Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும்

untitled7777777777uu3.png

ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள்.

சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வேறு தினங்களில் வைத்திருந்தால் கலந்து கொண்டிருப்பேன் என்பார்கள். ஆனால் இம்முறை ஜேசுதாசின் விழாவிற்கு சென்றார்கள்.ஏன் சுற்றுலாவுக்குச் அவர்கள் இம்முறை செல்லவில்லை?

கோம்புஸ் பேர்லிங்டன் வீதியில் பல தமிழர்கள் வாழ்கிறார்கள். அருகில் உள்ள பாடசாலையில் தமிழ்த்தேசிய ஆதரவு நிகழ்வுகள் நடப்பதுண்டு. 10 நிமிடங்களில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள அப்பாடசாலை நிகழ்வுக்கு பெரும்பாலும் குறைவான மக்களே கலந்து கொள்வதுண்டு. ஆனால் ஜேசுதாசின் கச்சேரிக்கு கன்பரா, நீயூகாசில் போன்ற நகரங்களில் இருந்து 3 மணித்தியாலம் பிரயாணம் செய்து மக்கள் கலந்து கொண்டார்கள். 10 நிமிடமா, 3 மணித்தியாலமா கூட?

தாயகத்துக்கு உதவி செய்ய நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நுளைவுச்சீட்டு 25,50 வெள்ளி (அதிகவிலை எனக்காரணம் சொல்லி) என்று தவிர்த்த மக்கள் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு 70 ,100,120,140,160,200 வெள்ளி நுளைவுச்சீட்டுக்கள் கொடுத்துப்பார்த்தார்கள். இது அதிக விலை இல்லையா?

தாயகம் சம்பந்தமாக கதைக்கும் சிலர் மாவீரர் தினம், கறுப்பு ஜுலை தினம், அன்னை பூபதி தின நிகழ்வுகளுக்கு வேலையில் லீவு தரமாட்டினம் என்று சொல்லிக் கலந்து கொளவதில்லை. ஆனால் ஜேசுதாஸ், ரகுமான் நிகழ்ச்சிக்கு எவ்வாறு அவர்களுக்கு லீவு கிடைத்தது?

சைவசமயத்தவர்கள் இன்று நாயன்மார் குருபூசை, கிறிஸ்தவ சமயத்தவர் இன்று ஞாயிற்றுக்கிழமை. கோவில், தேவாலயம் செல்ல வேண்டும். இதனால் நிகழ்ச்சிகளுக்கு போக முடியவில்லை என்பினம். ஜேசுதாஸின் நிகழ்ச்சி நடந்ததும் ஞாயிற்றுக்கிழமை. ஏன் அன்று மாலையில் தேவாலயம் செல்லவில்லை?அன்று நவராத்திரி வீட்டுப்பூசை. ஏன் அவர்கள் அன்று இரவில் வீட்டுப் பூசை கொண்டாடவில்லை? பலர் மத்தியானம் வீட்டுப்பூசையும், சிலர் கச்சேரி முடியவந்து இரவு 12மணிக்குப்பிறகு(அடுத்த நாள்) வீட்டுப்பூசை கொண்டாடினார்கள்.

சிட்னியில் 1ம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் சிறுமியின் பெற்றோர்கள் 1ம் திகதி ஜேசுதாஸ் நிகழ்ச்சி என்பதினால் வருகிற 7ம் திகதி பிறந்த நாள் விழா வைத்திருக்கிறார்கள்.ஆனால் அன்று சிட்னியில் தியாகி திலிபனின் நிகழ்வு நாள். உயிரா, பாடலா பெரியது?

கலந்து கொண்ட சில பெண்மணிகள் கண்களில் இருந்து, ஜேசுதாசினை மேடையில் கண்டதும் ஆனந்தத்தினால் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. ஆனால் செஞ்சோலையில் இறந்த பாடசாலை மாணவிகளினை நினைத்து இவர்களின் கண்களில் நீர் வரவில்லை. சொந்த சகோதரர்கள் என்றால் கண்களில் இருந்து கண்ணீர் வராதா?

இதைவிட சில பெண்கள் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு இலங்கை, இந்தியா,சிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள் வரவழைத்து,அதற்கேற்ற நகைகள் அணிந்தும் சென்றார்கள்.

சிலர் ஜேசுதாசுடன் கதைக்க வேண்டும் என்று நிகழ்ச்சி முடிந்தபின்பும் அங்கே இருந்தார்கள்.

ஜேசுதாசிடம் தங்கள் பிள்ளைகளை மூன்று மாதம் அனுப்பி சங்கீதம் கற்பிக்க வேண்டும் என ஒரு குடும்பம் முயற்சித்த நகைச்சுவை சம்பவமும் அங்கே நடந்தது.

