Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது.

உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர்.

உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே

வெளிபடைத்தன்மை அல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயற்பட்டது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வெளிப்படையான எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடைபெறவில்லை. இந்த அமைப்பின் நிhவாகத்தில் இருப்பவர்கள் யார் என்பது பொதுமக்கள் எவருக்கும் தெரியாது. எமக்கு கிடைத்த ஒரு தகவலின் படி கடந்த வருடம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் சில நபந்தனைகளுடன் பொறுப்பை ஏற்றுக்கொணடுள்ளார். ஆனால் தொடர்ந்து உலகச் சிறுவர் காப்பகத்தின் பொறுப்பாளராக இருப்பது தனது தனிப்பட்ட பெயருக்கு களங்கமாக அமையும் எனக்கூறி பின்பு வெளியேறியுள்ளார். உலகச் சிறுவர் காப்பகத்தின் இணையத்தளத்திலும் நிர்வாகம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

உலகச் சிறுவர் காப்பகம் 20008ம் ஆண்டிலிருந்து செயல்படுகின்ற போதும் கணக்காய்வு செய்யப்பட்ட எந்த ஒரு கணக்கறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த அமைப்பின் இணையத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக மட்டும் இந்த அமைப்பு உருவாக்கப்படவும் இல்லை.

2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகமானது ஈபிடிபியின் கொழும்பு இணைப்பாளர் பாபுசர்மா ஊடாக மகேஸ்வரி அறக்கட்டளைக்கு பணம் அனுப்பியுள்ளனர். இவர்கள் முதல் கட்டமாக அனுப்பிய உதவிகள் ஆயுததாரி டக்ளஸ்தேவானந்தாவால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விடயம் தினக்குரல்; பத்திரிகையில் வெளியாகியும் இருந்தது. பத்திரிகையில் வந்த செய்தியை பாபுசர்மா பதிவெடுத்து உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் ஈபிடிபியின் புலம்பெயர் நாடுகளில் உள்ள இணைப்பாளர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். விடயம் அம்பலமாகியதும் மேலதிக உதவிகளுக்கான செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை.

2009ம் ஆண்டு உலகச் சிறுவர்காப்பகம் நடாத்திய ஒரு நிகழ்வில் டென்மார்க் அகதிகள் சபையில் வேலை செய்யும் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஒருவர் சிறிப்பு அதீதியாக அழைக்கப்பட்டு அகதிகள் சபைக்கு உதவிப்பணம் அவரிடம் மேடையில் வழங்கப்பட்டிருந்தது.

இப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்களை அழைத்து நிதி சேகரிப்பை அடிப்படையாக கொண்டு மாபெரும் கலை நிகழ்வு ஒன்று நடாத்தப்படுகின்றது. நிகழ்விற்கான நுளைவுச் சீட்டுக்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்படும் மாலதி கலைக்கூடத்தின் பொறுப்பாளர்களினால் வீடு வீடாக விற்பனை செயயப்படுகின்றது.

இதனூடாக பாரிய நிதி சேகரிப்பு ஒன்று தமிழர் ஒருகிணைப்பு குழுவால் மேற் கொள்ளப்படுகின்ற போதும் இந்த நிதியும் மகேஸ்வரி அறக்கட்டளையூடாகவா அனுப்பப்படும் என்பது எவருக்கும் தெரியாது. அத்துடன் இந்த நிதிக்கான கணக்கறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கணக்கறிக்கையையோ அல்லது எதற்காக ஈபிடிபி ஒட்டுக்குழு ஊடாக மக்களுக்கு உதிவி செய்ய வேண்டும் என கேள்வி கேட்பவர்கள் வழமைபோன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் துரோகியாக அறிவிக்கக்கூடும் என்பதால் விபரம் தெரிந்த அனைவரும் மௌனம் காக்குகின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாலதி கலைக்கூடத்தினால் விற்பனையாகிய 200குறோண்களுக்கான இந்த நுளைவுச் சீட்டை வாங்கிய ஒருவர் கருத்து கூறுகையில் தான் வரும் கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதாகவும் அப்போது யாழில் ஈபிடிபி யால் பிரச்சனை வராது இருக்கவே இந்த நுளைவுச்சீட்டை வாங்கியதாக கூறினார்.

Thinakkural_Child_10-9-09.jpg

http://www.tamil.tamilvoice.dk/?p=6317

Edited by Tamilvoice

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

epdptcc.jpg

Edited by Tamilvoice

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக செயலகமும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும்  இலங்கையரசிடம் சரணடைந்து  பல காலமாகிவிட்டது.  அதன் பொறுப்பாளர்கள் எல்லாருமே  சாதாரணமாய் இலங்கை  போய்விட்டு வந்து  இங்கை உள்ளவங்களை உசுப்பேத்துவாங்கள். இதுதான் நடக்கிது  இன்னும் கொஞ்ச காலங்கள்தான்  பிறகு  எல்லாம் கரைஞ்சிடும்.

