Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சுறுத்தும் கடற்புலிகள்

Featured Replies

அச்சுறுத்தும் கடற்புலிகள்!

-விதுரன்

முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கருதும் அரசு, இந்தப் படை நடவடிக்கையை மேலும் தொடரவே முயல்கிறது. எனினும், கிழக்கில் இதுவரை புலிகள் முழு அளவிலான சமரில் ஈடுபடாததுடன் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையம் பாதுகாத்தவாறு தற்காப்புச் சமருடன் பின் நகர்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களை மீட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாது செய்து விடலாமென அரசு கருதுகிறது. இதனாலேயே அங்கு மேலும் மேலும் படை நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வரும் அரசு மட்டக்களப்பில் தற்போது புலிகள் வசமுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் பிடித்து விட வேண்டுமென்ற முனைப்பிலுள்ளது.

எனினும், கிழக்கில் அகலக் கால் வைத்துவரும் படையினருக்கு பெரும் ஆளணிப் பற்றாக்கறை ஏற்பட்டு வருகிறது. புதிதாகப் பிடிக்கும் இடங்களை தக்க வைக்க மேலும் ஆயிரக் கணக்கான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் பொது மன்னிப்புகளை வழங்கி அவர்களை மீண்டும் படையணிகளில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் அதேநேரம், புதிதாக படையணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

கிழக்கில் தரைப் படையினர் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகையில் அவர்களால் அங்கு மேலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதேநேரம், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகள் வசமிருந்த பகுதிகளை ஆக்கிரமித்த விஷேட அதிரடிப் படையினர், அங்கு புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பக்கிமிட்டிய மற்றும் தங்க வேலாயுதபுரம் பகுதிகளில் புலிகள் நடத்திய ஊடுருவல் தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எனினும் இது தொடர்பான தகவல்களை படைத் தரப்பினர் மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

புலிகளுக்கெதிராக முழு அளவிலான யுத்தத்தை கிழக்கில் நடத்தி வரும் அரசு வடக்கிலும், தெற்கிலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.

கிழக்கில் அகலக் கால் வைத்துள்ள படையினருக்கு வடக்கு என்றுமே மிகவும் நெருக்கடிக் குரியதாகவேயுள்ளது. கிழக்கில் கடற்புலிகளை முற்றாக இல்லாது செய்து விட்டதாக கருதும் படைத் தரப்புக்கு வடக்கே கடற்புலிகளின் பலம் சிம்ம சொப்பனமாயுள்ளது.

அதேநேரம் அண்மைக் காலங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் கடற்படையினரின் பாதுகாப்பை விட இலங்கைத் துறைமுகங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. இதற்கேற்ப அண்மைக் காலங்களில் இடம்பெற்ற கடல் நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் துறைமுகங்களின் பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை. வடக்கு- கிழக்கில் காங்கேசன்துறை, பருத்தித்துறை ( இறங்குதுறை) திருகோணமலை துறைமுகங்களுள்ளன. இதற்கு வெளியே கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுள்ளன.

இவற்றில் எந்த துறைமுகத்தையும் தாக்கக் கூடிய ஆற்றல் கடற்புலிகளுக்கு இருப்பதாகவே அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. கடந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்புத் துறைமுகம் மீதுபுலிகள் நடத்த விருந்த தாக்குதலைத் தாங்கள் முறியடித்து விட்டதாக கடற்படையினர் கூறுகின்றனர்.

இதன் போது கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டதாகவும் அவை தற்கொலைத் தாக்குதலை நடத்தும் கரும் புலிப் படகுகளாயிருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படகுகள் கொழும்புத் துறைமுகத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைய முற்பட்ட போதே அதனைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு கடல் மைல் தூரத்திலும் 11 கடல் மைல் தூரத்திலும் 14 கடல் மைல் தூரத்திலும் அந்தப் படகுகளை அழித்ததாகத் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களானது அதிகாலை 5.30 மணிக்குப் பின்பே நடைபெற்றுள்ளதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தாக்குதல்களில் கடற்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென்பதுடன் கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை முறியடித்ததன் மூலம் கொழும்புத் துறைமுகம் மிகவும் பாதுகாப்பானதொரு துறைமுகமென்பதை கடற்படையினர் நிரூபித்துள்ளதாகவும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர கொழும்புத் துறைமுகத்திலிருந்து அறிவித்தார்.

இதேநேரம், இந்தத் தாக்குதலை நடத்த வந்த புலிகளில் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்த போதும் அவர்கள் யாரென்ற விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.

