Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Featured Replies

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

Edited by sOliyAn

  • Replies 181
  • Views 21.2k
  • Created
  • Last Reply

நன்றி சோழியன் மாமா இணைப்புக்கு...

அஜீவன் அண்ணா நேர்முகம் அந்தமாதிரி இருக்கிது. பல விசயங்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. குறிப்பாக நீங்கள் கடைசியில சொன்ன விசயம்: "நாங்கள் கார் ஓடுறது எண்டாலே ஒரு பயிற்சியாளரிட்ட, Driving School இல படிச்சுப்போட்டு, ரெண்டு வகுப்பு எடுத்துப்போட்டு ஓடுறம். ஆனால், குறும்படம் எடுக்கிறது எண்டால் ஒரு சாமத்தியவீடு, கலியாணவீட்டில படம் எடுத்த அனுபவத்தோட இறங்குறம். குறும்படங்கள் தோல்வியில முடியுறதுக்கு இது முக்கியமான ஒரு காரணம்" எண்டு சொல்லி இருந்தீங்கள். இது பலருக்கு நல்ல ஒரு அறிவுரையாக இருக்கும் எண்டு நினைக்கிறன். :lol::lol:

தொடர்ந்து ஜமாயுங்கோ. வாழ்த்துகள்! :)

ajeevanax0.png

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

ஓரளவு பழைய கால சிங்கள சினிமாக்காரர்களைப் பற்றி அறிய முடிஞ்சுது. புகலிடத்தில் திரையிடப்படும் சிங்களப் படங்கள் குறித்து அறிய முடிஞ்சுது.. நன்றிகள்.

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :):lol:

தீபம் சிறீலங்காவின் "மிதவாதிகளின்" பக்கம் சாய்ந்து விட்டதோ.. என்று ஒரு கட்டத்தில் எண்ணத் தோன்றியது.

அஜீவனின் ஆதங்கங்களில் ஒன்று உருப்படியான திரைப்படக் கல்லூரி அல்லது பாடநெறி தமிழர்கள் தாயகத்தில் இல்லை என்பது. அது வெளிப்படையாக உண்மை போலத் தோன்றினும்.. நான் நினைக்கிறேன் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் உருப்படியான திரைப்பட நெறிகளை கற்றுக் கொண்டவர்களூடு நல்ல பயிற்சிகளை கடந்த இரண்டு தசாப்தமாக வழங்கி வருவதை அவர் அறிந்திருக்கவில்லை என்று.

மற்றும்படி.. தாயகத்தில் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதங்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக புறநிலைப்படிப்புகள் அலகினூடு "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்படம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

அஜீவன் அதிகம் நாம் அறிந்திராத பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???! :lol::lol:

1990 களில் குறும்படங்கள் பல சிரமங்களின் மத்தியில் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றனவே. பழைய சிங்கள சினிமாப் பற்றி பேசியது போன்று இவற்றைப் பற்றியும் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் ஒரு நாலு வார்த்தை பகர்ந்திருக்கலாமே..???! அப்போதுதான் அவற்றின் தரம்.. தொழில்நுட்ப கையாடல்கள் பற்றிய ஒரு பார்வை மக்களை, குறித்த திரைப்படங்களை தயாரித்த படைப்பாளிகளை சென்றடைய உதவி இருக்கும்... என்பது எனது ஆதங்கம்..!

அஜீவனின் சுவிஸ் திரைப்படச் சங்கத்துடனான கூட்டு முயற்சிகள் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

இச்செவ்வியை நாமெல்லாம் காண வகை செய்த தமிழமுதத்துக்கு நன்றிகள். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

இதில் என்ன சந்தேகம் :)

மற்றும்படி.. பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதக்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்பட்டம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்/

அஜீவன் அதிகம் பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???!

இதற்கு முக்கிய காரணங்கள் இதுவாக இருக்கலாம் அதாவது பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவர் இருவரும் சிறிலங்காவில் சிங்கள பகுதியில் தங்களது பதிவுகளை பிரபல்யபடுத்த தான், இவர்கள் நீங்கள் கூறிய பதிவுகளை பற்றி கூறி இருந்தால் சிங்கள பாதுகாப்பு படை இவர்களை "கொட்டி" என்று சிறையில் இடுமல்லவா அந்த நேரத்தில் யார் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்?அது போக இவர்கள் எல்லாம்...பலஸ்தீனர்களுக்காகவ

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ..... இந்த அஜீவன் சாரை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.

