Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பேப்பருக்குத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

Featured Replies

அய்ரோப்பா எங்கும் வினியோகிக்கப்படும் ஒரு பேப்பரில் பிரசுரிக்க எனத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.இணையத்தில் இருந்து பத்திரிகைகளில் உங்கள் ஆக்கங்களை வெளியிட உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.உங்கள் எழுதுத் திறனை பரந்துபட்ட வாசகர் வட்டத்திற்கு நகர்த்தவும் உங்கள் சிந்தனைகளை அய்ரோப்பியா வாழ் தமிழர்களிடம் எடுத்துச் செல்லவும் யாழ்க் களம் இப்போது 'விரியம்' என்னும் பகுதியினூடாகா உங்களுக்குக் களம் அமைத்துத் தருகிறது.வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் காத்திரமான எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்கான யாழ் களத்தின் முயற்சி இது.

ஆக்கங்கள் கீழக் கண்ட விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமம் பிரசுரிப்பது பற்றிய இறுதி முடிவை எடுக்கும்.ஆக்கங்களை நீங்கள் யாழ்க் களத்தில் தகுந்த பகுதிகளில் இணைத்து விட்டு, அதன் கீழ் ஒரு பேப்பர் குழுமத்தின் பரிசீலனைக்கு எனக் குறிப்பிடலாம்.அல்லது தனி மடல் மூலம் யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமத்தின் எந்த உறுப்பினரிடமும் அறியத் தரலாம்.

தற்போதைய உறுப்பினர்கள்,

நாரதர்,சாத்திரியார்,குறுக்கா

Edited by narathar

நாரதர் அண்ணை, நீங்களே எழுதிக்குடுக்கலாமே? ஒரு பேர்ப்பரில் பெரியார், பாரதியார், இராமாயணம், இராம பாளம் பற்றிய செய்திகளை பிரசுரிப்பார்களா? அப்படி என்றால் இங்கு இருந்து ஒரு தொகை ஆக்கங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியும்.

ஒரு பேர்ப்பர் இலவச வெளியீடா அல்லது சிறு தொகை வருமானமும் இதற்கு உள்ளதா? இந்த விளம்பரத்தை யாழ் உறவோசையில் போடாமல் யாழ் முகப்பில் போட்டால் ஓரளவு பலன் உண்டு என்று நினைக்கின்றேன்.

இங்கு இருப்பவர்கள் பொழுதுபோக்காக எழுதுபவர்கள், நான் உட்பட.. ஐயோ சாமி, நாங்கள் வெளியாலையும் பொழுதுபோக்காக எழுதி ஆக்களிட்ட அடி வாங்க ஏலாது. ஆளை விடுங்கோ. முழுப்பெயர், முகவரி எல்லாம் கேட்கிறீங்கள் பயமாய் இருக்கு.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

அண்மை காலங்களாக மதங்களை இழிவு படுத்தும் நோக்கோடு திட்டமிடப்பட்டு சில

தினிப்புக்களை தொடராக செய்து வரும் இந்த பத்திரிகையில் எவ்வாறு தரமான ஆக்கங்கள் முன் வைக்கப்படும்....???

தமிழின எழுச்சியை மேம்படுத்திய அல்லது நிலை நிறுத்திய சாரம்சங்களை அல்லது அதன் செய்திகளை

பரப்பி அந்த மக்களை எழழு;சி கொள்ள வைக்கும் நியாய தர்மங்களை விலக்கி திட்டமிடப்பட்ட தனி நபர் தாக்குதல்களும்

பழிவாங்கும் நிலைகளும் தொடரும் வேளையில் எவ்வாறு இளையவர்களின் படைப்புக்களுக்கு இந்த

பத்திhகை சுதந்திரமான சுதந்திர போக்கை விரிக்கும்...?.

தன்தோன்றித் தனமாக அவர்களின் தலைப்புக்களை மாற்றி அவை எற்புடையதல்ல என ஆசிரியர் குழுமம் என்ற

அபச்சார குழுமம் வெட்டி ஒட்டி அந்த கருத்துக்களை சிதைத்து பொருளற்ற படைப்பாக அவை சொல்ல வந்த செய்திகளை

வேறு முனை திருப்பி அந்த படைப்புக்களை அவமதிக்கும் செயல்களை முற்போக்காக கொண்ட இந்த ஊடகத்தில் எவ்வாறு

அவர்கள் சொல்ல வந்த செய்திகளை தீர்க்கமாக கூறிவிட இவை இடமளிக்கும்...???

