Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் முதியோர்!!!!!!!

Featured Replies

மீண்டும் மற்றொமொரு தேடல் மூலம் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று தேடலாக நான் எடுத்து கொண்ட விடயம் சுண்டல் அண்ணா ஒரு விவாத தலைப்பை முன் வைத்திருந்தார் யாழில் அதாவது புலத்தில் உள்ள எம்மவர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு பிள்ளை பேற்றின் போது பெற்றோர்களை பராமாரிக்க இவர்களை அழைத்துவிட்டு பின் பிள்ளைகளை ஒரளவிற்கு வளர்ந்த பின் இவர்களை உதானிசபடுத்தல் மற்றும் முதியோர் இல்லங்களிற்கு அனுப்பிவிடல்....போன்ற செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் ஓட்டுமொத்தமாக நான் எல்லாரையும் குறை கூறவில்லை அதிகமானோர் அவ்வாறுதான் புலத்தில் செய்கிறார்கல் என்பது யாவரும் அறிந்தது...........

இது நம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை விளைவிக்க கூடும்...........வந்த பெற்றோர்களின் மனநிலை என்ன...........முதியோர் இல்லங்களிள் அவர்களின் மனநிலை என்ன ............இனி முதியோராக வரபோகும் தற்பொதைய நடுதர வயதினர் இதனை எவ்வாறு எடுத்து கொள்வார்கள் என்பதனை அலசி ஆராய்கிறது இன்றைய ஜம்மு பேபியின் தேடல்...........

இதனை ஆராய எமது கமராக்கள் சிட்னியில் உள்ள முதியோர் இல்லங்கள் என்று நான் குறிபிடுவது நர்சிங்கோம்மை........அங்கே பலதரபட்ட முதியோர்கள் அத்துடன் பலதரபட்ட இனத்தை சேர்ந்த முதியோர்களையும் காணகூடிய வாய்பும் பழக கூடிய சந்தர்பமும் ஏற்பட்டது,அதில் எம்மினத்தவர்களும் அதிகமாக அங்கே காணகூடியதாகவும் இருந்தது.............எமது கமராக்கள் ஆராய்கின்றன.........

20050914loresxlh1cb1.jpg

அங்கு பலதரபட்ட வயோதிபர்களையும் காணகூடியதாக இருந்தது..........சிலர் படுத்த படுக்கையாக இருந்தனர்.....சிலர் மறதி குணம் உடையவராக இருந்தார்கள்,வேறு பலர் சிறு வருத்தங்களுடன் காணபட்டார்கள் ஆனால் இவர்கள் தங்கள் வேலைகளை தாங்களே செய்ய கூடியவர்களாக இருந்தார்கள்...............

சிலருடன் உரையாட சந்தர்பம் கிடைத்தது வேறு சிலருடன் உரையாடவே முடியவில்லை அவர்கள் படுத்த படுக்கையா இருந்தார்கள் என்னை பொறுத்தவரை இப்படி படுத்த படுக்கையாக இருப்பவர்களிற்கு என்னை பொறுத்தவரை இந்த நர்சிங்கோம் மிகவும் பயனுள்ளது என்பது என் பார்வை...............

*ஆனால் இலங்கையை பொறுத்தவரை இப்படிபட்ட படுக்கையாக இருப்பவர்களையும் வீட்டில் வைத்து தான் பராமரிப்பார்கள் வயசு போனவர்களும் சரியாக கஷ்டபடுவார்கள் இவ்வாறான சூழ்நிலையில்,ஆனால் புலத்தில் இவ்வாறான நர்சிங்கோம் பல விதத்திலும் சேவையாற்றி வருகிறது இது சிறந்தது என்பது தான் இன்றைய தேடலின் பார்வை........

*சிலருடன் மனம் விட்டு கதைக்க கூடிய சந்தர்பங்கள் ஏற்பட்டது அவர்களும் தங்களுடைய ஆதங்கத்தை என்னிடம் சொன்னார்கள்............வேறு சிலர் மேலோட்டமாகவே கதைத்தார்கள்................

