Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் பிபிசிக்கு சொல்லுறாங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் அரச கட்டுப்பாட்டுக்குள் வசிக்கும் பெயர் குறிப்பிடாத பெண்மணி சொல்கிறார்..

புலிகள் குண்டைக் கொடுத்து ஒரு சின்னப் பையன் மூலம் பொலீஸ் மீது ஏவச் சொல்கின்றனராம். அவன் அதைச் செய்ததும் பொலீஸ் அவனைச் சுட்டுக் கொன்று விடுகிறதாம்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வதிவது இப்போது நல்லதாம். அரச தலைவர் வல்லவராம். சமாதானம் கொண்டு வர பிரார்த்திக்கினமாம்.

கிளைமோர் எல்லா இடமும் கிடக்காம். அதைப் புலி வைக்குதோ ஆமி வைக்குதோ என்று சரியாத் தெரியாதாம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள யாரோ வெள்ளை வானில் வந்து ஆட்களைப் பிடிக்கினமாம். காசு கேக்கினமாம். ஆனால் அது புலியாகவும் இருக்கலாமாம்... அரசாங்க ஆக்கலாவும் இருக்கலாமாம்.

இப்படி சொல்லி இருக்கிறா ஒரு அனாமதேயப் பெண்மணி.

நானும் இராணுவக் கட்டுப்பாட்டுக்க இருந்த நான் தான். புலிகள் ஒரு நாளும் வந்து குண்டைத் தந்து எறியச் சொன்னதில்ல. இராணுவக் கட்டுப்பாட்டுக்க வசிக்கிறம் என்றதுக்காக கண்ட படிக்கும் புலியைப் பற்றி அளக்கிறதை நிறுத்துங்கோ.

அசைலம் அடிக்கிற கூட்டம் தான் பொய் சொல்லுதெண்டா ஆமிட்ட புண்ணியம் தேடவும் பொய் சொல்லாதேங்கோ. தெரிஞ்சதை உண்மை என்று அறிஞ்சதை மட்டும் கதையுங்கோ. உங்கள் சந்தேகங்களை பேட்டிகளில அடுக்காதேங்கோ. சிங்களவனைப் பாராட்டமலும் புலிகளைத் தூசிக்காமலும் இராணுவக் கட்டுப்பாட்டுக்க வடிவா சீவியம் நடத்தலாம். அது நடைமுறைச் சாத்தியமானது.

பிபிசி.. உதை தன்ர முன் பக்கத்தில போட்டு.. புலியைப் பற்றி ஒரு தவறான அபிப்பிராயத்தை வளர்க்குது கண்டியளோ..! எனவே பேட்டி கொடுக்கிறவை தயவு செய்து உங்க மனச்சாட்சிக்கு விரோதமா கொடுக்காதேங்கோ..! ஏதோ பேட்டி கொடுத்து உங்களை பெரிய மனிசர் ஆக்கலாம் என்று அடுத்தவையிட வேதனையை சோதனையை மலினப்படுத்திடாதேங்கோ..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7217196.stm

  • கருத்துக்கள உறவுகள்

BBCன் நோக்கமே(தமிழ்), புலிகளை நலினப்படுத்துவது தானே நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BBCன் நோக்கமே(தமிழ்), புலிகளை நலினப்படுத்துவது தானே நெடுக்ஸ்.

இந்தப் பெண்ணின் பேட்டியில அவா சொன்னதில 75% மும் அவாவின் ஊகம். ஆனால் பிபிசியை வாசிக்கிற ஆக்கள்.. பயங்கரவாதப் புலிகள் என்ற பரப்புரைக்குள்ள இருந்து கொண்டு இதைப் படிக்கேக்க.. புலிகள் மோசமானவங்க தான் என்று நினைப்பினமே தவிர குறித்தவரின் ஊகத்தை இனங்காண மாட்டாங்க.

எனவே பேட்டி கொடுக்கேக்க.. நீங்கள் உண்மை என்று அறிஞ்சதை மட்டும் சொல்லுங்க. தயவுசெய்து ஊகங்கள் வதந்திகள் அரச பிரச்சாரங்கள் தமிழர்களின் மிகைப்படுத்தல்களை உங்கள் தகவலாகச் சொல்லாதீர்கள். அது போராளிகளுக்கும் போராட்டத்துக்கும் அவர்கள் செய்கின்ற தியாகங்களுக்கும் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கும் அர்த்தமில்லாமல் செய்திடலாம். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பிபிசிக்கு பேட்டி குடுக்கிற அந்த ஊர் பெயர் தெரியாத பெண் மணியைவிடுங்க அது இல்ல இப்ப பிரச்சினை, அங்க யாழில குண்டுகள் வெடிச்சும், வரிசைக்கு நிக்க வைச்சு சுட்டு பயங்கரம் நடக்குது ஆனா இந்த யாழில என்ன நடக்குது? இந்த முறை காதலர் தினம் கொண்டாடுறியளோ எண்டு பேட்டி வைக்கிறார் அங்க ஒருத்தர், அந்த பிரிவில போய் பாருங்க யாழில இருக்கிறவையள் எத்தனை பேர் கருத்து எழுதி கலாய்க்கினம் எண்டு? ஆனால் அதையே நல்லதை செய்யுங்கொ, பங்களியுங்கோ எண்டு கேட்டா வாசிச்சுட்டு பதில் எழுதினால் பிரச்சினை எண்டு பூனை கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கிறமாதிரி இருக்கினம்.

