Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

Featured Replies

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட முகத்துவாரம் வீதியில் உள்ள தொட்டி தவெர்ன் சந்திக்கு அருகே துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரின் முகாம் உள்ளது.

இம்முகாமில் உள்ளோரிடையே நேற்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துணை இராணுவக் குழுவினர் இருவரும் இம்மோதலின் போது அப்பகுதியைக் கடந்து சென்ற முச்சக்கர வாகன சாரதியான நஸ்ரூதின் (வயது 55) என்பவரும் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடிக்கு நஸ்ரூதின் திரும்பிக் கொண்டிருந்த போது இம்மோதலில் சிக்கிக் கொண்டார்

தமிழ் வின்

கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர்.

கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தன்வினை தன்னைச் சுடும். அழிக்கப்பட வேண்டிய புல்லுருவிநள் தாங்களாகவே அழிந்து போகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Split in Karuna group reported

The pro-government Tamil militant group led by the former LTTE commander Karuna has reportedly split, with Karuna and his deputy, Pillaiyan, falling out over money and the command structure.

Quoting military sources The Nation weekly said on Sunday that Pillaiyan had fled to Trincomalee from Batticaloa with 150 of his followers.

Pillaiyan, as the man in the field, had resented Karuna's remote control, reliable sources told Hindustan Times.

The Nation said that the infighting had led to the killing of Sindujan, a Pillaiyan loyalist who was the head of the Karuna group in Amparai district.

Sindujan and the group's intelligence chief, Seelan, were called for a meeting where a Karuna loyalist, Iniyabharathi, killed Sindujan. Seelan escaped miraculously, the paper said. The clash within the group had erupted over the distribution of money.

On the day Sindujan was killed, Karuna had invited Pillaiyan to come over for a discussion. But Pillaiyan had chosen not to go as he knew what awaited him, The Nation said.

Those in the know recall that the Karuna-Prabhakaran split in early 2004 had also occurred over the use or misuse of money. The LTTE's financel department and its intelligence chief (Pottu Amman) had alleged misappropriation of funds by Karuna, who was then the Batticaloa and Amparai district commander.

They asked the Supremo, Velupillai Prabhakaran, to take action against Karuna. Prabhkaran summoned Karuna to the Wanni for a discussion. But Karuna chose not to go because he knew what awaited him.

Instead, he split, struck an alliance with the Sri Lankan government, and formed his own Batticaloa Amparai-based politico-military organisation called Tamil Makkal Viduthalai Puligal (Tamil Peoples' Liberation Tigers).

Informed sources say that in the fight within the Karuna group, Karuna will have the upper hand because he represents the 'brand'. Given his past as Prabhakaran's deputy, Karuna is likely to get outside support and not Pillaiyan.

It is likely that Prabhakaran will try to get Pillaiyan and his men to come over to his side, taking advantage of the offer of amnesty including jobs overseas.

Pillaiyan may find it hard to survive on his own. But it remains to be seen if he will exercise the option of seeking refuge in Prabhakaran.

http://www.hindustantimes.com/StoryPage/St...+group+reported

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

f_pillaim_4e7f773.jpg

சிறிலங்கா இராணுவத்தினரின் ஒட்டு இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த கூலிக்குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான், கருணா கூலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய நிலையில் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளான். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளான். இந்த சிந்துஜனே கடத்தப்பட்ட தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினரான பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன. கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர். கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளான்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கருணா ஒட்டுக்குலிக்கும்பலிடையே தோன்றிய பிளவு தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படி, இப்பிளவை சரி செய்ய இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை பெரும் முயற்சி எடுத்து தோல்வியடைந்த நிலையில், கருணா கூலிக்கும்பலை மட்டக்களப்பிலும், பிள்ளையான் கூலிக்கும்பலை திருமலையிலும் தங்க வைக்க முயற்சி எடுப்பதாக தெரியவருகிறது. இதேவேளை கூலி பிள்ளையானின் 40 விசுவாசிகளை, கருணா கூலிக்கும்பல் கடத்தி படுகொலை செய்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

இக்கூலிகளின் இடையே தோன்றியுள்ள பிளவையடுத்து பிள்ளையான் கும்பல் எந்நேரமும் புலிகளிடம் சரணடையலாம் என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணா கும்பலிடையே பலமாக ஊடுருவியிருக்கும் புலிகளின் உளவுப்பிரிவினர், இப்பிளவையடுத்து தக்க தருணத்தில் களையெடுக்கத் தொடங்கலாம் எனவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது.

நடகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அதை அதை விதைத்தவன்

அதை அதை அறுப்பான்

கொள்கையற்றவர்களிடம் ஆயுதம் போய்ச்சேர்ந்தால் என்ன நடக்கும்

அது தாரளமாக நடக்கட்டும்

எமக்கு வேறு வேலையிருக்கறது

வரட்டா???

சிங்களவர்கள் ஒற்றுமையாக்க தான் முயற்சிப்பார்கள்

ஆனா பிள்ளையன் கருணாவை போட்டு தள்ளுவான்

கருணா வால் கனகாலம் ஒழிச்சு திரிய முடியாது.............

தற்சமையம் கருணாவல் நியமிக்கப்பட்ட கரிநாகம் கருணா படைதளபதிகளை போட்டு தள்ள

பிள்ளையன் தொடங்கி விட்டான் அதனால் தான் கட்டாயமாக சேர்க்கப்பட்ட சில கருணாகுழு(முன்னால்) தற்போது பிள்ளையன் குழு உறுப்பினர் வீடுகளில் கருணா குழு வீரம் காட்டி கொண்டு திரிகிறார்கள்

................

:P

ஆனா இதை விட உண்மை வெகு விரவில் நமக்கு நல்ல செய்தியாக கிடைக்கும்

இருநாய்களும் கடிபட போகிறது( பாவன் சில தமிழ் சனமும் தவறுதலாக மாட்டுப்படும்)

இரண்டும் கத்தி கொண்டே உலகத்தை விட்டு போகும் :P

http://www.nitharsanam.com/?art=22832

கூலிகளுக்குள் சண்டை என்பது உண்மை! ஆனால் இந்த சண்டை சிறிலங்கா அரசாலால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது போலவும், ஏதோ ஒரு தேவைக்கு இரு எச்சிலைக் கூலிகளில் ஒன்று பலிக்கடாவாகப் போகுது போலத் தோன்றுகிறது!!! இதை ஊடகவிபச்சாரி டி.பி.எஸ்ஸும் சொல்வது போலுள்ளது!!!

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கையில் நடக்கும் கடத்தல், கொலைகள், கற்பளிப்புகள் போன்ற மனித உரிமை மீறல்கள் எதிரொலிக்க தொடங்கியிருக்கும் வேளையில், அவற்றுக்கு விடை கொடுக்கவா இந்த நாடகம்???????

இரு எச்சிலிலைக் கூலிகளில் எக்கூலி வீக்கானவனே, அவனில் தலை கொய்யப்பட்டு, எல்லாம் தலையில் கொட்டப்படக் கூடிய சாத்தியங்கள் தெரிகின்றன போல!!!

வரும்நாட்களில் இவற்றுக்கு விடை கிடைக்கும்!! ஆனால் இரண்டில் ஒரு கூலிக்கு நடக்கத் தொடங்கியிருக்கும் வேள்வி இறுதிநாளில் தலை போவது தவிர்க்க முடியாதது!!!!

அது கிடக்க யார் இந்த கிருஸ்னன்???????????

பாவங்கள், லண்டனிலிருந்து "ரா"வாக இயங்குகிற "பி.பி.சி டமிலோசை"க்கு இந்தக் கூலிகளின் செய்தி இன்னும் எட்டவில்லையாம்!!! .... நல்ல பாவங்கள்!!!!! ;)

அப்போ வெகு விரவில் இனியபாரதியை பிள்ளையன் போட்டு தள்ளிடுவான்?

:P

பாவங்கள், லண்டனிலிருந்து "ரா"வாக இயங்குகிற "பி.பி.சி டமிலோசை"க்கு இந்தக் கூலிகளின் செய்தி இன்னும் எட்டவில்லையாம்!!! .... நல்ல பாவங்கள்!!!!! ;)

எங்கை மீண்டும் ஒற்றுமை ஆகிவிட மாட்டார்களோ என்ற நப்பாசையில் காவல் இருக்கிறார்களோ தெரியா?

பிள்ளையான் குழுவினரால் கருணா குழு தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதம்.

