Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள கவிஞர்களின் கவியரங்கம் 02: யாழ் கீதம்!

Featured Replies

yarlcom9thyearcelebratizo9.gif

ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு!

***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02***

தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்!

கவியரங்கின் நடுவர்கள்

பண்டிதர்

தமிழ்தங்கை

குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்!

குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு!

குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007

மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழிநடத்திச் செல்லுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்!

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரான கவிகள் பலநாள் சொன்ன

சீனியர் கவிஞர் பலருமி ருக்க

சிறியனை நடுவராய் ஆக்கிய தேனோ?

சித்தம் குழம்பிப்பின் சிறிது தெளிந்தேன்

நாயகர்க் கெல்லாம் சோலிபல வாக்கும்

நடுவராய் நின்றிட நேரமிலை யாக்கும்

நம்மாப்பு கேட்டதன் மதிப்பை யறிந்து

நடுவனாய் வந்தேன் நானொன்று மறியேன்

எந்தன்சிற் றறிவுக் கெட்டிய வரையில்

உம்கவி படிப்பேன் தவறெனில் உரைப்பேன்

எளியவன் தானே என்றெண்ணிச் செல்லா(து)

எல்லோரும் வந்திங்கு கவிகள் படைப்பீர்

பாடும்யாழ் கீதம்எம் தளமதின் பாட்டு

பல்லவி சரணமென இருவகை யுண்டு

பல்லவி ஒன்று சரணங்கள் பலவே

பாடுவீர் பாட்டு தாளங்கள் போட்டு!

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிக்கு கவி கொடுங்கள் -உங்கள்

பாவுக்கு உயிர் கொடுங்கள்-நான்

ஒன்றும் பெரியோன் அல்ல

ஆனாலும் நல் இரசனை உண்டு!

கவித் தமிழே ஆளவேண்டும்

கருத்தில் உயர் செறிவுவேண்டும்

நற்றமிழால் பண்பிசைத்து

பல பாடல் தான் கொடுங்கள்!

தேன் வடியும் கவி உண்டோ?

தமிழ் வீரத்தின் உரம் உண்டோ?

நாம் தமிழரென பறைசாற்றும்

யாழ் கீதம் இசையுங்கள்!

சொல்லின் வளம் கண்டு

இதயங்கள் அசைய வேண்டும்.

யாழின் கீதம் கண்டு நாம்

எல்லாம் மகிழ வேண்டும்!

படையுங்கள் பாவெடுத்து

இசையுங்கள் யாழ் எடுத்து

தமிழெனும் உயிர்கொடுத்து!

இசையுங்கள் யாழ் கீதம்!

நன்றி..

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்க பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்க பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

நீண்ட நாட்களின் பின் குருவியின் கவிதையை படித்த உணர்வைதந்தது நன்றீ அண்ணா. :lol::lol::lol:

மன்னிக்கவும், இடம் மாறிப் பதிவு செய்யப்பட்ட எனது கவிதை மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் இவ்விடம் வருவேன்.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!<<<

நல்ல உவமானம் கொண்ட கவிதையின்

தொடக்கம்!! அதில் ழ,ள, ல 'விலே

என்ன தான் குழப்பம்?!!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...<<<<

நெஞ்சைத் தொடுகின்ற நீண்ட நினைவுகள்

உணர்வின் வேருக்கு நீர் வார்க்கும்

நினைவலைகள்! தங்கள் கவி வண்ணம்

கண்டு மகிழ்ந்தேன்!. யாழிலே உங்கள்

இசை கண்டு நிறைந்தேன்..[

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!<<<<

கருத்திலே செறிவுண்டு

சொன்ன கருத்திலும் நிறைவுண்டு!..

விவாதத்தின் முடிவு இன்னொரு தொடக்கம்!

களத்தினில் விளையும்!!!....சுவையும் அதிகம்.!!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!<<<

யாழிலே பெற்றதை யாழிலே மீட்டும்

இன்னும் ஒருவா!! கவிதையின் நடையிலே

எதுகை மோனை ஏராளம்!.

