Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சி

Featured Replies

starvijaytv-150x150.jpg

 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி.

விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதையும் சுரண்டி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. உணவு,உடை,இருப்பிடம், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளிலிருந்து ஊடகங்கள் வரை அவர்களின் சூறையாடலுக்கு உட்படாத எதையும் காணமுடியாது. இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரதான உரிமையாளர் உலகின் மீடியா மாபியா என வர்ணிக்கப்படும் ரூபெட் மடோக் என்பவர்.

யாரிந்த ரூபெட் மடோக்?

இவர் தமிழரோ அல்லது இந்தியரோ அல்ல. உலகின் ஊடகத்துறையின் அழுகிய பகுதிகளைக் கையில் வைத்திருக்கும் ஊடகக் கொள்ளைக்காரன். பிரித்தானியாவில் ஆட்சி மாற்றதை ஏற்படுத்துவதற்குக் கூட ரூபெட் மடோக் பங்கு வகிக்கிறார். பெரும்பாலும் பாலியல் கலந்த ஊடகங்களை மக்களின் உணர்வுகளை மாற்றும் வகையில் உட்செலுத்துவதிலும், வன்முறையை மக்கள் மயப்படுத்துவதிலும் இவரது ஊடகங்கள் பெரும் பங்குவகின்றன.

2011 ஆம் ஆண்டு பிரபலமானவர்களின் தொலைபேசியை ஊடறுத்து சட்டவிரோதமாகத் தகவல்களைப் பெற்றுக்கொண்டமைக்காக மடோக் பிரித்தானிய அரசாலும் எப்.பி.ஐ இனாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ‘end the Murdoch mafia’ என்ற தலையங்கத்தில் பிரித்தானியாவில் பல அமைப்புக்கள் மடோக்கிற்கு எதிராகப் போராடங்கள் நடத்தின.

The Times, The Sunday Times and The Sun ஆகிய வலதுசாரி மற்றும் நிறவாதப் நாழிதழ்களை பிரித்தானியாவில் மடோக் நடத்தி வருகிறார்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சி விஜய் மல்லையாவிற்கு சொந்தமானதாகவிருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் சாராய வியாபாரியான விஜய் மல்லையா. இவரின் கிங்பிஷர் பியர் இந்தியா பியர் சந்தையில் 50 வீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்தி வருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவரது விமான நிறுவனமான கிங் பிஷரில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினார்,

கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மேலாகச் சம்பளம் வழங்காமல் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது. கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கடனாகக் கொடுத்த ரூ 7,500 கோடியையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார் விஜய் மல்லையா.

2001 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலியரான ரூபெட் மடோக் விஜய் இன் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.

ஜோடி நம்பர் 1, நியா நானா, எயர்ரெல் சுப்பர் சிங்கர், அது இது எது, நீஙகளும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற உணர்ச்சிச் சுரண்டல் நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. தமிழ் நாட்டு மக்களின் வளங்களை மட்டுமல்ல உணர்ச்சியைக்கூடச் சுரண்டி அதனை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சி, தமிழ் நாட்டுக்காரர்களுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை. கொச்சை ஆங்கிலத்திலும், கொச்சைத் தமிழிலும், இந்த இரண்டு மொழிகளையும் கொலைசெய்யும் நிகழ்ச்சிகளை நடத்தும் விஜய் இப்போது புலம்பெயர் தமிழர்களைச் சுரண்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக மாபியாவான விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கும் ஒவ்வொரு சல்லிக்காசும் ஈழத்தில் அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் பல்தேசிய மாபியாவின் வங்கிக் கணக்குகளை நிரப்புகிறது. பின்னர் அது ராஜபக்ச போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும் சேவை செய்யும்.

