Jump to content

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல்


Recommended Posts

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1

குறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்

கம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம்.

எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கவேண்டாம்

பலர் தெரியாமல் விடும் தவறு என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க்கில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் Operating System, Applications, Softwares,Datas என எல்லாவற்றையும் சேமித்து வைப்பதுதான். ஹாட் டிஸ்க் பழுதடையும்போது அல்லது வைரஸ் தொற்றி Rebooting செய்யமுடியாதபோது, Datas ஐ மீட்க கஷ்ட பட்டு அல்லலுற்று பலர் தோல்வி அடைவதை கண்டுள்ளேன். இதற்கு நிவர்த்தி என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க் இருந்தால் இரு பாட்டிஷனாவது செய்யுங்கள், இரு ஹாட் டிஸ்க் இருந்தால் முதலாவதில் Operating System, Applications, Softwares ஐயும் அடுத்ததில்,Datas ஐயும் சேமியுங்கள். ஒரு சிலர் பல நூறு பாட்டுக்களை டவுண்லோட்பண்ணி ஒரே பாட்டிஷனில் சேமித்து பின் எல்லாவற்றையும் ஒரேயடியாக தொலைத்தது எனக்கு தெரியும். O/S மும் applications ம் நிறுவ அதிக பட்சம் 5 GB போதுமானது.. ஆனால் ஒரு DVD Drive வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 10 GB இடம் சினிமாப்படம் கொப்பி பண்ணவேண்டி ஏற்படின் தேவைப்படும். 15 GB தவிர மிகுதியை அடுத்த பாட்டிஷனுக்கு ஒதுக்கலாம். CD Drive மாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 10 GB இடம் முதலாவது பாட்டிஷனுக்கு போதுமானது

இரு ஹாட் டிஸ்க் வைத்திருப்பதானால் முதலாவதை 20 GB ஆகவும் அடுத்ததை (டேட்டாவிற்கு) உங்கள் சேமிப்பைப பொறுத்து 20 லிருந்து 200 GB வரை வைத்துக்கொள்ளலாம். தற்போது 1000 GB ஹாட் டிஸ்க்கும் பாவனைக்கு வந்துள்ளது.

சரி என்னிடம் 40 அல்லது 80 GB ஹாட் டிஸ்க் உள்ளது. அதில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் எல்லாவற்றையும் நிறுவி கடைக்காரர் தந்துவிட்டார்களே! என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா? சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா! அதனால்தான். இப்படியான சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் தான் உள்ளன. Reformat பண்ணி பின் இரண்டு பாட்டிஸன்களை உண்டாக்குவது அல்லது Partition Magic என்னும் Software ஐ டவுண்லோட் பண்ணி அதன் துணைகொண்டு நிறுவப்பட்டவை யாவும் அப்படியே இருக்க இன்னொரு பாட்டிஷனை உருவாக்குவது. இந்த இரண்டும் செய்ய முடியாவிடின் Datas ஐ அடிக்கடி backup செய்யுங்கள்

இந்த விடயத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது

Software களும் அதற்கு தேவைப்படும் இட அளவுகளும் (அண்ணளவாக)

XP with SP2 = 615 MB

MS Office 2000 = 375 MB

McAFee Anti-Virus 2006 = 105 MB

Spyware = 100 MB

Nero = 75 MB

Adobe Reader = 65 MB

Adobe Photoshop 7.0 = 142 MB

Java VM = 150 MB

__________

1627 MB

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது Harddisk ஐ பெரும்பாலும் Extern usb ஆக வைத்திருத்தல் பெரிதும் உதவியாக இருக்கும். அவற்றிலிருந்து வேறு கணனிகளுக்கும் வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் OS வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

Link to comment
Share on other sites

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1 (சந்தேக நிவர்த்தி)

Vasampu வின் கேள்வி : ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே?