குறும்படம் பற்றிய விளக்கம் அழகு.

உங்கள் பேட்டி பலருக்கு குறும்படம் எடுக்கக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கும்.

பயிற்சிப் பட்டறைக்கு இலவசமாய் உதவி செய்ய நினைக்கும் பண்பும் சிறப்பு.

குறும்படம் பற்றிய பயிற்சிப் பட்டறையைத் தவிர வேறு ஏதேனும் தொடர்கள் இவை சம்பந்தமாய் வெளிவந்து கொண்டிருக்கிறதா அஜீவன்

நினைத்ததை சாதிக்கும் செயற்பாடுகளும் திறமையும் ஒருங்கே பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

இதை இன்னும் கொஞ்ச நேரத்தால வந்து சொல்லி இருக்கலாமே. இதுதான் சொல்லுறது நித்திரைத் தூக்கத்தோட கருத்தெழுதப்படாது என்று. (பகிடிக்கு அண்ணோய்) :lol::lol:

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

இதற்கொரு உதாரணம்:

சிலவருடங்களுக்கு முன் இங்கு தேசியம் சார்ந்தவர்கள் நடாத்தும் நாடகப் போட்டிக்காக எனக்குத் தெரிந்தவர் ஒருவர் தான் இயக்கவிருந்த நாடகம் சம்பந்தமான கதை வசனத்தை போட்டி நடாத்துவோருக்கு அனுப்பினார். போன வேகத்திலேயே ஏற்கமுடியாதென்ற பதிலுடன் திரும்பி வந்துவிட்டது. நாடகப் போட்டியில் பங்குபற்ற விரும்பியவரும் அதற்கான காரணத்தை அறிய பலமுறை முயற்சித்தார். ஆனால் காரணம் சொல்லப்படவில்லை மாறாக இன்னொரு நாடகத்தை அனுப்புங்கள் பரிசீலிக்கின்றோமென்றார்கள். அதையும் நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம், நீங்கள் எனது முதல் நாடகத்தை நிராகரித்ததற்கான காரணத்தைக் கூறினால்த் தானே உங்கள் இரசனைக்கேற்றவாறு எனது படைப்புக்களை அனுப்ப முடியுமென்று கூறினார். விரும்பினால் அனுப்புங்கள் வேறு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லி தொலைபேசியழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. படைப்பாளிக்கோ மனம் வெறுத்துவிட்டது ஆனாலும் எப்படியாவது தனது நாடகம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. அதனால் அவர் போட்டி நடாத்துவோருடன் நெருங்கிப்பழகும் இன்னொரு நாடகசிரியரிடம் விடயத்தைச் சொல்லி எப்படியாவது நீங்கள் சும்மா விசாரிப்பது போல் விசாரித்து எனக்கு விடயத்தைக் கூறுங்கள் என்று கேட்டார். அவரும் நாடகப் போட்டிகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் ஏன் குறிப்பிட்ட நாடகம் நிராகரிக்கப்பட்டது என்பதை வினாவியபொழுது, அவர் அளித்த பதில் தான் உச்ச நகைச்சுவை. அவர் சொன்ன காரணம் நாடகத்தில் புத்த துறவி வருகின்றார் அதனால்த் தான் நிராகரித்தோம்.

சரி அப்படி அந்த நாடகாசிரியர் என்ன நாடகம் எழுதினார் தெரியுமா?? "நவீன அசோகன்" இதுதான் நாடகத்தின் தலைப்பு. இந்தியாவில் அசோக மன்னன் புத்த துறவியின் போதனைகளால் மனம் திருந்தி புத்தரின் தர்மசீலக் கொள்கைகளை ஏற்று நடந்ததாக வரலாறு கூறுகின்றன. ஆனால் இதையே புத்த துறவியைப் பார்த்து அசோகன் புத்தமதத்தை பின்பற்றுவோரே புத்தரின் தர்மசீலக் கொள்கைகளைப் பின்பற்றவில்லையே என்று கேள்வி கேட்டு புத்த துறவியைச் சிந்திக்க வைப்பதாக தனது நாடகத்தை அமைத்திருந்தார் நாடகாசிரியர்.