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

யாழோடு வளர்ந்திடுக!! முடிவிலே

ஓர் தொடக்கம்! முடித்திட்ட கவி

சுவைக்கும் நல்ல கவி தந்தீர்கள்!

களிப்புண்டோம்! யாழின் சுவை கண்டோம்

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்.

நல்ல கவிதை! அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் என்ற அவசரம் தெரிகின்றது வரிகளில்!. கவிதை நடையில் இருந்து மாறி கொஞ்ச ம் வசனக்கவிதையாகப்போனாலும் நடக்கும், தடுக்கும் என்று தப்பித்துவிட்டீர்கள்.

கருத்துக்கள் அருமை. வாழ்த்துக்கள் மீண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

<<

கீபோர்ட்- தட்டச்சுப்பலகை

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி[/color] வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!<<<

வெட்டி- என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'வெட்டி" விட்டென்...அது வேண்டாம்!!...

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்கா பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

டா!! டா! டா!! அடடா!! எதுக்கு இத்தனை 'டா"!. இது கவிதை அல்ல!! பாடல் வரிகள். மெட்டமைத்தால் நன்றாக இருக்கும்! 'உன்னோட உயர்வுக்கு உன்னோட உழைப்பு - இது ஒரு சினிமாப்பாடலை நினைவூட்டுகின்றது.

உங்கள் அனுபவங்களை அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் போலும்!!...சிரித்து இரசித்து மகிழ்ந்தேன்...

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :lol:

யாழ் களம்!!

---------------

இது எங்கள் தாய் களம்...

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்!

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

வாழ்த்துக்களும் பொழிகிறது...

வசைபாடலும் தொடர்கிறது...

அறிவியலும் இருக்கிறது..

அந்நியன் திரை படம் பற்றிய

பேச்சும் இருக்கிறது...

தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது!

இருந்தும்...எம்மை மறந்து...

இட்ட அடி பிரள விட்டு...

எம் முகத்தில் நாம் அறைந்து...

எமக்குள் மோதி ...

ஏதோ வெற்றி பெற்றதாய்..

எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்

சாக்கடை ஆக்கி போகிறோம்...

சுகம் கொள்கிறோம்..

பிறர் மனசை கொல்கிறோம்!

தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..

சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ?

தெரியவில்லை!

எது எப்படியோ....

அமெரிக்காவில் இருப்பவருடன்

ஒரு செல்ல சண்டை..

லண்டனில் இருப்பவருடன்

ஒரு வாதம்..

கனடாவில் வாழ்பவருடன்

ஒரு கருத்து பகிர்வு...

கொலண்டில் குடியேறியவருடன்

ஒரு கொள்கை விவாதம்..

ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்

ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..

யாழ் களமே..

உன் உடலில் பரந்திருப்பது...

வெறும் தந்தி நரம்புகளல்ல...

விதி என்று போனதால் தாய் நிலம்

பிரிந்து துயருறும்

ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..

தாயின் தோழில் தாவி...பின்..

அவள் மடியில் குதித்துருண்டு சென்று...

உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..

உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

அவதானமாய் சேகரித்தால்..

அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?

உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..

நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!

Edited by Rasikai

நான் போன வருடம் எழுதிய உல்டா கவிதை??? (பாடல்)

யாழுக்கு வந்தால் ஆனந்தம்

அரட்டை அடித்தால் ஆனந்தம்

அப்பப்ப கருத்தெழுதினா

இன்னும் இன்னும்ஆனந்தம்

சண்டை பிடிச்சா சந்தோசம்

புடுங்குப்பட்டால் சந்தோசம்

தாமதமின்றி சமாதானமானால்

ரொம்ப ரொம்ப சந்தோசம்

கடி வாங்கினால் உல்லாசம்

கத்திரி பட்டால் உல்லாசம்

பட்டி மன்றம் வச்சால் உல்லாசம்

வாதாடினால் இன்னும் இன்னும உல்லாசம்

உல்லாசம் உல்லாசம் சம் சம் சம்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