Edited by sathiri

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாலதி கலைக்கூடத்தினால் விற்பனையாகிய 200குறோண்களுக்கான இந்த நுளைவுச் சீட்டை வாங்கிய ஒருவர் கருத்து கூறுகையில் தான் வரும் கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதாகவும் அப்போது யாழில் ஈபிடிபி யால் பிரச்சனை வராது இருக்கவே இந்த நுளைவுச்சீட்டை வாங்கியதாக கூறினார்.

  ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து இனவழிப்பை செய்யும் டக்ளஸ் போன்ற ஒட்டுக்குழுக்கள் அகற்றப்பட வேண்டும்.

  ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து இனவழிப்பை செய்யும் டக்ளஸ் போன்ற ஒட்டுக்குழுக்கள் அகற்றப்பட வேண்டும்.

இதை உங்களிடம் இந்த இடத்தில் எதிர்பார்த்தன்.இப்ப நான் தெளிவாகிட்டன்.இன்னுமொரு அரைப்புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறன் இந்த இடத்தில் குறிப்பிட்ட ஊழல் புலமபெயர் அமைப்புகளுக்கு எதிரான கருத்துக்களை திசை திருப்ப.

  • கருத்துக்கள உறவுகள்
  ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து இனவழிப்பை செய்யும் டக்ளஸ் போன்ற ஒட்டுக்குழுக்கள் அகற்றப்பட வேண்டும்.

அப்ப அவர் ஊடாக நிதி கொடுக்கும் அனைத்துலக செயலகத்தையும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும்  என்ன செய்யலாம். அகற்றத்தானே வேண்டும்.

புலம்பெயர் அமைப்புக்களில் உள்ள தமிழர்கள், நீங்கள் / நாங்கள், ஊழல் ஒரு அமைப்பில் இருந்தால் அதற்கு உதவாமல் விடலாம். உதவ சொல்லி கட்டாயம் இல்லை.

ஆனால், தாயகத்தில் அவ்வாறு இல்லை. அங்கே ஊழலோ இல்லை கப்பமோ கேட்டால் கொடுத்தால் கொடுத்ததாகவே வேண்டும். அப்படி கொடுத்தாலும் கொல்லப்படலாம்  :( ஜனநாய வாதிகள் என்ற ஒட்டுக்குழுக்களால் இல்லை சிங்கள போர்குற்றவாளிகளால்.

எந்த திசையில் பார்த்தாலும் இதுவே செய்தியின் சாராம்சம் :D

அப்ப அவர் ஊடாக நிதி கொடுக்கும் அனைத்துலக செயலகத்தையும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும்  என்ன செய்யலாம். அகற்றத்தானே வேண்டும்.

கொடுக்காமல் விடலாம்.

அதையும் மீறி தாயகம் செல்லும் தேவை இருப்பின் அதை தவிர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களில் உள்ள தமிழர்கள், நீங்கள் / நாங்கள், ஊழல் ஒரு அமைப்பில் இருந்தால் அதற்கு உதவாமல் விடலாம். உதவ சொல்லி கட்டாயம் இல்லை.

ஆனால், தாயகத்தில் அவ்வாறு இல்லை. அங்கே ஊழலோ இல்லை கப்பமோ கேட்டால் கொடுத்தால் கொடுத்ததாகவே வேண்டும். அப்படி கொடுத்தாலும் கொல்லப்படலாம்  :( ஜனநாய வாதிகள் என்ற ஒட்டுக்குழுக்களால் இல்லை சிங்கள போர்குற்றவாளிகளால்.

எந்த திசையில் பார்த்தாலும் இதுவே செய்தியின் சாராம்சம் :D

கொடுக்காமல் விடலாம்.

அதையும் மீறி தாயகம் செல்லும் தேவை இருப்பின் அதை தவிர்க்கவேண்டும்.