எனினும், இந்தத் தாக்குதல், கடற்படையினர் கூறுவது போல் கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே நடைபெறவில்லையென்றும் துறைமுகத்தை தாக்க எவரும் வரவில்லையென்றும் அப்பாவி மீனவர்களே கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகினர் என்பதும் பின்னர் சிங்கள கடற்றொழிலார்கள் மூலம் தெரிய வந்தது.

இது குறித்து நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கம் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அவசர கடிதங்களை அனுப்பியுள்ளதுடன் அன்றைய தினம் தாக்குதலுக்கிலக்கானது அப்பாவி மீனவர்களென்றும் அந்தத் தாக்குதல் கூட கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெறவில்லையென்றும், துறைமுகத்திலிருந்து 20 கடல்மைல் தூரத்தில் ஆழ்கடலில் இடம்பெற்றதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு திடீரென தாக்குதல் நடத்தியவாறு வந்த கடற்படையினர் தங்களைக் கடலில் குதிக்குமாறு கூறிவிட்டு தாங்கள் கடலில் குதித்தும் படகுகளை தாக்கி அழித்ததாகவும் பின்னர் ஒன்பது பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

படையினரும் ஊடகங்களும், கொழும்புத் துறைமுகத்தை தாக்க வந்த கற்புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதாக பொய் கூறுவதாகவும் உண்மையிலேயே தாக்குதலுக்கிலக்கானவை சிங்கள மீனவர்களின் படகுகளே என்றும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

உண்மை இதுவாயின் ஏன் இந்தப் புனைகதையை அரசும் படைத் தரப்பும் பரவ விட்டன. காலியில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்ததில் இவ்வாறானதொரு பொய்ப் பிரசாரத்தின் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காண்பித்து உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுவிடலாமெனக் கருதினார்களா?

எனினும், தென்பகுதியில் உண்மை நிலையை அரசும் படைத் தரப்பும் ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன. அதேநேரம், கடற்புலிகளின் தாக்குதலிலிருந்து கடற்படையினர் மிகத் திறமையாக துறைமுகத்தை பாதுகாத்து விட்டனரெனவும் படைத்தரப்புக்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தை கடற்புலிகள் தாக்க வந்ததாக அரசும் படைத் தரப்பும் கூறியதன் மூலம், இலங்கையில் இன்று எந்தத் துறைமுகமும் கடற்படைத் தளமும் எவ்வேளையிலும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அரசும் படைத் தரப்பும் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளன.

புலிகளின் தரைப் படையை விட இன்று கடற்புலிகள் குறித்தே படைத் தரப்பு அச்சமடைந்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு துறைமுகமும் ஒவ்வொரு கடற்படைத்தளமும் தாக்குதலுக்கிலக்காகும் போது, கடற்புலிகள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்ற கேள்வியை தென்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

காலியில் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் தென்பகுதி மக்கள் மத்தியில் கடற்புலிகள் குறித்து பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்புத் துறைமுகமும் அதனோடிணைந்த இராணுவ முகாமுமே இலங்கைக்குள் வரும் போர்த்தளபாடங்களைப் பெற்று ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கும் மையங்களாகும். இதனால் ஏனைய துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை விட கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதைவிட கொழும்புத் துறைமுகமே இன்று இலங்கையின் மிகப்பெரும் பொருளாதார மையமுமாகும். இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மிகப் பெரும்பாலும் கடல் வழியூடாகவே நடைபெறுவதால் கொழும்புத் துறைமுகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ளது.

இந்தத் துறைமுகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் இலங்கையின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும். 2000 ஆம் ஆண்டில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கிலக்கான போது நாட்டின் பொருளாதார நிலைமை எப்படிக் கேள்விக்குறியானதோ அவ்வாறே கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகுமானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.

புலிகளின் மெளனத்தை பலவீனமாக எப்படி நினைக்கமுடியும். முழுப்போர் என்று வரும்போது

சிங்கள இயந்திரப்பறவைகள்

தமிழ்நிலத்தில் தற்கொலை செய்து கொள்ளும்.

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளில் மிதந்து வாழ்ந்தே பழக்கப்பட்டு விட்டோம். இப்படி சாகசம் எல்லாம் செய்யக் கூடியவர்களாக நாம் இருந்தால் 25 வருடங்கள் போராடிக் கொண்டு இருக்கத்தேவையில்லை. கனவுகளை நிறுத்தி விட்டு, தாயகத்துக்கு என்ன உதவி தேவையோ, அதைச் செய்வது தான் சரி.

