Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிப் பரணி

- வ.ஐ.ச.ஜெயபாலன்

எவர்க்கும் பணியா வன்னி

பிள்ளைகளைப் பறிகொடுத்து

விம்மி அழுகிறது.

எதிரிகள் அறிக

எங்கள் யானைக் காடு சிந்துவது

கண்ணீர் அல்ல மதநீர்.

விழு ஞாயிறாய்

பண்டார வன்னியனும் தோழர்களும்

கற்சிலை மடுவில் சிந்திய குருதி

செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்

எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை

புதைத்து வருகின்றோம்.

புலருகிற ஈழத்தின்

போர்ப்பரணி பாடுதற்க்கு.

எங்கள் மூன்று அம்மன்களும்

பதினெட்டுக் காதவராயன்களும்

முனியப்பர்களும் எங்கே ?

அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய்

வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என

வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.

போராளிகளுக்காக

தேன் வாசனையை

வாகை மலர் அரும்புகளில்

பொதிந்து காத்திருக்கும்

வன்னிகாடே வன்னிக் காடே

உன்மனதைத் தேற்றிக்கொள்.

உன் புன்னகை மன்னன்

பாண்டவருடன் களபலியானான்.

அவன்தான் தாயே

பலதடவை

காலனை வென்று ஞாலப் பந்தில்

புலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.

நாம் கலங்குவதை அவன் விரும்பான்

தன் உயிரிலும் தாங்கிய கொடியை

ஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்

visjayapalan@gmail.com

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு எழுதுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். என்னை என் முழுமையுடனனும் கருத்துச் சுதந்திரத்துடனும் போராளிகளும் ராஜதந்தரிகளும் ஏற்றிருக்கிறார்கள். எனது கவிதை வாசிக்கிறவர்களுக்காக என் முக்கத்தையும் என் கட்டற்ற சுதந்திர உணர்வையும் அழித்துக்கொள்ள முடியாது. நான் தொடர்ந்து யாழுக்கு பங்களிப்பு செய்வது பற்றி உங்கள் கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நண்பனாக தொடரலாம் அல்லது நண்பனாக விலகிச் செல்லலாம்? எப்பவும் நட்பிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்கள் எப்போதுமே கட்டற்ற சிந்தனையுடன் இருக்கவேண்டும்.. பிறரின் விருப்பங்களுக்காக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடாது. எனவே தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைத் தாருங்கள்..

கவிஞர்கள் எப்போதுமே கட்டற்ற சிந்தனையுடன் இருக்கவேண்டும்.. பிறரின் விருப்பங்களுக்காக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடாது. எனவே தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைத் தாருங்கள்..

கிருபனின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா ஜெயபாலன் .படைப்பாளி என்று வந்துவிட்டால் சகலதையும் சகித்துகொண்டு எழுதுங்கோ. விரும்பினவர்கள் படிப்பார்கள்."போகவா நிற்கவா என்று கேட்பது அழகல்ல ஒருபடைப்பாளிக்கு"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா ஜெயபாலன் .படைப்பாளி என்று வந்துவிட்டால் சகலதையும் சகித்துகொண்டு எழுதுங்கோ. விரும்பினவர்கள் படிப்பார்கள்."போகவா நிற்கவா என்று கேட்பது அழகல்ல ஒருபடைப்பாளிக்கு"

நன்றி நண்பர்களே, என்னால் இழக்க முடியாதது எல்லா கருத்து ஒற்றுமை வேற்றுமைகளோடும் முதலாவது எனது விடுதலை ஆதரவு, இரண்டாவது எனது தோழ தோழியரும் நண்பர்களும் நண்பியரும். இரண்டு அணியிலும் எனது பூரண சுதந்தரம் மதிக்கப் படுகிறதுதான் எனது பாக்கியம். கருத்து வேறு பாடுள்ள தோழ தோழியரை நண்பர்களை நண்பியரை எதிரிகளாக்குவதல்ல அவர்களை இயன்ற வரை வென்றெடுக்கிற முடிவில்லாத முயற்ச்சியே கவிஞன் என்கிற வகையில் எனது பங்களிப்பு. மதிப்புக்குரிய சாஸ்திரி உட்பட யாருடைய மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி . கருத்து வேறு பாடுள்ள தோழ தோழியரை நண்பர்களை நண்பியரை எதிரிகளாக்குவதல்ல அவர்களை இயன்ற வரை வென்றெடுக்கிற முடிவில்லாத முயற்ச்சியே

