Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருப்பின் நியாயங்கள்

Featured Replies

நெருப்பின் நியாயங்கள்

sukan.jpg

அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள்.

தேச மக்களின் உயிரைக்காக்கவும் உயிரின் பெறுமதியை ஆழமாக நேசிப்பதன் வெளிப்பாடாக அவரது வாழ்வு மறு வடிவமடைகிறது. தன்னை கொடுத்து பிற உயிர்களை காப்பவரை இறந்தவர் பட்டியலில் சேர்க்க முடியாது அவர் மனித இருத்தலின் புதிய பரிணாமம்.

தமிழீழத்தில் ஒரு தற்கொடைத்தாக்குதல் ஆனதன் கரு கொடுமைகளின் எல்லை மீறிய சம்பவங்களில் இருந்து உருவாகின்றது. ஆனால் உலகத்தின் பார்வை தற்கொடைத்தாக்குதல்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. சுருக்கமாக சொன்னால் அவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை பயங்கரவாதம் என்று சொல்வதன் மூலம் அதன் உருவாக்க காரணிகளை நியாயப்படுத்த முற்படுகின்றனர் என்பது வெளிப்படையானது.

யப்பனில் தற்கொலை வீதம் அதிகம் என்றால் அல்லது என்னுமொரு நாட்டில் அதிகம் என்றால் அதை ஆய்வு செய்ய பல சமூக அமைப்புகளை ஊக்குவித்து அதற்கு அரச மானியங்கள் வழங்கி ஆராய்ச்சிகள் செய்வார்கள். தற்கொலைக்கு தூண்டும் அக மற்றும் புற காரணிகளை கண்டறிவார்கள். தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பார்கள். மாற்று நடவடிக்கைகளை முன்வைப்பார்கள். இவ்வாறு ஈழ தேசத்து பிரச்சனையை அணுகினால் ஆயுத விற்பனைதான் சரிந்து விடும்.

வான்கலங்கள் மற்றும் கடற்கலங்கள் அதிநவீன படைக்கலங்கள் விற்பதன் மூலம் சுலபமாக பில்லியன்களை விற்பனையாளர்கள் அடைந்து விடுகின்றனர். இலங்கையின் வருமானத்தையும் பத்தாததுக்கு கடன் வாங்கியும் இவ்வகையான நவீன கலங்களை அரசு வாங்க வேண்டியுள்ளது. இவ்வாறு நோக்கும் போது ஒரு தற்கொடைத்தாக்குதல் என்பது ஈழப்போரட்ட சூழலில் தவிர்க்க முடியாததாகவும் இலங்கை அரசுக்கு பேரிழப்பாகவும் உள்ளது.

ஒரு அணையில் நீர் அதிகம் தேங்கினால் உடைப்பெடுக்கிறது. நீர் வெளியேற வழியில்லை என்றால் உடைப்பது தவிர்க்க முடியாதது. துயரம் தனது எல்லையை தாண்டும் போது தற்கொலை நிகழ்கிறது. சாதாரண காதல் தோல்வி கடன் தொல்லை அது கூட வேண்டாம் பரீட்சை தோல்வி போன்ற துயரங்களே சிலரை தற்கொலைக்குள் தள்ளிவிடும் பொழுது சதைகளாகவும் இரத்தமாகவும் பிய்ந்து போகும் உறவை பார்ப்பவன் கொடிய கொலைக்கருவிகளை அழிக்க ஆயுதம் இல்லாத போது தன்னையே ஆயுதமாக்கி கொலைக்கருவிகளில் இருந்து மக்களை காக்கின்றார்.

உலகின் எந்த ஒரு நாட்டில் நடைபெறும் விடுதலைப்போருக்கும் எதோ ஒரு பகுதியில் இருந்து ஆதரவு கிடைக்கிறது. ஆனால் பிரதான எல்லைகள் யாவும் கடலால் சூழப்பட்ட நிலையிலும் தரை எல்லைகள் சிங்கள ஆக்கிரமிப்பு எல்லைகளாகவும் இருக்கும் எமது தாயகப்பரப்பின் தரைத்தோற்றமும் போட்டிநிலையில் இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கும் ஆதரவும் தற்கொடைத் தாக்குதல்களை தூண்டும் காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.