ஏனென்றால் நாங்கள் என்னும் பூரணமாகவில்லை

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

பறவைக்காய்ச்சல் திரும்பி வருதாம். சிலவேளை அதனால் செத்து விழுவதை தற்கொலை எண்டு சொல்லுறாரோ என்னமோ?

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

குசுக்காலபோவான் அண்ண்னாவுக்கு எப்பவும் ஒரு நக்கலும் மட்டம் தட்டுதலும் தான்.

எங்களுக்கும் பலப்பரீட்சைக்கான கால வந்து கொண்டு இருக்கின்றது அதற்கான உதவிகளை செய்ய புலம் பெயர் மக்களும் ஆயுத்தங்களை செய்து விட்டு களமுணை நோக்கி காத்துருங்கள். வெறுங்கை முழமிடாது

கனவுகளில் மிதந்து வாழ்ந்தே பழக்கப்பட்டு விட்டோம். இப்படி சாகசம் எல்லாம் செய்யக் கூடியவர்களாக நாம் இருந்தால் 25 வருடங்கள் போராடிக் கொண்டு இருக்கத்தேவையில்லை. கனவுகளை நிறுத்தி விட்டு, தாயகத்துக்கு என்ன உதவி தேவையோ, அதைச் செய்வது தான் சரி.

ஏனென்றால் நாங்கள் என்னும் பூரணமாகவில்லை

பறவைக்காய்ச்சல் திரும்பி வருதாம். சிலவேளை அதனால் செத்து விழுவதை தற்கொலை எண்டு சொல்லுறாரோ என்னமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

untha "kurukaalapoovanuku" eppavume kurukkala pona puththi than

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு ...நம்பியதால் தான் வியாற்நாம் விடிந்தது.... எங்கள் சுதந்திரத்தை வென்றெடுக்க எங்களுக்கு உரிமையிருக்கு கடமையிருக்கு.... தற்கொலை செய்து கொள்ளும் என்பது ஒரு மொழி நயத்துடன் சொல்லப்பட்டது.. அதை கூட புரிந்து கொள்ள துப்பில்லை.. ஏன் கடந்த காலங்களில் புக்காரா விழவில்லையா? அவ்ரோ விழவில்லையா? MI 24 விழவில்லையா? மாங்குளம் விழவில்லையா? ஆனையிறவு விழவில்லையா? டோரா தகர்க்கப்படவில்லையா? எங்களில் சிலருக்கு நினைப்பு எதையாவது விமர்சித்தால் ...தாங்கள் அறிவாளிகள் அல்லது வித்தியாசமான சிந்தனையாளர்கள் என்று.... இவர்களுக்கு சிலவேளைகளில் இப்படி கதைத்தால் விளங்கும்... அதாவது.... விடுதலை புலிகள் ஒன்றுமே செய்யவில்லை... ஆனையிறவை ஆமி விட்டுட்டு போனான் ...இதுவரை விழுந்த விமானங்கள் எல்லாம் ஆமியே வேண்டாம் என்று வீழ்த்தியது .. எரிந்த டோரா எல்லாம் பழையது என்பதால் அவர்களே எரித்தார்கள்..

இப்படி எல்லா இனத்திலும் குறுக்காலை போனவை கொஞ்சப் பேர் இருப்பினம்... இவர்களூக்கு என்ன செய்யலாம் என்டால் ....ஒரு சங்கிலியாலை கழுத்திலை கட்டிப்போட்டு... அதை மரத்தில கட்டி விட வேனும்...பின்னர் ஒரு நெளிந்த தகரத்திலை முட்டையை உடைத்து ஊத்திவிட்டா நக்கி கொன்டு கிடப்பினம்.... அவிட்டு விட்டா ஆபத்து ....அடுத்த வீட்டுல போய் எழும்பு நக்க வெளிக்கிட்டுவிடுவினம்.... இப்படித்தான் நாலைந்து பேர் ஊரில நக்கி கொன்டு இருக்கினம்.....

என்னதான் இருந்தாலும் எமது குறுக்ஸ்சை இவ்வளவு மட்டம்தட்டக்கூடாது :angry: :angry: :angry:

அது என்ன நெளிந்த தட்டு, ஏன் நெளியாத தட்டில் போடக்கூட்டாதோ. :huh::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டுவதே தப்பு இதுக்குள்ள நெளிச்ச தட்டா?