மதங்களை இழிக்கும் நோக்கோடு மதங்களின் விளம்பரங்களை தாங்கி அந்த மதங்களை இழிக்கும் இந்த ஊடகத்தில்

எவ்வாறு மனித தர்மமும் மனித நாகரிகமும் சுதந்திரஊடக சுதந்திரமும் காக்கப்படும்...??

திமிங்கலத்தை தவிர்ப்போம் என அறை கூவல் விடும் இவர்கள் அந்தி தமிங்கலத்தில் சரமரியாக உரையாடுவதை அந்த

வாசகன் எவ்வாறு ஏற்று கொள்வான்..ஏற்று கொள்ள முடியும்...???

இவையாவும் கலைந்து ஆக்க நிலையான ஆக்கங்களை முரண்பாடுகள் அற்ற விதியில் விரிக்கப்படுமாயின் அவை

தரமானதாகவும் நிலையானவையாகவும் நிலை நிற்கும்...

அவ்வாறெனின் யாழ்கள நாயகர்கள் இவற்றில் திறம்பட உழைக்கமடியும் நல்ல பல அறிஞர்களை தமிழ்தேசியம் பால் உருவாக்க முடியும்'...????

இவற்றுக்குள் சுயநலமற்ற தெளிதல் வேண்டும்...நெடுக்கால போவனும் இவற்றில் ஒர் அங்கமாக இருப்பதால்

மழுங்கடித்தல் நிகழாது என அவரின் எழுத்தின் மூலம் உறுதி எடுக்கலாம்...

இருப்பின் இவர்களின் நடவடிக்கைகளின் நடைமுறையை பொறுத்தே மிகுதி தெரிந்து கொள்ள புரிந்த கொள்ள முடியும்...

இவர்களின் இவ் நல்லென்ன முயற்சிக்கும் சிந்தனை போக்கிற்கும் தலை வணங்கி

விடை பெறுகின்றேன் ..

நன்றி...

ஓர் அன்பன் அனுப்பியதை இங்கு தருகின்றேன்..இவை மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை...

Edited by காவல்துறை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அன்பன்் எனக்கு அனுப்பியதை இங்கு தருககிறேன்.இவை மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை

ஒ காவல்துறை இதுகூட உங்கள் சொந்த கருத்துகிடையாதா?? :lol::( அப்பரி. :lol: நாரதர் இங்கு கேட்டது உங்களால் சுயமாக சிந்தித்து சொந்தமாக ஏதாவது எழுத முடியுமானால் எழுதி தரும்படி. :(:(

அதுசரி ஒரு சந்தேகம் யாரோ ஒரு அன்பர் ஒரு பேப்பரை பற்றி எழுதி அதை ஏன் உங்களிறற்கு மின்னஞ்சல் செசய்யவேண்டும் நீங்கள்ஒரு பேப்பரின் ஆசிரியரா??? அல்லது??????? :unsure:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்களை கொச்சைப்படுத்துவது வேறு நாஸ்தீக வாதம் வேறு.

அப்படி மதங்களை கொச்சைப்படுத்துவதாக ஆக்கங்கள வந்ததாக நான் அறியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

]மதங்களை கொச்சைப்படுத்துவது வேறு நாஸ்தீக வாதம் வேறு.

அப்படி மதங்களை கொச்சைப்படுத்துவதாக ஆக்கங்கள வந்ததாக நான் அறியவில்லை.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: ஒருபேப்பர் இப்பிடி எல்லாம் நல்ல விசயம் செய்யுதா???????????????????????????? முன்னேற்றம்தான்:........................... வெளிநாடுகளில கோயில்களயும் மதங்களயும் ஒழிக்க ஒருபேப்பர் இன்னும் நல்லா தீவிரமா செயற்படணும்........................................... இந்த மதங்களும் மதங்கள தூக்கித் திரியிறவையும் மக்கள இழிவுபடுத்துகினம்.............................