**தேடலின் பார்வை.....................இதோ அங்கே நடந்த சில உரையாடல்கள்..............

முதியவர் (1) - அங்கு உள்ள முதியவர்களில் இவர் கதைக்க கூடியதாகவும் தன்னுடைய வேலைகளை தானே செய்ய கூடிய அளவிற்கும் இருந்தார் ஆனால் சில வயாதன்வர்களிற்கு வரும் நோய் இவரிடம் இருந்தது மட்டும் நான் கண்ட குறை இவரிடம்..........இவர் மனம் திறந்து என்னிடம் கதைத்தார்,அவர் கூறிய சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,அவர் மிகவும் நகைசுவையான சுவாரசியாமன வயோதிபர் ஆனா அவரிடம் இனம் புரியாத ஏக்கம் அவர் தன் கதையை கூறினார்,தான் ஊரில சந்தோசமாக என்ட வயல்வேளியில சுற்றி கொண்டிருந்தனான் பிள்ளை,என்ட மகனிற்கு பிள்ளை பிறக்க என்னையும் மனிசையும் கூப்பிடவன் இங்கே..........நானும் மனிசியும் தான் பிள்ளைகளை பராமரித்தனாங்க சில வருடங்களிள் அவளும் தவறி போயிட்டாள்,அதற்கு பிறகு நான் தான் பிள்ளைகளை பார்தனான் பிறகு எனக்கும் வருத்தம் அப்படி என்று வந்துவிட்டது........பிறகு தெரியாதோ பிள்ளை மகன் என்னிடம் சொன்னவன் இங்கே வந்திருதா எனக்கு வசதியாக இருக்கும் என்று,பிறகு என்ட சீவியம் போகுது பிள்ளை அவளும் போயிட்டாள் நான் என்னும் கொஞ்சநாள் தான் பிள்ளை,மகனை இந்த பக்கம் இப்ப காணவே இல்லை எத்தனையோ மாசம் ஆகிட்டு அவன் வந்து என்னை பார்த்து அவனிற்கு என்ன வேலையோ என்று கண்கலங்கினார்,என்னை பார்த்து தம்பி நேரம் கிடைக்கும் போது இந்த பக்கம் வந்து செல்லு என்று அன்பு கட்டளை இட்டார்,அவரின் பேச்சில் அவருடைய ஏக்கம் பிரதிபலித்தது...................

முதியோர் 2 (பெண்) -மிகவும் ஒரு அன்பான பாட்டி என்னுடன் மிகவும் அன்புடன் பழகினார்,இந்த பாட்டியும் முதல் கூறியவர் மாதிரியே இந்த பாட்டியின் கதையும் இருந்தது ஆனாலும் தனது பிள்ளைகளை குறைத்து குறை கூறாமல் இருந்தாலும் பாட்டி தனது பிள்ளைகள் தன்னை பார்க்க வருவதில்லை என்ற ஏக்கமும் தன்னுடைய பிள்ளைகளை பார்க்க வரவழைக்ட்து விட்டு அதற்கு பிறகு தன்னை இங்கே விட்ட ஏக்கம் அந்த பாட்டியிடம் காணகூடியாதக இருந்தது.............அத்தொட அந்த பாட்டி சொன்னதை இங்கே பதியிறேன்...........அதாவது தன்ட மகன் நாய் வைச்சிருகிறான் பிள்ளை.............அதற்கு முதுகு உடைந்து போட்டுது என்று துடித்து போயிட்டான்.................நாயிற்கும்.

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி நல்ல ஒரு பதிவு அத்தோட எழுதின விதம் நல்லா இருக்குது வாழ்த்துகள்,நானும் ஒன்று சொல்லுறேன் நாளைக்கு ஆடிஅமாவசை கோயிலில நம்ம ஆட்கள் விழுந்து விழுந்து கும்பிட்டு விரதம் எல்லாம் இருபீனம் பத்தாதிற்கு அன்னதானம் வேற கொடுப்பீனம் தன்ட அப்பன்ட பெயரில ஆனா அவர் இருக்கும் போது நர்சிங்கோமில ஒரு தடவையாது பார்த்தார்கள் என்றா அது சந்தேகம் ஆனா நாளைக்கு இவை பண்ணுற கூத்தா பார்க்க என்ன செய்யிறது என்று தெரியாம இருக்கு,பெற்றோர் இருக்கும் போது அவைய நல்லா பார்த்தா சரி பிறகு அவைக்கு விரதம் பிடிகிறது எல்லாம் போலி.

ஜம்மு இன்றைய உங்கள் தேடல் நல்லாக இருக்கு. நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டீங்க. நாம இனி சொல்ல என்ன இருக்கு?

முதியவர்களை அன்பாக நடத்துவதை விட சீறி சினப்பவர்கள் தான் அதிகம் போலும்.