தனி உலகோ புது உறவோ ஹோய்

உறவே உறவே உன் சிரிப்பில் நம்

சோகம் முழுதும் கரைத்தாயே

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில்

சொந்தங்களே சொந்தங்களே

தோழிக்கு அகவை ஒன்பதாம்

கவிமாலை சூடியவளின் களிப்பில்

சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்:

கவியரங்கம் சூடு பிடிக்கிறது. இந்த நேரத்தில் கவியரங்கத்தின் சில விதிகளினை நினைவு படுத்த விரும்புகிறேன்.

யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும்.

ஆகவே நீங்கள் உங்கள் கவிதயில் மாற்றம் செய்ய விரும்பினால், முடிவுத் திகதி வரை தாராளமாக மாற்றம் செய்ய முடியும்.

மேலும்,

இயற்றப்படும் யழ்கீதம் ஒரு பாடலாக இசையமைத்துப் பாடக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே புதுக் கவிதை வடிவில் எழுதாமல் மரபுக் கவிதையாக எழுதும்படி கவிஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்காக புதுக் கவிதை எழுதுபவர்களுக்கு வெற்றி வாய்ப்புக் குறைவு என எந்த விதத்திலும் கருத்தவேண்டாம். ஆனால், ஒரு புதுக் கவிதை வெல்லுமிடத்து அந்த கவிதையை எழுதிய கவிஞர் அந்தக் கவிதையை ஒரு மரபுக்கவிதையாகவும் மாற்றித் தருமாறு கேட்கப்படுவார். இவ்வாறு மாற்றுவதற்கு சகல உதவிகளும் வழங்க முடியும்.

வெற்றிபெறும் கவிதையைத் தெரிவு செய்ய பின்வரும் அம்சங்கள் கருத்தில் எடுக்கப்படும்.

  • கருத்து
  • கவிநயம்
  • சொல்நயம்

மரபுக்கவிதை எனும்போது ஒரு பல்லவியும் பல சரணங்களும் வருமாறு இயற்றுவது நல்லது. அல்லது பல்லவியில்லாமல் பல சரணங்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை.

உதாரணத்திற்கு பாரதியாரின் ஒரு பாடலை இங்கு தருகிறேன்.

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

ஆடுவோமே

பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை

ஏற்ப்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே - நம்மை

ஏய்ப்போருக் கேவல்செய்யுங் காலமும்போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு - நாம்

எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்

தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே (ஆடுவோமே)

எல்லோரு மொன்றென்னுங்க் காலம்வந்ததே - பொய்யும்

ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி

நல்லோர் பெரியரென்னும் காலம்வந்ததே - கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்

விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்

வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடுவோமே)

நாமிருக்கு நாடுனம தென்பதறிந்தோம் - இது

நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்

பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி

பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். (ஆடுவோமே)

மேலே, சிவப்பிலுள்ளது பல்லவி, நீலத்திலுள்ளது சரணங்கள்.

மேலும், எல்லா சரணங்களும் ஒத்த ஓசையுடையனவாக (சந்தம்) இருப்பதைக் கவனிக்க. இங்கு பல்லவியானது சரணங்களை விட வேறுவிதமான சந்தத்தில் வருகிறது. நீங்கள் விரும்பினால் பல்லவியையும் சரணத்தையும் ஒரெ மாதிரியான சந்தத்துடனும் எழுதலாம்.

யாழ்கீதம் படைத்து வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கூறி தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

  • தொடங்கியவர்

அன்னைத் தமிழ் மறந்து

ஆங்கிலோ நாட்டிலே - சுய

அடையாளத்தை இழந்து

அகதியாய் வாழ்ந்த போது......