இப்பொழுது விவாதமே  கொடுத்து முடிந்ததை பற்றியது   அப்படியானால்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும்  அனைத்துலக செயலகமும்  ஊழல் அமைப்பு என்கிற  சந்தேகம்   மக்களிடம் எழுவதை தவிர்க்க முடியாது. அப்படித்தானே ??  எனவே இனியாவது  அனைத்துலகத்திற்கும்  ஒருங்கிணைப்பு குழுவிற்கும்  நீங்கள் ஓடியோடி  மாய்ந்து கருத்து எழுதுவதை தவிர்க்கவும்  அவர்களிற்காக  தொடந்து  வக்காலத்து  வாங்கினால்  ஒன்றும்  செய்ய முடியாது

அனைத்துலக செயலகமும்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும்  இலங்கையரசிடம் சரணடைந்து  பல காலமாகிவிட்டது.  அதன் பொறுப்பாளர்கள் எல்லாருமே  சாதாரணமாய் இலங்கை  போய்விட்டு வந்து  இங்கை உள்ளவங்களை உசுப்பேத்துவாங்கள். இதுதான் நடக்கிது  இன்னும் கொஞ்ச காலங்கள்தான்  பிறகு  எல்லாம் கரைஞ்சிடும்.

ஏன் அண்ணை அப்பாவிகள் மீது பழி போடுறீயல்?

#1 : இப்பொழுது விவாதமே  கொடுத்து முடிந்ததை பற்றியது   அப்படியானால்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும்  அனைத்துலக செயலகமும்  ஊழல் அமைப்பு என்கிற  சந்தேகம்   மக்களிடம் எழுவதை தவிர்க்க முடியாது. அப்படித்தானே ?? 

#2: எனவே இனியாவது  அனைத்துலகத்திற்கும்  ஒருங்கிணைப்பு குழுவிற்கும்  நீங்கள் ஓடியோடி  மாய்ந்து கருத்து எழுதுவதை தவிர்க்கவும்  அவர்களிற்காக  தொடந்து  வக்காலத்து  வாங்கினால்  ஒன்றும்  செய்ய முடியாது

#1: டக்ளசினதும் சிங்கள போர்குற்றவாளிகளினதும் பணபறிப்புகள் நிலப்பறிப்புக்கள் சொத்து பறிப்புக்கள் தொடருகின்றன

#2: முடிந்தால் அப்படி எழுதிய கருத்தில்  இந்த கேள்வியை முன் வையுங்கள் (கற்பனை வேண்டாம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈபிடிபி டக்ளஸ் க்கு பணம் அனுப்பும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் உலகசிறுவர் காப்பகம் நடாத்தும் நிதி சேகரிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் சிலர்... Artister: Robo Shankar, Prem Gopal, Premini, B-Darious, Geethalayam Art Institute, Dancing Demons, VM Stars, Thamilini Santhos, Sivappu Sooriyan, Vinoth Iyer, Vasanth, Julia Jesuthasan, Archana......

  • கருத்துக்கள உறவுகள்
#1: டக்ளசினதும் சிங்கள போர்குற்றவாளிகளினதும் பணபறிப்புகள் நிலப்பறிப்புக்கள் சொத்து பறிப்புக்கள் தொடருகின்றன

#2: முடிந்தால் அப்படி எழுதிய கருத்தில்  இந்த கேள்வியை முன் வையுங்கள் (கற்பனை வேண்டாம்)

வட்டு கோட்டைக்கு   வழி எது தம்பி ???

துட்டுக்கு  இரண்டு கொட்டைப்பாக்கு

இனி யாழ் உறவுகள் இனம் கண்டு கொள்வார்கள் நன்றி வணக்கமுங்கோ :lol:

Edited by sathiri

ஈபிடிபி டக்ளஸ் க்கு பணம் அனுப்பும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் உலகசிறுவர் காப்பகம் நடாத்தும் நிதி சேகரிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் சிலர்... Artister: Robo Shankar, Prem Gopal, Premini, B-Darious, Geethalayam Art Institute, Dancing Demons, VM Stars, Thamilini Santhos, Sivappu Sooriyan, Vinoth Iyer, Vasanth, Julia Jesuthasan, Archana......

இவர்கள் விடயம் தெரியாத அப்பாவிக்கலைஞர்கள்.இந்த விசம்கள் உடுத்திருக்கும் போலிதமிழ்தேசிய முகம் கண்டு ஏமாந்து போபவர்கள்.அவர்களை திட்டி பலன் இல்லை இந்த விசக்கிருமிகளை ஒழிக்காமல்.

வட்டு கோட்டைக்கு   வழி எது தம்பி ???

துட்டுக்கு  இரண்டு கொட்டைப்பாக்கு

இனி யாழ் உறவுகள் இனம் கண்டு கொள்வார்கள் நன்றி வணக்கமுங்கோ :lol:

உண்மை சாத்திரி  :D  :D

அகூத.இதுவரை பிடிகொடுக்காமல் இருந்து வந்தனீங்கள் இதில் அவசரப்பட்டுவிட்டீர்கள்.கண்டிப்பாக இங்கு உறுப்பினராக இல்லாவிட்டாலும் யாழை வாசிக்கும் பலநூறு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அவதானிப்பவர்கள் இன்று தெளிவாகிவிடுவார்கள்.இன்னுமொரு உறுப்பினர் வரவேண்டும்.காணவில்லை.பலத்த வெள்ளபெருக்கில் வெழித்தெரியாமல் வேர்கள் எத்தனைகாலமிருக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
உண்மை சாத்திரி  :D  :D

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள். 

