Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்கள்!

சிறீ லங்கா நீதி விசாரணை நடைமுறை! 17 members have voted

  1. 1. நீங்கள் சிறீலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தால் உங்களை பொலிஸ் அல்லது இராணுவம் பிடித்த தினத்திலிருந்து வழக்கில் நிரபராதி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும்வரை எவ்வளவு கால இடைவெளி எடுத்துள்ளது? நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பிடித்து அடைக்கப்பட்டிருந்தால் ஆகக்கூடிய கால அளவு எடுத்த சம்பவத்தை வாக்களிப்பிற்கு தெரிவுசெய்யவும்!

    • 0 தொடக்கம் 6 மாதங்கள்
      11
    • 01 வருடம்
      0
    • 02 வருடங்கள்
      0
    • 03 வருடங்கள்
      1
    • 04 வருடங்கள்
      1
    • 05 வருடங்கள்
      0
    • 05 வருடங்களிற்கு மேல்
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சிறிது காலமாக சிறீலங்கா சிறைகளில் அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பிடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். இந்தச் சிறை அனுபவங்கள் பயங்கரமானது. நேரில் அனுபவித்தவர்களிற்குத்தான் இதன் துன்பங்கள் தெரியும்.

யாழ் களத்திலும் சிறீலங்கா சிறைகளில் வைத்து செய்யாத குற்றத்திற்காக சிங்களக் குண்டர்களால் துன்புறுத்தப்பட்ட பலர் இருக்கக்கூடும். உங்கள் சிறீலங்காவில்பட்ட சிறைஅனுபவங்களை யாழ்கள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இக்கருத்தாடலை நாம் ஒட்டியுளோம்.

இங்கு எமது அனுபவங்களை நாம் கூறுகின்றோம். சிறீலங்கா சிறைகளில்பட்ட உங்கள் சொந்த அனுபவங்களையும் கூறி வெளி உலகத்திற்கு தெரியாத உண்மைகளை அம்பலப்படுத்துங்கள்!

இங்கு நாம் எழுதப்போகும் சம்பவங்கள் எமது சொந்தவாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள்.

நன்றி!

Edited by கலைஞன்

  • Replies 103
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொழும்புக்கு வந்திறங்கி சுமார் ஒரு கிழமைதான் ஆகியிருந்தது. அன்று காலை டமார் என்று ஒரு குண்டு தூரத்தில் வெடித்து கேட்டது! இரவைக்கு பொலிஸ் வரப்போறான். அயிடன்ட்டிக் கார்ட்டுடனும் பொலிஸ் கேட்கும் கேள்விகளிற்கு பதில்கூறுவதற்கும் ஆயத்தமாக இருக்கும்படி வீட்டுஓனரால் எனக்கு அறிவுரை தரப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில்(1990 - 2000) சிறீ லங்கா அரசால் கொழும்பில் வாழும் தமிழர்மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இயல்பாகவே கொழும்பில் வாழ்பவர்களிற்கு பொதுவாக மற்றவர்களிற்கு உதவிசெய்ய வேண்டும் எனும் குணம் அறவே கிடையாது. சிறீ லங்கா அரசும் தமிழர் மீது கட்டுப்பாடுகளை விதித்துவிட இவர்கள் தமது உறவுகள் தமிழீழ தேசத்திலிருந்து கொழும்புக்கு வரும்போது சும்மா ஒருமுறை வந்து முகம் காட்டுவதற்கே பஞ்சிப்பட்டார்கள். பொலிஸ் பிரச்சனை, இராணுவ வீதிச் சோதனைகள் என்று சாட்டுக்கள் கூறி புதிதாக வந்தவர்களை வெட்டிவிட்டார்கள்.

