Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விக்கியின் அமைச்சரவை அமைச்சர்கள் இவர்கள் தான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்லது. இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  

இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.   இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சரினால் யாழ்ப்பாணத்தில் இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

=====================

இதுக்கா இவ்வளவு இழுபறி................... :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தினைப் பிடித்த புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தனுக்கு எந்தவித அமைச்சர் பதவியும் கொடுக்கப்படாதது கவலைக்குரிய விடயம். அதாவது, அனைத்துக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுத்துள்ளனர். புளொட்டுக்கு கொடுக்கவில்லை.

தமிழரசுக் கட்சி எதேச்சதிகாரமாகச் செயற்படுவது இதில் இருந்து மிகத் தெளிவாகவே புலன்படுகின்றது. இவ்வாறான நிலைப்பாட்டினையே தொடர்ந்து கடைப்பிடித்தால் ஒற்றுமை எங்கே நீடிக்கும்?

அடுத்து, தமிழரசுக் கட்சி தனது சார்பில் முதலமைச்சராக சி.விக்கினேஸ்வரனை நியமித்தால் அமைச்சருக்கும் தனது கட்சி சார்பில் நியமிப்பது தவறு. அதனை தம்மோடு இணைந்துள்ள கட்சிக்கு கொடுப்பதே அழகு.

சிறீதரனை திருப்திப்படுத்துவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது வேதனையான விடயமே.

எது எப்படி இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை நீடிப்பதே அழகு.

புலத்தில் உள்ள பெரும்பாலானோர் சி.விக்கினேஸ்வரன் மகிந்தவுக்கு முன்பாக பதவியேற்றது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் சி.விக்கினேஸ்வரன் சரியாகவே தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

எதுவாக இருந்தாலும், தொடக்கத்திலேயே குறை கண்டு பிடிப்பதனை விட்டு வட மாகாண சபையின் செயற்பாடுகளைப் பார்த்துவிட்டு விமர்சிப்பதே நன்று.

எதற்கு எடுத்தாலும் விமர்சிப்பதனையே பலர் பிழைப்பாகக் கொண்டுள்ளமை வேதனையளிக்கின்ற விடயமாகும்.

புளட்டிட்கு பதவி கொடுக்கவில்லை என்று சிலர் தூக்கி பிடிப்பதை நிறுத்த வேண்டும்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தினைப் பிடித்த புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தனுக்கு எந்தவித அமைச்சர் பதவியும் கொடுக்கப்படாதது கவலைக்குரிய விடயம். அதாவது, அனைத்துக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுத்துள்ளனர். புளொட்டுக்கு கொடுக்கவில்லை.

தமிழரசுக் கட்சி எதேச்சதிகாரமாகச் செயற்படுவது இதில் இருந்து மிகத் தெளிவாகவே புலன்படுகின்றது. இவ்வாறான நிலைப்பாட்டினையே தொடர்ந்து கடைப்பிடித்தால் ஒற்றுமை எங்கே நீடிக்கும்?

அடுத்து, தமிழரசுக் கட்சி தனது சார்பில் முதலமைச்சராக சி.விக்கினேஸ்வரனை நியமித்தால் அமைச்சருக்கும் தனது கட்சி சார்பில் நியமிப்பது தவறு. அதனை தம்மோடு இணைந்துள்ள கட்சிக்கு கொடுப்பதே அழகு.

எப்பொழுதுமே

பக்க  சார்பாகவும்

ஒரு பகுதியை  ஒதுக்கியும்  தவிர்த்தும் தான்  தங்களுடைய  கருத்து இருக்கிறது என்பதற்கு இதே நல்ல உதாரணம்.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கவேண்டுமென்று அடிக்கடி பிசத்தம் தாங்கள்

இங்கு விருப்புவாக்கு அடிப்படையில்

முதலாமவருக்கு முதலதைச்சர் பதவி

அதற்கு அடுத்து மூன்றாவது இடத்துக்கு வக்காலத்த வாங்குவது ஏன்???