மத அடிப்படையிலான ஆதரவோ அல்லது மொழி அடிப்படையிலான ஆதரவோ அல்லது பொது உடமை அல்லது முதலாளித்துவம் சார்ந்த ஆதரவோ எந்த ஒரு நாட்டிலிருந்தும் கிடைக்கப்பெறாத ஒரு இனத்தின் விடுதலைப் போரட்டம் உணர்ச்சி நிரம்பியதாகவும் அதே நேரம் அவ்வாறனதொரு உணர்ச்சியினுடாக உறுதியை கட்டி எழுப்புவதும் போராட்டத்தின் முதுகெலும்பாக உள்ளது. எதிரியின் இலக்கை தகர்த்தெறிவது மட்டுமே கரும்புலித்தாக்குதல்களின் இலக்கு அல்ல அதற்கு மேலாக போரட்டத்தின் முதுகெலும்பாகவும் உணர்ச்சிப்பெருக்காகவும் உறுதியின் வடிவமாகவும் உள்ளது.

இந்தியாவின் இலங்கைக்கான படைக்கல உதவியும் அதற்கு போட்டியான பாகிஸ்தானின் உதவியும். மேற்குலக உதவிகளும் இதற்கு போட்டியன சீன உதவியும் என்று இலங்கையை மையமாக வைத்து உலக நாடுகளின் அசைவியக்கமும் இந்த அசைவியக்கம் சிங்கள பேரினவாத அரசினூடாக எவ்வாறு தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைக்கு இசைவாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையினுடேதான் தற்கொடைத்தாக்குதல்களை உலகம் விளங்கிக்கொள்ள வேண்டும்

இஸ்ரவேல் அமெரிக்க கூட்டுத்தயாரிப்புக் கலங்களை தகர்க்க மேற்கொள்ளப்பட்ட தற்கொடைத்தாக்குதல்களே அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக கடற்கலங்கள் வான் கலங்கள் மீதான தாக்குதல்கள் உதாரணமாகின்றன. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் என்பதினூடாக ஒடுக்குமுறையை ஒடுக்கப்படும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் இயங்கு விதியை கரும்புலித்தாக்குதல்கள் தகர்த்தெறிகின்றது.

கொடிய வான்குண்டு வீச்சு விமானங்கள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் போது அந்த விமானங்களை நான்கு தற்கொடையாளிகள் தங்கள் உயிரை ஆயுதமாக்கி தகர்ப்பதுக்கு பிரதான காரணம் அவ் விமானங்களை அழிக்கும் ஆயுதங்கள் இல்;லாமையினூடாக கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மானுட இயல்பும் ஆகும். இதை ஒரு மாபெரும் பயங்கரவாத செயலாக உலகம் சித்தரித்தால் அதை நாம் ஏற்றுக்கொண்டால் அதை எவ்வாறு அர்த்தம் கொள்வது? குண்டு வீசலாம் நாங்கள் கொல்லப்படலாம் ஆனால் நாம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கௌ;ள கூடாது, நாம் எம்மை தற்காத்துக்கொள்ள கூடாது என்ற உள்ளடக்கம் அந்த ஏற்றுக்கௌ;ளுதலில் இருக்கும்.

உலகத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர்கலங்களை எம்மக்கள் மீது பயன்படுத்தும் போது அவைகளை தாங்கும் சக்தி எமது பிரதேசத் தரைத்தோற்றத்துக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் இல்லை. லட்சக்கணக்கான இந்தியப்படைகளை தாங்கும் சக்தியும் எமது பிரதேசத்துக்கு இருந்ததில்லை ஆனால் தாக்குப்பிடித்து வாழ வேண்டிய நிற்பந்தம் ஏற்படுவது வாழ வேண்டும் என்ற மானுட இயல்பு தரும் விளைவு ஆகும்.