நல்லது யெயபாலன்: அண்ணா உங்கள் முயற்சியின் மூலம் பாரிசில் எச்சில் இலைக்காக பிச்சையெடுத்த கொண்டு மாற்று கருத்தாளர் என்று கதைவிட்டு கூட்டம் கூட்டிகொண்டு திரிகின்ற ஒருவரையேனும் உங்களால் மாற்ற முடிந்தால் சந்தோசமே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர்களை மாற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனெனில் அவர்களுடன் எல்லாம் வாதாடிபார்த்து விட்டவன் என்கிற முறையில் தான் சொல்கிறேன் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாஸ்திரி,

மகிழ்ச்சி

தோழர்களையும் தோழியர்களையும் பெறுவதும் பேணுவதும்தானே வாழ்வின் வரப்பிரசாதம். அரசியலிலும் அதுதான் பெரும் பலம். இருபக்கத்திலும் தவறுகள் நடந்திருக்கலாம். வெல்ல முடியாதபோதும்கூட நட்பும் பேசுவதும் நமது ஞானக்கண் திறக்க உதவுமல்லவா. . பேசுவதன்மூலம் நமது வட்டம் சிறிது பருத்தாலும் ஞானம் சிறிது அதிகரித்தாலும் நன்மைதானே. நட்பும் நன்மைதானே. விடுதலைக்கு இவையும் பலம் சேர்க்கும்தானே. எனது முயற்ச்சியில் மெதுவாகவேனும் இத்தகைய நன்மையே கிடைத்து வருகிறது என்றால் நம்புவீர்களா சாஸ்திரி.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியில் அடிபட்டுத் தப்பியதுபோல இருக்கிறது. அமரரின் மரணம் வெளி நாடுகாளில் பல அரசியல் வாதிக்களையும் ராஜதந்திரிகளையும் எங்கள் பக்கம் திரரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழ்ச்செல்வனின் இழப்பு அத்தகையது. வெள்ளை அரசியால் ராஜதந்திரிகள் மத்தியில் நாம் அவரது ராணுவப் பக்கத்தையல்ல சமாதான தூதுவர் பக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.நாமும் அதையே முன்னிலைப் படுத்த வேண்டடும். இது குறித்து என்னிடம்ம் சில மேற்க்கு நாட்டு அறிஞர்கள் கேட்டார்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் உங்கள் கவிதைகள் தொடரட்டும்.உலகம் ஆயிரம் சொல்லட்டும்.உங்களுக்கு நீங்களே நீதிபதி.

விழு ஞாயிறாய்

பண்டார வன்னியனும் தோழர்களும்

கற்சிலை மடுவில் சிந்திய குருதி

செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்

எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை

புதைத்து வருகின்றோம்.

புலருகிற ஈழத்தின்

போர்ப்பரணி பாடுதற்க்கு.

புதைக்கிறோம் புதைக்கிறோம் -எங்கள்

புன்னகையைப் புதைக்கிறோம்

அழுவதற்காக அல்ல. ஈழம் சிரிப்பதற்காக!

காலத்தின் கண்ணாடி கவிதை - உணர்ந்து

கவிதை படைப்பவன் கவிஞன்

நல்லதொரு கவிதை ஜெயபாலன் அண்ணா.