இதற்கு உதாரணமாக நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை கூறிவிட்டு விடயத்திற்கு வருகிறேன். எனக்கு (சிறையால் விடுதலையடைந்த பின்) தொழில் சம்பந்தமாக கொழும்பில் ஒரு செல்வந்தர் வீட்டினுள் செல்லவேண்டி வந்தது. அப்போது வீட்டுத்தலைவி தனது உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரது உறவினர் இவ்வாறு கூறினார் "உங்கட அவேள் ஜவ்னாவிலிருந்து கொழும்புக்கு வந்து 02 கிழமையாச்சு, எப்ப போய் சொந்தக்காரரை சந்திக்கப்போறீங்கள்?" வீட்டுக்காரி இவ்வாறு பதில் சொன்னார் "நாங்கள் எப்பிடியப்பா போறது? அவேள் எங்கையோ லொட்சிலையாம் இருக்கிறீனம்! நான் எப்படியப்பா இவரையும் கூட்டிக்கொண்டு லொட்சுக்கு போறது?" இவ்வளவிற்கும் 24 மணித்தியாலமும் செல்வந்தர் குடும்பம் அழகிய ஆடம்பர காரில் கொழும்பு முழுவதும் உலாத்திக் கொண்டு திரிந்ததை நான் அறிவேன்!

இனிகதைக்கு வருகிறேன். பொலிஸ் இரவைக்கு வரப்போகிறது என வீட்டுஓனர் பூச்சாண்டிகாட்டி விட்டதும் நான் குளிர்சாதனப் பெட்டியுள் வைத்த சிக்கின் ஆகி விட்டேன். கை, கால் உதறத்தொடங்கியது. ஹார்ட்டும் டபக் டபக் தான். நேரத்துடனேயே சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டேன்.

சரியாக நடுச்சாமம் 12.00 மணி சொச்சத்தில் எனது அறைக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. பொலிஸ் வந்திருக்கிறோம். கதவை உடன் திற என கொச்சைத் தமிழில் கூறப்பட்டு கதவு பலமாகத் தட்டப்பட்டது. லைட்டை போட்டு கதவைத் திறந்தேன். நான்கு பொலிசும் வீட்டு ஓனரும் வாசலில் நின்றார்கள். அயிடன்டிக்கார்ட்டையும், பொலிஸ் ரிப்போர்ட்டையும் கேட்டார்கள். காட்டினேன். பொலிஸ் ஸ்டேசனுக்கு வருமாறும், அங்கு கூட்டிக்கொண்டுபோய் விசாரித்தபின் விடியற்காலையில் விட்டுவிடுவதாகவும் கூறி என்னை தமது பெரிய நாய்பிடிக்கும் வண்டியில் ஏற்றினார்கள்.

தொடரும்.....

சொந்தக்கதையோ மாப்பு

  • தொடங்கியவர்

சொந்தக்கதையோ மாப்பு

சொந்தக்கதை! சோகக்கதை! :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடைபட்டு அடிவாங்கிய காலத்தை விட என் உறவுகளுக்காக அழுதகாலம் அதிகம்.என் அம்மா கண்ணீரும் சோறுமாக வாழ்ந்த காலத்தை நினைத்தால்

  • கருத்துக்கள உறவுகள்

மாபிள்ளையின் அனுபவம் முடிந்தபின்பு மற்றவர்களும் தங்களது அனுபவங்களைச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல தமிழர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. ஆனால் நடிகை ஒருவரின் நாய்க்குட்டி குட்டி போட்ட கதை தெரியும். இப்படியானவர்களுக்கு ஒரளவாவது அனுபவங்கள் போய்ச் சேரவேண்டும். இப்படியான அனுபவங்கள் வேறு ஊடகங்களிலும் வரவேண்டும்(உ+ம் ஒரு paper)

  • தொடங்கியவர்

வண்டியினுள் ஒரு மாதிரி உள்ளே ஏறிய பின் பார்த்தபோது அதனுள் ஏற்கனவே சுமார் பத்து தமிழர்கள் பிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. எல்லோரும் கப் சிப். ஒருவருடன் இன்னொருவர் கதைகக் கூட இல்லை. இரு பொலிஸ்காரர் தம்முள் ஒரு விலாசம் எழுதப்பட்ட பேப்பரை காட்டி கதைத்த பின் வண்டி அடுத்த தெருவினுள் போய் நின்றது. கிடுகிடு என வண்டியில் இருந்த நான்கு பொலிசார் இறங்கி ஒரு வீட்டை நோக்கி சென்றார்கள். நாம் வண்டியினுள் இருந்து விடுப்பு பார்க்கத் தொடங்கினோம்.