பதில்:ஒரு ஹாட்டிஸ்க்கின் தனி பாட்டிஷனில் எல்லாவற்றையும் நிறுவி வைத்திருந்தால் reformat செய்யும்போது அழிந்து விடும் என்பது உண்மைதான் .முக்கியமான Datas இருப்பின் அவற்றை Backup எடுத்துவிட்டு பின் reformat செய்து இரு பாட்டிஷன்களாக பிரிக்கவேண்டும். பின்பு Datas ஐ restore செய்யலாம்

வியாசனின் சந்தேகம்: எனக்கு தெரிந்தவரை முதலில் பாட்டிசன்களை உருவாக்கவேண்டும்(ஆனால் O/S வேறுபட்ட இரண்டை பயன்படுத்தும்போது தானாக பாட்டிசன் நடைபெறும்.)

பதில்: எந்த ஒரு O/S மும் நிறுவப்படும்போது தானாக பாட்டிஷனை உருவாக்காது. ஆனால் XP & Win 2000 ஐ பொறுத்தவரை ஹாட்டிஸ்க்கின் விபரங்களை தந்து, என்ன செய்யவேண்டும் என கேட்டு (எமது வேலையை இலேசாக்குகிறது) தானே அதன்படி செய்யும். ஆனால் Win 98 ல் format & Partioning வேலையை நாம் அதிகம் manual ஆகவே செய்யவேண்டும். ஒரு பாட்டிஷனில் இரண்டு O/S களையும் நிறுவமுடியும் என்பதும் கவனிக்கத்தக்கது (இரண்டு வெவ்வேறு போல்டர்களில்). ஆனால் இது புத்திசாலிதனமானது அல்ல. ஒரு வீட்டில் இரு குடும்பங்கள் வசிப்பது போன்று: உரசல்கள் அடிக்கடி வரலாம்.

இரண்டு O/S களை நிறுவும்போது முதலில் வெளிவந்ததை முதலிலும் அடுத்து வந்ததை பின்புமாக நிறுவவேண்டும். உ.ம்: Win 2000 முதலிலும் XP ஐ பின்புமாக நிறுவவேண்டும். அப்போதுதான் கம்பியூட்டர் பூட் பண்ணும்போது எந்த O/S ஆரம்பிப்பது என்று கேட்டு தெரிவு செய்யும்படி இரண்டு O/S ஐயும் பட்டியலிட்டு தரும்.

Link to comment
Share on other sites

நனறி தேவகுரு உங்கள் அருமையான கருத்துக்களுக்கு. தொடர்ந்து தாருங்கள்.

மேலும் உங்களிடம் ஒரு கேள்வி:

ஹாட் டிஸ்க்கில் பாட்டிஷன் செய்யும் போது Reformat செய்து பிரிக்கலாம் என எழுதியுள்ளீர்கள் அப்போது ஹாட் டிஸ்க்கில் உள்ளவை அழிந்து விடுமே??

நான் Partition Magic 8 பாவித்தே பிரித்து வைத்துள்ளேன்.

நானும் உந்த Partition Magic 8 ஐ பாவித்து பிரித்து வைத்தேன் அதில் சி முக்கிய படங்களைவேறு போட்டு வைத்தேன் ஒரு முறை போர்மற் செய்யும் போது

அது தானாகவே எல்லாவற்றையும் அளித்து விட்டு பின்வரும் படத்தில் உள்ளது போல செய்து விட்டது

மிகவும் முக்கியமான படங்கள் அளிந்து விட்டன...

:cry: :cry: :cry: :cry:

எப்பொழுது நான் முழுவதுமா போர்மட் செய்தாலும் அது தானாக D இல இப்படி வந்து விடும்

அதனால் இப்ப extern hard disk வாங்கி எல்லாத்தையும் பதியிறன்

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 2

பையன் ஒருவன் தனது நோட்புக் கம்பியூட்டரை எமது நிலையத்திற்கு கொண்டுவந்தான். தான் வேலை செய்துகொண்டிருக்கும்போது கம்பியூட்டரின் காட்சி (Display) 90 பாகை வலது புறமாக திரும்பி கிடக்கை நிலையில் (Horizontal) உள்ளது. முயன்று பார்த்தும் தன்னால் சீர்செய்ய முடியவில்லை என்றான்.