எதையும் நியாயப்படுத்தல் இந்த கட்டுரையின் நோக்கமும் அல்ல அவ்வாறு ஒரு அவசியம் இல்லை. ஆங்கிலேயர் போன காலந்தொட்டு இன்றுவரை உரிமை மறுக்கப்படும் 45 லட்சம் மக்களை கொண்ட எமது தாயகத்தின் மீது 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களைக்கெண்டு இன அழிப்பை செய்யும் போது எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றான தற்கொடைத் தாக்குதல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தற்கொடைத் தாக்குதல் நடத்துமளவுக்கு எமது மக்கள் இயல்பாக தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவுதூரம் கொடுமைகள் அரங்கேறியுள்ளது என்றுதான் பார்க்க வேண்டும். எமது மக்களின் உயிரையும் வாழ்வையும் பறித்துக்கொண்டிருக்கும் சிங்களமும் அதற்கு துணைபோகும் அத்தனை சக்திகளும் தான் பிரச்சனைக்குரியவர் தவிர தற்கொடைத்தாக்குதல்களில் ஈடுபடுவோர் அல்ல. ஈழப்போரட்டத்துடன் வேறெந்த நாட்டு விடுதலைப்போரட்டத்தையும் அல்லது தாக்குதல் சம்பவங்களையும் ஒப்பிட்டு கூற முடியாது.

வல்லரசுகளும் மேற்குலக நாடுகளும் தமது போர்கலங்களை வாரி வழங்குகின்றது. இவ்வாறான போர்க்கலங்கள் சிதறடிக்கும் மக்களின் பிய்ந்து போன உடல்களை செய்திகளில் காட்டுவது கூட மக்களை பாதிக்கும் என்ற ஊடக தணிப்பு சட்டம் அவ்வாறான நாடுகளில் உள்ளது. உற்பத்தி செய்வோம் அதை விற்போம் ஆனால் அதன் விளைவுகளை கண்ணால் பார்க்க மாட்டோம் என்பது இந்த உலகின் தற்போதய ஜனநாயகம். இவர்களுக்கு எப்படி எதை புரிய வைப்பது?

; கரும்புலியின் செயல்பாட்டு விளைவானது மக்களை கொல்லும் கொலைக்கருவிகளையும் கொலையாளிகளையும் கரும்புலியானவன் தன்னைக்கொண்டு அழிக்கிறான். இது பொதுவாக கொல்லப்படும் மக்களை காக்கும் நோக்கில் அமைகிறது. இதற்கு எதிரான ஏனைய தரப்பின் செயல்பாட்டு விழைவு என்ன?

இவர்களால் சிங்கள பேரினவாத அரசை கட்டுப்படுத்த முடியுமா? கொலைகள் கடத்தல்கள் பட்டினிச்சாவை கட்டுப்படுத்த முடியுமா? கடந்த 50 வருடத்தில் இவ்வாறு நடந்ததாக சரித்திரம் இல்லை. மாறாக ஊக்குவிப்பே நடக்கின்றது. இதை எதிர் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் தொடர்ந்தும் உள்ளது.

கரும்புலிகள் பற்றிய அழகான விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவன் தற்கொலை செய்வதில்லை. அது மானுடத்தின் இயல்பும் இல்லை. சராசரி எதிர்பார்ப்புகளும் எதிர்நீச்சலும் என வாழ்க்கை நகரும். வாழ்க்கையின் நகர்வு ஸ்தம்பிதம் அடைந்து, எதிர்பார்க்கவும் எதிர்நீச்சல் போடவுமான மானுட இயல்பு மறுக்கப்படும் போது வெறுமை மிஞ்சுகிறது. அந்த வெறுமையெங்கும் பிணங்களும் சதைகளும் ஓலங்களும் நிறைந்து இறுதியில் வெறுமை நிரம்பி வெடித்து சிதறுகிறது. இவ்வாறு வெடித்து சிதறும் தன்மையை இக் கொடும் செயலின் காரணிகளை அழிக்கும் நோக்குடன் நிதானமாக கையாள்பவர்களே கரும்புலிகள்

பொருத்தமான நாளில் இடம்பெற்ற கட்டுரை.