சில விபரமில்லாதவர்களால் ஒரு அருமையான நாடகம் மேடையேறுவது தடுக்கப்பட்டது. அதனால் அந்த நாடகாசிரியர் மனம்நொந்து, நாடகங்கள் எழுதி இயக்குவதையே கைவிட்டு விட்டார்.

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

சுத்தம். இதை ஓடிப்போய் அவரிடமே கேளுங்கள், இல்லையேல் உங்கள் தலை வெடித்துச் சுக்குநூறாகச் சிதறிவிடும். :lol::lol:

  • தொடங்கியவர்

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் குட்டையைக் குளப்பி மீன்பிடிப்பது போல்கருத்தெழுதுகின்றார்கள். ஒரு கலைஞனின் திறமையென்பது அவரது தேசியம் சார்ந்த படைப்புக்களால் மட்டும் நிரூபிக்கப்படுவதில்லை. ஒரு கலைஞன் தேசியம் சார்ந்த படைப்புக்களை உருவாக்க முனைந்தாலும் இங்கே தேசியம் பேசுபவர்களோ அல்லது அதற்காக பாடுபடுகின்றோம் என்பவர்களோ அதற்குரிய உதவிகளைச் செய்வதை விட உபத்திரவம் கொடுப்பதே அதிகம். அப்புறம் எப்படி ஒரு கலைஞனால் தன் தேசியம்சார்ந்த சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும்.

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலையில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசம் சஞ்சிகைக்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்ற ஒரு நூலகர் இங்கிலாந்தில் இருந்து செயற்படும் தமிழ் தேசிய வானொலி ஒன்றிலே நிகழ்ச்சிகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அனுமதித்தது யார் என்று தெரியவில்லை.

ஜ.பி.சி தானே எஸ்.கே ராஜன்தான் நிங்கள் சொல்லுவரைர வைச்சு புத்தக நிகழ்வுகள் செய்யிறவர் அதாலை ராஜனை போனடிச்சு கேழுங்கோ சொல்லுவார். அதுசரி அதென்ன தமிழ்த்தேசிய வானொலி??? :lol::lol:

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

சோழியன் மாமா... இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது... எண்டு சொல்லி எழுதி இருக்கிறீங்கள். ஏன் பழைய பேட்டி எண்டால் இஞ்ச இணைக்கிறது தவறோ? இல்லாட்டிக்கு சிலருக்கு தாக சாந்தி கொடுத்து ஆசுவாசப்படுத்துறதுக்கு இப்பிடி எழுதி இருக்கிறீங்களோ? வேடிக்கையா இருக்கிது.. :lol:

கலைஞன் என்பவன் 1998 சொன்னதை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா? 1950ம் ஆண்டு வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். மூன்றாம் நாலாம் நூற்றாண்டுகளில அதற்கு முன்னம் வந்த கலைப்படைப்புக்களை பார்த்து ரசிக்கிறீனம். அதற்கும் முற்பட்ட காலத்தில எடுக்கப்பட்ட கலைஞர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து வாசிச்சு எல்லாம் மகிழிறீனம். 1998ம் ஆண்டு.. அட ஒரு பத்து வருசம் சொச்சம் முன்னம் எடுத்த பேட்டி எண்டபடியால் உதில சொல்லப்படுறது பிழை அல்லாட்டிக்கு உதில சொல்லப்படுறத கேட்கக்கூடாது எண்டு இருக்கிதோ? :lol:

சோழியன் மாமாவின் பதற்றம் எனக்கு விளங்கவில்லை. இதைப்பார்த்தால் நித்திரைத் தூக்கம் மாதிரி தெரியவில்லை. பயப்பிராந்தி மாதிரி தெரியுது. :)