இப்படி யாழில அளவுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்யிற நேரம் ஏதாச்சும் பார்ட் டைம் வேலைக்கு போய் காசை குடுத்தால் என்ன வந்தது?

இதில சிலர் என்ன செய்யிறாங்க எண்டால் களத்தில கேட்கிற உதவிகளுக்கு பதில் தராமல் பதுங்கினம், பத்தாததுக்கு மெயில் பொக்சை புல்ல்லாக்கி வைச்சிருக்கினம், யாராச்சும் மெயில் போட்டு இருக்கிற காசை பறிச்சுப்போடுவாங்களோ எண்டு. கையொப்பத்திலை தாயகம் தேசியம் ம*** எண்டு எழுதிறதாலையோ, அல்லது சிங்களவன் களங்களில நேரத்தை செலவு செய்து சண்டைபிடிக்கிறதாலையோ எமது மக்களின் பிரச்சினன தீரப்போறதில்லை, எம்மாளான குறைந்த வளத்தை பயன் படுத்தி எதாச்சும் செய்த்தால் தான் கஸ்ரப்படும் மக்களின் ஒரு வேளை அடிப்படை வசதியை செய்துகொடுக்க முடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பிபிசிக்கு பேட்டி குடுக்கிற அந்த ஊர் பெயர் தெரியாத பெண் மணியைவிடுங்க அது இல்ல இப்ப பிரச்சினை, அங்க யாழில குண்டுகள் வெடிச்சும், வரிசைக்கு நிக்க வைச்சு சுட்டு பயங்கரம் நடக்குது ஆனா இந்த யாழில என்ன நடக்குது? இந்த முறை காதலர் தினம் கொண்டாடுறியளோ எண்டு பேட்டி வைக்கிறார் அங்க ஒருத்தர், அந்த பிரிவில போய் பாருங்க யாழில இருக்கிறவையள் எத்தனை பேர் கருத்து எழுதி கலாய்க்கினம் எண்டு? ஆனால் அதையே நல்லதை செய்யுங்கொ, பங்களியுங்கோ எண்டு கேட்டா வாசிச்சுட்டு பதில் எழுதினால் பிரச்சினை எண்டு பூனை கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கிறமாதிரி இருக்கினம்.

இப்படி யாழில அளவுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்யிற நேரம் ஏதாச்சும் பார்ட் டைம் வேலைக்கு போய் காசை குடுத்தால் என்ன வந்தது?

இதில சிலர் என்ன செய்யிறாங்க எண்டால் களத்தில கேட்கிற உதவிகளுக்கு பதில் தராமல் பதுங்கினம், பத்தாததுக்கு மெயில் பொக்சை புல்ல்லாக்கி வைச்சிருக்கினம், யாராச்சும் மெயில் போட்டு இருக்கிற காசை பறிச்சுப்போடுவாங்களோ எண்டு. கையொப்பத்திலை தாயகம் தேசியம் ம*** எண்டு எழுதிறதாலையோ, அல்லது சிங்களவன் களங்களில நேரத்தை செலவு செய்து சண்டைபிடிக்கிறதாலையோ எமது மக்களின் பிரச்சினன தீரப்போறதில்லை, எம்மாளான குறைந்த வளத்தை பயன் படுத்தி எதாச்சும் செய்த்தால் தான் கஸ்ரப்படும் மக்களின் ஒரு வேளை அடிப்படை வசதியை செய்துகொடுக்க முடியும்

ஏண்டாம்பி.. என்ர மெயில் பொக்ஸ் நிரம்பல்லத்தானே. நான் மேலதிக வேலைக்குப் போக ஏலாதடாம்பி. சட்டத்துக்குப் புறம்பு என்று கட்டுநாயக்காவில கொண்டு போய் சிங்களவன் கையில கொடுத்திடுவாங்க. அப்புறம் நீர்கொழும்பில கம்பிதான் எண்ண வேணும். இந்த வயசான காலத்திலும் என்னால சட்டத்துக்க நின்று செய்யக் கூடியதைச் செய்யுறன்..! என்னைத் திட்டாத மோனை..! எனக்கும் உந்த லவ்சுக்கும் வெகு தூரம்..! :huh::blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செரட்டி பொக்சுக்கை எவ்வளவு காசும் போடலாம் எண்டு இங்கிலாந்து சட்டம் சொல்லுதே? இந்தளவுக்கு அதிகமாக போட்டால் சொந்த நாட்டுக்கு அனுப்புவம் எண்டு எந்த சட்டமும் சொல்லயில்லையே? :blink:

அது இருக்கட்டும் N.I நம்பரை குடுத்து 2,3 வேலை செய்யலாமே? சட்டம் ஒண்டும் செய்யாதே. ஒண்டே ஒண்டு மாத்திரம் கண்னை மூடிக்கொண்டு செய்யும் இங்கிலாந்து சட்டம் அதுதான் ரக்ஸ்சை கண்மூடிக்கொண்டு வெட்டி அங்கால 7,8 எண்டு பெத்துக்கொண்டு இருகிற வெள்ளையளுக்கும், குடியை முழு தொழிலாக செய்யிற வெள்ளையளுக்கும் குடுக்கும். :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உங்க லண்டணுக்கு குடிபெயர்ந்து வரலாமெண்டு யோசிக்கிறன்?

