Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு

Featured Replies

(2 ஆம் இணைப்பு) மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 17:44 ஈழம்] [திருமலை விசேட நிருபர்]

திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகாம்களில் இருந்து இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிமுதல் மேற்கொண்டனர்.

ஈச்சிலம்பற்றுப்பகுதியில் இரண்டரை கிலோமீற்றர் தொலைவு வரை ஆக்கிரமித்த இப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

இத்தீவிர எதிர்த்தாக்குதலையடுத்து மாலையளவில் படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர்.

இதில் படைத்தரப்பில் இரண்டு அதிகாரிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, கல்லாறு படைத்தளத்திலிருந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்த ஆட்டிலெறிப் பீரங்கி ஒன்றும் விடுதலைப் புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

படையினரின் 5 சடலங்கள் விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

இம் முறியடிப்புத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை.

http://www.eelampage.com/?cn=30086

Tigers say 45 killed in Sri Lanka as Norway's peace bid fails

COLOMBO (AFP) - Fierce artillery duels in northeast Sri Lanka have killed at least 45 people, including 15 civilians, Tiger rebels said, as a fresh Norwegian peace bid failed.

The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) said security forces breached rebel defences in the district of Trincomalee and advanced 2.5 kilometres (1.5 miles), sparking heavy fighting.

"We have killed 30 Sri Lankan soldiers, including two officers, and recovered five bodies," LTTE spokesman Rasiah Ilanthiriyan told AFP Saturday. "Shelling by security forces has also killed 15 civilians. Many more are injured."

He said seven Tiger rebels were wounded in the long-range attacks.

There was no immediate reaction from the defence ministry to rebel claims, but a local military official in Trincomalee said they suffered only 35 soldiers wounded in rebel long-range attacks.

The defence ministry in a statement issued earlier in the day said villages held by government forces were under a barrage of Tiger artillery fire.

"Some villagers who had left their homes in the wee hours of today (Saturday), on reaching the hospital area, were faced with a barrage of Tiger artillery fire," the defence ministry statement said.

Hundreds of civilians were unable to leave the area because of the sporadic artillery attacks, a military official in the area said by telephone.

The two sides were exchanging long-range attacks along the district borders of Trincomalee and Batticaloa, local officials said.

The renewed attacks came after peacebroker Norway failed on Friday to secure an agreement to end a blockade on the Jaffna peninsula, where nearly half a million people are trapped by fighting.

The LTTE said they told Oslo's envoy, Jon Hanssen-Bauer, to persuade the government to provide access to the embattled north without conditions.

The government had asked Hanssen-Bauer to secure a deal with the Tigers to allow a convoy of some 400 trucks to travel through rebel-held territory, but the Tigers rejected a one-off convoy.

Instead, the LTTE political wing leader S. P. Thamilselvan told Hanssen-Bauer the government must open a disputed highway to Jaffna, as well as another highway to the island's east.

AFP

Edited by YARLVINO

திருமலை ஈச்சிலப்பற்றில் முறியடிப்புத் தாக்குதல்: 30 படையினர் பலி: 100 படையினர் காயம்: ஆட்டிலறி அழிப்பு: 5 சடலங்கள் மீட்பு.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான ஈச்சிலம்பற்று நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு மகிந்தபுர இராணுவ படைமுகாமிலிருந்து ஈச்சிலம்பற்றை ஆக்கிரமிக்கும் முகமாக சிறீலங்காப் படையினரால் கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டு இரண்டரைக் கிலோமீற்றர் தூரம் நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளின் போராளிகள் முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டு படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளனர்.

இன்றை முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 30 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் நூற்றுக் மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு காயப்பட்டவர்களையும் காவிக்கொண்டு பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ?#8220;டியுள்ளனர்.

இன்றை மோதலின் போது கல்லாறு படைத்தளம் நோக்கி நடத்திய விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் ஆட்டிலறி பீரங்கி ஒன்றும் தகர்க்ப்பட்டுள்ளது.