.... தமிழை இழிவுபடுத்தியினம்.......................... அந்து மதத்த கொச்சைப்படுத்துறதில தப்பேயில்ல.................................... நல்ல ஒரு விசயத்த பற்றி தப்பா எழுதினால் தான் கொச்சைப்படுத்துறது.......................

............... மக்கள முட்டாளாக்கி வைச்சிருக்கிற விசயங்கள பற்றி உண்மையள எழுதின அதுக்கு பேர் கொச்சப்படுத்திறதில்ல.................

................. ஒரு பேப்பர் இன்னும் பல மடங்கு தீவிரமா இந்த விசயத்தில நடக்கோணும்.............................

வெளிநாடுகளில மக்குளின்ர போராட்டத் தீவிரத்த மழுங்கடிக்கச் செய்யிறதுக்கு தான் இந்த மதங்கள் செயல்படுகுது........................... பண்டிகைகள் பூசைகள் கொண்டாட்டங்கள் தேரிழுத்தல் தேங்கா உடைக்கல்................ எண்டு மக்கள் சக்தியை திசை திருப்பி போராட்டத்தில இருந்து திசை திருப்புற நோக்கத்தோட தான் மதங்கள் வெளிநாட்டில கையாளபடுது................ மக்கள் சக்தியையும் தமிழற்ற பொருளாதாரத்தையும் இந்த மதங்களும் மதவாதிகளும் வீணாக்கி மழுங்கடிக்கினம்..................... ஒருபேப்பர் இதுகள அம்பலப்படுத்தோணும்.......................

............. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டிக்கு குளிராலை சன்னி புடிச்சுட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கோயில்களை இழுத்துப் பூட்டிட்டு அங்கெல்லாம் சாராயம் ஊத்தினா மக்கள் விழிப்புணர்வு பெற்று அறிவு பெருகி.. சனிக்கிரகத்தில ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பினமாக்கும்..! ஓசிப் பேப்பர் இதை செய்ய முன் வரனும். முதலில கோயில் வாசலில ஓசிப் பேப்பர் போடுறதை நிறுத்திப் போட்டு......... வாயால.. விளாசினா நல்லா இருக்கும். இந்த ஓசிப் பேப்பர்களால மாநகரசபைக்கு குப்பை பெருகிறதா அவை கவலை வெளியிடுகினமே தவிர... வேற...........???! :lol::lol:

....வெளிநாடுகளில மக்குளின்ர போராட்டத் தீவிரத்த மழுங்கடிக்கச் செய்யிறதுக்கு தான் இந்த மதங்கள் செயல்படுகுது........................... பண்டிகைகள் பூசைகள் கொண்டாட்டங்கள் தேரிழுத்தல் தேங்கா உடைக்கல்................ எண்டு மக்கள் சக்தியை திசை திருப்பி போராட்டத்தில இருந்து திசை திருப்புற நோக்கத்தோட தான் மதங்கள் வெளிநாட்டில கையாளபடுது................ மக்கள் சக்தியையும் தமிழற்ற பொருளாதாரத்தையும் இந்த மதங்களும் மதவாதிகளும் வீணாக்கி மழுங்கடிக்கினம்..................... ஒருபேப்பர் இதுகள அம்பலப்படுத்தோணும்.......................

............. :lol:

கொழும்பில் கூட மக்களை கோவில் மற்றும் நாடகத்தொடர்கள் என்று போதையில் வைத்திருக்க மகாராஜா குழுமம் மகிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது.

இப்போதும் கூட கொட்டகேன, காலி வீதி, போன்ற பகுதிகளில் இளைஞர்கள் பிரதட்டை அடிப்பதும் போர்த் தேங்காய் அடிப்பதும், பெண்கள் பால்குட பவனி என்று வீதி முழுவதும் பாலை சிந்தி திரிவதும் நடக்கிறது.

நாளோன்றுக்கு 4 பேர் வீதம் கொல்லப்படும் மக்கள் குறித்து எந்த சலனமும் இங்கு காண்பிக்கப்படுவதில்லை. அங்கு இதை பற்றி பிரஸ்தாபித்தால் அது மதவிரோதமாக கூறி நிர்வாகத்தினர், முறைத்துப் பார்க்கின்றனர். மதம் மக்களுக்காகவெனில் இந்த மத வியாபாரிகளும், அவர்களின் வியாபாரப் பண்டமாகிய கடவுளும் ஆக்கபூர்வமாக இந்த அவலத்தை தீர்க்க என்ன செய்கின்றனர்?