கலை கலாச்சாரம் என்பது விஜய் தொலைக்காட்சி போன்ற ஊடக மாபியாக்கள் நடத்தும் பாலியல் சுரண்டலோ, வன்முறையோ அல்ல. அது மனிதாபினாமத்தையும் மக்கள் பற்றையும் போதிக்க வேண்டும். சமூக உணர்வைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். ஈழத்துக் கலைஞர்கள் வாய்ப்புகளற்று வறுமையின் பிடியில் வாடும் போது, பல்தேசிய நிறுவனங்களுக்குப் பணத்தை வாரியிறைப்பது அவமானகரமானது, அதுவும் தேசியத்தின் பெயரால் நடைபெறுவது அருவருக்கத் தக்கது.

புலம்பெயர் சமூகதின் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு பணவெறியையும், பாலியல் வக்கிரத்தையும் தமிழ்க் கலாச்சாரம் எனப் போதிக்கப் போகிறார்களா? மனித் நேயமும் சமூகப்பற்றுமுடைய மனிதர்களாக அதற்கான கலாச்சாரத்தை நோக்கி தமது சந்ததியை இட்டுச்செல்லப் போகிறார்களா?

 

http://www.thinakkathir.com/?p=57994

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழ் தொலைக்காட்சிகளில், அவ்வளவு பரிச்சயமில்லை.
ஆனால்.... இணையத்தில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்,
மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, விஜய் ரிவி போன்றவை...
ஈழத்தமிழர் விடயங்களை... முன் நின்று கொண்டு வந்தவை என்பது என் அபிப்பிராயம்.
இதில்... விஜய் ரிவி, திடீரென்று தடம் மாறியது ஏன்?
அகலக் கால் வைக்க.... சேர்ந்த, கூட்டாளிகள் சரியில்லையோ....

விஜய் தொல்லைக்காட்சியின் முக்கியமான எடுபிடியான கோபிநாத் தமிழில் வணக்கம் சொல்வதையே "வனக்கம்" எண்டு சொல்லும் ஒரு ஊடக வியாபாரி. தமிழர்களைக் காண்பதே பாவம் என நினைக்கும் ஒரு ஜீவன். அதைவிட தமிழ்நாட்டில் வளந்து கொழுப்பெடுத்து வாழும் பார்ப்பணிய, தெலுங்கர், மலையாளிகளை உள்ளடக்கிய இந்தத் தொலைக்காட்சி தமிழர் விரோதத் தொலைக்காட்சி என்பதை யார் சொன்னாலும், என்னதான் இருந்தாலும் லெமன்பொப் விசுக்கோத்துக்கும் எங்கட நெக்ரோ சோடாவுக்கும் நாற்றமெடுக்கும் கல்லோயாச் சாராயம்த்துக்கும் (முப்பத்தைந்து புறோமில்லி அல்ககோல் வீதம் எண்டு சொல்லி லிடிலில் விக்கும் கெய்னிக்கன் பியரில் இருக்கும் வெறிப்பிடிப்புக்கூட இதில இராது என்பது வேறவிடையம், எங்கட ஊர் பெரிசுகள் அந்தக்காலத்தில் இதைக்குடித்துவிட்டா சலம்பல் பண்ணியதுகள் என எனக்கு சிலவேளைகளில் யோசனை வாறதுண்டு) ஈடு இணையில்லாமல் எதுவுமே வராது எண்டு கூறிக்கொண்டு திரியும் புலம்பெயர் புறம்போக்குகளுக்கு மத்தியில் என்னத்தச் சொல்ல.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139155

 

 

வழமைபோல மையவாத சைகோக்களின் புலம்பல்கள் இவைகள். இம்முறை தேசீயத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு தரப்புக்கு ஏமாற்றம் போலிருக்கின்றது.

 

கடந்த முறை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நடந்தபோது இளையாராஜா பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்வைக்கவில்லை என்று ஆரம்பித்தவர்கள் மாவீரர் மாதம் அரச சதி அது இது என்று ஒரு தொகை பணத்தை ஒப்பந்தம் பண்ணி பின்னர் நடத்தவிட்டார்கள். இம்முறை இம்முறை லங்காசிறியும் லெபாரவும் காசுபாத்துள்ளது பங்கு கிடைக்காத தரப்பு போபிநாத் வனக்கம் என்று சொல்கின்றார் என்று ஆரம்பித்து வழமையான பாரம்பரிய மையவாத செட்டை நொட்டைகளை தொடர்கின்றது.