சிறிது நேரத்தில் ஒரு இளம்பெடியனையும், ஒரு பதின்ரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவனையும் பிடித்து இழுத்து வந்தார்கள். சிறுவன் வீரிட்டு கொய்யோ, மைய்யோ என தெரு அதிரும்படி கத்தி அழத் தொடங்கினான். அவனது போராட்டங்களை சகித்துக் கொள்ளமுடியாத ஒரு பொலிசுகாரன் மற்றவனிடம் அவன் சிறுபிள்ளை விட்டுவிடலாம் எனச் சொல்ல சிறுவன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டான். சிறுவன் விடுதலையான சந்தோசத்தில் புளுகத்துடன் வீடு நோக்கி ஓட நமது வண்டி இன்னொரு தெரு நோக்கிச் சென்றது. சுமார் பதினைந்து பொலிஸ்காரர் கைது செய்யப்பட்ட சுமார் ஐந்து தமிழர்களுடன் எமது வண்டிக்காக மற்றைய தெருவில் காத்திருந்தார்கள். எல்லோரும் எமது வண்டியில் ஏறியதும் இறுதியில் பிடிக்கப்பட்ட சுமார் பதினாறு அப்பாவித் தமிழர்களுடன் வண்டி பொலிஸ்டேசன் நோக்கிச் சென்றது.

பொலிஸ்டேசனுக்கு நாங்கள் கூட்டிவரப்பட்ட போது அதிகாலை சுமார் இரண்டு மணியாகி இருந்தது. பொலிஸ்டேசன் அந்த அதிகாலையில் சிலநூறு தமிழ்ச் சனக்கூட்டங்களால் நிறைந்து திருவிழா போல் காட்சியளித்தது. பிடிக்கப்பட்ட நாம் எல்லோரும் ஸ்டேசனுள் கொண்டு போய் அடைக்கப்பட்டோம். கம்பிகளினுள்ளே நாம் இருந்தோம். கம்பிகளிற்கு வெளியே பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் தாய், தந்தைமார், மனைவிமார், சகோதரங்கள் நின்று அழுது கொண்டு இருந்தார்கள். எங்களுடன் சுமார் ஐந்து இளம் தமிழ்ப் பெண்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் மூவர் சத்தமிட்டு அழத்தொடங்கினார்கள். பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் உறவினர்கள் அவர்களிற்கு குடிப்பதற்கு குளிர்பானப்போத்தல்கள், உண்பதற்கு பனிஸ், பாண், வடை போன்றவற்றை வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். திடீரென்று ஒரு பொலிஸ்காரன் சத்தமாக கதைக்கத் தொடங்கினான். உறவினர்கள் எல்லோரையும் காலை எட்டுமணிக்கு பின் வருமாறு சொல்லி இப்போது எல்லோரையும் தங்களது வீடுகளிற்கு போகுமாறு சொன்னான். சனக்கூட்டம் கலைந்து கடைசியில் பிடிக்கப்பட்ட நாமும் பொலிஸ்காரரும் மாத்திரம் ஸ்டேசனுள் இருந்தோம். நித்திரை எனக்கு தூக்கிதூக்கி அடித்தது.