  • Replies 108
  • Views 11.7k
  • Created
  • Last Reply

நீங்கள் உங்களை முதலில் திருத்தி கொள்ளுங்கள் சமுதாயம் தானாகவே திருந்திகொள்ளும்

:lol::lol::lol::D

சிலர் அது எங்க்ன்ட சொந்தகாரர் செய்யிற நிகழ்ச்சி நான் கட்டாயம் போக வேண்டும் என்று சென்றவை நான் உங்களை சொல்லவில்லை கந்தப்பு தாத்தா சில பேர் அது தான் இப்ப யமுனா சொல்லுறா நீங்கள் உங்களை திருத்தி கொள்ளூங்கள் சமூகம் தானாகவே திருந்தி கொள்ளும்.

:evil: :evil: :evil: :evil:

எனி சொல்லுவினம் முதல் முதல் ஒரு தமிழன் நிகழ்ச்சியை ஒப்ராகவுசில் நடத்திவிட்டான் பெருமை என்று அதை போய் ஏன் வேறோரு நாட்டு கலைஞ்னுக்கு பண்ணீறீங்க நம்ம நாட்டு கலைஞ்னுக்கு பண்ணலாமே

:evil: :evil:

இது சிட்னில மட்டுமில்லை கந்தப்பு......

சுரணையற்ற தமிழன் பரந்திருக்கிற எல்லா இடத்திலயும் இதுதான் ராசா நடக்குது. இன உணர்வு இல்லாத உயிர்களை இதுகள் என்று சொன்னாலே எங்க களத்திற்குள் ஒருவர் இருக்கிறார்... சண்டைக்கு வருவார்.... அதுவும் ஆதி புலப்பக்கம் எழுத வந்தாலே.... பொல்லோட வந்து விடுவார்... அதனால ஆதி எஸ்கேப்.....

இதிலென்ன வேடிக்கையெண்டால் மெல்பெனில் மொனாஸ் யுனிவசிட்டியில் நடந்தது இந்தக்கூத்து இதை நடத்தியவர்கள் இங்கு படம் எடுத்து போடுபவர்கல் ஆணிவேர் படத்தை போடமுடியாது இவர்கலால் ஆனால் ஜெசுதாசின் கூத்தும் தென்னிந்திய படங்களையும் போடமுடியும் எனது வீட்டில் இருந்து மிக அருகாமையில் இது நடந்த்தது நான் போகவில்லை யுனியிலிருந்து வீட்டுக்கு புரப்படுகையில் பட்டு புடவைகளிலும் நடமாடும் நகை மாடங்களாகவும் கொட்டு சூட்டுடன் எங்கட சனம் போனதை பார்த்தேன் நடக்கும் கூத்தை பார்த்து மனதுக்குள் சிரித்தேன் கந்தப்பு சொன்னமாதிரி திலீபனின் நிகழ்ச்சிக்கு வரமுடியாத்து இதுக்கு போகலாம்!!!!!.எனது தெரிந்த ஒருவர் சொன்னார் தான் 2 மாதத்துக்குமுன்னமே டிக்கர் எடுத்திட்டாராம்.ஆனால் காசு கேட்டால் பொலிசுக்கு அடிக்கக்கூடிய முதலாவத் ஆள் அவர்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே மாதமே உதுக்கு ரிக்கட் எடுக்க சனம் அலைஞ்சத பார்த்து எனக்குச் சீ என்று போச்சு. உதுகள் திருந்திற கேசுகளில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் தினம், கறுப்பு ஜுலை தினம், அன்னை பூபதி தினம், தியாகி திலிபனின் நிகழ்வு நாள், நவராத்திரி வீட்டுப்பூசை எல்லாம் வருடத்துக்கு ஒருமுறை வரும் ஆனால் ஜேசுதாஸ் சிட்னி ஒபரா அரங்கத்திற்கு வருடத்துக்கு ஒருமுறை வருவாரா :lol::lol::lol::lol:

கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது.