கேட்டால் "எல்லாம் அவன் செயல்!", "எப்போதோ முடிந்த கதை!"

பிற்குறிப்பு:

நான் பிறப்பால் ஒரு இந்து, பழக்கதோசத்தாலும், குடும்ப அழுத்தத்தாலும் இறைவனை வழிபடுபவன்.

"அன்பே சிவம்"

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கூட மக்களை கோவில் மற்றும் நாடகத்தொடர்கள் என்று போதையில் வைத்திருக்க மகாராஜா குழுமம் மகிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது.

இப்போதும் கூட கொட்டகேன, காலி வீதி, போன்ற பகுதிகளில் இளைஞர்கள் பிரதட்டை அடிப்பதும் போர்த் தேங்காய் அடிப்பதும், பெண்கள் பால்குட பவனி என்று வீதி முழுவதும் பாலை சிந்தி திரிவதும் நடக்கிறது.

நாளோன்றுக்கு 4 பேர் வீதம் கொல்லப்படும் மக்கள் குறித்து எந்த சலனமும் இங்கு காண்பிக்கப்படுவதில்லை. அங்கு இதை பற்றி பிரஸ்தாபித்தால் அது மதவிரோதமாக கூறி நிர்வாகத்தினர், முறைத்துப் பார்க்கின்றனர். மதம் மக்களுக்காகவெனில் இந்த மத வியாபாரிகளும், அவர்களின் வியாபாரப் பண்டமாகிய கடவுளும் ஆக்கபூர்வமாக இந்த அவலத்தை தீர்க்க என்ன செய்கின்றனர்?

கேட்டால் "எல்லாம் அவன் செயல்!", "எப்போதோ முடிந்த கதை!"

பிற்குறிப்பு:

நான் பிறப்பால் ஒரு இந்து, பழக்கதோசத்தாலும், குடும்ப அழுத்தத்தாலும் இறைவனை வழிபடுபவன்.

"அன்பே சிவம்"

சாணக்கியா அப்ப நீங்கள் மக்களட்ட என்ன எதிர்பார்க்கிறீர்கள்.. நீங்கள் எதிர்பார்க்கிற வகையில மக்களை வழிநடத்தி மகிந்த அரசுக்கு எதிரா இராணுவத்துக்கு எதிரா ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிரா கொழும்பில மக்கள் அணியைத் திரட்டி செயற்பட உங்களால் தலைமை தாங்க முடியுமா..??!

மக்கள் கடவுளை நம்பி வீணாப் போகினம் என்று கவலைப்படுகிறவர்கள் தங்கள் பங்குக்கு கடவுளைத் திட்டி வீணாப் போகின்றனர். இரண்டு தரப்புமே சாதிக்க நினைக்கல்ல. கடவுளை நம்புறவை எல்லாரும் நாட்டுச் சூழலையிட்டு வரத்தப்படாமலும் இல்லை. அதேபோல் நாத்திகம் பேசுறவையும் நாட்டுச் சூழலை நங்குணர்ந்துதான் நடக்கினம் என்று சொல்லும் படியும் இல்லை.

மக்கள் சூழலுக்கு ஏற்ப தங்களால இயன்றதைச் செய்ய முனைகின்றனர் என்பதுதான் உண்மை. வன்னில உள்ள மக்களுக்கு உள்ள சூழ்நிலை வேற யாழ்ப்பாணம் வவுனியா, தென் தமிழீழம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுக்க இருக்கிற மக்களின் சூழ்நிலை வேற கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சூழ்நிலை வேற புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களின் சூழ்நிலை வேற..! மக்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தான் தெரிவுகளைச் செய்வர். சரியான வழிநடத்தல் இல்லை என்றால் மக்களின் தெரிவுகள் அவர்களின் சொந்த இரசணைப்போக்கில் அமையும். எல்லா இடத்திலும் மக்களை நாங்க விரும்பிறது போல நாட்டுப் பிரச்சைக்காக 24 மணி நேரமும் கவலைப்பட்டிட்டு இரு என்று நினைக்கிறதும் ஒரு வீணாப் போற நினைவுதான்..!