ஏதாவது நல்ல யோசினை சொல்லுங்கோப்பா? முக்கியமாய் நெடுக்கு,டன்,கறுப்பி உங்களிட்டத்தான் கேக்கிறன் :huh:

பகிடி விடாமல் எல்லாருக்கும் பிரயோசனப்படுகிறமாதிரி சொல்லுங்கோ :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்க லண்டணுக்கு குடிபெயர்ந்து வரலாமெண்டு யோசிக்கிறன்?

ஏதாவது நல்ல யோசினை சொல்லுங்கோப்பா? முக்கியமாய் நெடுக்கு,டன்,கறுப்பி உங்களிட்டத்தான் கேக்கிறன் :)

பகிடி விடாமல் எல்லாருக்கும் பிரயோசனப்படுகிறமாதிரி சொல்லுங்கோ :blink:

முதல்ல ஒழுங்கா குளிச்சுட்டு வாங்கோ... :huh::wub: சிரியாசா கதைக்கிறம் அதுக்க வடிவேலு சா ஜம்மு பேப் பகிடி விட்ட மாதிரி... :wub::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செரட்டி பொக்சுக்கை எவ்வளவு காசும் போடலாம் எண்டு இங்கிலாந்து சட்டம் சொல்லுதே? இந்தளவுக்கு அதிகமாக போட்டால் சொந்த நாட்டுக்கு அனுப்புவம் எண்டு எந்த சட்டமும் சொல்லயில்லையே? :blink:

அது இருக்கட்டும் N.I நம்பரை குடுத்து 2,3 வேலை செய்யலாமே? சட்டம் ஒண்டும் செய்யாதே. ஒண்டே ஒண்டு மாத்திரம் கண்னை மூடிக்கொண்டு செய்யும் இங்கிலாந்து சட்டம் அதுதான் ரக்ஸ்சை கண்மூடிக்கொண்டு வெட்டி அங்கால 7,8 எண்டு பெத்துக்கொண்டு இருகிற வெள்ளையளுக்கும், குடியை முழு தொழிலாக செய்யிற வெள்ளையளுக்கும் குடுக்கும். :huh:

செரிட்டி பொக்சுக்க போடலாம்.. ஆனா செரிட்டியளையும் பாண்ட் பண்ணுறாங்களே..!

என் ஐ நம்பரைக் கொடுத்துத்தானே வேலை செய்யுறன். என்னால குறிப்பிட்ட மணி நேரம் தான் வேலை செய்ய ஏலும். அதையும் மிஞ்சி செய்து பிடிபட்டால்.. செரிட்டிக்கு மட்டுமில்ல நான் கட்டின ஆயிரக்கணக்கான பவுன்சுக்கும் வேலை இல்லாமல் போயிடும்..! நான் சட்டதிட்டதுக்கு மதிப்பளிச்சு வாழ்ந்து பழகிட்டன். அதை மீறினா மாட்டிக்குவனே. அதுமட்டுமன்றி நான் நீங்க நித்திரைக்கு ஆக்களோட சுத்திறத்துக்குப் பாவிக்கிற நேரத்தைத்தான் யாழில பாவிக்கிறன்..! :wub::wub:

நானும் உங்க லண்டணுக்கு குடிபெயர்ந்து வரலாமெண்டு யோசிக்கிறன்?

ஏதாவது நல்ல யோசினை சொல்லுங்கோப்பா? முக்கியமாய் நெடுக்கு,டன்,கறுப்பி உங்களிட்டத்தான் கேக்கிறன் :wub:

பகிடி விடாமல் எல்லாருக்கும் பிரயோசனப்படுகிறமாதிரி சொல்லுங்கோ :wub:

வடிவாப் பெயரலாம். உங்களட்ட ஐரோப்பிய வதிவிட விசா இருந்தா வடிவாப் பெயரலாம். வந்து ஒரு வேலை எடுத்து ஒரு வருசம் வேலை செய்திட்டிங்கன்னா போதும். அப்புறம் எல்லா பெனிவிட்டும் எடுத்துக் கொண்டு களவா வேலை செய்து கொண்டு.. சந்தோசமா இருக்கலாம். வந்த உடன.. என் ஐ நம்பரையும்.. வேலை செய்யுற அனுமதிக்கும் விண்ணப்பிச்சு எடுத்திடுங்க. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டுமன்றி நான் நீங்க நித்திரைக்கு ஆக்களோட சுத்திறத்துக்குப் பாவிக்கிற நேரத்தைத்தான் யாழில பாவிக்கிறன்..!

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும் :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு பிபிசிக்கு பேட்டி குடுக்கிற அந்த ஊர் பெயர் தெரியாத பெண் மணியைவிடுங்க அது இல்ல இப்ப பிரச்சினை, அங்க யாழில குண்டுகள் வெடிச்சும், வரிசைக்கு நிக்க வைச்சு சுட்டு பயங்கரம் நடக்குது ஆனா இந்த யாழில என்ன நடக்குது? இந்த முறை காதலர் தினம் கொண்டாடுறியளோ எண்டு பேட்டி வைக்கிறார் அங்க ஒருத்தர், அந்த பிரிவில போய் பாருங்க யாழில இருக்கிறவையள் எத்தனை பேர் கருத்து எழுதி கலாய்க்கினம் எண்டு? ஆனால் அதையே நல்லதை செய்யுங்கொ, பங்களியுங்கோ எண்டு கேட்டா வாசிச்சுட்டு பதில் எழுதினால் பிரச்சினை எண்டு பூனை கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கிறமாதிரி இருக்கினம்.