சிறிது நேரத்தில் நாம் ஒவ்வொருவராகக் கூப்பிடப்பட்டு எமது பெயர், அயிடன்டிக்கார்ட் இலக்கம், முகவரி என கேட்கப்பட்டு பதியப்பட்டது. பின் எங்களை - சுமார் இருபத்திரண்டு பேரை ஒரு சிறிய கூண்டினுள் போட்டு அடைத்தார்கள். அந்தக் கூண்டினுள் இருந்த நெரிசல் நல்லூர் தேர்த்திருவிழாவின் போது கோயிலினுள் அனுபவிக்கும் நெரிசலைவிட மோசமாக இருந்தது. நாம் எங்களிடையே கதைக்கத் தொடங்கினோம். மற்றவர்களின் பெயர், ஊர், தொழில், படிப்பு விடயங்களை கேட்டு அறிந்தோம். சில ஆண்கள் வெட்கத்தையும் பாராது அழத் தொடங்கினார்கள். சில வம்பில் பிறந்ததுகள் அந்த துன்பமான நேரத்திலும் ஜோக்குகள் அடிக்கத்தொடங்கினார்கள். எனக்கு அருகில் இருந்தவர் கூண்டினுள் பொலிஸ் சீ.ஐ.டி கூட மாறு வேசத்தில் இருக்கக்கூடும் என்றும் இதனால் மற்றவர்களுடன் ஒன்றும் கதைக்க வேண்டாம் என்றும் இரகசியமாக எனது காதினுள் சொன்னார்.

ஒரு இளைஞர் பயமின்றி சத்தமாக கதைக்கத் தொடங்கினார். டேய், தம்பிமார், அண்ணைமார் உங்களில யாராவது புலிகளுடன் சம்மந்தப்பட்டிருந்தால் பொலிசிடம் போய் சொல்லுங்கோடா! ஏன் உங்களுக்காக அப்பாவிகளான எங்களையும் போட்டு வதைக்கிறீங்கள்? எல்லோரும் அவன் கதைப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தோம். பதில் பேசவில்லை. மற்றவர்களிடம் மிஞ்சி இருந்த குளிர்பானங்கள், பனிஸ், பாண், வடைகளை பகிந்து உண்டபின் காலை சுமார் நான்கு அரை ஆகி இருந்தது. மெல்ல மெல்ல சுவர் மற்றும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி நித்திரைசெய்யத் தொடங்கினோம்!

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் பார்க்க உறவினர்கள் ஒருவரும் வரவில்லையா மாப்பிளை?

  • தொடங்கியவர்

உங்களைப் பார்க்க உறவினர்கள் ஒருவரும் வரவில்லையா மாப்பிளை?

நிறைய உறவினர்கள் எமக்கு கொழும்பில் இருந்தார்கள். ஆனால் உதவி செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததால் நான் புலியாக இருக்கக்கூடுமென்று சந்தேகப்பட்டார்கள். சிலர் நேரடியாகவே நான் புலியில் இருக்கிறேனா என்று கூட கேட்டார்கள். ஏதோ எனக்கு உதவிசெய்வதற்காக அல்ல அவர்களின் இந்த விசாரணைகள்! மாறாக என்னை கிண்டல் செய்யவும், புலிகள் மீதுள்ள வெறுப்பைக்காட்டவும், விடுப்புக்கேட்கவுமே இவ்வாறு செய்தார்கள். ஒவ்வொரு உறவினர் வீடு வீடாக உதவி கேட்டு சென்றபோது என்னை புதினமாகப் பார்த்தார்கள். அவர்கள், அவர்களது பீப்பா போன்று வளர்ந்த பிள்ளைகள், அவர்களது ஆடம்பர வாழ்க்கை இவற்றை அங்கலாய்ப்புடன் பார்க்க மாத்திரமே முடிந்தது! என்னை நையாண்டி செய்ததால் எனக்கு அவர்கள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இந்த நாய்களை நம்பி மினக்கெட்டு கொழும்புக்கு வந்த நேரம் பேசாமல் புலிகள் இயக்கத்திலேயே சேர்ந்திருக்கலாம் போன்று இருந்தது!

பொலிஸ் என்னை பிடித்தபோது எனக்கு உறவினர் என உதவி செய்வதற்கு ஒருவரும் வரவில்லை. ஏதோ சில நண்பர்களை தெரிந்து வைத்திருந்ததால் ஏதோ அப்படி இப்படி தப்பிப்பிழைத்தோம்!