ஜ புதன்கிழமைஇ 9 மே 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ

கருணாவின் நிருவாகத்தின் கீழ் நிதித் துறையில் இருந்த கல்லாறு ஜமுனன் என்பவரிடம் கருணா மில்லியன் கணக்கில் பணத்தினை சுறுட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடுமாறு உபதேசம் செய்தார். ஆனால் சோலியன் குடும்பி சும்மா ஆடுமா? என்ன! மில்லியன் கணக்கில் சுறுட்டும் பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு கருணாவிற்கும் ஒரு மடங்கு கல்லாறு ஜமுனனுக்கும் என அக்கிறிமென்ட் எழுதினார் கருணா. பணவாசை பிடித்த கருணாவின் திட்டத்திற்கு கல்லாறு ஜமுனனும் ஆமா சாமி என புன்முறுவலோடு தலையாட்டி தனது சம்மதத்தைத் தெரிவித்தார். இத்திட்டத்தின் பிரகாரம் கைச்சாத்திட்ட அக்கிறிமென்றில் மட்டும் மாற்றமில்லை என கிசுகிசுத்தார். அவரும் வேலையை கற்சிதமாக முடித்துக் கொண்டு மில்லியன் கணக்கில் பணத்தினைச் சுறுட்;டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடினார். சுறுட்டிய பணத்தில் கருணா போட்ட அக்கிறிமென்றின் பிரபாகரம் மூன்றில் இருமடங்கு கருணாவிற்கும் ஒரு மடங்கு கல்லாற்று ஜமுனனுக்கும் சொத்தாக குவிந்தது. இந்த கல்லாறு ஜமுனனே இன்று லண்டனிலுள்ள கருணாவின் வீட்டில் காரின் சாரதியாக இருக்கின்றார். இந்த கல்லாறு ஜமுனனே பிள்ளையானின் முக்கிய சகாவும், அம்பாறை மாவட்ட இராணுவத்தளபதியுமான கல்லாற்றைச் சேர்ந்த ஜோண்சன் பிரதீபனை (சிந்துஜனை) கொலை செய்வதற்கு கருணாவின் காதுகளுக்குள் இரவும் பகலும் உபதேசம் செய்து வந்தார். இதனாலேயே கருணா பாரதியிடம் சிந்துஜனை அடித்துக் கொலை செய்யும் படி உத்தரவிட்டார். பாரதியும் கருணாவின் ஆணையினை நிறைவேற்றியுள்ளான். இதைவிடுத்து கருணாவாலும் பாரதியாலும் சிந்துஜன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பல. பிள்ளையானுடன் நின்று இரவும் பகலும் செயற்பட்ட சிந்துஜனை திட்டமிட்டு கொலை செய்வதற்காக, இரகசிய கூட்டம் ஒன்றுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் கருணா. ஆனால் சிந்துஜனோ கருணாவின் பாசாங்கு வார்த்தைகளை நம்பி சென்றான். கருணாவோ பாரதி மூலம் சிந்தஜனை சித்திரவதை செய்து அடித்துக் கொன்றதோடு, உயிரிழந்த சிந்துஜனின் உடலை கிரான் இந்து மயானத்தில் புதைத்துள்ளர். சிந்துஜனை கிரான் இந்து மயானத்தில் புதைத்த பாரதி மக்களிடம் சிந்துஜனை கொலை செய்யவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று கருணாவால் பொய்யினை கூறிவருகின்றான். கருணா 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தபட்டபோது வந்து கொழும்புக்கு வந்ததும் இந்தியாவிற்கு தப்பிச்சென்றார். அவ்வாறு இந்தியாவிற்கு தன்னுயிரைக் கொண்டு தப்பிச் சென்றவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பிள்ளையானின் அழைப்பின் பெயரில் இலங்கைக்கு வந்தார். ஜோன்சன் பிரதீபன் என்றழைக்கப்படும் சிந்துஜனின் சொந்தக் கிராமம் கல்லாறு ஆகும். லண்டனிலுள்ள ஜமுனனின் சொந்தக் கிராமமும் கல்லாறே. இதனாலேயே சிந்துஜனின் உயிருக்கு கருணாவால் ஆபத்தும் வந்தது. கருணா கல்லாறு ஜமுனனுடன் மில்லியன் கணக்கான பணத்தினை சுறுட்டிக் கொண்டது அதே ஊரைச் சேர்ந்த சிந்துஜனுக்கு தெரிந்திருந்தது. சிந்துஜனால் எதிர்காலத்தில் ஆபத்துக்கள், கருணாவின் லீலைகள் அம்பலமாகலாம் என கல்லாறு ஜமுனன் கருணாவிடம் விளக்கியிருந்தான். விளக்கியதோடு மட்டுமல்லாமல் சிந்துஜனை உயிருடன் விட்டு வைத்தால் தனக்கும் கருணாவுக்கும் ஆபத்து வரலாம் என கடுமையாக எச்சரித்திருந்தான். இதனால் லண்டனில் உல்லாச வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கும் கருணாவின் ஜமுனனையும் பீதி விட்டு வைக்கவில்லை. அவனையும் அது ஆட்கொண்டது. இந்நிலையில் சிந்துஜனால் வரப்போகும் விபரீதத்தினை அறிந்து கொண்ட கருணா சிந்துஜனை தீர்த்துக் கட்டுவதற்கு பாரதியிடம் பொறுப்புக் கொடுத்து சிந்துஜனை உயிருடன் தப்பிப் போக விடாதே எனவும் எச்சரித்திருந்தார். பாரதியும் சிநதுஜனின் கைக்கும் காலிற்கும் விலங்கிட்டு, அடித்தடித்தே சிந்துஜனின் உயிரினைப் பறித்தெடுத்தான்.

நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர் வாழ்வுக்கழகப் பிறேமினியைக் கொடூரமாகக் கொன்ற சிந்துஜன் கடைசியில் கொடிய சித்திரவதைகளுடன் தான் கொல்லப்பட்டார். எட்டப்பன் ஒருவனுக்கு கிடைத்த சரியான பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்

துணை இராணுவக் குழுவுக்குள் மோதல் ஏன்?: கொழும்பு ஊடகம்

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுவான கருணா குழுவுக்குள் மோதல் நடந்தது ஏன் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் 'த மோர்னிங் லீடர்' ஆங்கில வார ஏட்டில் டி.பி.எஸ் ஜெயராஜ் விவரித்துள்ளார்.

டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ளதாவது:

கருணா குழுவினரை பிரித்து ஆளும் உத்தியையே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் முன்னர் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் முழுமையான சமாதான முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த பிளவு மீண்டும் சேர முடியாதவாறு உருவாகியுள்ளதோ என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.

கருணாவுக்கு பிள்ளையான் விசுவாசமானவர், உயிருக்குப் பயந்து கருணா வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போது பிள்ளையானே தனது உதவியாளர்களுடன் உள்ளுரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

பின்னர் தனது பாதுகாப்புக் கருதி பனாகொடவில் கருணா முகாம் அமைத்திருந்த போது பிள்ளையான பொலநறுவை மாவட்டத்தில் முகாம் அமைத்து செயற்பட்டு வந்தார்.

சிறிலாங்காவின் புலனாய்வுத்துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கருணா வந்த போது புலனாய்வுத்துறையினால் அக்குழு வழிநடத்தப்பட்டது.

சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் கருணா குழுவினரை ஒரு குழுவாக இயங்க விடாது சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு பொறுப்பாளர்களின் கீழ் இயங்க வைத்தார்கள். அவர்களில் சின்னத்தம்பி, றியாசீலன், மங்களன், இனியபாரதி, மாக்கன் என பலர் உண்டு. இவர்களுக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பாடல்களை பிள்ளையான் மேற்கொண்டு வந்தார்.

இக்குழுவுக்கான பெரும்பாலான கட்டளைகளை சிறிலங்கா புலனாய்வுத்துறையே வழங்கி வந்தது.

கருணாவுக்கும் வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான பணத்தை பிள்ளையானே வழங்கி வந்துள்ளார்.

கொட்டாவ பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கருணாவின் நிதிப்பொறுப்பாளர் குகனேசன் கொல்லப்பட்டார். அவரே கருணாவின் பெருமளவு பணத்தை பல வழிகளில் முதலீடு செய்தவர். அது அவருக்கு மட்டுமே தெரியும்.

குகனேசனின் மரணத்துடன் எல்லாம் இழக்கப்பட்டு விட்டது.

அதன் பின்னர் வரி அறவிடுதல், மக்களை கடத்தி கப்பம் வாங்குதல் போன்ற வேலைகளை பிள்ளையானே மேற்கொண்டு வந்துள்ளார்.