இப்படி யாழில அளவுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்யிற நேரம் ஏதாச்சும் பார்ட் டைம் வேலைக்கு போய் காசை குடுத்தால் என்ன வந்தது?

இதில சிலர் என்ன செய்யிறாங்க எண்டால் களத்தில கேட்கிற உதவிகளுக்கு பதில் தராமல் பதுங்கினம், பத்தாததுக்கு மெயில் பொக்சை புல்ல்லாக்கி வைச்சிருக்கினம், யாராச்சும் மெயில் போட்டு இருக்கிற காசை பறிச்சுப்போடுவாங்களோ எண்டு. கையொப்பத்திலை தாயகம் தேசியம் ம*** எண்டு எழுதிறதாலையோ, அல்லது சிங்களவன் களங்களில நேரத்தை செலவு செய்து சண்டைபிடிக்கிறதாலையோ எமது மக்களின் பிரச்சினன தீரப்போறதில்லை, எம்மாளான குறைந்த வளத்தை பயன் படுத்தி எதாச்சும் செய்த்தால் தான் கஸ்ரப்படும் மக்களின் ஒரு வேளை அடிப்படை வசதியை செய்துகொடுக்க முடியும்

டங்கிளஸ் நீங்க சொல்லுற மாதிரி தாயகம் தேசியம் என்டு இங்க எழுதிறவையெல்லாம் ஊருக்கு உதவி செய்யிறவை என்டும் இல்லை அங்க எழுதாம விடுகிறவர்கள் ஊருக்கு உதவி செய்யாதவர்கள் என்டும் இல்லை.

இங்க மற்ற விசயங்களை கதைத்தவர்கள் தாயகத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்டு உங்களால் உறுதியாக கூறமுடியுமா??? அதேமாதிரி தாயகம் தாயகம் என்டு இங்கு பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் எல்லாம் தங்களுடைய நேரத்தில் 100% ஐயும், உதவிகளையும் தாயகத்திற்காகத்தான் செய்கிறார்கள் என்டும் கூறமுடியுமா.

மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை தாயகத்திற்காக செய்துகொண்டு தான் இருக்கிறோம் இருப்பார்கள். அவர்கள் செய்வதை எல்லாம் இங்க பகிரங்கபடுத்த விரும்பாமலும் இருக்கலாம். அதனால் அடுத்த முறை குறை சொல்லும் முன்னர் கொஞ்சம் யோசித்து சொல்லுங்கோ.

உங்களை குறை சொல்வதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னிக்கவும் ஆனால் நான் எனது மனதில் பட்டதை சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை ரொம்ப தான் குத்திடிச்சோ?? குத்தினால் வெறி சோறீ.... :wub:

மனசில பட்டதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குத்தானே? அந்த உரிமை யாழில என்னம் எனக்கு மறுக்கப்படவில்லை.

ஏதோ எண்ட சொந்தக்காரங்க ஊரில மொபைல் போன், மோட்டர் சைக்கிளுக்கு பெற்றோல் ஊத்த காசு இல்லாமல் பிகருக்கு கடலை வாங்கி குடுக்க காசில்லாமல் ரொம்ப கஸ்ரப்படுறாங்க, உங்க கடக்கண்ணை காட்ட சொல்லி வற்புறுத்துறது ரொம்ப தப்பு எண்டு உங்க மனசில் இருந்து வெளிப்பட்ட கருத்தால உணர்ந்துகொண்டேன். :wub:

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும் :wub:

நைனா வா*** லண்டனுக்கு, அண்டரேஜை (சிறுவர்களை) வைச்சு அடி போடுறன்... :blink::huh:

நைனா வா*** லண்டனுக்கு, அண்டரேஜை (சிறுவர்களை) வைச்சு அடி போடுறன்... :lol::o

உங்காலை வைற்ச்சப்பல், மைல்லெண்ட் பக்கம் போனா வங்காளி சிறுசுகளை பிடிக்கலாம்.. படமும் விலாசமும் குடுத்தா போதும்.. செலவுக்கு ஒரு 15 பவுன்ஸ் கேப்பாங்கள்... குடுங்கோ..

உண்மையாத்தானப்பா.. ஒரு கால் எடுத்தா கை பிறீயா((free) எடுப்பாங்களாம்.. டிஸ்கவுண்ட் போட்டு இருக்காங்க... :wub:

ஈஸ்ற்காம் பெடியளை நம்பாதேங்கோ கவனம்.. அவங்களை பொலீஸ் கலைச்சு திரியுது மாட்டீடாதேங்கோ...!! :o:D:o

அட எல்லாருக்கு நம்ஸ்தே அது தான் வணக்கம்..ம்ம் முக்கிய சீனில நம்ம கீரொ நடித்தி கொண்டிருக்கிறார் அதில ஜம்மு பேபி (வடிவேல்) வந்திருக்கிறேன் பாருங்கோ :o ஆனா கீரோ யார் தெரியுமே...டங்கு மாமா (விஜகாந்)...படத்தில விஜகாந் வாயால நல்லா வெட்டி விழுத்துவார் அதை போல தான் நம்ம கீரோவும் வெறி சாறி சீரோவும்.. :lol:

என்னவோ டங்கு மாமாவின் குடும்பம் சாப்பாடிற்கே லாட்டரி அடிக்கிற மாதிரியும் அதற்கு தான் அவர் காசு சேர்கிறார் மாதிரியும் அல்லவா கதைக்கிறீங்க..(டங்கு மாமா எப்படி :o )...அவை எல்லாம் எவ்வளவு பெரிய ஆட்கள் தெரியுமோ..(ஆனா பாருங்கோ அவையிட்ட எல்லாம் போய் பங்களிப்பு எல்லாம் கேட்கமாட்டார் நம்ம டங்கு மாமா :wub: )...இங்கே இருந்து கொண்டு சவுண்டு விடுவார் பாருங்கோ சும்மா அதிருமே யாழ்களமே என்றா பாருங்கோ... :o

எல்லாரும் டங்கு மாமாவை வைத்து காமேடியா பண்ணுறியள் டங்கு மாமா பக்கம் பக்கமா யாழில "டமிழ் தேசியம் டமிழ் தேசியம்" என்று எழுதுறது அவரின்ட புகழிற்காகவா எல்லாம் நம்ம மக்களிற்காக(டங்கு மாமா எப்படி சமாளித்துவிட்டோமல :D )..

யாழில "டமிழ் தேசியம்" வளர ஒரே காரணம் எங்களின்ட டங்கு மாமா தான் சோ அவரை பற்றி யாரும் தப்பா கதைத்தா நேக்கு கெட்ட கோபம் வரும் பாருங்கோ :) ...மிச்ச எல்லாரும் டைம் பாசிற்காக வேலைக்கு போகாம இங்கே இருந்து மிணகடுறவை :( ஆனா டங்கு மாமா மட்டும் பார்ட் டைம் வேலைக்கு எல்லாம் போய் பாடுபடுறார் இப்ப கூட மேல சில கே...ணதணமான கருத்துகளை சொன்னது அவர் இல்லை அவர் அந்த நேரத்தில பார்ட் டைம் வேலை பார்த்தவர்.. :) (எப்படி மாம்ஸ் சும்மா பின்னிட்டோமல)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"நான் பெரிசு உன்ட பெரிசு என்று இருக்காம நாட்டிற்காக செயற்படுங்கோ" :)

Edited by Jamuna

டங்கு ! நெடுக்கு !

உண்மையிலே உங்களின் கருத்தில் எனக்கும் புரண உடன்பாடு உள்ளது இவ்வளவு காலமும் சிங்களவனானல் இவ்வளவும் பட்டும் எம்மில் பலபேருக்கு புரியவில்லை என்பது மிக மிக கவலையான விடயம் தான் அதாவது

குறிப்பாக சில உதாரணங்களை சொல்லாம் .

2002 ஆண்டின் பின்பு வருடக்கணக்காக முடப்பட்டிருந்த கிட்டு (கண்டி வீதி) நெடுஞ்சாலை விடுதலைப் புலிகளின் முயற்சியின் பயனாக திறந்து மக்கள் போக்குவரத்திற்கு விடப்பட்ட பொழுது யாழில் அடைபட்டிருந்த பல இஞைர்கள் தென்பகுதிக்கு வருவது இலகுவானது . அதற்கு முதலில் யாழில் இருந்து தென்பகுதிக்கு வருவது என்பது மிக மிக கடினம் மட்டுமல்ல அதற்கான அனுமதி பெறுவது என்பது பல பேருடம் இருந்து பெறவேண்டியது என்பது நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்றில்லை.

அதாவது 2002 இற்கு பிறகு நினைத்த நேரத்தில் தென்பகுதிக்கு பயணம் செய்வதுடன் வெறும் 450

ருபாவுடன் செய்ய முடிந்த பொழுதிலும் இந்த பாதையில் புலிகளளால் வரி அறவிடப்பட்டதிற்கு எம்மில் எத்தனை பேர் எவ்வாறு திட்டியிருப்போம்

ஆனால் இன்று 20000 இற்கு மேற்பட்ட தொகையினைக் கொடுத்தும் நிம்மதியாக பயணிக்க முடியாத நிலை !

ஏன் இவ்வளவு 2006 ஆம் ஆகசிட்டிற்கு பின்பு எல்லோருமே யாழ் மக்களை பற்றி எவ்வளவு பாவப்பட்டிருப்பம் ஆனால் அங்கிருந்து வருகிறவர்களிற்கு நாம் யாழ் நிலவரங்களை பற்றிக் கேட்hலே வெறுப்பேற்படுகின்றது புரியாதது தான்.

அது மட்டுமல்ல இன்னும் தான் நாம் ஏன் இவ்வளவு சீரழியுறோம் என்பது புரியவில்லை.

அத்துடன் அங்கிருந்து வருபவர்களின் விவாதம் வேறுவிதமாக இருக்கின்றது .

அதாவது இந்த போர் சுழ்நிலை அல்லது தமிழ் மக்களின் நிம்மதிக்கு குறைவிற்கு புலிகள் தான் காரணம் ஏன் எனில் புலிகள் தான் கிளைமோர் வைக்கிறார்கள் அதனால் தான் பிரச்சனை யாழில் உள்ளது போன்ற மன நிலையில் இருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல இங்கு வந்து ஏதாவது படிக்க ஆரம்பிக்கும் பொழுது சிங்கள நண்பர்களின் நட்பு கிடைத்தலே போதும் எத்தனை தத்துவம் பேசுவார்கள் .