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

தேசியம் சார்ந்து எழுதுறம் எண்டு சொல்லுறவங்களே செய்யுற அறுவை கொஞ்சம் நஞ்சம் இல்ல. தேசியத்தின் பெயரைச் சொல்லி குளிர்காய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சம் அல்ல. தமிழர் தேசியம் சார்பானது தேசியத்துக்கு எதிரானது எண்டு பிரிச்சுப் பிரிச்சுப் பார்த்தே தாங்கள் இப்ப பிரிஞ்சுபோய் நிக்கிறீனம். :)

யாரோ ஒருத்தன் ஒரு கலைஞரை பேட்டி கண்டி இருப்பது பாராட்டத்தக்கது. அதவிட்டுப்போட்டு பேட்டி கண்டவன் தேசியத்துக்கு ஆதரவானவனா இல்லாட்டிக்கு எதிரானவனா தேசிக்காயை கமக்கட்டுக்க வச்சு இருப்பவனா எண்டு எல்லாம் பூர்வீகம் பார்த்து வாழவெளிக்கிட்டால் பிரிவினை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. :lol:

ஏன் தேசியத்துகு எதிரானவன் என்றால் அவன் செய்யுறது எல்லாமே தவறானதா? தேசியத்துக்கு எதிரான ஒரு வைத்தியர் என்றால் அவர் நோயாளிக்கு ஊசிபோடேக்க நோயாளி மரணித்துவிடுவாரா?

இப்பிடியே பின்புலம் எல்லாம் பார்த்து புலனாய்வு செய்து.. கடைசியில எல்லாரிண்ட தலையிலயும் பித்தம் ஏறி வியாதிகள் வந்து மண்டைவீங்கி சாகவேண்டியதுதான். :lol:

நல்ல விசயங்களை அது எங்கிருந்து வந்தாலும் ஊக்குவிக்கவேண்டும். ஒருவன் பிழை செய்தாலும் நல்ல விசயங்களை அவன் செய்யும்போது அவனை ஊக்குவிக்கவேண்டும். :lol::lol:

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :o:rolleyes:

இதை யாழ் இணையத்துக்க்காக ஒருக்கால் நெடுக்காலபோவானே அஜீவன் அண்ணாவிடம் இந்தக்கேள்வியை கேட்கலாமே..

கேள்வியை கேட்காமல் பிறகு ஏன் சேதாரம் ஆகிவிடும் எண்டபடியால அப்படிச் செய்யவில்லை என ஊகிப்பு.. :rolleyes:

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் பற்றிய பதிவுகளைச் செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு சோமியை உதாரணமாகச் சொல்லலாம். அதற்காக தாயகம் பற்றிய பதிவுகளை செய்யாதவர்கள் பாராட்டப்படக் கூடாதவர்கள் என்று இல்லை.

கலைஞன் என்பவனுக்கு சுதந்திரம் இல்லையா? :rolleyes:

திரைப்படக் கல்லூரியில் பல பேர் படிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கலைஞர்கள் ஆவதில்லை. கலைஞன் என்பவன் மக்கள் ரசனைக்கு படைப்பைத் தந்ததால் அப்படி அழைக்கப்படுகிறான்.

தான் சார்ந்த மக்கள் கூட்டத்தை மறந்தவன்.. அந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க மறந்தவன்.. அந்த மக்களிடம் தன்னைக் கலைஞன் என்று அடையாளம் காணச் சொல்ல முடியுமா என்பதுதான் எனது வினவல். படைப்புக்கள் இன்னொரு சமூகத்துக்காக வைக்கப்பட்டு அதைப் படைத்தவர் அந்த சமூகத்தால் கலைஞன் என்று அழைக்கப்படட்டும் அதை யாரும் தடுக்கவில்லை. எம்மையே எடுத்துக் கொள்வோமே சிறந்த ஆங்கிலப்படங்களை தருபவர்களை கலைஞர்களாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்களிடம் போய் எமது தாயகம் பற்றியும் படையுங்கள் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் விரும்பினால் எமது கோரிக்கைகளை ஏற்றுப் படைக்கலாம் அல்லது விடலாம்..