இப்போது புலத்தில் மகனின் மனைவி தன் மாமனையோ மாமியாரையோ வைத்து பராமரிக்க தயங்கினால் மகன் முதியோர் இல்லத்தில் தானே விடணும். தன் மனைவி மூலம் தன் அப்பா அம்மா துன்பப்படுவதை விட முதியோர் இல்லத்தில் கொஞ்சமேனும் சந்தோசமாக இருப்பார்கள் என எண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்திருப்பினும் மாசத்தில் ஒரு தடவையேனும் மகனாவது பார்க்க போய் வரலாமே. ம்ம் ஆனால் அது நடப்பதில்லை என ஜம்முவின் தேடலில் பிரதி பலிக்கப்படுகின்றது. :rolleyes:

இதுபோன்ற தேடல்கள் இன்னும் தேடணும் என சொல்லிக்கொண்டு விடைபெறுகின்றேன்.

நல்ல பதிவு பாராட்டுகள்

முதியோர்களை உதாசீனப்படுத்தும் நம்மவர்கள் இவர்களையும் இவர்களின் பிள்ளைகள் உதாசீனப்படுத்தாமல் பார்த்தால் சிறந்தது.முதியோர்களை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கும் நபர்களையும் பேட்டி கண்டால் இன்னும் சிறபாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு நன்றிகள் ஜம்மு இன்பத்தமிழ் வானொலியிலும் உங்கள் இந்த தேடல் வந்து இருந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட!! ஜம்மு!!! பாராட்டுக்கள். அப்ப அப்ப இப்படி தேவையான :rolleyes: பதிவுகளையும் போட்டு அசத்துகின்றீர்களே சபாஷ்!!

"காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்" என்பார்கள். நம்முடைய நாளைய நிலையும் இதுதான் என்பதை உணர்வோமானால்....இப்படி எல்லாம் நடத்த மனசு வராது!..

முதியோர்களை பலர் 'தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதற்காகவே/வீட்டுக்காவலுக்காகவே இங்கு அழைக்கின்றார்கள்.

கலி உலகில் மனசில் உள்ள ஈரம் வற்றிப்போச்சு! பணப்பேய் தலை விரித்தாடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டும் அல்லாமல் இங்குள்ள இளையர்கள் கூட இதுக்காக நேரம் ஒதுக்கி ஒரு நாளில் சில மணத்துளிகளை அவர்களுடன் செலவளிக்கலாம்...

  • தொடங்கியவர்

கருத்துகள் கூறிய புத்துமாமா,என்ட அக்கா,ஈழவன் அண்ணா,சுண்டல் அண்ணா,தமிழ் தங்கை அக்கா எல்லாருக்கும் நன்றிகள்......பேபி இருந்துவிட்டு இப்படி ஏதாவது செய்யும் பாருங்கோ............. :rolleyes:

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா............ஆமாம் ரேடியோ கேட்டேனே அதில பேபியின்ட பெயர் வந்தது போல இருக்கு அதை விட பெரிய விசயம் யாழ் இணையதளம் என்று சொன்னது ஏன் என்ற அவுஸ்ரெலிய குழுமத்தின் முதல் பணி யாழை விளம்பரபடுத்துவது............அதை இன்றைக்கு வடிவா செய்துவிட்டோம் என்று தான் நினைகிறேன்..............இன்னும் ரேடியோவில் அந்த நிகழ்ச்சி போய் கொண்டிருகிறது யாழ் என்று பல நேயர்களும் கதைத்தார்கள்......... :P ;)

Edited by Jamuna

அவுஸ் குழுமத்தை பெயர் கேட்டு அதிருதில்லே:P

  • தொடங்கியவர்

ஆமாம் சிட்னி நல்லா அதிருது அந்த பக்கம் எப்படி............. :P

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் ஜமுனா ஏதோ என்னால் முடிந்ததை செய்தேன் அம்புட்டு தான்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனாவின் படைப்பும் நோக்கமும் நல்லதே, நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல் சில புலத்தில் வசிக்கும் உறவுகளுக்கு பல நடைமுறைப் பிரச்சனைகள் இருப்பதையும் ஒத்துகொள்ள வேண்டும். மிகவும் வயசு கூடிய பெற்றோரை வீட்டில் வைத்து பராமரிப்பது இலேசானது அல்ல. அவர்களுக்கு ஏற்றவாறு வீட்டு குளியலறை, மலசல கூடம், படுக்கை அறைகளை மாற்றியமைக்க வேண்டும். அத்துடன் அவர்களின் அன்றாட தேவைகளை (மருத்துவ வசதிகளை) கவனிக்க ஒருவர் வேண்டும். புலத்தில் 2 அல்லது 3 படுக்கை அறை வீடுகளிலோ அல்லது தொடர்மாடிகளில் வசிக்கும், கணவனும் மனைவியும் வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உறவுகள் என்ன செய்ய முடியும்.