கருணாவுக்கு தொடர்ச்சியாக பிள்ளையான் பணத்தை வழங்கி வந்துள்ளார். பிள்ளையான் இதில் பெருமளவான பணத்தை சம்பாதித்துள்ளார்.

கிழக்கிற்கு ஒரு இடைக்கால சபையை அமைத்து அதனை தனக்கு தர வேண்டும் என கருணா விரும்பியிருந்தார்.

ஆனால் அது கருணாவை வழிநடத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் கருணா குழுவில் மோதலை உருவாக்க செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

கருணா குழுவை இரண்டாக உடைத்தால் தம்மால் அவர்களை நிர்வகிப்பது இலகுவானது என புலனாய்வுத்துறை நம்பியது.

இதற்காக பிரித்தானியாவில் இருந்து கிருஸ்ணபிள்ளை எனப்படும் கிருஸ்ணன் வரவழைக்கப்பட்டார். இவர் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினராவார்.

பின்னர் 1990 களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உதவியுடன் கருணாவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்துள்ளார்.

கருணா, ஈ.என்.டி.எல்.எஃப்புடன் உறவுகளை பேணியது கொழும்புக்கு பிடிக்கவில்லை. எனவே புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் கிருஸ்ணன் இந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.

தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பகமையை மூட்டிவிடும் படி கிருஸ்ணன் பணிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு வந்த கிருஸ்ணன் கருணாவின் அதிகாரத்துடன் வேலையை ஆரம்பித்தார். பிள்ளையானின் நிதிக்கையாடல்கள் குறித்து கருணாவுக்கு கூறப்பட்டது. பணப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் மூண்டது.

பிள்ளையான் வசமுள்ள பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைக்கும் படி கருணா உத்தரவிட்டார். பிள்ளையான் துப்பாக்கியை தூக்க ஆயத்தமானார். கருணாவின் விசுவாசியான மட்டக்களப்பில் இருந்த இனியபாரதியை கொல்வதற்கு தனது குழுவினரை அனுப்பினார். இனியபாரதியை பிள்ளையானிடம் இருந்து பணத்தையும், கணக்குகளையும் பெற்றுக்கொள்ளும் படி கருணா பணித்திருந்தார்.

தாரக்கி சிவராமை கொலை செய்ததில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் பாரதி கூரையில் ஏறி பிள்ளையானின் கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கொண்டார்.

கிருஸ்ணனை கொல்வதற்கும் பிள்ளையான் ஆட்களை அனுப்பியிருந்தார்.

ஆனால் அதற்கு முன்னர் தனது இருப்பிடத்தில் இருந்து கிருஸ்ணன் வெளியேறிவிட்டார்.

பின்னர் இந்த பிளவு வெளிப்படையானது.

சின்னத்தம்பி, இனியபாரதி, றியாசீலன், ஜெயதான், சந்திவெளி மாமா, திலீபன், மகிலன் போன்றோர் கருணா பக்கமும், சிந்துஜன், சித்தா மாஸ்ரர், மாக்கன், சீலன், தூயவன், சசி போன்றோர் பிள்ளையான பக்கமும் பிரிந்தனர்.

கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா, மங்களன் மாஸ்ரர் போன்றோர் நடுநிலையில் இருந்தனர்.

பிள்ளையான் தனது குழுவினருடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இருந்து பொலநறுவை, திருமலை நோக்கி ஓடத்தொடங்கினார்.

கருணா ஆதரவாளர்கள் மட்டக்களப்பில் இருந்தனர்.

கிழக்கில் இருந்த படையினர் பிள்ளையானுக்கு ஆதரவளிக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ உயர்பீடம் கருணாவுக்கு ஆதரவளித்தது.

இருதரப்பு சமாதானப் பேச்சுக்களும் நடத்தப்பட்டன.

இரு தரப்புக்கும் தற்போது பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் தெற்குப் பகுதியான ஆரையம்பதி தொடக்கம் பொத்துவில் வரைக்கும் கருணாவுக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு வடக்கின் ஆறுமுகத்தான் குடியிருப்பு தொடக்கம் வெருகல் ஆறு வரைக்கும் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரம் இரு தரப்புக்கும் பொதுவாக்கப்பட்டது.