மோதலின் போது சிறீலங்கா படையினரின் ஜந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித உயிரிழப்புக்ளும் ஏற்படவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

www.pathivu.com

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20061209013.jpg

முறியடிப்புத் தாக்குதலில் 30 படையினர் பலி! 7 போராளிகள் காயம் - இளந்திரையன்

சிறீலங்காப் படையினரின் ஈச்சிலப்பற்று நோக்கிய படைநகர்வு குறித்து ஏ.எவ்.பி செய்தி சேவைக்கு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளத்திரையன் கருத்துரைத்திருக்கும் போது......

சிறீலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான ஈச்சிலம்பற்று நோக்கி 2.5 கிலோ மீற்றர் முன்னேறியதை அடுத்து இரு தரப்பினரிடையே உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.

படையினரின் முன்னேற்றதை வழிமறித்து விடுதலைப் புலிகள் தற்காப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது சிறீலங்கா படைகள் தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இன்றை தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் ஐந்து சடலங்கள் கைப்பற்றப்பட்டதோடு படையினரின் தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்றைய முறியடிப்புச் சமரின் போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் 7 போராளிகள் காயமடைந்துள்ளதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பினர் கருத்துரைத்திருக்கும் போது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 35 படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலைத் தொடுத்ததாக அரச படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலை அடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர முடியாது உள்ளதாகவும் படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

இன்றைய முறியடிப்புச் சமரின் போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் 7 போராளிகள் காயமடைந்துள்ளதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பினர் கருத்துரைத்திருக்கும் போது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 35 படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்படி என்டாலும் இரு பக்கத்திலும் ஒருவரும் கொல்லப்படாதது சந்தோசமே.

அப்படியே இனி வரும் காலங்களில் யாரும் காயப்படாதவாறு சண்டை போட்டால் பிரச்சனையே இல்லை!

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா. யாரும் கொல்லப்படவில்லை என்றால் பொதுமக்களில் 30க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 100க்கு மேற்பட்டவர்கள் காயமடந்தும் ஆயிரக்கணக்கானோர் பட்டினி இருப்பதும் ஒருவருக்கும் மனத்தைப் பாதிக்கவில்லைப் போலுள்ளது. அது சரி.. மக்களின் அவலத்தைப் பற்றி யாருக்கு அக்கறை.

ஒரு இராணுவம் உயிரோடு பிடிப்பட்டுள்ளாராம்?

மட்டக்களப்பு முறியடிப்புத் தாக்குதலில் 2 போராளிகள் வீரச்சாவு

[ஞாயிற்றுக்கிழமை, 10 டிசெம்பர் 2006, 16:18 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்காப் படையினரால் மட்டக்களப்பு படுவான்கரை புலிபாய்ந்தகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புலிபாய்ந்தகல் பகுதியில் உள்ள பெண்டுகள்சேனைக்கு ஊடாக படையினர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கையில் படையினருடன் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து ஈடுபட்டனர்.

இவர்களது கூட்டுத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்ச்சமரில் 10-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்த நிலையில் பின்வாங்கினர்.

இம்முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகள் தரப்பில் 2 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=30099

அடேயப்பா. யாரும் கொல்லப்படவில்லை என்றால் பொதுமக்களில் 30க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 100க்கு மேற்பட்டவர்கள் காயமடந்தும் ஆயிரக்கணக்கானோர் பட்டினி இருப்பதும் ஒருவருக்கும் மனத்தைப் பாதிக்கவில்லைப் போலுள்ளது. அது சரி.. மக்களின் அவலத்தைப் பற்றி யாருக்கு அக்கறை.

இரண்டு தரப்பினரும் தமது தரப்பில் இழப்புகள் எதுவுமில்லை என்று அறிக்கை விடுவதும், பின்னர் தான் மெதுவாக ஒத்துக்கொள்வதும்தான் தற்போதய வழக்கம். அதனையே நான் சுட்டிக்காட்டினேன் அது பலருக்கு புரியவில்லைப் போலும். சரி அதை விடுங்கள்!