  • கருத்துக்கள உறவுகள்

உணமையில் கஸ்டங்கள் வரும் போது தான் உறவினர்கள், நண்பர்களின் சுய தோற்றத்தினை அறியக்கூடியதாக இருக்கும்

ஐயோ,..பாவம் மாபிள்ளை..சிறை எல்லாம் சென்று கொடுமைகள் அனுபவிதிருங்கீங்களா?..இப்ப திரும்பவும் தொடங்கிவிட்டார்கள் பழய்யபடி ஆள் பிடிக்க,,...எத்தனை பேரின் வாழ்க்கைகள் இப்படி அநியாயமாக்கபடுகிறதோ!

எனக்கு இந்திய சிறையிலை இருந்த அனுபவம் இருக்கு....! ஆனால் இலங்கை ஆமிக்காறனால் சுட்டு துரத்தப்பட்ட அனுபவங்கள் இருக்கு ஆனால் பிடி பட்டது கிடையாது... ஓட்டத்திலை அவ்வலவு கில்லாடியாக்கும்...!

அது தான் இன்னும் குதிரை போல ஓடிகொண்டிருகிறிங்களோ?

நிறைய உறவினர்கள் எமக்கு கொழும்பில் இருந்தார்கள். ஆனால் உதவி செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததால் நான் புலியாக இருக்கக்கூடுமென்று சந்தேகப்பட்டார்கள். சிலர் நேரடியாகவே நான் புலியில் இருக்கிறேனா என்று கூட கேட்டார்கள். ஏதோ எனக்கு உதவிசெய்வதற்காக அல்ல அவர்களின் இந்த விசாரணைகள்! மாறாக என்னை கிண்டல் செய்யவும், புலிகள் மீதுள்ள வெறுப்பைக்காட்டவும், விடுப்புக்கேட்கவுமே இவ்வாறு செய்தார்கள். ஒவ்வொரு உறவினர் வீடு வீடாக உதவி கேட்டு சென்றபோது என்னை புதினமாகப் பார்த்தார்கள். அவர்கள், அவர்களது பீப்பா போன்று வளர்ந்த பிள்ளைகள், அவர்களது ஆடம்பர வாழ்க்கை இவற்றை அங்கலாய்ப்புடன் பார்க்க மாத்திரமே முடிந்தது! என்னை நையாண்டி செய்ததால் எனக்கு அவர்கள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இந்த நாய்களை நம்பி மினக்கெட்டு கொழும்புக்கு வந்த நேரம் பேசாமல் புலிகள் இயக்கத்திலேயே சேர்ந்திருக்கலாம் போன்று இருந்தது!

பொலிஸ் என்னை பிடித்தபோது எனக்கு உறவினர் என உதவி செய்வதற்கு ஒருவரும் வரவில்லை. ஏதோ சில நண்பர்களை தெரிந்து வைத்திருந்ததால் ஏதோ அப்படி இப்படி தப்பிப்பிழைத்தோம்!

என்ன இது நம்ம கதை மாதிரி இருக்கே? உரில இருந்து வாற எல்லா பொடியளுக்கும் இது பொதுவான கதை போல?

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நீங்கள் ஆமிக்காரனுக்க சிறையிருந்து அனுபவிச்சதை விட சில பெண்களிடம் சிறைப்படும் ஆண்கள் படுற கொடுமை இருக்கே அது ஆயுள் தண்டனையையா. பாவம் பல ஆண்கள் இப்படியும் மாட்டி அப்படியும் மாட்டி சீரழிகிறார்கள். அப்படியான அனுபவங்களையும் சேர்த்து எழுதுங்கோ. தெரிஞ்சா. அப்பதான் ஒப்பீட்டு ரீதியா பல சங்கதிகள் வரும் வெளிச்சத்துக்கு. :P :rolleyes:

மூக்கியை வம்புக்கு இழுக போடப்படும் முயற்சி :P இது தலைப்பை திசை திருப்பாதீங்கப்ப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன அநியாயமா இருக்குதையா. எதுக்கும் மூக்கி மூக்கி என்று அந்த மூக்கிச் சிந்திற ஆளைப்பற்றியே சிந்தனை உங்களுக்கு. :rolleyes:

நம்ப பிரண்டும் உள்ள இருந்து வந்தவன். இப்ப உங்கிணை வந்து கலியாணம் முடிச்சு இருக்கான். ஒரு சேவ் என்று சொல்லிக் கட்டி வைச்சிட்டினம். இப்ப அவன் சொல்லுறான் பேசாம ஜெயில இருந்திருக்கலாமடாப்பா என்று. அப்படி சோதனை.. அவனுக்கு..! :lol::lol:

மூக்கியை வம்புக்கு இழுக போடப்படும் முயற்சி :P இது தலைப்பை திசை திருப்பாதீங்கப்ப்பா :lol:

இதுக்கு தானே காவல் இருகிறனீங்க! சந்தோசமா இருக்குமே... :rolleyes:

இதென்ன அநியாயமா இருக்குதையா. எதுக்கும் மூக்கி மூக்கி என்று அந்த மூக்கிச் சிந்திற ஆளைப்பற்றியே சிந்தனை உங்களுக்கு. :lol:

நம்ப பிரண்டும் உள்ள இருந்து வந்தவன். இப்ப உங்கிணை வந்து கலியாணம் முடிச்சு இருக்கான். ஒரு சேவ் என்று சொல்லிக் கட்டி வைச்சிட்டினம். இப்ப அவன் சொல்லுறான் பேசாம ஜெயில இருந்திருக்கலாமடாப்பா என்று. அப்படி சோதனை.. அவனுக்கு..! :lol::lol:

கலோ சேர்..நாங்க இங்க சீரியஸா மாப்பிளையின் சோக கதையை உட்கார்ந்து கேட்டுகொண்டிருக்கோம்..வந்து குழப்பாதயும்..வேனுமென்டால், உமது நண்பனின் கல்யாண சிரை வாழ்க்கை பற்றி இன்னொரு தலைப்பில் ஆராயலாம்..இப்போதைக்கு உண்மையான சிறை கதை இருந்தால் சொல்லும்..இல்லாட்டி வந்த வழிய பார்த்து திரும்பி நடவுங்கோ, சத்தம் போடாமல்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதுபவர்களிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்தப்பக்கத்திலாவது நக்கல்,நகைச்சுவை,விதண்டாவாதம

நான் 11 வயதில் சிங்களச் சிறையில் இருந்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

கலோ சேர்..நாங்க இங்க சீரியஸா மாப்பிளையின் சோக கதையை உட்கார்ந்து கேட்டுகொண்டிருக்கோம்..வந்து குழப்பாதயும்..வேனுமென்டால், உமது நண்பனின் கல்யாண சிரை வாழ்க்கை பற்றி இன்னொரு தலைப்பில் ஆராயலாம்..இப்போதைக்கு உண்மையான சிறை கதை இருந்தால் சொல்லும்..இல்லாட்டி வந்த வழிய பார்த்து திரும்பி நடவுங்கோ, சத்தம் போடாமல்.. :icon_idea:

கொஞ்சம் நாகரிகமாக எழுதப் பழகுங்கள். சிறை வாழ்க்கையால் வாழ்க்கையிலும் சிறப்பட்ட பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எழுத சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். உளறுவதல்ல. :P :icon_idea:

நான் எழுதியது உங்களுக்கோ,அல்லது மற்றவர்களுக்கோ, வருத்தையோ,கோவத்தையோ உண்டு பண்ணினால், மன்னிப்பு கோருகிறேன்.அத்துடன், இங்கு இதை குழப்பும் நோக்குடன் கருத்து எழுதியதும் தாங்கள் தான் என்பதை பணிவுடன் அறிய தருகிறேன்...