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கும் இளைஞனுக்கும் நன்றிகள். ஏழைக்கவிஞர்கள் காலம் காலமாக பொன்னையல்ல மண்ணையல்ல இந்த சுதந்தரமான இடத்தைத்தானனே எதிர்பார்க்கிறார்கள். விடுதலை வேட்கையும் கட்டற்ற சுதந்திரமும் சத்தியமும்தான் சங்ககாலத்தில் இருந்து புலவர் மரபு. இளமையில் இருந்து வாழ் நாள் சிலவாயினும் அவ்வண்ணமே வாழ விரும்பினேன். எங்கள் முன்னோரான சங்கப் புலவர்களுள் ஒருவரான ஒளவையார் பெரும் போர் விருப்பினனான அதியமானுக்கும் சூழ்ந்த பகைக்குமிடையில் பணிபுரிந்திருக்கிறார். இந்தவகையில் அதியனின் ஆயுளை அவர் நீடித்திருக்கிறார். அதியனை எதிர்த்த பெரிய மன்னர்களைப் பார்த்து "சிறுவர் ஆடக் கலங்கும் சிறு சுனையாயினும் இறங்கினால் அங்கு வாழும் முதலை யானையையும் வீழ்த்தும்" என எச்சரிக்கிறார். உண்மையில் இது நாடோடியான ஒளவையார் கூறிய இராணுவ புவி இயல் சூத்திரமாகும். இவ்வகையில் புலவர் பணியும் பெரிதே. ஒரு மன்னனைப் பார்த்து முகத்துக்கு நேரே பெருஞ்சிதிரனார் வணிகப் புலவனும் அல்லேன் என சினக்கிறார். இவர்கள்தான் எனது முன்னோர். நல் வாழ்த்துக்களுடன்.

Edited by poet

நெற்றி கண்ணை

காட்டிய போதிலும்

காட்டியதீசன்

ஆகிய போதிலும்

குற்றம் தன்னை

குற்றம் இதுவென

சுற்றிக்காட்டிய

செந்தமிழ் வீரன்

உன் போல் புலவன்

உன் போல் புலவன்

நெஞ்சத்துணிவுடன்

நேர்மைத்திறனுடன்

சொந்தக் கருத்தினை

சந்தத் தமிழுடன்

சொல்லத் தெரிந்தவன்

அவன் தான் புலவன்.

அந்தப் பரம்பரை

உந்தன் பரம்பரை

எந்த தடை உமை

என்ன செய்திடும்

நெஞ்சில்பட்டதை

நினைவை தொட்டதை

கொஞ்சு தமிழினில்

கோர்த்தே கொடுத்திட

அஞ்சிட வேண்டாம்

அருந்தமிழ் கவியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்துணிவுடன்

நேர்மைத்திறனுடன்

சொந்தக் கருத்தினை

........

சொல்ல

.........

அஞ்சிட வேண்டாம்

அருந்தமிழ் கவியே

நன்றி வெற்றிவேல்,

யாழ் களம் எனக்கு புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. இராமர் பாலத்துக்கு மண்சுமந்த சிறு அணில்போலவேனும் தமிழரது, தமிழ்பேசும் முஸ்லிம்களது, தமிழ் பேசும் தலித்துகளது, பெண்களது ஒருங்கிணைந்த விடுதலைப் பாதைக்கு மண்சுமப்பேன். இதுவே சபதம். வள்ளுவன் சொன்ன இடிப்பாராக இருப்பதும் விடுதலைக்கான கடனல்லவா?

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிப் பரணி இசைவடிவம் பெறுகிறது. இசை அமைப்பாளர் அதை தனி ராகத்தில் அல்லது இராக மாலிகையில் விருத்தமாக பாட விரும்புகிறார். பரணிக்கு என்ன என்ன ராகங்கள் பொருந்தும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். உங்கள் ஆலோசனைகளை வரவேற்க்கிறேன்

எனக்கு உங்கள் கவிதைகள் மிகவும் பிடிக்கும்

நல்ல கருத்து பொதித்த கவிதைகள் நிறைய எழு்தவும்

நல்ல கலைஞ்ர்கள் பல கட்டங்களை தாண்டித் தான்

சாதித்ததாக சரித்திரம்

Edited by கஜந்தி

நான் இங்கு எழுதுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

நல்ல நல்ல கவிதைகளை எழுதுற நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீங்க?

அஞ்சலிப்பரணி இசையமைச்சிடீங்களாஅ? அமைச்சிருப்பின் இணைப்பை தாங்கோ மறாக்காம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்கள் கவிதைகள் மிகவும் பிடிக்கும்

நல்ல கருத்து பொதித்த கவிதைகள் நிறைய எழு்தவும்

நல்ல கலைஞ்ர்கள் பல கட்டங்களை தாண்டித் தான்

சாதித்ததாக சரித்திரம்

நன்றி கஜந்தி, உங்கள் வார்த்தைகள் சித்தத்தில் இனிப்பது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். வெண்ணிலாவுக்கும் நன்றி. இசை அமைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய கவிஞனே ,

நீ விடுதலைக்கு போராடும் வீரமிக்க தமிழ் குலத்தை சேர்ந்தவன் ,

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி போர்க்களத்தில் பின் வாங்கும்

இலங்கை இராணுவம் போல கவி பாட மறுத்து பின்வாங்க

இது ஒன்றும் போர்களம் அல்ல, யாழ் களம்;

பின்வாங்க நீ ஒன்றும் இலங்கை இராணுவம் அல்ல, வீர தமிழன்.