உன் அன்புக் கரத்தாலே

என்னை அரவணைத்து -

ஏற்றம் தந்துவிட்ட

இனிய யாழ்களமே! நான்

சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் சேர்த்து வைத்தாய்!

கரும்பாய் இனிக்க வைத்தாய்!

கவிதைகள் பாடும்

சில பத்து விகடகவி...

கதைகள் சொல்லும்

சில பத்து சாத்திரிகள்...

தாயகத்து செய்திகளை

காவிவரும் ஈழவன்கள்....

கணணி பற்றி கற்றுதரும்

தேவகுரு, குழந்தை சுட்டி...

பகிடிகள் விடுகின்ற

கூ.சா, சின்னப்பு, ...

உதட்டை கடிப்பதற்கு

வானவில்லின் அரட்டைகள்....

சர்வமதம் வளர்க்கின்ற

சகோதரி சகானா...

இன்னும் பலர் இப்படியே

உன் குடும்பத்தில் இருக்கின்றார்...

குறுக்காலும் நெடுக்காலும்

நடந்துபோகும் வித்தகர்கள்....

குறும்பாகக் குறைக்கின்ற

உள்வீட்டு கடுவன்கள்....

குடிப்பதற்கு கூழ் ஊற்றும்

சமையற்கட்டு தூயா பபா..

ராசியாய் நீ பெற்ற

ரசிகை என்றொரு பெண்...

துடிப்பாக திரிகின்ற

தூயவன் என்றொரு ஆண்..

அடித்தாலும் அழுதிடாத

முரட்டுப் பையன் டங்கன்...

அப்பப்பா! நீ பெற்ற

பல நூறு பிள்ளைகளின்

வரலாற்றை முழுவதுமாய்

என்னால் விபரிக்க முடியாது!

உன்னைப் பாராட்ட..

உன்புகழை பறைசாற்ற....

எளியவன் என்னிடம்

வார்த்தைகளே இல்லை!

இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!

ஆதலினால் இப்போது...

அமைதியுடன் செல்கின்றேன்!

ஆனால் மீண்டும் திரும்பி வருவேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது முந்தைய பதிவின் தொடர்ச்சி,

பாரதியாரின் அழகான ஒரு பாடல் இருக்கிறது

கண்ணன் மாடு கன்றுமேய்த்து வேணுகானம் பாடுவான்

வெண்ணை திருடித் தின்பதற்கு வீடுவீடாய் ஓடுவான்

என அது செல்கிறது.

இதே சந்தத்தில் ஒரு பல்லவி:

வாழ்க வாழ்க யாழ்களம்நீ வாழ்கவென்றும் வாழ்கவே

வான முள்ள காலம்மட்டும் வையம்போற்ற வாழ்கவே

அதே சந்தத்தில் ஒரு சரணம்:

நாளும் பொழுதும் நண்பர்கூடி விடியவிடிய பேசுவோம்

நல்ல சேதி நக்கல்நளினம் என்று எல்லாம் பேசுவோம்

ஈற்றில் நாங்கள் இணையில்லாத குடும்பமென்று ஆயினோம்

ஈழம் வெல்ல என்னசெய்ய என்று கூடிப் பேசுவோம்

இப்படி ஒரு நாலு சரணம் எழுதினால் வருகிறது யாழ்கீதம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன கருத்தை எழுதுகிறோம் என்பதே.

பாரதியாரின் பாடல்கள் நல்ல அருமையான சந்தமும் சொல்வளமும் கொண்டவை. அவற்றில் சிலதை பின்பற்றி நல்ல சந்தத்துடன் பாடல் இயற்ற முடியும்.

வாழ்த்துக்கள்!

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிக் கருத்துக்கு வருவோம்:

  • யாழ்களம் என்றால் என்ன
  • யாழ்களத்தின் நோக்கம் என்ன
  • யாழ் களத்தின் செயற்பாடுகள் என்ன
  • யாழ் களம் ஏன் எவ்வாறு எல்லோராலும் நேசிக்கப்படுகிறது

போன்ற முக்கிய விடயங்கள் (இது மட்டும் தான் முக்கிய விடயம் என்று மேலே எழுத வில்லை, ஆனால் முக்கிய விடயங்கள் என்று கருதப்படக் கூடியவை அனைத்தும் உள்ளடக்கப் படவேண்டும்) கூறப்படவேண்டும்.