அதாவது சிங்களவருடன் எவ்வளவோ நல்லது நாம் சந்தோசமாக வாழலாம்

சிங்களவரால் பிரச்சனை வராது.

எம்மவர்கள் தான் பிரச்சனைபடுகிறார்கள் போன்ற மன நிலையில் வாழ்பவர்கள் தான் கொஞ்சம் கூடவாக இருக்கிறார்கள் என்பது கவலையான விடயம் தான் அதற்காக எல்லோருமே இவ்வாறு என சொல்லவரவில்லை.

டங்கு !

நீங்கள் குறிப்பிடுவதைப் போல சிங்கள இணையத்தளங்களில் சிங்களவருக்கு குழப்பம் விளைவிப்பது உண்டு தான்.!

ஆனால் நாம் அதனை எவ்வாறு குழப்புகின்றோம் அல்லது சண்டை பிடிக்கின்றோம் என்ற வகையில் பார்க்கவேண்டும்

1.தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைக்கலாம்

2.தமிழ் மக்கள் தற்காலத்தில் பட்டுக் கொண்டிருக்கம் துன்பங்களின் புகைபடங்களை வெளியடலாம்

3.எதற்குமே சரிவராவிட்hல் அல்லது தமிழ் மக்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்ற ரீதியில் கருத்து அங்கு தொனிப்படுமானால் ...... பிறகு என்ன ஊதவேண்டியது தான் சங்கு !!!!!

டங்கு கருத்துகள் பிழையென்னால் குறை நினைக்கவேண்டாம் ஏன் எனில் சிங்களவனின் இடத்தில் இருந்து கொண்டு சிங்களவனிற்கு உபவத்திரம் இணையம் முலம் கொடுப்பதை தவிர வேறுவழியில்லை .

புதியவன்,

எம்மவர்கள் தான் பிரச்சனைபடுகிறார்கள் போன்ற மன நிலையில் வாழ்பவர்கள் தான் கொஞ்சம் கூடவாக இருக்கிறார்கள் என்பது கவலையான விடயம் தான் அதற்காக எல்லோருமே இவ்வாறு என சொல்லவரவில்லை.

யார் கூடவாக இருக்கிறார்களோ அதுதான் யதார்த்தம்!

இதே போன்ற ஒரு கருத்தைதான் அண்மையில் தன் மகளுக்கு சிகிச்சை செய்யவந்த ஏழை பெற்றோரும் தெரிவித்தனர்.

தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி!

இணையத்தில் பார்த்தால் தெரியும் அதற்கு காரணமான வைரஸ்!

ஆம் உண்மையிலே சாணக்கியன் ! யதார்த்தம் தான் உண்மை தான்!

ஆனால் எல்லோருமே பட்டு தான் தெளிய வேண்டும் என்றில்லை மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் அனுபவங்கள் முலமாகவும் தெளியலாம் ! அதற்காள தவறாக விளக்கம் கொள்ள வேண்டாம் .

1989 ஆண்டு காலப்பகுதியில் எமது குடும்பங்களை சேர்ந்தவர்ளும் விசாரணைக்க அழைத்துச் செல்ப்படுட்டு இல்லாமல் போனார்கள் ...

அதற்காக நான் புலிகள் செய்வதெல்லாம் சரியென்று கூற வரவில்லை ஏன் எனில் புலிகளால் விசாரணைக்கு அழைப்பதற்கு முன்பு 3 முறை கடிதம் அழைத்துச் செல்லபபம்டவர்களிற்கும் அவர்களது பெற்றோருக்கும் அனுப்பப்பட்டும் அவர்கள் திருந்தவில்லை. இறுதியில் இல்லாமல் போய்விட்டார்கள்.

அதற்காக புலிகள் நான் எதிர்க்கவில்லை ஏன் எனில் A/L படித்த காலப்பகுதியில் சீறிலங்கா இரணுவத்தினால் பட்ட துன்பம் தந்த முடிவு.

Edited by puthijavan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது இந்த போர் சுழ்நிலை அல்லது தமிழ் மக்களின் நிம்மதிக்கு குறைவிற்கு புலிகள் தான் காரணம் ஏன் எனில் புலிகள் தான் கிளைமோர் வைக்கிறார்கள் அதனால் தான் பிரச்சனை யாழில் உள்ளது போன்ற மன நிலையில் இருக்கின்றார்கள்.

நான் பிறக்ரிக்கலா கதைக்கிறன். நான் வெளிநாடு ஓடிவந்த கூட்டமா இருந்து கதைக்கல்ல.

நான் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வசித்தவன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வசித்தவன்.

எனது அயல்வீட்டாருக்கு புலிகளை பிடிக்காது. அவர்களால் தான் பிரச்சனை என்று எப்போதுமே சொல்லி வருவார்கள். நான் சின்னப் பையனா இருந்த போதும் அவர்களுக்கு உண்மையை நிகழ்வுகளை எடுத்துச் சொல்வேன். ஏதோ எனக்காக அந்த நேரத்துக்கு என்னோடு ஒத்திசைவதாகக் காட்டிக் கொண்டாலும் பின்னர் தமக்குள் புலிகளைப் பற்றிய தப்பபிப்பியாயத்தைக் கொண்டிருப்பர். இப்படி சிலர் யாழ்ப்பாணம் என்ன எங்கும் உள்ளனர்.