பேசாம ஒரு ஓரமாக போட்டு விடுங்கள் அது திண்டு விட்டு போகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

சிங்கள அரசு தான் இப்பொழுது முழுப்போர் செய்கிறது.விரைவில் புலிகளும் முமுப்போர் செய்யும் போது பாருங்கள் அதிசயத்தை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு தான் இப்பொழுது முழுப்போர் செய்கிறது.விரைவில் புலிகளும் முமுப்போர் செய்யும் போது பாருங்கள் அதிசயத்தை.

அண்ணை கந்தப்பண்ணை என்னதான் சொன்னாலும் குறுக்காலை போறவைக்கு நக்குத்தண்ணி நக்குதண்ணிதான். அவை எசமான விசுவாசத்தை இப்படியான மட்டமான எண்ணங்களினால்தான் விமர்சிக்கமுடியும்.

புலிகளின் மெளனத்தில் சிறுநரிகள்(சீச்சீ ஓநாய்கள்) சலசலக்கும் புலிகள் உறுமும்போது அடுத்த முகமூடியுடன் வாழ்த்துமடல்களை களத்துக்கு சுமந்துவருவினம். நரிக்கு தலையாக இருப்பதைவிட புலிக்கு வாலாக இருப்பது எவ்வளவோமேல்

நான் வாலாக இருப்பதிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.

வெற்றிமுரசு தமிழர்படை கொட்டும்

நாணி வெறியர்படை ஓடும்.

களத்தில் சிறுமதியர் கூட்டம்

கதிகலங்கி வார்த்தையின்றி கலங்கும்

தூயவன் நான் கஞ்சி குடித்தாலும் கெளரவமாக குடிக்க விரும்புகிறேன்.

என் பங்களிப்பை நான் தவறாமல் செய்து கொண்டிருக்கின்றேன். என்பாதை தெளிவானது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KADALATHAI NAANGAL VELLUVOM KADATPULI NANGAL AALUVOM :huh:undefined

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

undefined

undefined

  • கருத்துக்கள உறவுகள்

வியாசன் அண்ணா தாயகம் குறித்த உங்களது பங்களிப்பை நான் என்றைக்குமே குறைத்து மதிப்பிடவில்லை. உங்களின் பங்களிப்பு குறித்து நிறைய மரியாதை உண்டு.

யாழ்களத்தில் பொதுவாக எழுதும்போது பொதுவாக அனைவருக்கும் சொல்லக் கூடியதாகவே சொன்னேன். தலைவரைப் போன்று சொல்லை விடச் செயலுக்கே மதிப்புக் கொடுப்போம் என்பது தான் நான் சொல்ல வந்தது.

நாங்கள் வெல்லுவோம் என்றது முக்கியமல்ல. வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு நாம் பூரணமடைவதே முதல் பணி. அதைத் தான் குறுக்கால போவனும் சொல்ல வருகின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.

யாருடைய மனதையும் வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் எனக்கு நேரம் கிடைப்பதில்லை அதனால்தான் களத்துக்கு நான் வருவதில்லை. ஆனால் களத்தில் குறுக்காலை விசத்தை பரப்புவதை பல தடவை பார்த்திருக்கின்றேன்.

என்வரை நாம் புலிகளை சந்தேகிப்பது

தாய் எமக்கு காட்டிய தந்தையை நாம் நம்பாமல் விடுவதுபோல்தான் குறுக்காலைகள் தந்தையை நம்பாதவர் போலும்.............

குசுக்காலபோவான் அண்ண்னாவுக்கு எப்பவும் ஒரு நக்கலும் மட்டம் தட்டுதலும் தான்.

என்னப்பா புது பெயர் எல்லாம் கண்டு பிடிகிறியல் :angry: :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

ஈழம் வெல்லப்படுவது என்பது உறுதியானது. அந்த முடிவினைத்

தலைவரே சொல்லிவிட்டார். அந்த நிலையில் இன்று போராட்டம்

நகர்ந்து கொண்டிருக்கிறது. அது வெளிப்படையாகவே தெரிகிறது.

அனைத்துக் கட்டுமானங்களும் இயக்கம் பெறத் தொடங்கி

விட்டது. அரச இராணுவ நடவடிக்கைகளால் பின்னோக்கி

நகர்ந்ததினால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் விரைவில் தீரும்.

அப்போது தெரியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது

கடற்புலிகள் மட்டுமல்ல ஏனையவையுந்தானென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.