 

இந்தக் களத்தில் சினிமா பற்றிய செய்திகள் பாடல்கள் விமர்சனங்கள் அழகியல் நகைச்சுவை என்று நிறைந்துகிடகின்றது. நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்ச் சினிமாதான் பிரதான பொழுதுபோக்கு. நல்லா நாடகமும் திரைப்படமும் பார்த்துவிட்டு கூத்தாடி என்பதும் சினிமாச் சாக்கடை என்பதும் சைக்கோக்களால் மட்டும் தான் முடியும்.

 

கனடாவில் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தது நீங்கள் இப்ப லண்டனில் ஒழுங்கு செய்ததும் நீங்கள் போனதும் நீங்கள் பார்த்ததும் நீங்கள் பிறகெதுக்கு நிகழ்ச்சி செய்பவர்களை சொறிகின்றீரகள்?

 

இப்படி சைக்கோத் தனமாக புசத்துபவர்களை கடந்து காலம் நகர்ந்துகொண்டேயிருக்கும் அதனோடு பெரும்பான்மை மக்களும் நகர்ந்துகொண்டிருப்பார்கள்.

 

இப்படியான சைக்கோத்தனமான வாயாடல்களும் நையப்புடைப்புகளும் எதிரிகளை தவிர எதையும் வரலாற்றில் சம்பாதித்தில்லை. உங்கள் செயற்பாட்டால் இதுவரை ஒட்டுமொத்த இனத்துக்கும் எதிரிகளை சம்பாதித்தீர்கள். இனத்துக்குள்ளும் சாதியாக மதமாக பிரதேசமாக இயக்கங்களாக விரோத குரோதங்களை வளர்த்து சிதைத்து சின்னபின்னமாக்கினீர்கள். இனிமேல் உங்கள் குய்யோ முறையோ என்ற பயித்தியக்காரத்தனத்தை அலட்சியம் பண்ணி போய்கொண்டே இருப்பார்கள்.

 

போதை கடத்தி போராட்டம் நடத்தினதிலும் போராட்டத்திலும் ஆளையாள் போட்டுத்தள்ளி சிதைத்து சீரளித்ததில் இருந்தும் போராட்டத்துக்கு என்று சேர்த்த காசுகளை ஆட்டையை போட்டதில் இருந்தும் என்னும் எத்தனையோ விடயங்களில் இருந்தும் சினிமா ஒன்றும் மோசமானதில்லை. ஒரு சைக்கோவை விட உங்கள் பாசையில் கூத்தாடி பன்மடங்கு மேலான நிலைதான்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

போதை கடத்தி போராட்டம் நடத்தினதிலும் போராட்டத்திலும் ஆளையாள் போட்டுத்தள்ளி சிதைத்து சீரளித்ததில் இருந்தும் போராட்டத்துக்கு என்று சேர்த்த காசுகளை ஆட்டையை போட்டதில் இருந்தும் என்னும் எத்தனையோ விடயங்களில் இருந்தும் சினிமா ஒன்றும் மோசமானதில்லை. ஒரு சைக்கோவை விட உங்கள் பாசையில் கூத்தாடி பன்மடங்கு மேலான நிலைதான்.

 

வாயில் வந்தபடி... எதையும் எழுதுவதை, ஏற்கமுடியாது. சண்டமாருதன்.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை... கள்ளம்கபடமில்லாமல் முன்னெடுத்த விடுதலைப் புலிகளை... விமர்சிக்க, எந்த உரிமையும் இல்லை. ஒகே....

வாயில் வந்தபடி... எதையும் எழுதுவதை, ஏற்கமுடியாது. சண்டமாருதன்.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை... கள்ளம்கபடமில்லாமல் முன்னெடுத்த விடுதலைப் புலிகளை... விமர்சிக்க, எந்த உரிமையும் இல்லை. ஒகே....