கம்பியூட்டரை இயக்கி டெஸ்க்ரொப் ஐ பார்த்தோம். My Computer, My Document, Recycle Pin ஆகிய எல்லாம் வரிசையில் மேலிருந்து கீழ் என்பதற்கு பதில் வலமிருந்து இடமாக கிடந்தன. Task Bar நெடும் குத்தாக இடதுகரை ஓரமாக கிடந்த்து. Start Button இடதுகை மேல்மூலையில் காணப்பட்டது,

சரி இப்போ என்ன வழி? நோட்புக் கணினி என்பதால் Graphic Cards ஏதும் கிடையாது. கிடந்தாலாவது அதன் Properties க்கு போய் இடதுபுறம் rotate பண்ணுவதற்கு ஏதாவது option உண்டாவென பார்க்கலாம். Video வும் இணைந்த Intetgrated Motherboard தான் இக்கணினிகளில் உண்டு. இருந்தாலும் அதன் Display Properties க்கு போய் பார்த்தோம். உதவக்கூடியமாதிரி எதுவும் காணப்படவில்லை. Help Topics இலிருந்தும் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.

Display Turned Sideways என Google லில் அடித்து தேடினோம். விடை உள்ள சில வெப்தளங்களை அது தேடித்தந்தது. அதில் ஒன்றில் விடை கிடைத்தது. அதன்படி CTRL + ALT + UP-ARROW ஆகிய மூன்றையும் ஒன்றுசேர அழுத்தியவுடன் கிடக்கையில் கிடந்த காட்சி நிமிர்ந்தெழுந்து நெடுங்குத்தாக நின்றது, எமது பிரச்சனையும் தீர்ந்தது.

மேலும் சில தகவல்கள்:

CTRL +ALT + UP-Arrow = இடதுபுறமாக 90 பாகை திரும்பும்

CTRL +ALT + Right- Arrow = வலதுபுறமாக 90 பாகை திரும்பும்

CTRL +ALT + Down-Arrow = வலதுபுறமாக 180 பாகை திரும்பும்

CTRL +ALT + LEFT-Arrow = வலதுபுறமாக 270 பாகை திரும்பும்

வீட்டிலே கிடந்த இன்னொரு கணினியில் Trial பார்ப்போமென எண்ணி இந்த Key combination களை அடித்து கிடக்கைகு Display ஐ .வீழ்த்த முயன்றேன். எந்த கீ கம்பினேஷன்களை அடித்தும் எந்த பக்கமும் திரும்பமாட்டேன் என்றது. இந்த கணினியில் Sticky Keys enable பண்ணுபடாமல் இருக்கலாம்.

நோட்புக்கணினியில் Sticky Keys enable பண்ணுபட்டிருக்கலாம். அதனால்தான் பையன் கணினியை பாவிக்கும்போது Sticky Keys களை தெரியாமல தவறுதலாக அடித்துவிட்டிருக்கின்றான். Sticky Keys என்பது CTRL, ALT, SHIFT என்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவகுரு சார் எனக்கு நிண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இதில் எது சரி கணிணி, கணினி,

கணனி

Link to comment
Share on other sites

தேவகுரு மிகவும் பல நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.

நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம் ????

Link to comment
Share on other sites

யாரிடமாவது Partition Magic 8 இருந்தால் அறியத்தரமுடியுமா.........அல்லது எங்கு போய் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறுங்களேன்...

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு!

