீழ அதிகாரசபை ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் ஊடாகவே தமிழீழ விடுதலை நோக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என எத்தியோப்பியா மடவளப்பு பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி கெனடி விஜயரத்தினம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் ஜி.ரி.வியின் செய்தி ஆசிரியர் இரா.துரைரத்தினத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை தெரிவித்தார். குறிப்பு இது ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக செவ்வியாகும். இதனை பயன்படுத்துவோர் ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக ச…
-
- 1 reply
- 445 views
-
-
போர் கொள்ளுமா 2022? புவிசார் அரசியல் என்பதுதான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. வேறெதுவுமில்லை? ஏனென்றால் நிலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதது. பொருளாதாரம் மேலோங்க வேண்டுமென்றால் பொருட்கள் உற்பத்தி (manufacturing) செய்யப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட வேண்டுமென்றால், அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் (market) திரட்டப்பட்டாக வேண்டும். திரட்டப்பட்டவர்கள் பொருட்கள் வாங்க வேண்டுமேயானால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அவர்களைச் சென்றடைய போக்குவரத்துத்தடங்கள் (transportation) இருந்தாக வேண்டும். அந்தத் தடங்கள் அமைய வேண்டுமானால் அந்தந்த நாட்டுக்கான நிலப்பரப்பு ஏதுவாக இருந்திடல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் ஒன்று குறைந்தாலும், அந்நாடு வேறேதோ …
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
உலகை மாற்றிய ஆண்டு. பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை மனிதரில் தன்னுணர்வை உருவாக்கியதே. மனிதருடைய சுயமும் அறிவாண்மையும் அவர்தம் தேடலை வகுக்கிறது. அதனால் அவர்களால் தற்கணத்தில் தேங்கி நிற்க முடிவதில்லை. நிறைவுகொள்ள இயலுவதில்லை. நம்முடைய ஒவ்வொரு நாளும் பொழுதும் அடுத்த கணத்தைப் பற்றின எண்ணங்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை முன்னிறுத்தியே நம் சிந்தனையோட்டம் தொழிற்படுகிறது. இங்கே சிந்தனை என்பது உலகை உய்த்தறிவதற்கான நுண்புலன் கருவியாக அல்லாமல் மனிதரின் வசதிகளைப் பெருக்கிப் பேணுவதற்கான பிழைப்பறிவாக எஞ்சிவிடுகிறது. அதன் பிறகு தம் உயிரியக்கத்தைத் தக்கவைக்கும் பொருட்டு மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். உலகில் பேரழிவைக் கொண்டுவருகிறார்கள். மனிதரின் நி…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். . ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2010 16:44 “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். முன்னோட்டங்கள்… ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணைய வேண்டிய நேரமிது! - மு. வீரபாண்டியன்First Published : 08 Jul 2011 01:37:51 AM IST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் கடந்த 18,19 ஆகிய இரு தினங்கள் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்றதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருமைப்பாட்டையும், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஜூலை 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரியக்கங்களை நடத்திட, கட்சி அணிகளையும், பொதுமக்களையும், அறைகூவி அது அழைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக உடனடிச் செயல் திட்டமாகவும், எதிர்கால அரசியல் தீர்வாகவும் சில முன்மொழிவுகளைக் கூற, இந்திய நாட்டின் பிரதமரை கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பது எனவும…
-
- 0 replies
- 930 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் ம…
-
- 7 replies
- 1.5k views
-
-
சிறுபான்மையினருக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு ஹஸ்பர் ஏ ஹலீம் சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல்பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என ஜீவனோபாயமாக காணப்படுகிறது. அப்பாவி மக்களின் காணிக்குள் அடாத்தாகக் கையகப்படுத்த மு…
-
- 0 replies
- 193 views
-
-
சிந்துவாசினி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை BBC/DEBALIN ROY Image caption சஞ்சாலி `வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்? எனக்குத் தெரியாது ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?' - சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி'யின் வரிகள் என் மனதில் தோன்றின…
-
- 2 replies
- 931 views
-
-
பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும் நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது. இன்று பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அநியாயங்கள், மீண்டுமொருமுறை பலஸ்தீன மக்களின் திரட்சியான போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளன. உலகளாவிய கண்டனத்தை மீறி, பலஸ்தீனியர்கள் மீது இஸ்ர…
-
- 0 replies
- 336 views
-
-