சூழலுக்கு ஏற்ப தன்னை தக்க வைக்க தெரிஞ்சவனால தான் போராட்டத்தை தொடங்க முடியும் நகர்த்திச் செல்ல முடியும் வெற்றிகளைப் பெற முடியும். சூழல் குழப்பத்தோடு தானும் குழம்பி மக்களையும் குழப்பினா.. அது தெளிவற்ற நிலைதான். இலட்சி உறுதி மிக்க மக்கள் சாமி கும்பிட்டால் என்ன நாடகம் பார்த்தால் என்ன இலட்சியத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கேக்க பொங்கி எழுவார்கள்.

எத்தனையோ கரும்புலிகள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்து கோவில் கும்பிட்டு.. நாடகம் பார்த்து.. ஏன் திருமணம் செய்து வாழ்ந்து கூட இலட்சியத்தை நிறைவு செய்திருக்காங்க. அப்ப அவங்களை எல்லாம் நீங்க கோவில் கும்பிடாம இருந்தால் தான் போராளிகள் என்பீர்களா..??! கோவில்களை நாடகங்களை பகிஸ்கரிப்பதுதான் மக்கள் துயரில் பங்கெடுப்பது.. நாடகம் பார்க்காமல் வன்னில குண்டு போடுறதைப் பற்றி மட்டும் வீட்டுக்க குசு குசுத்துக் கதைத்தபடி இருக்கிறது தான் மக்கள் அக்கறை என்று கருதி நீங்கள் அவற்றையா மக்களிடம் எதிர்பார்க்கிறீர்கள்..??!

நானும் பிரேமதாச சந்திரிக்கா அம்மையார் காலங்களில் தென்னிலங்கையில் தான் வாழ்ந்தேன். தென்னிலங்கையில் வாழும் போது வீதியில் மறந்தும் தமிழ் கதைக்கமாட்டேன். தினமும் வீரகேசரி படிப்பேன். 1997/98 இல் இருந்து தினக்குரலும் படிப்பேன். ஆங்கிலப்பத்திரிகைகளும் படிப்பேன். தினமும் விடயங்களைச் சேகரித்துக் கொண்டு தென்னிலங்கையில் வாழும் மக்களைப் போலத்தான் வாழ்ந்தேன். நான் அங்கு வித்தியாசமா வாழ்ந்தா சந்தேகத்தின் பேரில் இப்ப உள்ளதான் இருந்திருப்பேன்..!

இப்படித்தான் பிற மக்களும் வாழ்கின்றனர். புகலிடத்தில் பாருங்கள்.. புலி மீது தடை என்றதும் தமிழ்செல்வன் அண்ணாவுக்கு அஞ்சலி செய்து பிரசுரங்கள் வெளியிடக் கூட தயங்கி தயங்கித்தான் நிகழ்வுகளைச் செய்கின்றனர். இணையத்தில் ஏற்றுவது இலகு. ஆனால் நடைமுறையில் ஒவ்வொன்றையும் செய்யும் போது எதிர்கொள்ளும் சூழல் என்பது சவால்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. மக்கள் பலருக்கு இந்தச் சவாலை சமாளிக்க வழி தெரியவும் இல்ல வழி காட்ட யாரும் இல்லை என்ற நிலைதான் இருக்குது. பிரச்சனை எங்கையோ இருக்க கடவுளும் பால் குடமும் நாடகமும் தான் பிரச்சனைக்கு காரணம் என்பது போல நாம் விடயங்களை அணுகுவதால் தீர்வு என்பது எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தருவதில்லை என்பது உண்மையே..!