எனினும் வாக்கு வாதங்கள் முற்றியது. ஒரு சமயத்தில் மறைத்து வைத்திருந்த தமது கைத்துப்பாக்கிகளை எடுத்த இனியபாரதி மற்றும் சந்திவெளி மாமா ஆகியோர் பிள்ளையான் குழுவினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் சீலனும் மேலும் 6 பேரும் காயமடைந்தனர்.

இரு தரப்பும் எதிர்த்தரப்பினரை மனிதக் கேடயங்களாக கைப்பற்றிய வண்ணம் பின்வாங்கினார்கள். மகிலனையும் வேறு சிலரையும் பிள்ளையான் தரப்பு பிடித்துச் சென்றது.

சிந்துஜனையும் வேறு சிலரையும் கருணா தரப்பு பிடித்துச் சென்றது. இரு தரப்பும் பாதுகாப்பாக செல்வதற்காக படையினரும் இதனை அனுமதித்தனர்.

சிந்துஜனையும் ஏனையோரையும் பார் வீதியில் உள்ள அலுவகத்தில் கருணா குழு தடுத்து வைத்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 பணியாளர்களை கடத்தி கொலை செய்ததற்கு சிந்துஜனே பொறுப்பாகும்.

அதில் பிறேமினி என்ற பெண் பணியாளரை கூட்டமாக பாலியல் பாத்காரம் செய்ததிலும் சிந்துஜனே முன்னின்றவர்.

சிந்துஜனும், விஜிதரனும் தடுப்புக்காவலை உடைத்துக்கொண்டு தப்பியோட முற்பட்டனர். அவர்களை துரத்திச் சென்ற கருணா குழுவினர் கள்ளுத் தவறணை சந்தியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

அதில் விஜிதரன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சிந்துஜன் காயமடைந்தார். சிந்துஜனை இழுத்து வந்த கருணா ஆதரவாளர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

கருணா ஆதரவாளர்கள் சீலனின் மனைவியையும் கைது செய்ததுடன், பிள்ளையான் குழுவுக்கு சொந்தமான பல அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டன. சீலன், சித்தா மாஸ்ரர், சசி ஆகியோரின் வீடுகளும் உடைக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஆதரவாளர்களால் தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிந்துஜன் செய்த அட்டுளியங்களில் ஒன்றினை வாசிக்க http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=257864

சிந்துஜனையும் ஏனையோரையும் பார் வீதியில் உள்ள அலுவகத்தில் கருணா குழு தடுத்து வைத்தது.

சிந்துஜனும், விஜிதரனும் தடுப்புக்காவலை உடைத்துக்கொண்டு தப்பியோட முற்பட்டனர். அவர்களை துரத்திச் சென்ற கருணா குழுவினர் கள்ளுத் தவறணை சந்தியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

அதில் விஜிதரன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சிந்துஜன் காயமடைந்தார். சிந்துஜனை இழுத்து வந்த கருணா ஆதரவாளர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

.பிறேமினி கதறக் கதறக் சிந்துயனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். இன்று சிந்துயனோ கதற கதற இழுத்து வரப்பட்டு பின் அடித்தே கொலைசெய்யபட்டார்.

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

டிபிஎஸ் கட்டுரை மூலம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

* சமீபத்தில் இனிய பாரதி மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கின்றபோது, வீதியில் வைத்துச் சுடப்பட்டார். அது டிபிஎஸ் சொல்வது போல ஒன்று சிங்களப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட, குழுப்பிரிப்பிற்கான சதியாக இருக்கலாம்.

* முன்பு கருணாவின் சகோதரர் ரெஜி இனம்தெரியாத விதத்தில் படுகொலை செய்யப்பட்டு, காட்டுப்புறம் ஒன்றில் இருந்து அநாதரவாக மீட்கப்பட்டது. வழமை போலப் புலிகள் மீது தான் பழி போடப்பட்டது. எதிரி என்ற வகையில் அது பற்றிப் புலிகளும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி சிந்திக்கின்றபோது, புரிகின்ற விடயம் என்னவென்றால், இது கூடச் சிங்களப் புலனாய்வாளர்களின் சதியாக இருக்கக் கூடுமா என்று.