வேறு என்ன விடயங்கள் கீதத்தில் இடம்பெற வேண்டும் என யாராவது தங்கள் கருத்தை இங்கு வைத்தால் அது கவிஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

Edited by பண்டிதர்

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெஞ்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

இது

வெற்று வரியுமில்லை

வெறும்வாயின் மெல்லலில்லை

முற்றும் உணர்ந்தவனின்

மூச்சிருந்து வந்தவையே

வாழ்த்துக்கள்!

மேற்சொன்ன வரிகளில் யாழ்களத்தில் பாமரர் முதற்கொண்டு பல்லறிஞர் வரை அனைவரும் சகோதராய் பழகுவதை எடுத்துக் கூறிய கவிஞர்

"திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே"

என்ற வரிகளின் மூலம் புலம்பெயர் மக்களின் தாயகம் தொடர்பான உணர்வுகளை அழகாக விளக்கியிருக்கிறார்.

மேலும்,

தமிழர் பலதிக்குகளில் வாழ்ந்தும் இன்றும் நாடற்றவராகவே வாழ்வதனை குறிப்பிட்ட கவிஞர் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலமே அந்த நாட்டை பெற்றெடுக்க முடியும் என குறிப்பிடுகிறார்.

"பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு"

என யாழ்களத்தில் கருத்தை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகளையும் கவிஞர் விளக்குகிறார்.

"கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்"

"யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்"

"திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே"

போன்ற வரிகளில் நல்ல கவிநயமும்

"பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி"

போன்ற வரிகளில் நல்ல சொல்நயமும் மிளிர்கின்றது.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

பண்பட்ட யாழ்களத்தில் சிந்தனையின் விளைச்சல்

பயிர்ச்செய்கை போல இந்த சிந்தனையின் செயல்கள்

பலன்தருமே அதனாலே புரிந்திடுவோம் செயல்கள்

பறைந்திடுவோம் பண்படுவோம் பயன்பெறுவோம் இங்கே

வாழ்த்துக்கள்!

"கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!"

குழையுடன் வரும் தன் எஜமானரைக் கண்டு உவகையுடன் துள்ளும் ஒரு வெள்ளாடு போல யாழ்களத்தில் நுழையும் மனமும் ஆவலும் பரபரப்புமாக இருப்பதாகக் கூறப்பட்ட உவமை அருமையிலும் அருமை.

"சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்..."

என யாழில் ஏற்படும் அனுபவத்தை தாயகத்தில் எம் ஒவ்வொருவருக்கும் உள்ள தென்றல் நினைவுகளோடு கவிஞர் ஒப்பிடுவது அழகிலும் அழகு.

"அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்."

என யாழில் போகும் நேரத்தையும் அதன் பெறுமதியையும் அழகாக கூறுகிறார்.

"நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!"

என்ற வரிகளுக்கு யாழில் பல விவாதங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. விவாதம் என்று வந்து விட்டால் அதற்கு முடிவேது?

"பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!"

என செயல்ரீதியாக யாழின் பிரயோசனம் என்ன என்பதை விளக்குகிறார்.

முதல் நான்கு பந்திகளும் கவிதை நயத்தில் மிகவும் மிளிர்கின்றன.

"கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது."

போன்ற வரிகள் சொல்நயம் மிக்கவையாகும்.

இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!

ஆதலினால் இப்போது...

அமைதியுடன் செல்கின்றேன்!

இதயத்தின் பேச்சுக்களின்

பதிவு தானே யாழ்களம்

இதோ

நான் உமது இதயத்தைத் தானே வாசிக்கிறேன்?!