நெருப்பின் நியாயங்களாய் அதனை வெளிப்படுத்திய விதம் அழகு.

ஈழதேசத்து தற்கொலை வீதத்தினை ஆராய்ந்தால், ஆயுத விற்பனை தான் சரிந்துவிடும். அதனால் தானே சமாதானம் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டு, ஆயுத விற்பனையும் அமோகமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

எதிரியின் இலக்கை தகர்த்தெறிவது மட்டுமே கரும்புலித்தாக்குதல்களின் இலக்கு அல்ல அதற்கு மேலாக போரட்டத்தின் முதுகெலும்பாகவும் உணர்ச்சிப்பெருக்காகவும் உறுதியின் வடிவமாகவும் உள்ளது.

சுகன் நன்றாய் இருக்கிறது. வாழ்த்துகள்.

மேலும் மேலும் இது போன்ற உங்கள் திறமை வெளிபட வேண்டும்.

அருனையான பதிவு சுகன் உங்கள் எழுத்து திறமை அருமை இன்னும் நீங்கள் எழுத வேண்டும்

சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AK 47 ஐ கலனிஸ்கோவ் கண்டு பிடித்தார்.

பல அடிமைப்பட்ட இனங்கள் இதனால் விடுதலையடைந்தன.

ஆனாலும் அப்பாவிகளினதும் பல தலைவர்களினதும் அழிவுக்கும் இது காரணமானது.

அணுகுண்டை உருவாக்க ஐன்ஸ்டீன் வழிசமைத்தார்.

இதனால் உலகமே பெரும் அழிவிலிருந்து (பச்சை வீட்டு விளைவு) காப்பாற்றப்படுகிறது.

ஆனாலும் சில விசமிகளால் அப்பாவிகளை கொல்ல இது பயன்படுத்தப்பட்டது.

நவீன தற்கொலைத் தாக்குதலை புலிகள் அறிமுகப்படுத்தினர்.

இதனால் நாசகார ஆயுதங்களைக் கொண்டு மக்களை நசுக்கும் சர்வாதிகாரிகளிடமிருந்து மக்கள் விடுதலை பெறவழி பிறந்தது.

ஆனாலும் சில விசமிகள் அப்பாவிகளைக் கொல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இது தான் உலக ஒழுங்கு

  • தொடங்கியவர்

கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

..................................................

நவீன தற்கொலைத் தாக்குதலை புலிகள் அறிமுகப்படுத்தினர்.

இதனால் நாசகார ஆயுதங்களைக் கொண்டு மக்களை நசுக்கும் சர்வாதிகாரிகளிடமிருந்து மக்கள் விடுதலை பெறவழி பிறந்தது.

ஆனாலும் சில விசமிகள் அப்பாவிகளைக் கொல்ல இதனைப்

பயன்படுத்துகின்றனர். - பண்டிதர்

.......................................................

உண்மைதான் பண்டிதர் அவர்களே. உலகம் பயங்கரவாதத்தையும் இன விடுதலைப்போரையும் வேறுபடுத்தி பார்க்க பின்நிற்கின்றது. எமது தேசத்தின் விடுதலை நோக்கிய பயணத்தின் பாதையில் நியாயங்கள் வேறுபாட்டை பறைசாற்றுகின்றது. உயிரைக் கொடுத்து ஆயுதம் சேகரித்து உலக நியாயங்களை நம்பி அந்த ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுத பாணிகளானதும், தியாகி திலீபனின் தியாகமும் அதே நேரம் கரும்புலி மில்லரின் தியாகமும் என எமது தேசத்தின் விடுதலைக்கான நகர்வுகள் தேச விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களையும் அயராத முயற்சியையும் உலகத்துக்கு உணர்த்துகின்றது. உலகம் எமது நியாயங்கள் தெரிந்தும் தூங்குவது போல் நடித்தாலும் நாம் எமது நியாயங்கள் என்ற முரசை தொடர்ந்து பல பக்கங்களிலும் நின்று ஒலிக்கச் செய்ய வேண்டும்.