இரண்டாவது தீண்டத்தகாததா???? :(  :(  :(  :( 

நீங்களும்

உங்கட நியாயங்களும

உங்கட ஐனநாயகமும்............ :( 

யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாவது இடத்தினைப் பிடித்த புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தனுக்கு எந்தவித அமைச்சர் பதவியும் கொடுக்கப்படாதது கவலைக்குரிய விடயம். அதாவது, அனைத்துக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுத்துள்ளனர். புளொட்டுக்கு கொடுக்கவில்லை.

நான் இன்னொரு திரியில் சித்தர் பற்றி எழுதியத்தை சில மாறுதல்களுடன் மீண்டும் பதிகின்ரேன்.
 
சித்தர் 2011 மட்டும் இலஙகை இராணுவத்தின் ஒரு அங்கமாக ஒரு அமைப்பை தலமை தாங்கி நடாத்தி (command responsibility) எந்த தமிழ் மக்களை பிரதிநிததுவம் செய்ய வாக்கு கோட்டாரோ ஆதே மக்களை கொடுமைக்கு ஆளாக்கியவர். மகிந்தர் எப்படி கொலைகாரனோ அப்படியே இவரும். 
அவரை 3வதாக விருப்பு வாக்கு போட்டு தேர்வு செய்த மக்கள் அதை மறந்து விட்டது ஜனாயகம் எப்படி அநியாயம் செய்யலாம் என்றததுக்கு ஒரு சான்று.
 
2009ல் தாற்காலிக முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட எமது உறவுக்காலி கண்காணிப்பதிலும், காட்டிக்கொடுப்பதிலும் இந்த குழு செய்த வேலைகள் பற்றி HRW/UNHCR எழுதியிருந்தது. அது மட்‌டுமல்லாமல் வவுனியாவில் இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கி வந்த இவரை தலமையாக கொண்ட குழு இன்று ஜனாயகம் பேசுகின்றாரகள். அதைக்கெட்டு நாங்கள் அவர் விருப்பியததை கொடுக்கவும் வேண்டுமாம்!!. 
 
இவரைப்போலவே இன்னும் சில ஜனாயக பிரியர்கள் செய்யாத கொடுமைகளை செய்துவிட்து மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு கூடமைப்புக்குள் இருக்கின்றார்கள். டக்கிளசு போலவே இவர்களையும் மக்கள் களையவேண்டும்
 
ஆங்கிலம் தெரிந்தவர்கள் வாசியுங்கள்:
 
The Human Rights Watch (HRW) report ‘War on the Displaced - Sri Lankan 
Army and LTTE Abuses against Civilians in the Vanni’ of February 2009 noted that:
 
“Sri Lankan authorities have ignored calls from the international community to ensure the civilian nature of the camps. The perimeters of the sites are secured with coils of barbed wire, sandbags, and machine-gun nests. There is a large military presence inside and around the camps…Several sources reported to Human Rights Watch the presence of plainclothes military intelligence and paramilitaries in the camps. A UN official in Vavuniya told Human Rights Watch that she and colleagues have seen members of paramilitary groups in different camps. In particular, local staff members recognized several members of the People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), a pro-government Tamil paramilitary organization long 
implicated in abuses, present at one of the camps. While officially the camps are run by civilian authorities, in reality the military remains in full control, ensuring, as one relief worker put it, that ‘nobody gets in or out.’
 
“Displaced persons confined in the camps enjoy no freedom of movement and are not allowed any contact with the outside world.” 
 
The UNHCR Eligibility Guidelines for Assessing the International Protection 
Needs of Asylum-Seekers from Sri Lanka (UNHCR Guidelines 2009), April 2009 noted that:
 
In addition to the military, police and security forces, the LTTE [prior to their defeat], the TMVP and armed factions of other political parties such as the EPDP and the PLOTE as well as criminal groups have all been implicated in the high number of abductions, disappearances, killings, extortions and forced recruitments in Sri Lanka.
 