உங்கள் ஆசியுடன் நீண்ட காலம் இருப்பேன், சந்தேகம் வேண்டாம்  :D

ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள். 

யாழ் கள உறுப்பினர்கள் நிச்சயம் இனம் கண்டு கொள்வார்கள் என்பதில் எனக்கும் உங்களுக்கும் நம்பிக்கை நிச்சயம் உள்ளது  :D

இவர்கள் விடயம் தெரியாத அப்பாவிக்கலைஞர்கள்.இந்த விசம்கள் உடுத்திருக்கும் போலிதமிழ்தேசிய முகம் கண்டு ஏமாந்து போபவர்கள்.அவர்களை திட்டி பலன் இல்லை இந்த விசக்கிருமிகளை ஒழிக்காமல்.

மூல விசக்கிருமிகள் தாயகத்தில் தானே உள்ளனர்  :icon_idea:

மூல விசக்கிருமிகள் தாயகத்தில் தானே உள்ளனர்  :icon_idea:

traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma

  • கருத்துக்கள உறவுகள்
traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma

உலகமறிந்த திருடர்கள் இவர்கள்.உலகமறியாமல் பலர் இருக்கிறார்கள்..பிரான்சில் ஒரு பாடசாலையில் நிகழ்ந்த சம்பவமும் அறிந்திருப்பீர்கள்.

அதற்கு பிரதம விருந்தினராக யார் வருகைதந்தார்கள் என்று யாழில் ஒரு விவாதம் நடந்தது.

Edited by சுபேஸ்

சுபேஸ்,
ஒரு செய்தியில் பல அங்கங்கள் இருக்கலாம், அதில் ஒன்றைத்தான் எல்லோரும் ஏற்று கருத்தை முன்வைக்கவேண்டுமா?
நான் பதில் எழுதியது கீழே உள்ள மூலச்செய்திக்கு. அது தவறா? இல்லை  :D

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாலதி கலைக்கூடத்தினால் விற்பனையாகிய 200குறோண்களுக்கான இந்த நுளைவுச் சீட்டை வாங்கிய ஒருவர் கருத்து கூறுகையில் தான் வரும் கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதாகவும் அப்போது யாழில் ஈபிடிபி யால் பிரச்சனை வராது இருக்கவே இந்த நுளைவுச்சீட்டை வாங்கியதாக கூறினார்.

http://www.tamil.tamilvoice.dk/?p=6317

அதற்கு நான் வைத்த கருத்து இது.

  ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து இனவழிப்பை செய்யும் டக்ளஸ் போன்ற ஒட்டுக்குழுக்கள் அகற்றப்பட வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தவறு இல்லை அகூதா அண்ணை....இவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள்...ஆனால் இவர்களில் பலரையே போராளிகள் திருந்தி வந்தபோது தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட அனுமதித்திருந்தனர்..எனவே இங்கு புலம்பெயர் நாடுகளில் தவறு செய்பவர்கள் எம்மவர்கள்..அவர்களை ஒதுக்கிவிடாமல் தமது தவறை திருத்திகொண்டு பயணிக்கவேண்டும்..

Edited by சுபேஸ்

ஏன் காசை கொடுத்து அடி வாங்குகிறியள்.  உதவி என்றால் இனி இல்லை என்றே தமிழரிடம் மறு மொழி வரும்

இப்பிடித்தான் யாழ்கள நண்பர்கள் நாடாத்தும் உதவி நிறுவனம் மீதும் இவர்கள் கருணா பிள்ளையான் ஊடாக உதவி செய்கிறார்கள் இல்லை என்றால் கிழக்கில் இவர்கள் தன்னிச்சையாக உதவ முடியாது என்று சிலர் கூறினார்கள். டிசம்பரில் சுவிசில் நடந்த நிகழ்ச்சிய அரசாங்க நிகழ்ச்சி என்று சொன்னார்கள் அது போலவே இப்ப இதையும் கூருகிறாகள்.s இப்படியான பிரச்சாரம் மூலம் முழு உதவியையும் தடுக்கும் நோக்கம் தான் தெரியவில்லை.  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

டிசம்பர் சுவிசில் நடந்த நிகழ்வை அரசாங்கம் நடத்தியதா யார் சொன்னது. அந்த இணைப்பை இங்கே இணைக்க முடியுமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.