Partition Resizer என்று ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருளை கீழ்காணும் பிரபல்யமான நம்பிக்கையான தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம். விற்பனையாகும் Partition Magic க்கிற்கு மாற்றீடு. பாவித்த சிலர் நன்று என கூறினார்கள். கீழ்க்காணும் தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணலாம்.

http://www.majorgeeks.com/Partition_Resizer_d4701.html

Link to comment
Share on other sites

வணக்கம் தேவகுரு

கனநாட்களுக்குப் பின் களத்தில் கண்டதில் மகழ்ச்சி உங்கள் தகவலுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு ...(Partition Resizer)

நான் முதலாவதாக கேட்ட கேள்விக்கு பதில் என்னும் தரவில்லை முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவகுரு அவர்களே raid பற்றி கொஞ்சம் சொல்லலாமே புதிது புதிதாக Raid ல் வந்தகொண்டிருக்கின்றது. கொஞ்சம் தெரியும் நீங்கள் கணனி திருத்துதல் சம்மந்தப்பட்ட தொழில் புரிவதால் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவகுரு ஜயா. நீண்ட நாட்களின் பின் கன்டதில் மகிழச்சி. உங்கள் தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

கறுப்பி அவர்கட்கு!

கணிணி அல்லது கணினி என்பதில் எது சரி என்பதில் சந்தேகம் உள்ளது என்கிறீர்கள்.

வெப்பமானி, பாரமானி என்பது சரியென ஏற்றுக்கொண்டால், னி என்ற எழுத்தில் இயந்திரங்களின் பெயர்கள் முடிவது சரி என ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படி பார்க்கும்பொழுது கணித்தல் வேலையை செய்யும் இயந்திரத்தின் பெயர் கணினி ஆகத்தான் இருக்கவேண்டும்.

கணினி என்பதுதான் சரி என நான் கூறுவேன்

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு!

Quote :lol:நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.

உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeya அவர்கட்கு!

Quote :lol:நீண்ட நாட்களாக யாரிடமோ எல்லாம் கேட்டு களைத்து விட்டேன். முடிந்தால் நீங்களாவது உதவுங்களேன். எனது கையடக்க கணணி(லப்டப்) யை போட்டவுடன் (ஆன் பண்ணியவுடன்) வளமைபோல விண்டோஸ் திih (ஆரம்பிக்கும்போது ஒப்ரட்டிக்சிஸ்ரம் என்று வந்து பின் மெல்லிய இடைவெளிக்குள் ஒளி ஒன்று ஓடி மறையும்) வருகிறது ...ஆனால் பின் திரையில் ஒன்றுமே தெரியவில்லை கணணிக்குள் மிக முக்கியமான விடயங்கள் உள்ளது. என்னண்டு சரிசெய்யலாம்?)

விடை :-நீங்கள் கேட்ட முதலாவது கேள்விக்கு நான் இன்னமும் பதில் தரவில்லை என ஆதங்கப்பட்டீர்கள். சரி இப்போ பார்ப்போம்.

கணினி முன் உட்கார்ந்து ஒரு செயலை ஆரம்பித்தவுடன், மூளைக்கு தூண்டுதல் திரையில் Dialog Box களை பார்ப்பதனால் கிடைக்கிறது, கணினிக்கு தூர இருக்கும்போது Prompt கிடைப்பதில்லையாததினால் விடை கூறுவது கடினம். அதனால்தான் பலர் உங்கள் கேள்விக்கு பதில் கூறவில்லை. கணினியை பொறுத்தவரை அதன் பாகங்களெல்லாம் ஒரு கைப்பந்தாட்டக்குழுவின் அங்கத்தவர்கள் போல. ஒருவர் தவறுவிட்டாலும் அதன் விளைவு முழு செயற்பாட்டையும் பாதிக்கும். உ.ம்: Keyboard ல் ஒரு சிறு பிழை இருந்தாலே Booting இடை நடுவில் ஒரே காட்சியை காட்டியபடி freeze ஆகி நிற்கும். எனவே பிழை எங்குள்ளது என கண்டுபிப்பற்கு, ஒவ்வொரு பாகமாக கழற்றி வேறு நம்பிக்கையான பாகம் போட்டுத்தான் பரீட்சிக்கவேண்டும். இப்படித்தான் பிழை திருத்துபவர்கள் செய்வார்கள்.