எப்பொழுதுமே

பக்க  சார்பாகவும்

ஒரு பகுதியை  ஒதுக்கியும்  தவிர்த்தும் தான்  தங்களுடைய  கருத்து இருக்கிறது என்பதற்கு இதே நல்ல உதாரணம்.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கவேண்டுமென்று அடிக்கடி பிசத்தம் தாங்கள்

இங்கு விருப்புவாக்கு அடிப்படையில்

முதலாமவருக்கு முதலதைச்சர் பதவி

அதற்கு அடுத்து மூன்றாவது இடத்துக்கு வக்காலத்த வாங்குவது ஏன்???

இரண்டாவது தீண்டத்தகாததா???? :(  :(  :(  :( 

நீங்களும்

உங்கட நியாயங்களும

உங்கட ஐனநாயகமும்............ :( 

வீசுகு ஆனந்தி அக்கா பற்றி கவலை வேண்டாம். அவர் ஒரு பொறுப்பில் வருவார். பொருத்திருங்கள். அவர் ஒரு குறிக்கோளை கொண்ட பெண்மணி. அவ்ருக்கு அதட்கு தகுந்த பொறுப்புக்கள் வரும். :) 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஆனந்தி அக்கா பற்றி கவலை வேண்டாம். அவர் ஒரு பொறுப்பில் வருவார். பொருத்திருங்கள். அவர் ஒரு குறிக்கோளை கொண்ட பெண்மணி. அவ்ருக்கு அதட்கு தகுந்த பொறுப்புக்கள் வரும். :) 

நன்றி  பதிலுக்கு....

நான் அவருக்கு பதவி கேட்டு எழுதவில்லை

இவரது ஐனநாயகத்தை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

எந்தவித  குளப்பங்களையும் கூட்டமைப்புக்குள் தற்பொழுது செய்யக்கூடாது என்பதில்

அனந்தி மற்றும் உங்கள்  போன்றே  நானும் இருக்கின்றேன்.

கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 08 ஒக்டோபர் 2013 15:11

mullai1.JPG

-சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் தெரிவில் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதிற்கான காரணத்தினை கோரிய மகஜர் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

mullai2.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச் சூழல் ஆர்வம் மிக்கவரும்.. இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்து அங்குள்ள நடைமுறைகளை விளங்கிக் கொண்டவருமான.. பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சர் ஆகி இருப்பது.. வடக்கின் சுற்றுச் சூழல்.. இயற்கை வளப் பாதுகாப்பு.. ஆராய்ச்சி.. வனங்களைப் பேணல்..மீள் வனமாக்கல்.. வள முகாமைத்துவம்.. வள மீள்சுழற்சி.. மீளும் வளங்களின் பாவனை.. காபன் வெளியேற்றக் கட்டுப்பாடு.. விவசாய மேம்பாடு.. வெளிநாட்டு ஏற்றுமதிக்கான தரமான விவசாய உற்பத்தி என்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி.. எம் மக்களையும் மண்ணையும் மெருகூட்டுவார் என்று நம்புவோமாக.

மற்றவர்கள் யார் என்றே தெரியாது..! அவர்களின் பின்னணியும் தெரியாது. சோ.. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.. செய்யனுன்னு சொல்ல முடியாது..! :icon_idea::)

நன்றி  பதிலுக்கு....

நான் அவருக்கு பதவி கேட்டு எழுதவில்லை

இவரது ஐனநாயகத்தை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

எந்தவித  குளப்பங்களையும் கூட்டமைப்புக்குள் தற்பொழுது செய்யக்கூடாது என்பதில்

அனந்தி மற்றும் உங்கள்  போன்றே  நானும் இருக்கின்றேன்.

விசுகு மனிக்கவும். இப்போ நான் விளங்கிக்கொண்டேன்.
 
ஆனந்தி அக்கா பாதுகாப்பு ஒன்றை மட்டும் பற்றி தான் கவலைக்கொண்டுளார். ஆனால் நாங்கள் பெண்கள் விடயமாக கொஞ்சம் குழப்பம் போடவேண்டிவந்தது. மற்றைய திரியில் சில விடயங்களை பகீர்ததிருந்த்தேன்.புலிகளின் காலத்தில் அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் கொடுத்தார்கள். போருக்கு பிந்திய இந்த காலகட்டதில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி நாம் மிகுந்த கரிசனை கொண்டு அதை கையாள தகுந்தவரை நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். 

கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 08 ஒக்டோபர் 2013 15:11

mullai1.JPG

-சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் தெரிவில் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதிற்கான காரணத்தினை கோரிய மகஜர் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

mullai2.JPG

மாவட்ட அடிப்படையில் அமைச்சு தீர்மானிக்கப்படவில்லை. எனவே தேர்தெடுக்கப்பட்ட எல்லா அமைச்சர்களும் உங்கள் மாவட்டட்த்ுக்கும் உரியவரே. அவர்களோடு உரிமையோடு உங்கள் தேவைகளை பகிரமுடியும்
  • கருத்துக்கள உறவுகள்

வர வர நம்ம நெடுக்ஸ் அண்ணா பண்ணுற காமடிக்கி அளவே இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு

மத்திய மீன் பிடி அமைச்சருக்கே இம்புட்டு அதிகாரம் இருக்கோ தெரியா

இதுக்குள்ள இவர் இப்பிடி செய்வார் அப்பிடி செய்வார் என்டுகிட்டு....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஒன்றும்.. பெரிய அதிகாரத்தை வைச்சு செய்யுற நடவடிக்கைகளைச் சொல்லவில்லை. எமது மண்ணின் வளத்தை பாதுகாக்கிற.. எமது மக்களின் விவசாய மேம்பாட்டை செய்யுற.. சுற்றுச் சூழலை பாதுகாக்கிற நடவடிக்கைகளைத் தான் எடுக்கச் சொல்லுறம்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் செய்ய முடிந்தது என்றால் ஒரு மாகாண அமைச்சால் ஏன் முடியாது..???!

நீங்கள் பழையதை மறந்திட்டீங்க போல. 4 வருசத்துக்க...! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இராணுவம் அற்ற சூழ் நிலை முழுக்க முழுக்க புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது சாத்தியமாகி இருக்கலாம் இப்ப ஒட்டுக்குழுக்கள் இராணுவம் ஆளுநர் என்று தடை போட ஏகப்பட்ட பேர்.....

தமிழ் ஈழ பொருண்மிய மேன்பாட்டு கழகம்

வழியால் தான் மகாஜனா விற்கு மருதனார் மடத்திற்கு செல்வதுண்டு.......

அந்த கட்டிடம் கூட தமிழ் ஈழத்தில் செய்த சிமெண்ட் இல் கட்டி இருந்தார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறுவாயில்லையே. பழையது.. உங்களுக்கும் நினைவிருக்குது. :)

மாகாண சபைன்னு சொல்லி வந்திட்டு.. ஆமிக்கும்.. ஆளுனருக்கும்.. பயந்திட்டு இருந்தால் என்ன பயன். அதிலும் மாகாண சபையை புறக்கணிச்சிருக்கலாம். உலகம்.. தமிழ் மக்கள் உந்தச் சபையில் எதுவும் இல்லை என்று நினைக்கிறார்கள் என்று கருத்திட்டிருக்கும். இப்ப என்னடான்னா.. இதை அடிப்படையை வைச்சு.. பெரிசா பெறப் போறம் என்று படம்காட்டிட்டினம். இது அத்திவாரக் கல்லாக் கூட இருக்க முடியாது என்பது வேற கதை. ஆனால் காட்டின படத்திற்கு.. குறைஞ்சது தெருவோர புல் பூண்டுகளையாவது வெட்டிச் சுத்தம் செய்யட்டன்..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செய்தால் சந்தோசம் பட் இந்த மாகாண சபைக்கு பின்னாடி பெரிய சதியே இருக்கு அது இப்போ மக்களுக்கு புரியாது போக போக புரியும் இன்பாக்ட் விக்கி தெரிவு செய்யப்பட்டதே சிங்களத்தின் ஆசிர்வாதத்துடன் என்று நான் திடமா நம்பிறன்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா.விக்கினேசுவரனுக்கு,

கடினப்பட்டு வீதி வீதியாக சென்று, மேடை மேடையாக கத்திக் கதறி உங்களைப் பற்றி நாங்கள் பேசி புரியவைக்க வேண்டிய பணியை எளிமையாக்கி இருக்கிறீர்கள்.