. இன்னும் சில விச கிருமிகள் யாழில் உள்ளது சிறி அண்ணா விரைவில் அழிந்திடும்
  • கருத்துக்கள உறவுகள்

. இன்னும் சில விச கிருமிகள் யாழில் உள்ளது சிறி அண்ணா விரைவில் அழிந்திடும்

 

யாழ் அன்பு,

சிலர்... இங்கு, தங்கள் வீரப் பிரதாபங்களை.... எழுத்தில் வடித்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதனால்.... பாதிப்பு, தங்கள் முழுச் சமூகத்திற்கும் பாதிப்பு வரும், என்ற உண்மையை... மறந்து விடுகின்றார்கள். இது, கட்டாயம்... தவிர்க்கப் பட வேண்டியது.

 

சோ, சுப்பிரமணியசாமியை.... கூட, மன்னிக்கலாம்.

அவர்கள்... அன்றும், எதிர்த்தார்கள்... இன்றும் எதிர்க்கிறார்கள்

ஆனால், எம்மூரில் பிறந்த இவர்கள்... சுத்த பச்சோந்திகள்.

இவர்கள் தான்... மிக ஆபத்தானவர்கள். :)

வாயில் வந்தபடி... எதையும் எழுதுவதை, ஏற்கமுடியாது. சண்டமாருதன்.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை... கள்ளம்கபடமில்லாமல் முன்னெடுத்த விடுதலைப் புலிகளை... விமர்சிக்க, எந்த உரிமையும் இல்லை. ஒகே....

நான் உள்ளதைத்தான் எழுதினேன்.

ஒரு ஊடகத்தை மாபியா என்று எழுதும்போது அவற்றையும் ஏற்க முடியாது. வாய்க்கு வந்த படி வசைபாடுவதையும் ஏற்கமுடியாது. இதே களத்தில் போதைக் கடத்தல் குறித்த முன்னாள் புலியின் பதிவு உள்ளது. மாபியா என்று எழுதும் போது அதை அதன் போக்கில் எதிர்கொள்ள நேரிடுகின்றது. என்ன எழுத வேண்டும் என்பதை இத் திரியின் தலைப்பே தீர்மானிக்கின்றது. 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135566

 

புலி தேசீயம் என்பதை காரணப்பொருளாக வைத்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம் எப்படி வேண்டுமானலும் வசைபாடலாம் என்று கருதும்போது அதற்கான எதிர்வினையையும் எதிர்பாருங்கள்.

 

இங்கே நடக்கும் எதுவும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டோ இல்லை தேசீயம் மாவீரர் தியாகங்களில் ஈடுபாடுகொண்டோ இல்லை. அவற்றை வைத்து பிழைப்பு நடத்தும் பொருட்டேயாகும். அது நிகழ்சியை நடத்தினாலும் சரி எதிர்த்தாலும் சரி. அவை பிழைப்பு வாதமே. அவற்றை வைத்து அடயாளம் தேடும் பொருட்டேயாகும்.

 

நீங்கள் எவரையும் எல்லைதாண்டி விமர்சிக்கலாம் என்றால் அதற்கான உரிமை இருக்கும் என்றால் அதே உரிமை அடுத்தவர்களுக்கும் உண்டு. நீங்களே எழுத தூண்டுகின்றீர்கள். ஆதலால் உங்கள் ஆத்திரத்துக்கோ இல்லை ஆதங்கத்துக்கோ நான் பொறுப்பாக முடியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சண்டமாருதன், மையவாதம் என்றால் என்ன ஏதாவது விளக்கம் சொல்ல முடியுமா? அல்லது தமிழர்களை கொன்று மையாமாக்குவதா? சும்மா மையவாதம் விளிம்புநிலை தேசியவாதம் லும்பன் இப்படி எழுதி புலுடாவிடாதையுங்கோ.

 

புலிகளும் புலிப்பினாமிகளும் போதைவஸ்து கடத்தினார்களெனில் அதை ஆதாரரீதியாக நிரூபிக்கவேண்டும். நீங்கள் வாழும் நாடுகளிலும் போலீசு என்று ஒன்று இருக்கு எவ்வித நெருக்குதலும் உங்களுக்கு ஏற்படமாட்டாது உங்களது எஜமானர்களான சிங்களவர்களது அதிகாரம் இங்கு இல்லை உங்களை அச்சுறுத்துவதற்கு.