உமது வரிகளையல்ல

வாழ்த்துக்கள்!

தாய் நாட்டைப்பிரிந்து ஓடிவந்தவர்களை யாழ்களம் எவ்வாறு சேர்த்துவைக்கிறது என கவிஞர் உவகையுடன் விளக்குகிறார். மேலும் யாழ் எவ்வாறு ஒவ்வொரு குடும்ப அங்கத்தவர்களையும் ஒரு குடும்பத்திற்கு மேலாக இணைத்து பிணைத்து வைத்திருக்கிறது என்பதற்கு கவிஞரின் வரிகள் சான்று.

"இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!"

போன்ற வரிகள் கவிநயம் மிக்கவையாகவும்

"சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் நீ சேர்த்து வைத்தாய்!"

போன்ற வரிகள் சொன்னயம் மிக்கவையாகவும் மிளிர்கின்றன.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில்

நேர ஒழுங்கின் பகையெனினும்

நேசிக்கின்றோம் யாழ்வரவை

நேற்றோ இன்றோ நாளைக்கோ

யாழில்லாதொரு நாளில்லை

வழ்த்துக்கள்!

எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய யாழ் அனுபவங்களை கவித்துவத்துடன் கவிஞர் பாடியிருக்கிறார்.

"நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில் "

போன்ற வரிகள் கவிதை நயத்திலும்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

போன்ற வரிகள் சொல் நயத்திலும் மிளிர்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :lol:

யாழ் களம்!!

---------------

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

ஆனாலும்,

விஞ்ஞானம் அழிந்தாலும் எமக்கு யாழ்வேண்டும்!

வாழ்த்துக்கள்!

"தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது... "

போன்ற வரிகள் யாழின் கருத்துப் பகிர்வு எவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்தது என கூறிநிற்கிறது.

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

என யாழின் கருத்துக்களின் பெறுமதியை கவிஞர் குறிப்பிடுகிறார்.

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

போன்ற வரிகளும்

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்!

போன்ற வரிகளும் இன்னும்

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது!

போன்ற பல கவிநயம் மிக்க வரிகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

போன்ற வரிகள் நல்ல சொல்நயம் மிக்கவை.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னோட கருத்தோட நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா.

நம்மோட கருத்தை நாம் ஒன்று சேர்த்தா - இந்த

உலகத்தின் கருத்தைநாம் மாத்தலாண்டா

வாழ்த்துக்கள்!

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

என யாழின் கொள்கைகளையும் கவியோடு சேர்த்து கொடுக்கும் கவிஞர்

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

என எழுதுபவர்கள் பொறுப்ப்புணர்வோடு எழுதவேண்டிய அவசியத்தை விளக்குகின்றார்.

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

போன்ற வரிகளில் கவி நயம் மிளிர்கிறது.

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

போன்ற வரிகள் சொன்னயம் மிக்கவை.

சிவகாசி ஸ்டைலில் கவிஞர் பாடலாக எழுதியிருப்பது புரிகிறது.

சிவகாசி வரிகள் இவைதான்:

வாடா வாடா வாடா வாடா நண்பா - கொஞ்சம்

வாழ்ந்து பாப்போம் வாழ்ந்து பாப்போம் நண்பா

நீயும் நானும் நீயும் நானும் ஒண்ணா - இப்போ

சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை

என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை

யாரோட உயர்வையும் யாராலயும்

தடுக்க முடியாதுடா தடுக்க முடியாதுடா

மேலே உள்ள வரிகளில் இருந்து கவிஞர் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே இன்ஸ்பிரேசன் எடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. மேலுள்ள பாடலில் முதலாவது பத்தி அழகான ஒரு மரபுக்கவிதைக் குரிய இலட்சனங்களை கொண்டிருப்பதைக் காண்க. மேலும், மேலேயுள்ள பாடல் மெட்டிலேயே பாடவேண்டுமானால் கொஞ்சம் மாற்றங்கள் தேவைப்படும்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னைத் தமிழ் மறந்து

ஆங்கிலோ நாட்டிலே - சுய

அடையாளத்தை இழந்து

அகதியாய் வாழ்ந்த போது......