நீங்கள் யார் என்பதை இவ்வளவு எளிமையாக, குறுகிய காலத்திற்குள் புரியவைத்த உங்களது திறமைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

த. தே. கூ வெகுவிரைவில் ஒரு மனிதரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கும் என நம்புகிறோம். அவரால் பெரிதும் செய்ய முடியாமல் போனாலும், அலரி மாளிகையில் சாமரம் வீசாமல் மக்கள் பிரச்சனையை பேசவாவது செய்வார் என நினைக்கிறேன். லட்சுமன் கதிர்காமரோ, அகிலன் கதிர்காமரோ, அல்லது நீலம் திருச்செல்வனோ எல்லாம் ஆகச்சிறந்த அடிமைகளே... கொழும்புவின் கழுதைகள் ஆகச்சிறந்த ”கோவேறு கழுதைகளே”.

பாலஸ்தீனம், காசுமீர் போல தமிழீழக் குடிமக்களும் , அக்கிரமிப்பு ராணுவத்தினை ‘கற்களை’க் கொண்டு எதிர்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை...

‘தமிழீழ இண்டிபிடா’ ஆரம்பிக்கட்டும்.

Thirumurugan Gandhi

இப்படி   ஒரு நிலை வரணும் என்றே  நான்  எதிர்பார்க்கின்றேன்

தமிழகமும் புலமும் முதலமைச்சருடன் முரண்பட்டு நிற்கணும்

முதலமைச்சர் பேச்சுவார்த்தையில் இருக்கணும்

சர்வதேச ஆதரவுடன்

எம்மைக்காட்டி எதையாவது அவர் பெறணும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தால் சந்தோசம் பட் இந்த மாகாண சபைக்கு பின்னாடி பெரிய சதியே இருக்கு அது இப்போ மக்களுக்கு புரியாது போக போக புரியும் இன்பாக்ட் விக்கி தெரிவு செய்யப்பட்டதே சிங்களத்தின் ஆசிர்வாதத்துடன் என்று நான் திடமா நம்பிறன்

இதனை ஆரம்பம் முதலே தான் சொல்லி வாறம். விக்கி எச்சரிக்கைக்குரிய மனிதர்..! ஏன்னா அவரின் சுற்றுவட்டம் கம்பன் கழகம். அது எவ்வளவு சுயநலமானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்..! நல்லூரில் மேடையில் ஒன்று.. கொட்டகேனவில் மேடையில் ஒன்று... அப்ப வளர்ந்தவர்கள் அவர்கள்..! :lol::icon_idea:

தமிழகம் முரண்படாது.. ஏனெனில் நடைபெறுவது யாவும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே! முன்பு நோர்வே சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்னும் பின்னும் இந்தியாவிற்குப் போய் வந்தார்கள்.. இப்போது பதவிப் பிரமாணம் எடுத்த கையோடு அவர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.. :)

தமிழ்த்தேசியம் என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. இது எமது அரசியல், வாழ்புலம், உணவு, உடை, பண்பாடு என அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு உயிர்ச் சொல். இதனை அற்பசொற்ப சலுகைகளுக்காகச் சிங்களப் பெரும் தேசியவாதத்துக்குள் கரைத்து இல்லாமல் செய்வதற்குத் தமிழ் மக்கள் இனிமேல் ஒருபோதும் உடன்படமாட்டார்கள். இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துச் சொல்லும்விதமாக நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றிபெறச்செய்யவேண்டும் என்றும் தெரிவித்தா#

பொ.ஐங்கரநேசன் கேள்வி!

http://tamilleader.com/?p=19082

இதை நான் சொல்ல இல்லை  மாகானசபை விவசாய துறை அமைச்சர் பேசினது...! 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.