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

மாவீரர் தினம், கறுப்பு ஜுலை தினம், அன்னை பூபதி தினம், தியாகி திலிபனின் நிகழ்வு நாள், நவராத்திரி வீட்டுப்பூசை எல்லாம் வருடத்துக்கு ஒருமுறை வரும் ஆனால் ஜேசுதாஸ் சிட்னி ஒபரா அரங்கத்திற்கு வருடத்துக்கு ஒருமுறை வருவாரா :lol::lol::lol::lol:

அப்ப உங்களுக்கு ஜெசுதாசின் கூத்துதான் முக்கியம் உங்களையேலலாம் நம்பி உயிரை கொடுக்குதுகளே அப்பாவிகள் அவர்களை சொல்லவேணும் :twisted: :twisted: :evil: :oops:

அப்ப உங்களுக்கு ஜெசுதாசின் கூத்துதான் முக்கியம் உங்களையேலலாம் நம்பி உயிரை கொடுக்குதுகளே அப்பாவிகள் அவர்களை சொல்லவேணும் :twisted: :twisted: :evil: :oops:

அவரை சொல்லி குற்றமில்லை அதை வைத்து விட்டு முதல் முதல் தமிழன் இப்படி ஒரு நிகழ்ச்சியை இங்கு நடத்தி விட்டான் என்று பெருமை கொள்ளினமே அவைய சொல்ல வேண்டும்

:wink: :wink: :wink: :wink:

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

இங்கே நான் என்ன குறிப்பிட வந்தேன் என்றால் இதில் நீங்கள் தமிழத்திற்கு சில காசு அனுப்பியுள்ளார்கள் என்று சொன்னீர்களே அது வெறும் ஒரு கண்துடைப்பாகவே இருக்கும் ஒருத்தர் இல்லை இங்கே கதைக்கும் பலர் அங்கு வந்திருந்தார்கள்.நன் நிகழ்ச்சியை பிழை என்று சொல்ல வரவில்லை ஏன் நாங்கள் எம் மண் மைந்தர்கள் இவ்வளவு அல்லூறுகீறார்களே அவர்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒப்ராகவுசி நடத்தி அதில் பெருமை பட்டால் என்னவென்பதே

:?: :?: :?:

வணக்கம் ஜமுனா

பரந்தளவிலன் தென்னிந்திய மொழிகள் பேசும் இந்திய ரசிகர்களை கொண்டுவரக்கூடிய அதே நேரத்தில் அந்த அரங்கின் வாடகையைக் கட்டக்கூடிய ஒரு தமிழீழக்கலைஞனை உங்கள் வாயால் கேட்க ஆசையாக் இருக்கிறது. வெறுமனே கருத்தை எழுதவேண்டும் என்பதற்காகசொன்னீர்கள் போலிருக்கிறது.

வணக்கம் ஜமுனா

பரந்தளவிலான தென்னிந்திய மொழிகள் பேசும் இந்திய ரசிகர்களை கொண்டுவரக்கூடிய அதே நேரத்தில் அந்த அரங்கின் வாடகையைக் கட்டக்கூடிய ஒரு தமிழீழக்கலைஞனை உங்கள் வாயால் கேட்க ஆசையாக் இருக்கிறது. வெறுமனே கருத்தை எழுதவேண்டும் என்பதற்காகசொன்னீர்கள் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ப்ளீஸ் ஜம்ஸ் சுண்டல் னு சொல்லிடாதிஙக அப்புறம் எனக்கு வெக்கமா இருக்கும்...

கருத்தை எழுத வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாவது எழுதலாம் அண்ணா நாங்கள் அப்ப இப்படியே மற்றவனுக்கு வழி விட்டு கொண்டு இருக்க போகிறோமோ ஏன் அந்த நிகழ்ச்சியின் போதே எம்மவர் ஒருத்தரை ஈழத்தில் இருந்து கூப்பிட்டு அவருக்கு முதலிடம் கொடுக்கலாம் அண்ணா நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்

ப்ளீஸ் ஜம்ஸ் சுண்டல் னு சொல்லிடாதிஙக அப்புறம் எனக்கு வெக்கமா இருக்கும்...

அது சரி

:P :P :P

கந்தப்பு

நீங்களும் கட்டணம் செலுத்திச் சென்று நிகழ்ச்சியைப் பார்த்தவிட்டு அப்புறம் கிண்டல் அடிப்பது.

அபாரம் அபாரம் பிளந்து கட்டுங்கோ

கந்தப்பு

நீங்களும் கட்டணம் செலுத்திச் சென்று நிகழ்ச்சியைப் பார்த்தவிட்டு அப்புறம் கிண்டல் அடிப்பது.

அபாரம் அபாரம் பிளந்து கட்டுங்கோ

அண்ணா உபதேசம் ஒன்லி ஊருக்கு மட்டும் தான் தங்களுக்கு இல்லை

:wink: :wink:

ஜமுனா எழுதியது:

கருத்தை எழுத வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாவது எழுதலாம் அண்ணா நாங்கள் அப்ப இப்படியே மற்றவனுக்கு வழி விட்டு கொண்டு இருக்க போகிறோமோ ஏன் அந்த நிகழ்ச்சியின் போதே எம்மவர் ஒருத்தரை ஈழத்தில் இருந்து கூப்பிட்டு அவருக்கு முதலிடம் கொடுக்கலாம் அண்ணா நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்

ஏன் அதனை நீங்களே முன்னோடியாக செய்து காட்டியிருக்கலாமே?? சில விடயங்களை எழுதுவது சுலபம். செய்து பார்த்தால் தான் அதன் தார்ப்பரியம் புரியும்.