நன்றி

சுகன்

நெருப்பின் நியாயங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு மனப்பக்குவம், அனுபவம், மனச்சாட்சி வேணும். இவை இல்லாத பட்சத்தில் உண்மைகள் என்றும் உண்மை என்று ஒத்துக்கொள்ளப்படாது..

இந்த நேரத்தில் எனக்கு பழக்கமான என்னுடன் கற்ற ஒரு கரும்புலி வீரனின் நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றேன்..

இவன் என்னுடன் பாடசாலையிலும், ரியூசன் வகுப்பிலும் ஒன்றாக படித்தவன். சரியான பகிடிக்காரன். நாங்கள் அவனை அம்பலம் என்று கூப்பிடுவம். அவன் அப்ப உடம்பு சரியான நோஞ்சல். எல்லாரும் அவனப்போட்டு அடிப்பாங்கள். அவனது முகம் பார்ப்பதற்கு சரியான குறும்புகள் செய்யும் சிறுவர்களின் முகம் மாதிரி இருக்கும். மிகவும் நல்லவன்....

ஆனா.. இந்தியன் ஆமி, ஈப்பி கூலிகள், பிறகு சிறீ லங்கா இராணுவத்தால எங்கட அழகிய வாழ்கை நாசமாப் போச்சு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தால பிரிஞ்சு போட்டம். ஒருவருடன் இன்னொருவருக்கு தொடர்பில்லை. உளவியல் ரீதியாக சிறுவர்களாகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தம். பெற்றோருக்கும் எங்களை என்ன செய்வது என்று தெரியாது. எந்த நேரமும் பயம். இந்த நிலையில...

துன்பங்களுடன் மாதங்கள் நகர்ந்தது. வருடங்கள் நகர்ந்தது. நான் அப்ப சென்.ஜோன்சில படிச்சு கொண்டு இருக்கிறன். அப்ப இணுவிலில அகதியா யார்டையோ வீட்டில இருக்கிறம். தமிழர், தமிழில் உரையாடுகின்றோம் என்பது தவிர முன், பின் ஒருவரும் அங்க எனக்கு பழக்கம் இல்லை. தோட்ட வெளிகளில பள்ளிக்கூடம் போகாத நேரங்களில் நடப்பதுதான் வேலை. யாராவது ஊர் நண்பர்களை வழிதெருவில் கண்டுவிட்டால் அது போன்ற சந்தோசம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. அன்று, அப்படித்தான் ஒரு பழைய பாடசாலை நண்பனை கண்டன். அவன் ரெட் குரசில் தொண்டனாக சேர்ந்து யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் பணியாற்றிக் கொண்டு இருந்தான். தற்செயலாக கே.கே.எஸ் ரோட்டில சந்திச்ச அவன் அம்பலம் பற்றி எனக்கு சொல்லத் தொடங்கினான்.

அம்பலம் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும், மணலாற்றில் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட ஒரு மோதலில் காயம் அடைந்த அவனை தான் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் கண்டதாகவும் சொன்னான். இப்போது ஆஸ்பத்திரியில்தான் இருப்பதாகவும், ஆரம்பத்தில் அவனை தனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொன்னான். அவனுக்கு அருகில் வார்ட்டில் இருந்து கவனித்து பராமரித்தபோது, பிறகு.. அம்பலம் தன்னை ஒருவாறாக அடையாளம் கண்டு அண்ணை நீங்கள் இந்த ஊரோ, இங்கையோ படிச்சனீங்கள், உங்களுக்கு இன்ன பெயரோ என்று கேட்டதாகவும்... பிறகு அதிர்ச்சியடைந்ததான், அட நாயே! நீயா.. என்று கேட்டு அவனை கட்டிப்பிடித்து சந்தோசப் பட்டதாகவும் சொன்னான்.