உன் அன்புக் கரத்தாலே

என்னை அரவணைத்து -

ஏற்றம் தந்துவிட்ட

இனிய யாழ்களமே! நான்

சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் சேர்த்து வைத்தாய்!

கரும்பாய் இனிக்க வைத்தாய்!

ஆனால் மீண்டும் திரும்பி வருவேன்!

<<<

உறவுகளை ஒன்றிணைத்து உவப்பூறும்

கவி படைத்தீர்! தமிழினத்தின் பண்பு

சொல்லி எம் தலையை நிமிரவைத்தீர்!

மீண்டு வர வேண்டும் மீண்டும்

வரவேண்டும்! தமிழாலே பல

கவிதை யாழ்களத்திற்கு தரவேண்டும்!

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெய்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்<<<<<

யாழ்களத்தில் எது உண்டு

கவித்தமிழிலிலே அதைத்தந்து

இனிய கவி படைத்தீர்கள்

விருந்து உண்டோம் கவியாலே!

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

<<

உணர்வுள்ள தமிழரெல்லாம்

கூடுமிடம் யாழ்களமாம்

திரவியத் தமிழை இங்கு

தித்திக்கத் தந்தீர்கள்.

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

<<

கருத்தினிலே சிந்திக்க

வைத்த கவி வாழ்ந்திடுக!

மூடத் தனத்திற்கு உங்கள்

கவி தீ மூட்டும்! எழுந்திடுக!.

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

<<

ஒன்றிணைந்து யோசிப்போம்

ஈழ மூச்சையே சுவாசிப்போம்

எண்ணம் உயர்வு கொண்டால்

வாழ்வும் உயரும் அன்றோ!.

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

<<<

கவிதையிலே பொய்யில்லை

மனம் நிறைக்கும் உண்மைஇது!

நாம் எல்லாம் சோதரர்கள்!

ஈழத்தின் காவலர்கள்!

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

<<

அன்னைத் தமிழ் குழைத்து

அமுதக்கவி படைத்த

உங்கள் கவியாலே!யாழின்

சுவை கூடியதே!

நல்ல கவி கண்டோம்!. வாழ்த்துக்கள்! பல தந்தோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :unsure:

யாழ் களம்!!

---------------

இது எங்கள் தாய் களம்...

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்! <<

மிக நயமான வரிகள் சோதரி.

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

வாழ்த்துக்களும் பொழிகிறது...

வசைபாடலும் தொடர்கிறது...

அறிவியலும் இருக்கிறது..

அந்நியன் திரை படம் பற்றிய

பேச்சும் இருக்கிறது... <<<

கவிதைக்கு உயிர் சேர்க்க வேண்டும்

உங்கள் ஓசை நயம் புரிகின்றது ஆனால் அந்நியன் திரைப்படம் பற்றிய!! அந்த வரிகள் கவிதையின் நயத்துக்காக திணிக்கப்பட்டது போல் இருக்கின்றது. அது வேண்டாமே.!

தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது... <<<

நல்ல வரிகள். நயம்படச் சொன்னீர்கள்.

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது! <<

நல்ல உவமானம்.

எது எப்படியோ....

அமெரிக்காவில் இருப்பவருடன்

ஒரு செல்ல சண்டை..

லண்டனில் இருப்பவருடன்

ஒரு வாதம்..

கனடாவில் வாழ்பவருடன்

ஒரு கருத்து பகிர்வு...

கொலண்டில் குடியேறியவருடன்

ஒரு கொள்கை விவாதம்..

ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்

ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..

யாழ் களமே..

உன் உடலில் பரந்திருப்பது...

வெறும் தந்தி நரம்புகளல்ல...

விதி என்று போனதால் தாய் நிலம்

பிரிந்து துயருறும்

ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்! <<<

அருமையான நடை!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..