ஐயா, ஏற்கனவே இதை எதிர்பார்த்துத்தான் "சாப்பாடு கொடுங்கள்", "இராணுவ நலன் பாராமல் மக்களை காக்க தகுந்த நடவடிக்கை எடுங்கள்" என்று கத்திக் கத்தி தொண்டை காய்ந்துபோய் விட்டது. இப்போது ACTION சொல்லியாகிவிட்டது. இனி என்ன உட்காந்திருந்து இணையத்தளங்களில் போடப்படும் எண்ணிக்கையில் கூட்டல் கழித்தல் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இங்கிருந்து எமக்கு செய்ய முடிந்தது அதுதான். நீங்கள் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக் கொள்வதானால் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் சொன்னது போலவே பண்டிகைக்கால செலவுகளை மீதம் பிடித்து இங்கே காயமடைந்தவர்களுக்கும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். அப்படி நீங்கள் ஆக்கபூர்வமாக செய்தால் அதற்கு எந்தன் மனப்பூர்வமான நன்றிகள்.

மேலதிக தகவல்: பிற்பகலிலிருந்து கொழும்பு காலிவீதியில் நோயாளர் காவு வண்டியின் அலறல் அதிகமாக கேட்பதாக அறியமுடிந்தது.

மேலதிக தகவல்: பிற்பகலிலிருந்து கொழும்பு காலிவீதியில் நோயாளர் காவு வண்டியின் அலறல் அதிகமாக கேட்பதாக அறியமுடிந்தது.

நக்கல் ஆக்கும்??????

  • தொடங்கியவர்

மாங்கேணி, கட்டுமுறிவுவில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகள் முறியடிப்பு: 12 படையினர் பலி- 51 பேர் காயம்- 7 போராளிகள் வீரச்சாவு

[ஞாயிற்றுக்கிழமை, 10 டிசெம்பர் 2006, 18:42 ஈழம்] [தாயக செய்தியாளர்]

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் மாங்கேணி வழியாகவும் கட்டுமுறிவு வழியாகவும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான படை நகர்வு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

வாகரையை திருகோணமலை வழியாக ஆக்கிரமிக்கும் நோக்கில் நேற்று சனிக்கிழமை படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று வாகரையின் தென்பகுதியில் மாங்கேணியிலிருந்தும் கட்டுமுறிவிலிருந்தும் நகர்வு நடவடிக்கையை செறிவான ஆட்டிலெறி சூட்டாதரவுடன் இன்று காலை 6 மணிமுதல் படையினர் மேற்கொண்டனர்.

மாங்கேணி வழியாக பனிச்சங்கேணியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரணுக்கு நகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து இராணுவத்தினர் தமது நிலைகளை நோக்கி விரட்டியடிக்கப்பட்டனர். படையினர் மாங்கேணி நடுநிலைப்பகுதிக்கு ஓடினர்.

இக்களமுனையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

மறுபக்கம் கட்டுமுறிவிலிருந்து நகர்வை மேற்கொண்ட படையினருக்கு எதிராக தோணித்தாட்ட மடுவில் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

இக்களமுனையிலும் படையினரின் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

கட்டுமுறிவுப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் தமது தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டும் 51 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என்று சிறிலங்கா ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

http://www.eelampage.com/?cn=30100

இது நேற்றும் இன்றும் மட்டும் அல்ல இனியும் தொடரப் போகிறது. இதனை தடுக்க அல்லது தவிர்க்க உறுதியான நடவடிக்கை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி என்டாலும் இரு பக்கத்திலும் ஒருவரும் கொல்லப்படாதது சந்தோசமே.

அப்படியே இனி வரும் காலங்களில் யாரும் காயப்படாதவாறு சண்டை போட்டால் பிரச்சனையே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

There were many died in both side. Read all the news and respond it responsibly MR.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரப்பினரும் தமது தரப்பில் இழப்புகள் எதுவுமில்லை என்று அறிக்கை விடுவதும், பின்னர் தான் மெதுவாக ஒத்துக்கொள்வதும்தான் தற்போதய வழக்கம். அதனையே நான் சுட்டிக்காட்டினேன் அது பலருக்கு புரியவில்லைப் போலும். சரி அதை விடுங்கள்!