அம்பலத்தை பார்த்து அது அம்பலம் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று சொன்னான். அவன் முற்றிலும் மாறி இருந்தானாம். அறிவில் முதிர்ச்சியடைந்த, மிகவும் ஒரு அனுபவசாலியாக, பொறுப்புணர்வுடன் அம்பலம் தன்னுடன் உரையாடியதாக சொன்னான். அப்போது அம்பலம் மணலாற்றில் ஒரு குழுவுக்கு பொறுப்பாளனாக இருந்து பணியாற்றி வந்ததாகவும், சிறீ லங்கா ஆமி ரோந்து வந்தபோது ஒளிந்து இருந்து மடக்கி அடிக்கும்போது, பல சிறீ லங்கா இராணுவத்தினர் இறந்ததாகவும், ஆனால், இறந்தது போல் தரையில் விழுந்து நடித்த ஒரு சிறீ லங்கா இராணுவச் சிப்பாய் அம்பலம் குழுவினர் சிப்பாய்களின் இறந்த உடலங்கள், ஆயுதங்களை அப்புறப்படுத்த முயன்றபோது எதிர்பாராத விதமாக அம்பலம் குழுவினரை தாக்கத் தொடங்கியதாகவும், இதில் சில போராளிகள் வீர மரணம் அடைந்ததோடு, அம்பலத்திற்கும் காயம் வந்ததாகவும்... இவ்வாறு அம்பலம் அவனுக்கு கூறிய கதையை எனக்கு சொன்னான். அம்பலம் இயக்கத்தில் சேர்ந்து இவ்வளவு வேலைகள் செய்ததை உண்மையில் அவன் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அம்பலம் 25/50 பேர் கொண்ட போரணிக்கு லீடராக இருக்கின்றானா? என்னால் நம்ப முடியவில்லை.

பின்பு, இன்னொரு நண்பன் மூலம் அம்பலம் கரும்புலி வீரனாகி பல வருடங்களின் முன் வீரகாவியமான செய்தியை வெளிநாட்டுக்கு வந்ததும் கேட்டறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அம்பலம் இப்படி ஒரு வீரனாக தனது வாழ்க்கையை மாற்றியமைத்ததை என்னால் நம்பமுடியவில்லை. நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.. அவன் சரியான பகிடிக்காரன்.. எந்த நேரமும் வகுப்பில இருந்து ஏதாவது சொறிஞ்சு முஸ்பாத்தி செய்து கொண்டு இருப்பான். இதால வாத்திமாரிட்ட நல்லா வாங்கிக்கட்டுவான். ஆனால்...

நாங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தால பட்ட கஸ்டங்கள், இடம்பெயர்வுகள், ஷெல் வீச்சுக்கள், கூலிக்குழுக்கள் செய்த கொடூரமான கொலைகள், பிள்ளை பிடிப்புக்கள், விமானக் குண்டுவீச்சுக்கள்... இப்படி எங்களுக்கு நேர்ந்த அவலங்களால பாதிக்கப்பட்ட அம்பலம்... தன் வாழ்க்கையை தாயகத்திற்காய் தியாகம் செய்து மாண்டு போனான். இதில எனக்கு கவலை தரும் விடயம், அம்பலம் குறிப்பிட்ட கரும்புலித் தாக்குதலை நிகழ்த்திய சமயம் அவன் தாக்குதல் செய்த இடத்தில் இருந்து சுமார் 03/04 கிலோ மீற்றர் தூரத்தினுள் நான் தற்செயலாக இருந்து அவன் காவியமான அந்த இறுதி வெடியோசையை எனது காதுகளினூடாக கேட்டது! ஆனால், அந்த நேரத்தில் அந்த வேள்வியில் ஆகுதியானது அம்பலம் என்று எனக்கு தெரியாது.