சில சமயங்களில் கவனிக்க ஒருவருமில்லாது, போதிய மருத்துவ வசதியில்லாமல் சொந்த ஊரில் கஷ்டப்படுவதிலும் பார்க்க புலத்தில் நேர்ஷ்ங் கோம்களில் இருப்பது எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு ஆல்ரெடி போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இத பற்றி எழுத சொன்னன்...

இதை பற்றி சம்மந்தப்பட்ட இன்னும் ஒரு விடயத்தை தேடுவீர்களா?

அதாவது முற்று முழுதாக பிள்ளைகளில் குற்றம் சாட்டி விட முடியாத வாரும் சில நிகழ்வுகள் இங்க நடை பெற்று கொண்டு இருக்கின்றன பெற்றோர்களால் இங்கு குடும்பத்துக்குள் பல பிரச்சனைகள்ஏற்பட்டு பல குடும்பங்களில விவாகரத்தக்கள் கூட நடைபெற்று கொண்டுள்ளன அதை பற்றி ஒருக்கா தேடுங்கோ.......

  • தொடங்கியவர்

சில சமயங்களில் கவனிக்க ஒருவருமில்லாது, போதிய மருத்துவ வசதியில்லாமல் சொந்த ஊரில் கஷ்டப்படுவதிலும் பார்க்க புலத்தில் நேர்ஷ்ங் கோம்களில் இருப்பது எவ்வளவோ மேல்.

ரிசி அண்ணா உங்களின் கருத்திற்கு நன்றிகள்................கனநாளைக்கு பிறகு சந்திகிறேன் நலமா?? :rolleyes:

ஜம்மு ஆல்ரெடி போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இத பற்றி எழுத சொன்னன்...

இதை பற்றி சம்மந்தப்பட்ட இன்னும் ஒரு விடயத்தை தேடுவீர்களா?

சுண்டல் அண்ணா என்ன இந்த வயசிலை அங்கே போனனீங்களா..............என்ன பிள்ளைகள் அனுப்பிவிட்டீனமோ..............அட சுண்டு சூப்பரான தேடல் ஒன்று தந்து இருகிறீங்க...............நான் தேடல் செய்ய ரெடி....ஜம்மு யார் என்று சிட்னிக்கே தெரியும் அடி வாங்க நீங்களும் ரெடியா.........சரி அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும் சுண்டல் அண்ணா......... :P ;)

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அலசல் ஜம்மு!வாழ்த்துக்கள் இது போன்ற ஆக்கங்கள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியதே.தொடருங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சனி ரெடி பன்னினா சரி...எமது தேடல்கள் தொடர வேணும் நான் தலைப்பு தர நீங்க தேட நான் போய் அத ரேடியோல வாசிக்க நல்லா தான் இருக்கும்

ஜம்மு அடிக்கு பயந்தால் வாழ முடியுமா? யாரவது அடிச்சா எங்களோட கருத்து சழுகத்தில எடு படுதென்று அர்த்தம்...

அடுத்த சனி ரெடி பன்னினா சரி...எமது தேடல்கள் தொடர வேணும் நான் தலைப்பு தர நீங்க தேட நான் போய் அத ரேடியோல வாசிக்க நல்லா தான் இருக்கும்

ஜம்மு அடிக்கு பயந்தால் வாழ முடியுமா? யாரவது அடிச்சா எங்களோட கருத்து சழுகத்தில எடு படுதென்று அர்த்தம்...

சுண்டலோ வானொலில வாசிச்சியள்? சொல்லவே இல்லை :angry:

  • தொடங்கியவர்

நல்லதொரு அலசல் ஜம்மு!வாழ்த்துக்கள் இது போன்ற ஆக்கங்கள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியதே.தொடருங்கள் :rolleyes:

நன்றி கு.சா தாத்தா உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்......... :rolleyes:

  • தொடங்கியவர்

அடுத்த சனி ரெடி பன்னினா சரி...எமது தேடல்கள் தொடர வேணும் நான் தலைப்பு தர நீங்க தேட நான் போய் அத ரேடியோல வாசிக்க நல்லா தான் இருக்கும்

ஜம்மு அடிக்கு பயந்தால் வாழ முடியுமா? யாரவது அடிச்சா எங்களோட கருத்து சழுகத்தில எடு படுதென்று அர்த்தம்...