நீங்கள் உடனே செய்யவேண்டியது உங்களது Lap Top கணினியின் ஹாட் டிஸ்க்கை கழற்றி இன்னொரு Desk Top PC யில் இணைத்து. உங்கள் ஹாட் டிஸ்க் அந்த Desk Top PC யால் கண்டுகொள்ளப்பட்டால் உங்கள் Data களை மீட்டு ஒரு CD யில் பதிந்துகொள்வதுதான். (உங்கள் ஹாட் டிஸ்கை Desk Top PC உடன் இணைப்பதற்கு விசேஷ சாதனமொன்று உண்டு). அதன் பின்னர் தான் Repair பற்றியோசிக்கவேணும்.

உங்கள் ஹாட் டிஸ்க் Desk Top PC ஆல் கண்டுகொள்ளப்பட்டால் பெரும்பாலும் அதில் பிழை இருக்காது. Datas மீட்கப்பட்டபின் O/S த்தை reinstall பண்ணி பார்க்கவும். Insall பண்ணுப்பட்டால் தப்பினீகள்.

சரிவராத பட்சத்தில் இன்னொரு நல்ல Memory stick ஐ மாற்றி போட்டு பரீட்சியுங்கள். Memory யிலும் பிழையில்லையானல், Motherboard தான் குற்றவாளி. எதற்கும் warranty இருந்தால் அது தந்தவர்களைக்கொண்டு திருத்திவிப்பது சிறந்தது. அல்லது Lap Top நிபுணர் ஒருவரிடம் காட்டிப்பாருங்கள். Desk Top PC திருத்துபவர்கள் எல்லாரும் Lap Top ஐ திருத்தமாட்டார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்,

Desk Top PC யில் பிழை திருத்துவது இலேசு. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் தனித்தனி பாகங்கள் உண்டு. Lap Top ல் எல்லா செயற்பாடுகளும் இணைக்கப்பட்ட Integrated Motherboard ஐதான் காணலாம். எனவே செலவு அதிகம்.

Ooperating system (OS) தொடக்கம் வந்தால், நீங்கள் safe mode (you have to hit f8 key when the system try to boot - right after the pre boot message) பாவிச்சு உட்போகப் பார்க்கலாம். அப்பிடி போனால் data backup செய்யலாம். அது முடியவில்லையானால், அனேகமாக corrupted OS எண்டுதான் நினைக்கிறேன். OS CD போட்டு OS repair பண்ணிப் பார்க்கலாம். அதுவும் சரிவரவில்லையெண்டால் தேவகுரு சொன்ன மாதிரி desktop PC பயன் படுத்தி data back up செய்திட்டு மீண்டும் OS reinstall பண்ணிப்பாருங்கோ.

Motherboard (MB) பிழையெண்டால் post boot (won't try to launch windows) பண்ணாது, அதனால் MB பிழையாக இருக்க சந்தர்ப்பம் குறைவு.

Hard drive (HD) பழுதொண்டால் boot பண்ண முயற்சிக்கும் போது click சத்தம் வரும் (check if you hear a grinding sound).

அப்படி இல்லாவிடில், HD யும் Memory card யும் கழட்டிப்போட்டு திரும்பப் போட்டுப் பாருங்கோ (As I said, try to reseat the hard drive and memory card, if you have more than one memory card, try one by one).

.

Link to comment
Share on other sites

நன்றி தேவகுரு,சபேஸ் ....