சோகமும், சோதனைகளும் வாழ்க்கையில் எல்லொருக்கும், சிலருக்கு சில முறையும், சிலருக்கு பல முறையும் வரும்..மாபிள்ளையின் வாழ்க்கையில் அது முடிந்துவிட்டது என்று நினைகிறேன்..வடுக்கள் என்றும் மறையாதவை..ஆனால் அதையே நினைத்து நினைத்து வேதனைபடுவது இன்னும் சோகத்தை உண்டு பண்ணும், உள்ள சந்தோசத்தையும் கெடுக்கும்..இங்கு மாப்பிள்ளை தானும், இன்னும் எத்தனையோ பேரும் பட்ட துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்கின்றார்..ஆனால் துன்பப்பட்ட மாப்பிளையே, இங்கு தன் அனுபவத்தை பகிர்ந்துவிட்டு அடுத்த நிமிடம் செல்வன் சீரியல் எடுக்க போய்விடுகிறார்..மாப்பிள்ளை என்னவோ கலகலப்பாக தான் இருகிறார்..அதேபோல் எமது கு.சா தாத்தாவும்..அவரும் பல கஸ்டங்களை அனுபவித்திருகிறார் போலும்..ஆனால் அவரும் மிகுந்த கலகலப்புடன் தான் இருகிறார்..பின் எதற்க்காக இங்கே நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று தான் எனக்கு புரியவில்லை..ஒரே நேரத்தில் நகைசுவை பகுதியில் சிரித்துகொண்டு கருத்து எழுதிவிட்டு, இங்கே வந்து அழுது கொண்டு கருத்து எழுதுவது, சாத்தியமா என்பது எனக்கு தெரியவில்லை..எப்படி உங்கள் மூட் அவ்வளவு வேகமா swing பண்ணுகிறது என்றும் எனக்கும் தெரியவில்லை..

இந்த தலைப்பில் நடந்த இந்த குழப்பதுக்காக, அனைவரிடமும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன், முக்கியமாக, மாப்பிள்ளையிடமும் கு.சா தாத்தவிடமும்..இதுவே, இந்த தலைப்பில் நான் பதியும் இறுதி கருத்தாகும்!

நான் இதைபற்றி ஒன்றும் சொல்லவில்லை. கு.சா அண்ணாவின் சிறை அனுபவங்கள் எனது அனுபவத்தை விட கசப்பாக இருக்கிறது போலும். அதுதான் மூட் அவுட் ஆகி விட்டார். பலருக்கு சிறை அனுபங்கள், சிறையில் என்ன நடக்கிறது, சிறீ லங்கா பொலிஸ், சிறீ லங்கா நீதித்துறை எப்படி தமிழரை ஏமாற்றுகிறது என்பது தெரியாது. மற்றைய அப்பாவித் தமிழர்களுடன் ஒப்பிடும் போது நான் பட்ட துன்பங்கள் சிறு துளியே. ஆனால் இச்சிறு துளி துன்பம் எனது மனதில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. இதற்காகத்தான் எனது எண்ணங்களை ஏதோ எனக்கு தெரிந்த தமிழில் எழுதுகின்றேன். மற்றையது நாங்கள் ஆட்லறி அடிக்க வேண்டிய இலக்கு சிங்களக் குண்டர்களின் இருப்பிடமேயொழிய எமது வீட்டினுள் அல்ல. இதனால்தான் யாழ் களம் முழுவதும் நான் பகிடி விட்டுக் கொண்டு திரிகிறேன். அதாவது துன்பங்கள் வரும் போது எமக்கு சிரிக்கத்தெரிய வேண்டும். எம்மையே நாம் துன்புறுத்தி பயனில்லை. நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து கொண்டு நாம் மகிழ்வாக இருக்க வேண்டும். யாழ் களமும் மகிழ்வாக இருக்க வேண்டும். இதுதான் எனது எதிபார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை தொடர்ந்து உங்களுக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லுங்கள். பலருக்கு இலங்கை இராணுவச்சிறையில் நடந்த கொடுமைகள் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.