ஆனால் எம்மத்தியிலேயே வாழ்ந்து கொண்டு எம்முடனோயே உணர்வுகளை பகிர்ந்து கொண்டு எம்மைக் காட்டியே வாழ்ந்து கொண்டு.. எம்மை ஒதுக்கி வைக்கும் போது.. அப்படியானவர்களை எமது கலைஞர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது தானே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

அனைவருக்கும் வணக்கம்

உங்கள் கருத்துகள்

எழுத்தில் நன்றாகத்தான் இருக்கிறது.

நடைமுறையில்தான் அது முடியாதாகி இருக்கிறது.

அது குறித்து

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

அதை விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள்

அல்லது விட்டு விடுங்கள்.............

நான் தேசியமோ என்னமோ என்று சொல்கிறீர்களே

அது பற்றி ஒன்றும் தெரியாதவன்

நீங்கள் செய்யும் செயல் அளவு

பெரிய செயல்களை என்னால் செய்ய முடியாது

அதற்காக மன்னிக்கவும்.

அண்மையில் கூட

தேசியம் பற்றி பேசும் ஒருவர்

தொலைபேசி வழி

கவனம் அண்ணா

உங்கள் பெயரில் இணையதளத்தில்

செய்திகள் போடுகிறீர்கள்

தமிழில் செய்தி வந்தாலே புலிகள் என்று அர்த்தம்

என்று எனக்கு ஒருவித மிரட்டலான அறிவுரை தந்தார்.

ஐரோப்பாவில் கடும் தண்டனை கிடைக்குமாம்? :rolleyes:

நான் சிரித்து விட்டு அவரோடு தனிப்பட்ட விடயங்களை பேசத் தொடங்கினேன்.

1973ல் கொழும்பு மேடைகளில்

என்னை யாரோ

தமிழீழம் குறித்து சிங்களத்தில் பேச வைத்ததாக நினைவு :rolleyes:

தமிழீழம் தொடர்பான தேர்தலாம்

தொண்டமான் செல்லச்சாமி போன்றவர்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இணைந்த போது

உணர்ச்சி வசப்பட்டு மேடையேற வேண்டி வந்தது?

தவறுதான்!

சிங்கப்பூரில் நல்ல வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்து விட்டு

1984ல் தமிழருக்கு விடிவு வேணுமென்று

கண்ணை மூடிக் கொண்டு வந்து விழுந்து

நம்பி வந்தவர்களாலேயே கொல்லப்பட இருந்ததும்

தெரியாமல் செய்த தவறுதான்!

தனிப்பட்ட ஒரு சிலரது எரிச்சல் காரணமாக

இவன் நமக்கு எதிரானவன் என

என்னால் வேலை கிடைக்க காரணமானவனே

சொல்லி இருப்பது தெரியாமல்

நேற்றுவரை அவனோடு சிரித்து பழகியதும்

தவறுதான்!

அதுபோல இங்கும் இருப்பது பெரியதல்லவே?

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு:

கடந்த ஜுன் முதலாம் திகதி

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற

ஒரு விளையாட்டு போட்டியை படம் எடுத்து

செய்தியாக்கப் போனேன்.

இல்லை என்பதோடு ஏகப்பட்ட வாக்கு வாதங்களை

நடத்த வேண்டி வந்தது.

இறுதியில் உங்களுக்கு தெரிந்த யாரராவது பங்கு கொண்டால் எடுங்கள்

மற்றவர்களை எடுக்க வேண்டாம் என்று கட்டுப்பாடு...........

நான் படம் எடுக்கவே செய்தேன்.

படம் எடுக்கவா என்று கேட்டதால் வந்த வினை அது!

பக்கத்தில் நின்ற ஆதரவாளர் ஒருவர் சொன்னார்

விடுங்க அண்ணா என்று.............

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் எனக்கு புரியவில்லை என்றா நினைக்கிறீங்க?

அது குறித்து சற்று நேற்றைய எனது வானேலியிலும்

பேசியே இருக்கிறேன்.

அதை இங்கே கேளுங்கள்:

http://www.radio.ajeevan.com/

புனைப் பெயரில் வந்து தேசியம் பேசும் நீங்கள்

உங்கள் சொந்த பெயரில் வந்து பேசினால்

உங்களை உண்மையான தேசியவாதியாக மதிப்பேன்.