நானும் புலிகளிடம் பாஸ் பெற அரும்பாடு பட்டுத்தான் வந்தனான். ஆனால் அதற்காக அவர்களை குறை சொல்லமாட்டன். ஒரு யுத்த சூழ்நிலையில மக்களை தயார் படுத்தி வைக்கிறது ஒன்றும் இலகுவான விடயமல்ல. புலிகள் அதை மிகவும் அக்கறையோடு செய்தனர் என்பதையிட்டு என்னால் மறுப்புச் சொல்ல ஏலாது. புலிகளால் இயன்ற அளவுக்கு அவர்கள் தயார்ப்படுத்தல்களைச் செய்தனர்.

புலிகள் போராட வரச் சொல்லியும் பங்கர் வெட்ட வரச் சொல்லியும் சொன்னவை தங்களுக்காக அல்ல. என்னை இரு தடவைகள் சைக்கிளை மறிச்சு கட்டாயமா பங்கர் வெட்ட வர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் நான் மறுத்த போது என்னை கட்டாயப்படுத்தி ஏற்றிக் கொண்டு போகல்ல. 3ம் தடவை நானாவே நண்பர்களின் உதவியுடன் போய் உதவி செய்து கொடுத்தோம். ஆபத்துக்களுக்கும் மத்தியில். அதன் பின்னர் நானும் நண்பர்களும் சமைத்த உலர் உணவுகளை எங்க வீட்டில அயலவர்களிடம் திரட்டி போராளிகளிடம் கொடுத்தேன். மாவீரர் நிகழ்வுகளுக்கு சிட்டி கொழுத்தப் பயந்தவர்கள் மத்தியில் விமானம் இனங்கண்டு குண்டு போட்டிடும் என்று வெருட்டியவர்கள் மத்தியில் எங்கள் வீட்டு ரிவி அன்ரனாவிலேயே புலிக்கொடியை கட்டி விட்டனான். விமானம் குண்டு போடவே இல்ல..! அதற்காக என்னைத் திட்டியது எனது வீட்டாரை விட எனது அயலவர்கள் தான் அதிகம்..!

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போதும் வாழ்ந்தனான். இந்திய ஆமிக்காரனை கலியாணம் முடிச்ச யாழ்ப்பாணப் பெட்டையளும் இருக்கினம். இந்திய இராணுவத்தோட சண்டை போட்டு மடிஞ்ச பெண் போராளிகளும் அதே யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவையா இருக்கினம். அப்போ நான் யாழ் நகரில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பவே ஒட்டுக்குழுக்கள் பாடசாலைக்குள் வந்து புலிகள் விரோத துண்டுப் பிரசுரங்களை திணித்த போது அவற்றைத் திரட்டி மொத்த மாணவர்களும் குப்பையில் எறிந்தோம். அதற்காக வீதியில் வைத்து ஒட்டுக்குழுக்களால் சைக்கிள் செயினால்.. கிரிக்கெட் பொல்லால்.. தாக்கப்பட்டோம். இத்தனைக்கு இந்திய இராணுவம் அந்த வீதியில் நீட்டுக்கு லைன் கட்டி நின்றது. இப்படி புலிகள் ஒரு தடவையேனும் செய்தது கிடையாது.

இந்திய இராணுவம் போன கையோடு வந்த புலிகள் ஒட்டுக்குழுக்களை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்த போது தலையாட்டிகளைக் கூட பக்கத்தில போய் பார்க்க விட்டனர். புலிகளைப் பற்றி அப்போதுதான் மக்கள் என்னால் நங்கு அறியக் கூடிய நிலை இருந்தது. இந்தியன் ஆமி 10 வயசில இருந்த சிறுவனையும் தான் தலையாட்டி முன்னால நிறுத்தினது. அதையெல்லாம் எவரும் சொல்லினமோ..??!

இலங்கை இராணுவத்தை விட இந்திய இராணுவம் இருக்கேக்க (இராணுவங்கள் தந்த அமைதி) அமைதி அதிகம் என்று சொல்லலாம். மக்களில் பலர் இந்திய இராணுவ இருப்பை எதிர்க்கல்ல. ஏன் பலர் புலிகள் ஒழிந்தார்கள் என்று போடாத ஆட்டமில்ல. ஆனால் 1989 இல் நடந்த தேர்தலில் என்ன வெளிப்பட்டது..??!

நான் விடுதலைப்புலிகளின் அனுதாபியல்ல. அவர்களோடு சேர்ந்தியக்கியவனும் அல்ல. ஆனால் என்னைக் கூட அவர்கள் பக்கம் சாரத் தூண்டியது சிங்கள இந்திய அரசுகளின் போக்குகள் என்றால் அது மிகையல்ல.

மக்கள் எவருமே போரை விரும்பல்ல. புலிகளும் தான் போரை விரும்பல்ல. ஆனால் போர் மூலம் சமாதானம் பெற முடியும் என்று போரைத் திணிக்கிற சிங்களவனுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுக்கிற மாதிரி சிந்திக்கிற அல்லது நினைக்கிற மக்களின் அறியாமையை நினைக்கேக்க வருத்தமாகத்தான் இருக்கிறது.