சபேஸ் நீங்கள் கூறியது போல ..........f8 key when the system try to boot - right after the pre boot messageசேவ் மொட் அடித்து பார்த்து விட்டேன்... அடுத்தது சிஸ்ரம் சீடி போட்டு திருத்தி பார்க்க போறன்.... என்ர கேள்வி உங்கள் இருவரிடமும் கேட்கிறன் OS repair பண்ணிப் பார்க்கும் போது Hard drive இருக்கும் ஒன்று கூட அழியாதா?? ஏனென்றால் அதில் மிக முக்கிய படங்கள், தரவுகள் உள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

crashஆன O/S files அழிக்கப்பட்டு புது fileகள் உருவாக்கப்படும். ஆனால் வேறு எந்த dataவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பயப்படாமல் செய்யலாம்

Link to comment
Share on other sites

Jeya அவர்கட்கு

Repair installation செய்யும்போது Datas ஐ அழிக்காமல் system files மட்டும் புதுப்பிக்கப்படுகிறது என்பது உண்மைதான். Clean installation செய்யும்போது யாவும் அழிக்கப்பட்டு புதியதாக நிறுவப்படும்.

ஆரம்பத்தில் நீங்கள் கம்பியூட்டர் வாங்கியபோது O/S தை நிறுவுவீர்கள். அதன் பின்னர் Device drivers, Anti-Virus software களை நிறுவுவீர்கள். இவைகள் நிறுவப்படும்போதெல்லாம் றிஜிஸ்ரியில் பதிவுகள் மேற்கொள்ளப்படும். Program File லில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

பின்னர் பிரச்சனை ஏற்பட்டு Repair installation செய்யும்போது உங்களது system files மற்றும் Registry மீண்டும் Installation CD யில் இருந்து கொப்பி பண்ணப்பட்டு ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அதாவது Device drivers, Anti-Virus software நிறுவுவதற்கு முன்பு இருந்த நிலை. எனவே கம்பியூட்டர் சரியாக இயங்குவதற்கு இவைகளை மீண்டும் நிறுவவேண்டி ஏற்படும்.

எனக்கு அப்படி 3 வருடங்களின் முன் ஒருமுறை Repair installation செய்யும்போது ஏற்பட்டது. சில Device drivers ஐ புதிதாக நிறுவவேண்டி ஏற்பட்டது. Norton Anti-Virus ஐ இயக்கியபோது அது சொன்னது தனது பைல்கள் சில Corrupted என்றும் தன்னை அழித்துவிட்டு மீண்டும் நிறுவும்படியும். (காரணம் இதன் பதிவுகள் புதிய Registry யில் இல்லை). மீண்டும் NAV நிறுவுவதானால் காசு கொடுத்து புதிய Version வாங்க வேணும். அதனால் அதை அழித்துவிட்டு இலவச AVG Anti-Virus ஐ நிறுவினேன். இச்சிக்கல் காரணமாக நான் Repair installation செய்ய தற்போது விரும்புவதில்லை. Datas அழியாதே தவிர கிட்டத்தட்ட Clean installation மாதிரித்தான். எனவே நான் முன் சொன்ன மாதிரி Datas ஐ மீட்டுக்கொண்டு Clean installation செய்வது சிறந்தது என்பது என் அபிப்பராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலு;க்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், தேவகுரு கூறியது போல repair installation பண்ணும் போது சில driver files & application files களுக்கு மாற்றங்கள் வந்து நீங்கள் அவற்றை reinstall செய்ய வேண்டி வரலாம்.

சில laptop உடன் OS CD க்கு பதில் "Quick Restore" எண்டொரு CD வரும். அந்த quick restore CD போட்டு run பண்ணினால் எல்லாமே போய்விடும். சுயாதீனமாக format பண்ணி, clean install பண்ணி drivers install எல்லம் பண்ணிவிடும். உங்கள் data வும் அழிந்து விடும். ஆகவே, quick restore CD தான் வந்ததெண்டால், retail version of OS CD பயன்படுத்தி repair installation செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

Troubleshooting the computers - கம்பியூட்டர் திருத்துதல் - 3

Primary, Extended and Logical Partitions.