பல வருடங்களாகி விட்டதால் அம்பலத்தின் இயற்பெயர் - பள்ளிக்கூடப் பெயர் எனக்கு மறந்துவிட்டது. அம்பலம் என்கின்ற அவனது இந்தப் பட்டப்பெயர் மட்டும்தான் எனக்கு இப்போது நினைவில் உள்ளது, மன்னிக்கவும்...

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் பற்றி சிறப்பான பதிவைத்தந்த சுகனுக்கு பாராட்டுக்கள். கரும்புலி அம்பலம் பற்றிய பதிவை எமக்குத் தந்த கலைஞனுக்கும் நன்றிகள்.

அமெரிக்கா போன்ற உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புக்காக அணு குண்டுகள் தயாரிக்கின்றன. அது பயங்கரவாதமாக அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் எங்கள் மக்களைக் காப்பாற்ற விலை மதிக்க முடியாத உயிரைத் தியாகமாக வைத்து போராடும் கரும்புலித் தாக்குதலை பயங்கரவாதமாக உலகம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படையிலான ஆதரவோ அல்லது மொழி அடிப்படையிலான ஆதரவோ அல்லது பொது உடமை அல்லது முதலாளித்துவம் சார்ந்த ஆதரவோ எந்த ஒரு நாட்டிலிருந்தும் கிடைக்கப்பெறாத ஒரு இனத்தின் விடுதலைப் போரட்டம் உணர்ச்சி நிரம்பியதாகவும் அதே நேரம் அவ்வாறனதொரு உணர்ச்சியினுடாக உறுதியை கட்டி எழுப்புவதும் போராட்டத்தின் முதுகெலும்பாக உள்ளது. எதிரியின் இலக்கை தகர்த்தெறிவது மட்டுமே கரும்புலித்தாக்குதல்களின் இலக்கு அல்ல அதற்கு மேலாக போரட்டத்தின் முதுகெலும்பாகவும் உணர்ச்சிப்பெருக்காகவும் உறுதியின் வடிவமாகவும் உள்ளது.

மனித இருத்தல்,மாண்ட இயல்பு,அகபுற காரணிகள் அழகான வார்த்தை பிரயோகங்கள் நல்ல காலகட்டத்தில் அருமையான ஆக்கம் தொடரட்டும் உங்கள் படைப்பு............

உண்மை அப்படியே எடுத்து காட்டுகிறது

:lol:

கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

..................................................

நவீன தற்கொலைத் தாக்குதலை புலிகள் அறிமுகப்படுத்தினர்.

இதனால் நாசகார ஆயுதங்களைக் கொண்டு மக்களை நசுக்கும் சர்வாதிகாரிகளிடமிருந்து மக்கள் விடுதலை பெறவழி பிறந்தது.

ஆனாலும் சில விசமிகள் அப்பாவிகளைக் கொல்ல இதனைப்

பயன்படுத்துகின்றனர். - பண்டிதர்

.......................................................

உண்மைதான் பண்டிதர் அவர்களே. உலகம் பயங்கரவாதத்தையும் இன விடுதலைப்போரையும் வேறுபடுத்தி பார்க்க பின்நிற்கின்றது. எமது தேசத்தின் விடுதலை நோக்கிய பயணத்தின் பாதையில் நியாயங்கள் வேறுபாட்டை பறைசாற்றுகின்றது. உயிரைக் கொடுத்து ஆயுதம் சேகரித்து உலக நியாயங்களை நம்பி அந்த ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுத பாணிகளானதும், தியாகி திலீபனின் தியாகமும் அதே நேரம் கரும்புலி மில்லரின் தியாகமும் என எமது தேசத்தின் விடுதலைக்கான நகர்வுகள் தேச விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களையும் அயராத முயற்சியையும் உலகத்துக்கு உணர்த்துகின்றது. உலகம் எமது நியாயங்கள் தெரிந்தும் தூங்குவது போல் நடித்தாலும் நாம் எமது நியாயங்கள் என்ற முரசை தொடர்ந்து பல பக்கங்களிலும் நின்று ஒலிக்கச் செய்ய வேண்டும்.