‘கோவிட் 19’ கொரோனா வைரஸின் அச்சம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரட்சி என்பன தற்போது மக்களை சோதனைக்குள் தள்ளியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், எட்டாவது பாராளுமன்றம் கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டு 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தவுள்ளன. 9ஆவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்யவுள்ள நிலையில் அரசியல் கட்…
-
- 0 replies
- 246 views
-
-
சிறப்புக் கட்டுரை: முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள்! மின்னம்பலம் ராஜன் குறை மக்களாட்சி முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்: 1) அவர் இந்திய குடிநபராக இருக்க வேண்டும்; 2) அவருக்கு 25 வயதாகி இருக்க வேண்டும்; 3) அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராகி விடவேண்டும். இந்த தகுதிகள் உள்ள யாரும் பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் முதல்வராகிவிடலாம். அவர் மக்கள் பணி, கட்சிப்பணி ஆற்றியிருக்க வேண்டும் என்றோ, தலைவராக மக்களால் அங்கீகரிப்பட்டிருக்க வேண்டும் என்றோ அவசியம் எதுவும் கிடையாது. உதாரணமாக l997ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இ…
-
- 0 replies
- 860 views
-
-
இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்! அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அ…
-
- 2 replies
- 646 views
-
-
தென் கிழக்காசியாவில் கல்வியறிவு மிகவும் கூட உள்ள ஒரு நாடு, கல்வி அறிவு இல்லாதவர்களால் ஆள படும் போது வரும் பிரச்சனை..
-
- 5 replies
- 595 views
-
-
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்ளும் மாணவன் March 6, 2019 யாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகமோ , கோப்பாய் காவல்துறையினரோ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி பல்கலைகழகத்தினுள் வைத்து பகிடிவதை என 4ஆம் வருட சிரேஸ்ட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திலும் , பல…
-
- 1 reply
- 795 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டி…
-
- 0 replies
- 251 views
-
-
சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்? (பி.கே.பாலசந்திரன்) அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA) கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (…
-
- 0 replies
- 291 views
-
-
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 959 views
-
-
மதமே பிரதானமா? வா. மணிகண்டன் குடியுரிமை மாற்றுச் சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும் கூட மாநிலங்களவையில் தோற்கடிப்பட்டுவிடும் என்று நிறையப் பேர் நம்பிக்கையாகச் சொல்லியிருந்ததை அடுத்து நேற்று ராஜ்யசபா விவாதங்களையும் வாக்கெடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்த போது கடைசியில் பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. குடியுரிமை மாற்றுச் சட்டம் (Constitutional Amendment Bill) தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஆகிய இரண்டையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நெருங்கிய தொடர்பு கொண்டவை. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை மாற்றுச் சட்டத்தில் - ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து குடியேறக் கூடிய- இசுலாமியர்க…
-
- 0 replies
- 628 views
-
-
சவூதி அரேபியாவை தமது தாயகமாக விளித்துக் காலம் காலமாக இஸ்லாமிய தமிழர்களிடையே நயவஞ்சக அரசியல் புரிந்துவரும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தில் கரிபூசிய சம்பவமாக கடந்த வாரம் சவூதியில் நிகழ்ந்தேறிய ரிசானா என்ற இஸ்லாமிய தமிழ் யுவதியின் தலைதுண்டிப்பு சம்பவம் திகழ்கின்றது. ‘நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் தமிழ் மொழியில் பேசினாலும் சவூதி அரேபியாதான் எங்கள் தாயகம். எனவே நாங்கள் தமிழர்கள் அல்ல’: இதுதான் காலம்காலமாக சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு துணைநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இரண்டகம் செய்யும் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வைக்கும் வாதம். ஆனாலும் சவூதி அரேபியாவில் தமது ஆணிவேரைத் தேடித் தம்மைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளும் இந்…
-
- 0 replies
- 635 views
-
-
2021'-சீமானின் திட்டம்? 3 வது அணி அமைக்கும் கமல்? Rahul nithi 1 week ago மொழியாகி, எங்கள் மூச்சாகி, முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி, எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி! விழிமூடித் துயில்கின்ற வீரவேங்கைகள் மீதும் உறுதி இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்! உறுதி! உறுதி! வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை! கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை! வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்! தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! Rajesh Vijay 1 week ago அனைத்து தமிழர்களின் சார்பாக:. அண்ணன் சே.த.இளங்கோவன் அவர்களுக்கு மிக்க நன்றி! ஏனென்றால் எந்த ஒரு ஊடகமும் நாம…
-
- 0 replies
- 438 views
-