 

புலம்பெயர் தமிழர்கள் அந்நிய சந்தை வர்த்தகர்களால் குறிவைக்கப்படுகிறார்கள் எச்சரிக்கையாக இரு எனக் கூறினால் மையவாதம் புலிப்பினாமி ம.......... வாதாம் என மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறியள்.

 

லங்கஶ்ரீ எனும் இரண்டாந்தர இணயத்தள வியாபாரிகளுக்கு வக்காலத்துவாங்குவதை நிறுத்துங்கள். போய் அவர்களிடம் கேழுங்கள் இளையராஜாவது இசைநிகழ்ச்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்ததை ஏன் செய்தியாக்கிக் காசுபார்த்தனீர் என. ஓ நீங்களே அவராக இருக்கையில் யாரிடம் கேட்பது.

Edited by Elugnajiru

ஐயா சண்டமாருதன், மையவாதம் என்றால் என்ன ஏதாவது விளக்கம் சொல்ல முடியுமா? அல்லது தமிழர்களை கொன்று மையாமாக்குவதா? சும்மா மையவாதம் விளிம்புநிலை தேசியவாதம் லும்பன் இப்படி எழுதி புலுடாவிடாதையுங்கோ.

 

புலிகளும் புலிப்பினாமிகளும் போதைவஸ்து கடத்தினார்களெனில் அதை ஆதாரரீதியாக நிரூபிக்கவேண்டும். நீங்கள் வாழும் நாடுகளிலும் போலீசு என்று ஒன்று இருக்கு எவ்வித நெருக்குதலும் உங்களுக்கு ஏற்படமாட்டாது உங்களது எஜமானர்களான சிங்களவர்களது அதிகாரம் இங்கு இல்லை உங்களை அச்சுறுத்துவதற்கு.

 

புலம்பெயர் தமிழர்கள் அந்நிய சந்தை வர்த்தகர்களால் குறிவைக்கப்படுகிறார்கள் எச்சரிக்கையாக இரு எனக் கூறினால் மையவாதம் புலிப்பினாமி ம.......... வாதாம் என மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறியள்.

 

லங்கஶ்ரீ எனும் இரண்டாந்தர இணயத்தள வியாபாரிகளுக்கு வக்காலத்துவாங்குவதை நிறுத்துங்கள். போய் அவர்களிடம் கேழுங்கள் இளையராஜாவது இசைநிகழ்ச்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்ததை ஏன் செய்தியாக்கிக் காசுபார்த்தனீர் என. ஓ நீங்களே அவராக இருக்கையில் யாரிடம் கேட்பது.

மையவாதத்துக்கு இந்த மேற்கோளுக்கு முதல் என்னுமொரு உங்கட மேற்கோள் காட்டியிருக்கின்றேன் அதுவே நல்ல உதாரணம். விரோத குரோதம் வளர்ப்பது வசைபாடுவது என அதற்கென்று பல தனிப்பட்ட குணங்கள் இருக்கின்றது.

-சிங்களவரை அண்டிப் பிழைத்துக்கொண்டே அவர்களை மோடையன் என்பது

-அரச உத்தியோகமும் வேணும் தேசீயமும் வேணும்

-போராட்டத்தில் இணையவும் கூடாது அரச மானியங்களில் இருந்து நழுவவும் கூடாது ஆனால் தமிழீழம் வேணும்

-சாதி மத வர்க்க பிரதேச வாதங்களை கைவிட முடியாது ஆனால் இனமாக ஒன்றுபடவேணும்

-ஒருவனை ஒருவன் வெறுப்பது நேசிக்க மறுப்பது நையப்புடைப்பது என பாரம்பரியமாக பழக்கி மண்டையில் போடுவதில் கொண்டுவந்து விடுவது

-சினிமா வேணும் சீரியல் வேணும் சினிமா பாட்டு வேணும் அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி காசுபார்க்கவும் வேணும் ஆனால் அவர்களை திட்டி வசைபாடி யோக்கியன் என்று கூச்சல் போடவேணும்

 

இப்படி மையவாதம் அதன் குணம் தன்மை என்பது பெரிய பட்டியலாக நீண்டுகொண்டே செல்லும்.