நன்றி

சுகன்

இந்த இணைப்பில் ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி தம்மை நியாயப்படுத்த ira இனை கத்தோலிக்க தீவிரவாதிகளாகவும் புலிகளை இந்து திவிரவாதிகளாகவும் சொல்கிறார்

  • 5 years later...

இன்றைய சண்டமாருதன், சபேசன், போன்றவர்களின்  தத்துவங்கள் ஊற்றானதன் அடிப்படை விளக்கம்தான் இந்த கட்டுரை.

 

தற்கொடை, தற்கொலையாகி, பயங்கரவாதமாகி, சாதியம், மேட்டுக்குடிவாதம் பொண்ற குழப்பமான ததுவங்கள் எல்லாம் வெளிவந்த  விள்ளகமின்மையை கட்டுரையின் தற்கொடை பற்றிய தத்துவங்கள் காட்டுகின்றன. கரும்புலிகள் குண்டு பட்ட புலிகள் அல்ல. குண்டுபட்ட புலி தான் இறக்கப் போவது அறியாமல் தறி கேட்ட கோபத்துடன் வந்து தன்னை சுட்டவரை தாக்கும். ஆனால், கரும்புலி தனது நாட்டுப்பற்றின்னால் செய்யும் தியாகம் இத்தகைய அறிவில்லாத கோபம் அல்ல.

 

இது தமிழர்கள் தோற்று போனதால் வெளிக்காட்டப்பட்ட இயல்பு அல்ல. ஆயுதப் போராட்டம் என்னவோ வேறு எல்லா வழிகளையும் சிங்களம் அடைத்தால் வந்தது. தொற்றதால் ஆயுத போராம் என்றதை ஏற்கமுடியாவிட்டாலும், வேறு வழை இல்லாததால் ஆயுத போராட்டம் என்றதை ஏற்கலாம். கரும்புலிகள் பயங்கரவாதிகளோ, அல்லது தோற்றுப்போன தற்கொலையாளிகளோ, அல்லது இப்படியான வீரமரணத்தால் தமக்கு ஆன்மீக மோட்சம் தேட முயலும் பேராசைகாரர்களோ, அல்லது அமெரிக்க அல்லது மற்றைய முன்னேறிய  நாடுகளில் Human Psychology யை வைத்து மரணத்திற்கு பயப்படாமல்,  பயிற்றுவிக்கப்படும் நேவி சீல் போன்ற படை வீரர்களோ, அல்லது மூளைச்சலவை செய்யபட்ட கொலையாளிகளோ அல்ல. ஒரு கரும் புலி தனது உணவை தனது பத்து குழந்தைகளுக்கு பகிரும் தாய் போன்ற ஒருவர். தனது இறப்பை பல போராளிகளின் இழைப்பை தவிர்க்க, பல அப்பாவிகளை கொடுமைக்கலாச்சாரம் பிடித்த ஆமியிடமிருந்து காப்பாற்ற பயன் படுத்துபவர். தாய் பசு தனது கன்றைக் தாக்கவரும் சிங்கத்தை, மற்றைகூட்டம் பின் வாங்கிவிட தான் மட்டும் தனித்து தனதால் கொம்பால் முட்ட வரும் இயல்பு போன்றது. இது அடிப்படையில் அன்பில் இருந்து எழும் ஒரு நடவடிக்கை. இந்த கொடைக்கு அன்பே அடிப்படையானது.

 

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.