கம்பியூட்டர் துறை கடல் போன்றது. இதை முழுமையாக கற்றுக்கொண்டவர் யாரும் இலர். சிலர் ஒரு சில பிரிவில் நிபுணராக இருப்பர். ஒருவர் கம்பியூட்டரின் எல்லா பிரிவிலும் நிபுணர் என்று இல்லை. எமக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளவேண்டுமே தவிர, எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயன்றால் 10 வருடங்கள் முயன்றாலும் முடியாது.

ஒரு ஹாட்டிஸ்க்கை எடுத்துக்கொண்டால் குறைந்தது இரு பாட்டிசன்களாவது வைத்துக்கொள்ளவேண்டும் என முன்பு கூறியுள்ளேன். இப்போது பெரிய அளவுள்ள ஹாட்டிஸ்க்குகள் சந்தையில் காணப்படுகின்றன. ஒருவர் 160 GB Size ஹாட்டிஸ்க் வைத்துள்ளார். அதில் 35 GB ல் ஒரு Primary பாட்டிசன் உண்டாக்கி XP நிறுவி உள்ளார். மிகுதியாகவுள்ள 125 GB ல் எத்தனை பாட்டிசன்கள் நிறுவவேண்டும் அதில் Primary ஆ, Extended ஆ, Logical பாட்டிசனா நிறுவ வேண்டும் என்பதில் குழப்பமாகவுள்ளார். Disk Management க்கு போய் unallocated space ல் வலது கிளிக் செய்தால் இந்த 3 தெரிவுகளும் காணப்படும்.

சாதரணமாக வீட்டுக்கணனிகளை பொறுத்தவரை 4 பாட்டிசன்கள் தாராளம். ஒரு O/S த்தின் கீழ் 4 Primary partitions மட்டும் உண்டாக்கமுடியும். அதற்கு மேல் ஏன் வைத்திருக்க முடியாது? என்பதற்கு விடை தெரியாது. எனவே 4 அல்லது அதற்கு குறைவான partition களை வைத்திருக்க விரும்புவர்கள் Primary partition களையே உண்டாக்குங்கள். இந்த நான்கு பாட்டிசன் வரையறையை மீறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிதான் Extended Partition என்னும் முறைமை. இதன்படி மூன்று Primary partition களையும் நான்காவதை Extended Partition ஆக்கி, அந்த Extended Partition ஐ எத்தனை Logical Drive ஆகவும் பிரிக்கலாம். வீட்டு கணனிகளை பொறுத்தவரை Logical Drive அதிகம் தேவையில்லை.

அடுத்து நாம் Partition களை உருவாக்கும்போது அதன் அளவுகளை ஒரே எண்ணில் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உ.ம்: 160 GB அளவுள்ள ஹாட்டிஸ்க் வைத்திருப்பவர் நான்கு பாட்டிசன் உருவாக்க விரும்பின் நான்கையும் 40 GB யில் வைத்துக்கொள்வதை தவிர்த்து 30 GB., 35 GB, 45 GB, 50 GB என்ற அளவுகளில் வைத்துக்கொள்வது நன்று. காரணம் நாம் DOS இல் வேலைசெய்யும்போது அல்லது BIOS ல் பார்வையிடும்போது Partition களை பிரித்து அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஒரே எண்ணில் வைத்துக்கொண்டதனால் Ghost Restore செய்யும்போது மாறி தவறான பாட்டிசனில் restore செய்து கஷ்டப்பட்டவர்கள் உளர். அடுத்து பாட்டிசன்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதும் அவைகளை அடையாளப்படுத்துவதற்கு உதவும். Windows Explorer ல் பாட்டிசன் மேல் வலது கிளிக் செய்து Rename பண்ணிக்கொள்ளவும் முடியும். Primary partition னில் O/S நிறுவி Boot Volume ஆக பாவிக்க முடியும். Logical Drive வில் அப்படி செய்ய முடியாது. அதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.