ஐயா, ஏற்கனவே இதை எதிர்பார்த்துத்தான் "சாப்பாடு கொடுங்கள்", "இராணுவ நலன் பாராமல் மக்களை காக்க தகுந்த நடவடிக்கை எடுங்கள்" என்று கத்திக் கத்தி தொண்டை காய்ந்துபோய் விட்டது. இப்போது ACTION சொல்லியாகிவிட்டது. இனி என்ன உட்காந்திருந்து இணையத்தளங்களில் போடப்படும் எண்ணிக்கையில் கூட்டல் கழித்தல் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இங்கிருந்து எமக்கு செய்ய முடிந்தது அதுதான். நீங்கள் ஐயோ ஐயோ என்று தலையில் அடித்துக் கொள்வதானால் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் சொன்னது போலவே பண்டிகைக்கால செலவுகளை மீதம் பிடித்து இங்கே காயமடைந்தவர்களுக்கும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். அப்படி நீங்கள் ஆக்கபூர்வமாக செய்தால் அதற்கு எந்தன் மனப்பூர்வமான நன்றிகள்.

மேலதிக தகவல்: பிற்பகலிலிருந்து கொழும்பு காலிவீதியில் நோயாளர் காவு வண்டியின் அலறல் அதிகமாக கேட்பதாக அறியமுடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்: பிற்பகலிலிருந்து கொழும்பு காலிவீதியில் நோயாளர் காவு வண்டியின் அலறல் அதிகமாக கேட்பதாக அறியமுடிந்தது.

நக்கல் ஆக்கும்??????

  • கருத்துக்கள உறவுகள்

WOW sanakiyan is caring tamil people or singala people I WONDER?

ஐயோ இவர் ஒருத்தர் இதுக்குள்ள சும்மா பக்கங்களை நிரப்பிக் கொண்டு...!!...??

எப்படா என்னைக் கவுக்கலாம் எண்டு அலையுறார்....!

உங்கட பிரச்சனை என்ன எண்டு தெளிவா சொல்லுங்கோ?

இப்ப நான் தமிழின துரோகி எண்டு ஒத்துக் கொள்ள வேணும் அவ்வளவுதானே. ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை தமிழின நாட்டுப்பற்றாளரான நீங்கள் தயவு செய்து தமிழிலேயே இனி எழுத வேணும் சம்மதமோ? அப்ப நான் ஒரு தமிழ்பற்றாளருக்கு தமிழில் எழுதக் கற்றுக் கொடுத்த திருப்தியோட அந்த பழியை ஏற்கிறன்.

அன்புடன்,

Edited by saanakiyan

மகிந்தபுர படைமுகாமை சுற்றி இருந்த சிங்கள குடியேற்றவாசிகள் 2132 பேர் கந்தளாயில் தஞ்சம்.

திருமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் எறிகணை மோதல்களால், மகிந்தபுரம் படை முகாமின் பதினைந்து கிலோமீற்றர் விட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிங்களக் குடியேற்றவாசிகள், முற்றாக வெளியேறியுள்ளனர்.

சோமபுரம், கல்லாறு, சேருநுவர, மீதகமம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும், இரண்டாயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு சிங்களக் குடியேற்றவாசிகள் இடம்பெயர்ந்து கந்தளாயில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் அக்ரபோதி வணக்க தலத்திலும், மற்றுமொரு தொகுதியினர் கந்தளாய் தொடருந்து நிலையத்தை அண்டியுள்ள பழைய நீதிமன்ற வளாகத்திலும், ஏனையோர் பக்தியகமம் பாடசாலையிலும், ராஜ எல பாடசாலையிலும் அகதிகளாக தங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட கிராமங்களில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், கடந்த காலங்களில் சிறீலங்கா படைகளாலும், ஆயுதம் தாங்கிய சிங்களக் குண்டர்களாலும் விரட்டப்பட்டு, அவை சிங்களக் குடியேற்றக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

www.pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.