யார் இந்த கடவுளை இல்லை என்போர் என்று பார்த்தீர்கள் என்றால் குழப்பத்தில் உள்ள மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு நிலை உள்ளதை உணர்ந்து அதற்குள் தங்கள் சித்தாந்தங்களை சிந்த நினைப்பவர்கள். போராடும் சூழலில் இழப்புக்கள் துயரங்கள் மலிந்திருக்கும். மக்களுக்கு வாழ்க்கையில் மட்டுமல்ல உலக நடைமுறைகளில் கூட நம்பிக்கை இழந்திருக்கும். அவ்வாறான சூழலில் கடவுளை எதிரியாகக் காட்டுவதும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி துன்பத்தில் மூழ்க விடுவதும் தான் இவர்களின் பணி. இது ஒருவகையில் குழம்பிப் போயுள்ள மக்களை குழப்பியடிச்சு எதிரிக்கு சாதகமாக அவர்களை இட்டுச் செல்லுதல் என்பதாகக் கூட அமையலாம். எனவே இந்த நாத்திகவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள சூழல் அபாயகரமானது. அவர்களின் தெரிவுகள் ஆபத்தானவையாகக் கூட அமையலாம். அமைதியான சூழலில் இந்த நாத்திகவாதிகள் இருப்பிடம் தெரியாமல் இருந்தனர். ஆனால்... போர் சூழலில் எதிரியின் பிரச்சாரங்களோடு இவர்களும் தங்களின் திருக்கூத்துக்களோடு களமிறங்கியுள்ளனர். இது குழப்பத்தோடு குழப்பத்தை அதிகரித்து மக்களைக் குழப்பி.. தங்களை விளம்பரப்படுத்தும் செயலின் ஓர் அங்கம்.

புகலிடத்தில் ஆலயங்களில் தான் ஈழத்தில் இருந்து வருபவர்கள் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைகளை விளக்கி மக்களோடு துயர்களைப் பகிர்கின்றனர். ஆலயங்கள் தான் தமிழர் மொழி கலாசார பண்பாட்டுக் கோலங்களை அடுத்த சந்ததிக்கு காவி அவர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் பெரும்பணியைச் செய்கின்றன. வியாபாரம் நடக்குது என்பதற்காக தேவைகளைப் புறக்கணிக்க முடியாது.

ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் கூட தமிழ் சைவத்தின் மூலம் தான் காக்கப்பட்டது. ஆங்கில (கிறிஸ்தவ) மிசனறிகளில் ஆங்கில மொழி மோகம் திணிக்கப்பட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பது ஊக்கிவிக்கப்பட்ட சூழலில் சைவப் பாடசாலைகள் தான் தமிழ் மொழிக் கல்வியை ஊட்டி மக்களுக்கு தமிழுணர்வை ஏற்படுத்தின. அதே சூழல் புலம்பெயர் தேசங்களில் நிலையானதாக இருக்கிறது.

நாம் எமக்கு வசதியாக வாதங்களை இணையத்தில் அரங்கேற்றி விட்டுப் போகின்றோம். உதாரணத்துக்குப் பாருங்கள் ஈ வெ ராமசாமியை பெரியார் மண்ணாங்கட்டி என்று கொண்டு முழங்கித் தள்ளுகின்றார்கள். இந்த ஈ வெ ராமசாமி என்பவரின் கொள்கையைக் காவித்திரிய சிடி அடிப்பவர்கள் தமிழ் மொழியை கற்பது பற்றி அதன் அவசியம் அதன் நடைமுறை பற்றி ஒரு சிடியை அடித்து இலவசமாக புலம்பெயர் தேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பட்டும் பார்ப்பம். கடவுள் இல்லை.. கோவிலை இடிப்பம் என்று கூவித் திரிந்து சுயவிளம்பரமும் வியாபாரமும் அரசியலும் நடத்த நினைக்கிற கூட்டம் மக்களையும் எதிர்கால சந்ததியையும் நிகழ்கால போராட்டச் சூழலுக்கு என்று தயார்படுத்த என்னத்தைச் செய்கிறார்கள்..???! புலம்பெயர் தேசங்களில் உள்ள கோவில்கள் செய்யும் பங்களிப்புகளில் 1% தானும் இவர்கள் செய்கின்றனரா..??!