 

புலி சொல்லுது நாங்கள் கேட்கிறம் அவ்வளவுதான் அதில் எதை யாருக்கு நிருபிக்கவேணும்.

 

புலம்பெயர்ந்தவன் அந்நியச் சந்தைகளுக்கு அடிமைகளாகி ரொம்பக்காலமாகிவிட்டது. நீங்கள் இப்பதான் நித்திராயால எழும்பியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

-------

இப்படி மையவாதம் அதன் குணம் தன்மை என்பது பெரிய பட்டியலாக நீண்டுகொண்டே செல்லும்.

 

புலி சொல்லுது நாங்கள் கேட்கிறம் அவ்வளவுதான் அதில் எதை யாருக்கு நிருபிக்கவேணும்.

 

புலம்பெயர்ந்தவன் அந்நியச் சந்தைகளுக்கு அடிமைகளாகி ரொம்பக்காலமாகிவிட்டது. நீங்கள் இப்பதான் நித்திராயால எழும்பியிருக்கின்றீர்கள்.

 

சண்டமாருதன்.

நீங்க தான்... மையவாதத்தில்... குழப்பம் அடைந்துள்ளீர்கள்....

இதனை... புலி, இருக்கும் போது... சொல்ல துணிவில்லை.

இங்கு வந்து... ஒப்பாரி வைக்கின்றீர்கள், உங்கள் ஒப்பாரி...விடிவிற்கான‌ ஒப்பாரி அல்ல.

 

அப்பட்டமான புலி வாந்தி. இதனால்... பாதிக்கப் படப் போவது, மேலும்... சில தமிழ் உயிர்களே.

சென்ற மாதம் மட்டும்.... உங்களைப் போன்றவர்களின், அதி விசுவாசத்தால்... 100 தமிழ் உயிர்கள், சிங்கள ராணுவத்தாலும், காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களாலும்... பர லோகம் சென்றடைந்தன.

 

இதுக்கு.... மேல், உங்களுக்கு... இந்தத் தொழில் தேவையா? என... ஒரு நிமிடம் கண்ணை மூடி, யோசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மையவாதம்=பச்சோந்தி, இது சரியா சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரை அண்டிப்பிழைப்பது எப்போதும் தமிழன் செய்யும்வேலை இல்லை. கடந்தகாலங்களிலிருந்தே தமிழன் தனது கல்வி எனும் மூலதனத்தை இன்னுமொருவருக்குச் சேவையாக விற்பனைசெய்து அதன்மூலம் வரும் ஊதியத்தில் தனது வாழ்வாதரத்தைக் கட்டியமைத்துள்ளான்.

இங்கு சிங்களவன் மொடையான் இல்லை ஆனால் தமிழன் புத்திசாலி அவ்வளவே.

 

சிங்களம் படித்தால்தான் இங்கிரிmeன்ரும் இதர படிகளும் என அறுபதுகளில் சட்டம்வந்தபோது வேலையை விட்டுதறியவர்கள் அதிகம். அதனால் பொருளாதாரச்சிக்கல்களை எதிர்நோக்கியோரை நான் அறிவேன். தவிர அரசஉத்தியோகத்தில் தமிழர்கள் இல்லாதுவிடின் இப்போது இராணுவத்தைப் பாடசாலைகளுக்குள் நுழைத்து தமிழர்களது தாய்மொழிக்கல்வியை சீரழிக்கும் முயற்சி போல் எப்போதோ தொடங்கியிருக்கும்

 

நீங்கள் எதிர்பாப்பதும் இவற்றைத்தான் என்பதை நான் அறிவேன் அதாவது தமிழர் நிலங்கள் சிங்களவர்களால் நிர்வாகம் செய்யப்படல்வேண்டும் என்பதே உங்களது சிறீலங்காத்தேசியவாதக்கொள்கை. அதற்காகவே அரச உத்தியோகம் மற்றும் தேசியம் இவற்றை முன்னிறுத்திய உங்களது விமர்சனம்