ஏனென்றால் ஆரம்ப காலத்தில் கருணா இருதலைக் கொள்ளியெறும்பாக இருந்தார். தேசியத்தலைவரை, பிரிந்த பின்னரும் தேசியத்தலைவர் என்றே உச்சரித்து வந்தார். எனவே, திரும்பவும் கருணா புலிகளோடு சேர்ந்து விடுவான் என்ற அச்சம் சிங்கள தரப்பிற்கு இருந்திருக்கலாம். முக்கியமாக ரெஜியின் குடும்பத்தினர் வன்னியில் இருந்ததால் ரெஜி மனது மாறிப், புலிகள் பக்கம் சாய்ந்து விடுவார் என்ற பயம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். எனவே ரெஜியை அழிப்பது தங்களுக்குப் பலன் தரும் என்பது மட்டுமல்ல, புலிகள் தான் ரெஜியைக் கொன்றார்கள் என்று நம்ப வைத்தால், கருணாவிற்குள்ள சகோதரபாசம் எக்காலத்திலும் புலிகளோடு கருணாவை நெருங்க வைக்காது என்று சிங்களப் புலனாய்வாளர்கள் கருதியிருக்கலாம்.

உண்மையில் அது சிங்களப் புலனாய்வாளர்களின் சதிப்படி நன்றாகவே நடந்துள்ளது. கருணா, ரெஜி கொலைக்குப் பின்னரே மூர்க்கத்தனமாக மாறினான். பல படுகொலைகளையும், அப்பாவிக் மக்களையும் கொன்றான். அல்லது கொன்றதாக சிங்களப் புலனாய்வாளர்களால் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இன்றைக்கு உலகமே வெறுக்கின்ற ஒரு ஆளாகச் சிங்களப் புலனாய்வாளர்கள் ஏற்படுத்தி விட்டார்கள். இன்றைக்குச் சிங்கள அரசு செய்கின்ற அனைத்துக் கொலைகளையும் தன் முதுகில் சுமந்து கொண்டு திரிகின்றான்.

இப்படிப்பட்ட முட்டாள்தனம் மிக்கவர்கள் தமிழீழப் போராட்டத்தில் இருந்து விலத்தியது உண்மையில் நல்லது தான். ஆனால் என்ன சோகம் என்றால், இப்படிப்பட்ட முட்டாள்கள் சிங்கள அரசின் செயற்பாடுகளுக்குத் துணைபோய், எம் மக்களைச் சாகடிப்பதோடு, தங்களின் பெயர்களையும் நாசமாக்கிக் கொள்வது தான்.

இப்படிச் சிங்கள தரப்பிற்குத் துணை போகாமல் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைக்கான காலத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால் எத் துணை போனாலும், தமிழீழ மண் என்பது தவிர, வேறு தீர்வு ஏதும் தமிழனுக்கில்லை. என்ன கஸ்டம் வந்தாலும் அதற்காகப் போராடித்தான் ஆக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

* என்னுமொரு பக்கம் பார்த்தால் சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்க பல உலகநாடுகள் முயல்கின்றன. இப்போது அமெரிக்காவின் தெற்காசியச் செயலாளர் வந்து போகின்றார். பிரித்தானியா ஒரு பக்கம் இறுக்கமாக நடக்கின்றது. இப்படியான இலங்கை நெருக்கடிக்கு இராணுவத் துணைக்குழுக்களின் அட்டகாசமும் ஒன்று என்றே அவை நம்புகின்றன. சிறிலங்கா அரசு அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்பதும் அவர்களின் முதன்மைக் குற்றச்சாட்டு. இப்படிப் பிரிந்து போய் அவர்கள் செயலிளந்து விட்டார்கள் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது கூட, துணைக்குழுக்கள் பற்றிய உவகத்தின் காட்டத்தைக் குறைக்கலாம் என அவர்கள் நம்பியிருக்கலாம்.

-------------------------

இன்றைக்கு கிழக்கில் 5 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அதில் ஒன்று சிந்துஜன் என்ற காட்டேரியினுடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. மேலதிக 4 பேர் யார் என்று தெரியவில்லையாம்.

எல்லாம் நன்மைக்கே இப்படிபட்டதுகள் இனி தமக்குள் அடிபட்டே சாகுங்கள் இதுதான் நம்க்கு தேவை

;சிந்துஜனின் தந்தையான ஜோன்சன் கருணா குழுவால் சுட்டுக்கொலை - தலையை கோடரியால் கொத்துமாறு உத்தரவிட்ட கருணா.