அண்மையில் தமிழ்செல்வன் அண்ணாவின் மறைவில் கூட மக்கள் கோவில்களில் கூடித்தான் தங்கள் துயர்களைப் பகிர்ந்து கொண்டனர். மக்களுக்கு தங்கள் துயரை பகிர்ந்து கொள்ள கூட முடியாத தகாத சூழல் உள்ள நிலையில், அவர்களாகவே அதற்கு ஒரு வடிகாலைத் தேடிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சூழலை உருவாக்கி வைத்துக் கொண்டு.. சிலர் கோயிலை இடிப்பம்.. சாமியைக் கொல்லுவம்.. என்று இப்பதான் நாத்திக வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். உங்களால் எப்படி ஆன்மீகவாதத்தை தவறென்று தற்போது இனங்காண முடிகிறதோ அப்படித்தான் போராட்டச் சூழலை உணர்த்தாது அல்லது உணராது நாத்திகவாதம் செய்வதும் ஒரு வகையில் போராட்டத்தை விட்டு விலகிய சிந்தனையின் வெளிப்பாடுதான்.

விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் நாத்திகம் பேசவில்லை. கோவில்களை இழுத்து மூடச் சொல்லவில்லை. தேவாலயங்களை மூடச் சொல்லவில்லை. மாறாக கோவில்கள் தேவாலயங்கள் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் இடங்களாக போர்ச் சூழலில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்திய இராணுவத்தின் அகோர செல் வீச்சுக்கு நல்லூர் ஆலயம் மக்களுக்கு புகலிடம் அளிக்கவில்லை என்றால் இன்று பலர் உயிருடன் இருக்கமாட்டார்கள். போராளிகளும் இராணுவமும் கோவில்களை மதிக்க முன்னுரிமை அளித்தனர். அதேபோல் மடு தேவாலயம். இப்படி கோவில்கள் போர்ச் சூழலில் மக்களின் தகாத சூழலை அவர்கள் கடந்து வர பங்களிக்கின்றனவே தவிர அவை நாத்திக வாதிகளைப் போல சும்மா கடவுளை தேடி நேரத்தை வீணடிச்சுக் கொண்டு மட்டும் நிற்கவில்லை.

கொழும்பில் கூட பெரியவர்கள் கூடி தீர்மானம் எடுக்கும் இடங்களாக கோவில்கள் விளங்குகின்றன. பெளத்த பிக்குகள் கூட இராமகிருஷ்ண மிசன் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றனர். பல இளைஞர் யுவதிகள் அங்கு வசதிகளை பாதுகாப்பைப் பெறுகின்றனர். நாத்திகம் பேசும் கூட்டம் இப்படி எதையாவது மக்களின் பாதுகாப்புக் கருதி செய்திருக்குதா..???! :lol:

கடவுள் இருக்கிராரா இல்லையா என்பதல்ல முக்கியம். மக்களின் துயரைத் துடைக்க அல்லது அவர்களின் துயரோடு எது அதிகம் பங்களித்து ஆறுதல் தருகுதோ அதை மக்கள் நாடுவர். மக்களின் துயரைப் பற்றி கிஞ்சிதமும் அக்கறைப்படாது கொள்கை பேசிட்டு இருந்தால் அந்தக் கொள்கைகளும் பேச்சுக்களும் மக்களை நெருங்கவே முடியாது. அதுதான் கடவுள் இல்லை என்ற நாத்திகத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். நாத்திகம் பேசி.. வீணாப்போனவர்களைக் காட்டிலும் கோவிலுக்குப் போய் பயனுள்ள சிலவற்றைச் செய்தால் கூட அது தான் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை. மக்கள் தான் கடவுள்..! உயிர்கள் தான் கடவுள். கோவில் சிலைகளில் கடவுளைத் தேடி அதை அழிக்க முற்படும் முட்டாள்கள் தான் நாத்திக வாதிகள். கோவில் சிலைகளில் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து மக்களை ஒருங்கிணைப்பவர்கள் தான் ஆன்மீகவாதிகள்..! எது உபயோகமானது..??! தீர்மானிப்பது உங்கள் கையில்..! :lol:

Edited by nedukkalapoovan

இவ்வளவு பெரிசா எழுதிறதை விட, இரண்டு வார்த்தையில என்னை திட்டிட்டு போயிருந்தா சந்தோசப்பட்டிருப்பன். இதை வாசிச்சு பதில் எழுத எனக்கு ஒருநாள் அவகாசம் தேவை கண்டியளோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.