 

அடுத்துச் சாதியம், கூத்தமைப்பில் அனேகமாக இருப்போர் எல்லாம் தடித்த சாதிவெறிபிடித்த தலைவர்களே உதாரணத்துக்கு விக்கு வினாயகம் அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தும்போது இவர் மானிப்பாயைச்சேர்ந்த சேர் பொன் அருணாசலம் அவர்களது பூட்டனாகும் என மறைமுகமாக அறிமுகப்படுத்தியே பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இவரது நேற்றைய கருத்திலும் வடக்குக்கான புதிய கல்விமுறை வகுக்கப்படல்வேண்டும் எனக்கூறியுள்ளார் அதாவது கிழக்கில்வாழும் தமிழ் மக்கள் உரிக்க உரிக்க எதுவுமே தேறாத வெங்காயங்கள் என நினைத்துவிட்டார். இதில் கிழக்கை பிரதிநிதுத்துவம் செய்யும் கூத்தமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கொம் அவரது அடிப்பொடி சுமந்திரன் இருக்கும்ப்போதே. மேலதிகமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தேர்தலில் நின்றபோது சாதிஅடிப்படையிலான வேட்பாளர்கள் அக்கட்சியில் நின்றதாலேயே யாழ்மக்கள் அவர்களைத் தோல்வியடைய வைத்தார்கள் விருப்பமெனில் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு வேண்டுமானால் உயர்சாதி தவிர்ந்த யார் யார் கஜேந்திரனது முகாமில் வேட்பாளர்களாகக் களமிறக்கபட்டார்கள் அவர்கள் எப்படியான இன்னல்களை எதிர்நோகினார்கள் என்பதை அறியத்தருகிறேன்.

 

அரச மானியங்கள் என்பது மகிந்த ராஜபக்சவோ அன்றேல் கடைக்கோடி சிங்களவனோ தங்களது சொத்துக்களை விற்றுத் தங்கத்தாம்பாளத்தில் வைத்து ஏந்தி இந்தா பிடி என ஒருபோதும் தமிழர்களுக்குக் கொடுக்கவில்லை. உலகநாடுகளிடம் தமிழர்கள் பெயரில் வாங்கிய பிச்சையின் ஒருபகுதியே அதிலும் இந்தியா தமிழர்களுக்காகக் கொடுத்த நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள் எங்கே என ஐங்கரநேசன் நேசத்துடன் கேட்கிறார் உங்கள் எஜமானர்களிடம் கேட்டுச் சொல்லுங்கோ.

 

மண்டையில் போடுவதைபற்றிய விபரம். இன்றும் அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் எங்கே எனத்தெரியாது எங்கே எனக்கேட்ட பதிண்ம வயதுச் சிறுமி எங்கே எனத்தெரியாது, புலிகள் பயங்கர வாதிகள் என ஒரு கருத்துக்காக ஒப்புக்கொண்டாலும் உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஐநாவில் அங்கம்வகிக்கும் ஒரு அதிகாரம்மிக்க நீதித்துறையை தன்னகத்தே வைத்திருக்கும் அரசாங்கம் கைதுசெய்தவர்கள் அனைவரையும் இன்னமும் ஏன் நீதிமன்றத்தின் முன்கொண்டுவரவில்லை என கனவிலயாகிலும் கேட்டிருப்பீர்களா? நீங்கள் செய்த அத்துமீறல்களுக்குக் தூக்கம் வந்தால்தானே கனவு வருவதற்கு.

 

ஆனால் எவருக்கு எந்த மொழியில் சொல்லவேண்டுமோ அந்தமொழியில் சொல்வதுதான் சிறந்தது அல்லது இன்றுபோல் கிரிக்கெட் விக்கெட் தடியில் முள்ளுக்கம்பியைச் சுத்திகட்டிகொண்டு வட்டுக்கோட்டை மைதானத்தில் மட்டுமல்ல எல்லாப்பாடசாலை மைதானத்திலும் சிறுநீர்கழிக்குங்கள். பொறுக்கிகளை அடக்குவதற்கான வழிமுறை இதுவே.