அண்ணா எழுதுவது கடினம் தான் ஏனெனில் அவ்வளத்துக்கு சிந்திக்க வேண்டும் நம்மவர் சிந்திக்காமல் ஒருத்தன் செய்யட்டும் என்று பார்த்து கொண்டிருப்பது அதை மற்றவன் அதற்கு மாற்று கருத்து தெறிவித்து கொண்டு இருப்பது தான் எங்களுக்கு இன்னும் ஒரு நாடு கிடைக்கவில்லை நான் மட்டும் புரோகிராம் செய்யமுடியாது இங்கே பல துறைகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒமெண்ரால் நாங்கள் ஒப்ரா கவுசில் ஒரு ஈழத்தவனை பெருமை படுத்துவது சிறந்தது தானே அதை விட்டு விட்டு நீங்களும் நானும் கதைத்து ஒன்றும் பிரயோசனமில்லை அங்கு மக்கள் சாப்பாடுக்கு ஏங்கி கொண்டு இருக்கும் நிலையில் இது முக்கியம் தேவை தான் அது வும் ஒப்ரா கவுசில் தேவைதான் நீங்கள் போய் கட்டாயம் பார்க்க வேண்டும் தான் ஈழத்தை பற்றி கதைத நான் கருத்தெழுத எழுதுகிறேன் சரி நீங்கள் தப்பை செய்து விட்டு அதை மூடி மறக்க ஒரு கதை சொலவதை திருத்தினால் நல்லது

ஜமுனா

நாங்கள் தாயகத்துக்குச் இங்கிருந்து செய்ய வேண்டிய வேலைகளைசெ செய்துகொண்டுதான் இப்படியான நிழவுக்கு போகின்றோம். தாயகத்தில் தலைவர் இந்தியக் கலைஞர்களை அரவணைக்கின்ரார், நீங்கள் இங்கிருந்து கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்து எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட உருப்படியாக எதாவது செய்யலாம். நீங்கள் வராத களியாட்டம் என்பதால் நான் தப்பு செய்துவிட்டேன் என்று நீங்கள் தீர்மானிக்கின்றீர்களா?

அண்ணா நானும் வந்தனான் உங்களுக்கு பக்கத்தில் தான் இருந்தனான் உங்களுக்கு என்னை தெறியாது அப்ப நீங்கள் இப்ப இந்திய கலைஞனுக்கு விழா எடுப்பீங்க நாளை சிறிலங்கா கலைஞ்னுக்கு விழா எடுத்து விட்டு அதையும் இப்படி என்னாவது சொல்வீங்கள் நான் சொல்லவில்லை போக வேண்டாம் என்று போயிட்டு கை தட்டி விட்டு வந்தவர்கள் பின் அதை பற்றி குறை கூறுவதே என் கேள்வி போயிட்டு பிறகு தமிழ் தமிழர் தாயகம் என்று நீங்கள் உங்களையும் பேய்காட்டு மற்றவர்களையும் பேய்காட்ட வேண்டாம் நான் இதையும் செய்து கொண்டும் படித்தும் கொண்டு தான் இருக்கிறேன்

ஜமுனா

நீங்கள் யாரென்று நன்றாக எனக்குத் தெரியும், ஒரு தாயக நிகழ்வுக்கும் போகாதவர்களுக்காக மற்றவர்களையும் குறை சொல்லக்கூடாது. பொழுது போக்கு என்று எடுத்துக்கொண்டால் இப்படியான விழ மட்டுமல்ல உங்கள் பாசையில் பல தப்பு செய்கின்றோம். உதாரணம் இன்ரனெற் பார்ப்பது, வீடியோவில் படம் பார்ப்பது

நீங்கள் நினக்கும் ஆள் நான் இல்லை நீங்கள் யாரை நினைகிறீர்கள் என்றும் எனக்கும் தெறியும் நான் சொல்லவில்லை எல்லாவற்றயும் புரகணிக்க சொல்லி உதாரணமாக வானொலியை எடுத்து கொண்டால் தாயகத்து பாடல்.தாயகத்து செய்தி மற்றும் மற்றைய பாடல்கள் அது போல் உல வரலாற்று பெருமையில் எம்மின ஒருத்தரையும் கொரவித்து இருக்கலாமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.