தாயின் தோழில் தாவி...பின்..

அவள் மடியில் குதித்துருண்டு சென்று...

உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..

உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

அவதானமாய் சேகரித்தால்..

அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?

உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..

நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!

<<

வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டும்!. நிறைவான பகுதி உரை நடையாய் இருக்கிறது.

கருத்துச் சிறப்பு!. வாழ்த்துக்கள்! இது முன்பு எழுதியதுதானே இதே கருத்துடன் வரிகள் செதுக்கி மீண்டும் படையுங்கள் ஓர் விருந்து. விமர்சனம் உங்களை செதுக்குவதற்காக! அன்றி!!..ஒதுக்குவதற்காக என்று நினைத்துவிடக் கூடாது!

நன்றி.

நான் போன வருடம் எழுதிய உல்டா கவிதை??? (பாடல்)

யாழுக்கு வந்தால் ஆனந்தம்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

தனி உலகோ புது உறவோ ஹோய்

உறவே உறவே உன் சிரிப்பில் நம்

சோகம் முழுதும் கரைத்தாயே

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில் >>>>தோளில்!

சொந்தங்களே சொந்தங்களே

தோழிக்கு அகவை ஒன்பதாம்

கவிமாலை சூடியவளின் களிப்பில்

சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.

<<<

ஆனந்தம்! ஆனந்தம்!! யாழ்கீதம்!! நல்ல மெட்டமைத்துப் பாடலாம் தங்கள் பாடல் வரிகளை.

தந்தை மனம் நொந்ததடா

தாய் வயிறு எரிந்ததடா-உன்

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

நல்லவைகள் மறந்ததென்ன

நரபலிகள் கொல்வதென்ன-சின்ன

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

பிணங்களிடை படுத்திருப்பாய்

துர்நாற்றங்களை சேகரிப்பாய்-மனித

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

வசந்தங்கள் கண்டதுண்டா

அன்பு என்றால் அறிந்ததுண்டா-வெறும்

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

தன்மானந்தானிழந்த துரோகத்தை களையெடுப்பார்

கரிகாலன்தான் எங்கள் தெய்வமடா-மனிதத்தை

மண்ணெறிந்து தமிழ் மக்கள் மீது தீயெறிந்த

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

திங்கட்கிழமை அடி நடக்கும்

செவ்வாய் எல்லாம் பொறி பறக்கும்-அட

வெள்ளிக்கிழமை வெற்றி கிடைக்குமடா..

சனிக்கிழமை சாந்தி கிடைக்கும்

சந்தோசம் வாசல் திறக்கும் -சுக

சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

ஆ...ஆ..சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

  • கருத்துக்கள உறவுகள்

உறவுக்கான வாழ்த்து மரபைத் தேடாதீர்கள்.

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ் வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஈழக்குயிலினம் தாளயதியுடன்

எண்திக்கிருந்தும் கையிணைக்க,

ஆளும் பலமிக்க ஆய்வுத்துறைகளும்

கால முழுவதும் கோலமிட,

நாளும் வளந்தரு நல்லன பலவும்

மேலும் மேலும் படை நூறுசெய்ய

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வெள்ளை மனங்கொண்ட பிள்ளைக்கூட்டங்கள்

வேடிக்கைக் கதைகள் பேசப்பேச,

கள்ளச்சிரிப்புடன் கன்னித்தமிழும்

துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள,

வல்ல செயலாலே நல்ல உறவுகள்

பொல்லாத பொய்யதை வெல்ல வெல்ல

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

தகவலும், தொழிலும் தளராத நுட்பமும்

தாயக மீட்புக்கு வளமூட்ட,

அகவல் பலதோன்றும் ஆதிப்பொருளாகி

அணைத்து வழி சொல்லும் பெருந்தளமாய்,

முகங்கள் பலசூடும் மேன்மை மாந்தர்கள்

மீட்டும் விரல்கட்கு யாழ்நரம்பாய்

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ்வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.