 

சினிமா பார்த்து விசிலடித்துக் கூச்சல் போடுவது இப்போது வெளிநாட்டுக்கு வந்துசேர்ந்த இளையோர்கூட்டம் அவர்கள் எந்தச்சூழலில் தாயகத்தில் வளர்ந்தார்கள் எனில் முற்றிலுமாக இராணுவக்கட்டுப்பாடுகளுக்குள்  வாழ்க்கை என்றால் இப்படித்தான் இராணுவம் அயலுக்குள்ள இருக்கும் நாங்கள் விழுந்து எழும்பிப் போகவேண்டும் பின்னேரமானால் மெகாதொடர்கள் எமக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டுக்காசு மாதம் இருமுறையும் பண்டிகைகாலமும் நிரல்கட்டும் எங்கள்பாடு கொண்டாட்டம் படிப்போம் படிப்பு ஏறவில்லையெண்டால் அப்பனோ அக்காளோ அண்ணணோ மாமாவோ அடியாக்கலம் அடிச்சு சீட்டுக்கட்டி அல்லது சீட்டுக்காரனுக்குத் துண்டுபோட்டு காசுகட்டி எங்களை வெளியாலை கூப்பிடுவார்கள் கேஸ் எழுதிக்கொடுக்கிறதுக்கும் இங்க நிறைய ஆக்கள் இருக்கினம் அந்தமாதிரி பால் அபிசேகம் ஒண்டுமாத்திரம் செய்யமுடியாது விசிலடிப்பது பிறப்புரிமை. இப்படி வந்த அனேகரே என்கண்முன்னால் களிசடை கோபிநாத், டிடி போன்றோருக்கு அம்மணமாக நின்று ஆரத்தி எடுக்கும் எம்மவர்.

 

 

 

 

 

 

Edited by Elugnajiru

தன் இனத்தின் பணத்தையே திருடிக் காசு சேர்க்கும் ஈழத்தமிழனைவிட இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.  ஈழத்தில் பிறந்து வளர்ந்தவர்களே தேசியத்தை விற்கும்போது, அந்நிய நாட்டவனைக் குறை சொல்வது நியாயமாகாது.   இவர்கள் மூலம் பணத்தை வசூலிப்பவர்களும் ஈழத்தமிழர்களே.   முதலில் எம்மிலிருக்கும் புல்லுருவிகளை இனம் காண்போம்.  ஒதுக்குவோம்.  அதன்பிறகு, மற்றையவர்களைக் குறை கூறுவோம்.

 

மீடியா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமே.  வெளிநாடுகளிலுள்ள பெரிய பெரிய மீடியாக்கள்கூட களியாட்ட நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் செய்கின்றன.  என்னவொன்று, அவை சீரியசான விடயங்களுக்கென ஒரு சானலையும் களியாட்டத்திற்கெனப் பல சானல்களையும் வைத்திருப்பார்கள்.   விஜய் ரீவியும் முன்னர் நடுநிலையான செய்திகளை ஒளிபரப்பினர்தான்.  அதனால் அவர்கள் பல அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டதால் நிறுத்தி விட்டனர்.  

 

கனதி கொண்ட தேசியத்தையும் களியாட்டத்தையும் முடிச்சுப் போடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான நிகழ்வுகளை எதிர்பவர்கள் சரியான லூசு கூட்டங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை சாடுகின்றோம்

தட்டி  நிமிர்த்துகின்றோம் என்பவர்கள் என்ன  செய்கிறார்கள்???

இங்கு சண்டமாருதனுடைய  கருத்த போல

அப்படியே சாய்ந்து புலிகளை  வசை  பாடுவது......

நேரம்

காலம்

சந்தர்ப்பம்

குளிர்

மழை

எது கிடைத்தாலும் புலிகளை  பதம் பார்த்துவிட்டுத்தான் மற்றவேலை

புலிகளை  எவரும் அழிக்கவில்லை

நாமே அழித்தோம்

அழித்துக்கொண்டிருக்கின்றோம்

இன்னும்   அரித்தால்

அங்கு தான் சொறிவோம்..... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.