ஜ வியாழக்கிழமைஇ 10 மே 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ

கொலைவெறி பிடித்த கருணா சிந்துஜனை கொன்றது மில்லாமல் அவரின் தந்தையையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். சிந்துயினின் தகப்பனாரை கொலை செய்து அவருடைய தலையை கோடரியால் கொத்தி எடுத்துவருமாறு பாரதியிடம் உத்தரவிட்டதாக தெரியவருகிறது. கிரான் இந்து மயானத்தில் சிந்துஜனின் சடலம் நேற்றுப் பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருணாவின்சகா பாரதியால் அடித்துப் புதைக்கப்பட்ட சிந்துஜனின் உடலம் கிரான் மயானத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில் கருணாவின் குழு காடையர் கூட்டம் சிந்துஜனின் தந்தை ஜோன்சன் என்பவரைக் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மட்டக்களப்பில் பெரும் பதட்டம் நிலவுவதாக களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இராணுவவத் தளபதி சரத் பொன்சேகவே கருணாவின் லீலைகளுக்கும் கொலைகளுக்கும் பின்னணியில் உள்ளார்.

நிதர்சனம்

நண்பர்களை உயிருடன் கொத்தி கொலை செய்த கருணா கிரான் மயானத்தில் புதை;தார். - நேற்று மாலை ஐந்து இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

ஜ வியாழக்கிழமைஇ 10 மே 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மயானமொன்றிலிருந்து ஐந்து கருணா குழு முக்கியஸ்தர்கள் 05 பேரின் சடலங்கள் நேற்று புதன்கிழமை மாலை வாழைச்சேனை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டு இந்த மயானத்தில் புதைக்கப்பட்டிருக்கலாமெனக் கருதப்படும் இந்த ஐந்து கருணாவின் சகாக்கள் குறித்து வாழைச்சேனை பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் தகவலொன்று கிடைத்திருந்தது. இதையடுத்து, மயானத்திற்குச் சென்ற பொலிஸார், அரை குறையாகவும் அவசர அவசரமாகவும் புதைக்கப்பட்டிருந்த ஐந்து கருணா குழுவினரின் சடலங்களையும் மீட்டு வந்து வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். கிழக்கில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இவையெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஐந்து சடலங்களில் ஒன்று நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மோதலில் கொல்லப்பட்ட சிந்துஜன் (ஜோன்சன் ஜெயகாந்தன் - வயது 31, பெரியகல்லாறு) என்பவரது சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார். ஏனைய கருணா குழுவினரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த 4 சடலங்களும் அடையாளம் காணப்படுவதற்காக வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிதர்சனம்

Karuna split deepens, associates killed

The split in the Karuna faction has deepened with reports that its spokesman Azad Maulana and close aids of Karuna had fled the country fearing retribution. On Wednesday night a relative of the Ampara military wing leader was shot dead while rumors spread that more Karuna associates were believed to have been shot dead over the last few days by loyalists of the group’s intelligence head Pillayan who split from Karuna following an internal dispute. However, none of the reports could be confirmed as political officials of the Karuna faction were not willing to speak to the media over the emerging reports.

http://www.dailymirror.lk/2007/05/11/front/06.asp

இன்னும் பிபிசி தமிழ் ஓசை தூங்குகிறதா? :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவி ஒட்டுப்படையின் உத்தியோகப்பற்ற பிரச்சார ஊடகமாய்த் திகழும் பி்பி.சி தமிழோசையும் அதன் அறிவிப்பாளர் சீவனும் இதுபற்றி மூச்சும் விடுவதாய் காணோம் .. விழிப்பு ..

எது எப்படியிருந்தாலும் நல்ல சங்கதியள் நடக்கைக்கை சந்தோசப்படுவோம். கிழக்கின் நலன் காக்கப்புறப்பட்டதுகளா இதுகள்?

  • கருத்துக்கள உறவுகள்

துணை இராணுவ குழுவினருக்குள் வலுக்கும் மோதல்

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களான கருணா குழுவிற்கும், பிள்ளையான் குழுவிற்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணா குழுவின் பேச்சாளரான அசாத் மௌலான தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு தப்பியோடியிருக்கின்றார்.

கடந்த புதன்கிழமை கருணா குழுவின் அம்பாறை மாவட்ட பெறுப்பாளரின் உறவினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து கருணாவிற்கு ஆதரவான பலர் பிள்ளையான் அணியினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவியுள்ளன.

எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.