எம் கவியே நிற்காது பொழியட்டும் உன் கவி மழை.

கவிதை என்னும் அருவிக்கு அணை போட யாரும் நினைத்தால்

அது அவர்களின் மடமை. கலங்காது கவி அருவி பெருகட்டும்.

எழுச்சி கவிதைகள் மூலம் விடுதலை நெருப்பை

நம்மவர் நெஞ்சினில் ஏற்றிட ,

வற்றாத தமிழில் வழங்கு உன் கவிதைகளை.

என்றும் அன்புடன்,

சோழ நாட்டு இளவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழ நாட்டு இளவலே,

இனித் தமிழர் அடிமையெனத்

தலை பணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின்

வழி தொடர்வதில்லை

இனித்தமிழர் மானுடத்தின்

விடுதலையென்றெழுந்தார்.

இனித் தமிழர் உலகத்தின்

விலங்குகளும் தகர்ப்பார்.

பண்டார வன்னியனின்

படை நாடந்த காடு

பணியாது ஒருபோதும்

ஈழவர் எம் வீடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞ!

எம் சிந்தைகள் சிறக்க கவிபல புனைக.

நெடிய பயணம் உனது.

சஞ்சலம் கொள்ளற்க.

நும் புகழ் ஓங்குக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான தூதுவர் சுப தமிழ்ச்செல்வனின் மரணம் ஏற்படுத்திய அலைகளை வேறு எந்த இழப்பும் ஏற்படுத்தவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். தமிழ் நாட்டில் மீண்டும் ஈழத்தமிழருக்கான ஆதரவுத் தளம் சுப தமிழ்ச் செல்வனின் மறைவில் ஏற்பட்ட அனுதாப அலையால் மிகப உறுதியாக அகன்றுள்ளது. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள் பதிரிகையாளர்கள் இதுபற்றித் தொடர்புகொண்டு பேசினார்கள். அஞ்சலிப் பரணி வாசித்துவிட்டு தொடர்புகொண்ட குமுதம் முன்னைநாள் ஆசிரியரும் இன்றைய பத்தி எழுத்தாளருமான கிருஸ்ணா டாவின்சி தான் எழுதிய அஞ்சலியை அனுப்பி யிருந்தார். குமுதத்துக்கு சென்று வாசியுங்கள்.

Edited by poet

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவிதை வாசகர்கள் சிலர் கவிதை மீழ் பிரசுரத்துக்கு ஆல்லது பாடுவதற்க்கு அனுமதி கேட்டு எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். எனது கவிதைகளை மீழ்பிரசுரம் செய்யவும் வேறு உடகங்களில் பயன்படுத்தவும் என்னிடம் அனுமதி பெறத்தேவையில்லை. எனினும் பயன்படுத்திய தகவல் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். அதிகமாக தமிழக வாசகர்களுக்கேஎ எனது கவிதைகள் தொடற்ச்சியாகக் கிடைத்தது. திண்ணை ஈழத்திலும் சிறீலங்காவிலும் சிலருக்கு கிட்டியது. திரு. மோகன் என்னை யாழ் இணையத்தில் இணைத்தபிறகு பரவலாக தாயக செல்வர்களுக்கும் செல்விகளூக்கும் எனது கவிதைகள் போய்ச் சேருவது மகிழ்ச்சி தருகிறது. பரபரப்பில் அஞ்சலிப் பரணியை வாசித்த ஒரு கலைஞர் அதை பாடலாக்கிய்யிருக்கிறார். எனதூ படைப்புகளை யாரும் என்ன் அனுமதி இல்லாமல் பயன் படுத்தலாம் என்பதை மீண்ணும் அறிவிக்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.