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி 13 ஆண்டுகள் கடந்தாயிற்று. இத்தனை காலத்துள்ளும் கிளைமோர் வெடிக்கிற காலம் ஒரு குறுகிய காலம். ஆனால் இந்த 13 ஆண்டு காலத்துக்க.. யாழ்ப்பாணத்தார் சந்தித்த கொடுமைகள் பல. ஆனால் அதையெல்லாம் மறக்க கூடிய யாழ்ப்பாணத்தார் சிலர் சிங்களவனுக்கு காவடி தூக்க நிற்பது ஒன்றும் புதிதல்ல. உதே யாழ்ப்பாணத்தில பிறந்த அத்தியடிக் குத்தியன் தான் இப்ப அமைச்சராவும் இருக்கிறார். அவற்ற வாரிசுகள் புலிகளைப் பற்றி என்னென்னமோ எல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் காதில வாங்கினா அடக்குமுறையை இல்லாதொழிக்க முடியாது.

பிரேமதாச காலம் தொடங்கி போர் திணிக்கப்பட்டதே அன்றி புலிகளா அதை முன்னிறுத்தல்ல. போர் திணிக்கப்படும் போது புலிகள் முந்திக் கொண்ட சம்பவங்களை வைச்சு.. புலிகள் தான் போருக்குக் காரணம் என்பது சரியான பார்வையன்று..!

இன்று தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற நிலை வந்த பின்னர்.. புலிகளை ஏசிட்டு.. சீவியம் ஓட்டிறதும் ஒரு பிழைப்பா..??! :wub::lol:

Edited by nedukkalapoovan

BBCன் நோக்கமே(தமிழ்), புலிகளை நலினப்படுத்துவது தானே

அண்ணை நெடுக்காலபோவான் வணக்கம்!

நீங்கள் எழுதிய கருத்துக்கள் கொண்ட நிலையிலேயே தான் நானும் நிற்கின்றேன் என்பது ஓரு புறம் இருக்க !

போராட வழியின்றி வெளிநாட்டிற்கு ஓடிய கூட்டம் என்று நான் உங்களையோ அல்லது எவரையோ நான்' குறிப்பிடவில்லை என்பதுடன் கேவலங்கெட்ட் இலங்கையில்( தமிழிழத்தை குறிப்பிடவில்லை ) இருப்பதை விட

வெளிநாடுகளில் வாழ்வது எவ்வளவோ மேலானது சகல வழிகளிலும் அதாவது கடைசி ஆயுதம் ஏந்தித்தான் போராடவில்லை உழைத்து பணமாவது கொடுக்க முடியும் ஆனால் மிக மிக கேவலம் கொழும்பில் எதுவுமே செய்யமுடியாது.

உங்களைப்போலவே எனது சொந்த வாழ்விலும் ஏற்பட்ட அனுபவங்கள் என்னை புடம் போட்டதன்

வழி எமது காவலர்கள் புலிகளே என்பதில் எவ்வித தடக்கமும் இன்றி உள்ளது

அத்துடன் உங்களை சுட்டிக்காட்வில்லை ! அத்துடன் குறிப்பாக தற்போதைய காலங்களில் யாழில் இருந்து வருகின்ற எத்தகையவர்களும் நான் மேலே சொன்ன மனநிலையில் இருப்பதை நீங்கள் எவராது ஓருவருடன் கதைக்கும் பொழுது புரிந்திரப்பீர்கள் .

அதற்காக அந்த நிலை தான் சரியென்ற நான் இங்கு வாதாடவில்லை . ஏன் எனில் சிலபேரிற்கு சிங்களவனைப் பற்றி சொல்லிப் புரியவைக்கலாம் ஆனால் சிலருக்கு பட்டால் தான் புரியும்.

" தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் "

Edited by puthijavan

அடடா அடடா.. நானும் உதுகள இப்ப தற்செயலாத்தான் வாசிச்சன்... பீ.பீ.சீயில யாரோ பேட்டி கொடுக்கிறாங்களாம். அதுக்காக நாம யாழில காதலர் தினம் கொண்டாடப்படாதாம்! ஆஹா அருமையான ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! போறபோக்கை பார்த்தால் யாழில இருக்கிற உறுப்பினர் ஒருவர் தான் பீ.பி.சீ க்கு பேட்டி கொடுத்ததா சொல்லுவாங்கள் போல இருக்கிது. அண்ணைமார் அடிக்கிறீங்கள் ஆட்டுலறி சரி.. அத பொதுசனத்துக்கு அடிக்காமல் ஆமிக்காரனப் பாத்து அடியுங்கோ. உங்களுக்கு புண்ணியமா போகும்....

கதைக்கிறதுக்கு உங்களுக்கு ஒண்டும் இல்லை எண்டால் கடைசியா கிடைக்கிறது அவர் கலுசான் போடுறார். இவர் காற்சட்டையுக்க எந்தநேரமும் கைய வச்சுக்கொண்டு இருக்கிறார். எண்டு இப்பிடியும் அப்பிடியுமா பொதுசனங்கள தாக்கவேண்டியதுதான்.

பீ.பீ.சி விசயத்த பீ.பீ.சி யோட வச்சுக்கொள்ளுங்கோ. இஞ்ச நாங்கள் க***ஸ் இருக்கிறமோ இல்லாட்டி நித்தா கொள்ளுறமோ எண்ட ஆராய்ச்சி எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

அப்ப நான் வரட்டா??? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.