அடுத்த சனிகிழமைகுள்ள ரெடி பண்ணுறேன்...........ஆமாம் நான் எழுத அதை நீங்க சொல்ல பலசிங்கம் பிரபா அண்ணா கேட்க நல்லா தான் இருக்கும் என்றாலும் அவரே இன்றைகு பாராட்டிவிட்டார் சரியான சந்தோசம் தானே சுண்டு............நான் பயந்து கொண்டிருந்தனான் என்ன சொல்லுறாரோ தெரியவில்லை என்று......நம்ம குரு ஆச்சே......... ;) :P

ஆமாம் அடிக்கு பயந்து வாழ ஏலாது தான் அடி வாங்கிற நான் ஆக்கும்............அட டயலக் வேற யாரும் அடிச்சா நம்ம கருத்து சமூகத்தில எடுபடுதாம் நல்லா தான் இருக்கு.....நம்ம மேல எவனாவத் கையை வைப்பானா பிறகு தெரியும் தானே........ :P :rolleyes:

  • தொடங்கியவர்

சுண்டலோ வானொலில வாசிச்சியள்? சொல்லவே இல்லை :angry:

இப்ப சொன்னா போச்சு..............ஆமாம் நிலா அக்கா...........சுண்டல் அண்ணா கொஞ்ச நாள் சென்றா பிறகு நாமளே டைம் கிடைத்தா தேடல் என்று நிகழ்ச்சியை செய்யலாம் ஆனா நேரம் தான் பிரச்சினை........... ;) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

**எங்களுடைய தேடல் வெள்ளைகாரர்களையும் பார்த்தது அவர்களின் முகத்தில் ஒரு வித கவலையும் தெரியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னால் அவதானிக்க கூடியாத இருந்தது..................

இதில்தான் பல கேள்விகளுக்கான பதிலே இருக்கிறது.. வெள்ளைக்காரர்களை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பிள்ளைகளுடனான வாழ்வு 18 வயதுவரை மட்டும்தான் என்று ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் பிள்ளைகளுடன் இருக்கமுடியவில்லை என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.

எங்களுடைய வாழ்வியல் முறை இதைவிட முற்றிலும் மாறுபட்டது. நாங்கள் காலம் காலமாக எமது பெற்றோருடனே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.எமது வயதுமுதிர்ந்தவர்களை இங்கே வெளிநாடுகளுக்கு கூப்பிடுவதை நிறுத்தி, கடைசிக்காலத்தை தாயகத்திலேயே கழிக்கவிடுவதுதான் நல்லது.

அங்கே கோயில் குளம் என்று சுதந்திரப் பறவைகளாக திரிந்தவர்களை இங்கே நான்கு சுவர்களுக்குள்ளே அடைப்பது என்பது உண்மையிலேயே சித்திரவதைக்கு சமமானது.

ஜம்மு அக்கா.. நீங்கள் பெரிய ஆள்தான்.. சும்மா கலக்குறீங்க..க... :rolleyes: :rolleyes:

Edited by Kishaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமாய் தனித்துவமாய் நிகழ்ச்சிகள் செய்து இன்பத் தமிழ் ஒலியை ஓங்கச் செய்ய வாழ்த்துக்கள்.

முன்னாள் இன்பத் தமிழ் ஒலிக்காரன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வாழும் இடமெல்லாம் கோயில்கள், தமிழ் திரைப்படங்கள், சிறீலங்கன் சாமான் கடைகள், நகைக்கடைகள்,புடவைகடைகள் எல்லாம் இருப்பது போல தமிழ் முதியோர் இல்லங்களை தொடங்கக்கூடாது?????

முதியோரின் மொழி, கலாச்சார பிரச்சனைகள் ஓரளவிற்கேனும் குறையுமே!!!!

யமுனா உங்கள் தேடல் மிக நன்றாக உள்ளது. நான் நேற்று இதை வாசித்தேன். உடன் பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. உங்கள் தேடல்கள் தொடரட்டும்.. நன்றி!

பெற்றோர்கள் வயதான காலத்தில் பிள்ளகளிடம் எதையும் எதிர்பார்க்காது தங்கள் எதிர்காலத்தினை தாங்களே நிர்ணயிக்கக் கூடுய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக முடியாது போனால் இப்படியான முதியோர் இல்லங்களில் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாகக் கழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லாது போனால் மன உளைச்சலால் தன்னைத்தானே வருத்தவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

ஜமுனாவின் தேடல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சிறு வேண்டுகோள். தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக வசனங்களுக்கிடையே புள்ளிகள் இருவது (.....) அவ் வசனத்தை முடிக்காது இழுப்பதாகக் கருதப்படுகிறது. சொல்லவந்த கருத்தை நேரடியாகக் கூறி முற்றுப்புள்ளி வைப்பது அக்கருத்தை மேலும் உறுதியாக்கும். வாசிப்பவர்களும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.