நீங்களும் என்னைப் போல் நிச்சயம் மதிக்கப்படுவீர்கள்!

அல்லல்படும் மக்களுக்கு விடிவு தேவையே தவிர

இப்படியான வசைவுகளை பாடுவோருக்காக

நடிக்க வேண்டிய தேவை யாருக்கும் வரக் கூடாது.

நடப்பது நல்லாய் நடக்கும்!

நம்மவர்களில்

தன்னை விட

ஊருக்கு உபதேசம் செய்பவர்களே மேல்!

எனக்கு இதெல்லாம் தெரியாது!

பிடிக்காது என்றால் தள்ளி நிற்பேன்!

யாருக்கு உதவ வேண்டுமோ

எப்படி உதவ வேண்டுமோ

அது எனக்கு தெரியும்

அது குறித்து நீங்கள் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டாம்.

நன்றி ஐயா!

Edited by AJeevan

வசம்பு அண்ணன்.. நீங்கள் தமிழ் தேசியம் என்பதை அந்நியப்பட்ட ஒன்றாக.. சிங்கள இனத்துக்கு எதிரானதாக.. விடுதலைப்புலிகளின் சொத்தாக நினைக்கிறீங்கள் என்பது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தமிழ் தேசியத்தை உச்சரிப்பதால்.. புலி எதிர்ப்பாளர்களும்.. அதை எதிர்க்கின்றனர் என்பது.. வெளிப்படை உண்மை. அப்படி வெறுப்பது அவர்கள் சார்ந்த இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யக் கூடிய ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தமிழ் தேசியம்.. தமிழீழ விடுதலை என்பது தமிழ் மக்களினது அபிலாசை. அதை விட்டு விலகி ஒரு ஈழத்தமிழன் இருப்பது என்பது இனத்துவப்பற்றற்ற நிலை என்றே கொள்ள வேண்டும்.

படைப்புக்கள் மக்களின் மனவோட்டத்தோடு இயல்புறவில்லை என்றால் அந்தக் கலைஞன் அந்த மக்கள் கூட்டத்தால் நேசிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு அப்பாலாகி விடுகின்றான்.

சிங்கள சினிமாத்துறை எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்ததோ.. அதனால் சிங்கள சினிமாத்துறை தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டதோ.. அப்படியான ஒரு நிலையில் ஈழத் தமிழன் ஒருவன் இருப்பது தமிழர்கள் மன வருந்த வேண்டிய ஒன்று.

தமிழகத்தில் கூட சினிமாவில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்கள் இருந்துள்ளன. பல சினிமாக்கள் ஈழப்போராட்டத்தை பற்றி வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களைக் கொண்டு வந்துள்ளன.

அப்படி இருக்க.. மக்களின் அங்கீகாரத்தால் கலைஞன் என்றாபவன்.. மக்களின் உணர்வுகளோடு பற்றுதல் இன்றி இருப்பதால் அவனை கலைஞன் என்று இனகாட்டுவது சரியானதா..??! கமரா பிடிப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள் என்றாகிடார்கள்.

தமிழ் தேசியம் என்பது.. தமிழீழ விடுதலை என்பது தமிழர்களின் அபிலாசை. அதைவிட்டு தூர விலகி நின்று சிங்கள மொழியாழுகைக்குள் அடிமைப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியில் கலை வளர்ப்பது என்பது இனமானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்..! நிச்சயமாக என்னால் இப்படியான ஒதுங்கி நிற்க அல்லது ஒதுக்கி வைக்க முனையும் படைப்பாளிகளை தமிழன் என்ற வகைக்குள் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. என் நிலலயில் தான் பல தமிழினப் பற்றாளர்கள் இருக்கின்றனர். அதைவிட எமது இன அடையாளமற்ற எத்தனையோ சிறந்த பிற இனக் கலைஞர்களை ஆதரித்துவிட்டு.. படைப்புக்களை ரசித்துவிட்டுப் போகலாம்..! :rolleyes:

நெடுக்கு

முதலில் நான் எழுதியதை நன்றாக வாசியுங்கள் விளங்கா விட்டால் கேளுங்கள். இன்னும் விளங்க வைக்கலாம். சிறு பிள்ளையும் விளங்கக் கூடிய வகையிலேயே விளங்கமாக நான் எழுதியுள்ளேன். நான் நினைக்காதவையெல்லாம் உங்கள் கற்பனையில் எழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இங்கு தாயகப் போராட்டத்தை வைத்து சிலர் செய்யும் லொள்ளைத் தான் நான் எழுதியுள்ளேன். ஒரு கலைஞனின் படைப்பை மக்கள் பார்த்து நிராகரித்தால் அது வேறு விடயம். ஒரு படைப்பின் பொருளைக் கூட விளங்கிக் கொள்ளாது அதனை நிராகரித்தால், அது எவ்வாறு மக்களைச் சென்றடையும். அதனை மக்களைச் சென்றடைய முடியாது தடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நான் மேலே குறிப்பிட்ட ஒரு நாடகாசிரியருக்கு நடந்ததை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா??

***

எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கே எனக்கு தேசியவாதி என்ற சான்றிதழ் எவரும் வழங்கத் தேவையுமில்லை. அதை வழங்கும் தகுதியும் எவருக்குமில்லை.

Edited by இணையவன்
*** சக உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணன்.. நீங்கள் எழுதிய ஒரு குறிப்பிட்ட விடயத்துக்குத்தான் எனது பதில். அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன்.

உங்கள் உதாரணம்.. உண்மையோ பொய்யோ நானறியேன். இப்படி பல குற்றச்சாட்டுக்கள் போலியாகவும் தாங்கள் "பெரியவர்கள்" என்ற தோறணையை ஏற்படுத்தவும் என்று சிலரால் புனையப்பட்டும் இருக்கின்றன.

மக்கள் அங்கீகாரமுள்ள உண்மையான கலைஞன் மக்களால் புகழப்படுவானே தவிர.. தானாக தன்னைப் பற்றிப் புகழமாட்டான் அல்லது ஒரு சிலரின் புகழ்ச்சிக்காக படைப்புக்கள் செய்யமாட்டான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..!

என்னைப் பொறுத்தவரை எமது தாயக விடுதலைப் போராட்டம் பற்றிய படைப்புக்களை செய்யாது ஒரு படைப்பாளி தமிழ் மக்களின் உண்மையான அங்கீகாரம் பெற்ற ஒருவனாக விளங்க முடியும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு எமது தாயக விடுதலைப் போராட்டம் எம் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு விடயம்.

நான் என்னைத் தேசியவாதியாக இனங்காட்டத் தேவையில்லை. நான் தமிழன்.. என் பிறப்பிலிருந்தே அது என்னோடு வருகிறது வசம்பண்ணன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilamutham.net/home/index.php...tlink&id=18

(இப்ப நித்திரைத் கலக்கம் இல்லை. :rolleyes: )

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

  • தொடங்கியவர்

சோழியண்ணன் இப்பதான் பாடலை ஆற அமர இருந்து பாடலைக் கேட்க முடிஞ்சுது. நன்றிகள்.

நேற்று இரவு 1 மணிக்கு இங்கிண உங்களைக் கண்டன் அதுதான். சரியான வெய்யிலா.. ஒரே புளுக்கம். fan போட்டும் வேர்க்குது. நித்திரை வருகுதில்ல.. அதாலதான் உங்களைக் காண வேண்டி வந்திட்டுது. :rolleyes:

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க.. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு படுத்து பழகி அதற்கு முதல் நித்திரையே வருதில்லை.. பிறகு காற்றாடிய சுழலவிட்டு படுத்தால்.. கொஞ்ச நேரத்தால வாற காத்து சுடுகுது.. அதோட போராடிக் கொண்டிருக்க.. யன்னலுக்கால வெளிச்சம் வந்து கண்ணைக் குத்துது.. மகா பெரிய சித்திரவதையை அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்.. :rolleyes:

அஜிவன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்தேன் பதிக்க்கு மேல் ஏற்று கொண்டாலும் மறைமுகமாக நீங்கள் சில நல்ல விடயம் சொல்லி இருகலாம் ஏன் என்றால் உங்களை யாரும் தற்போது கட்டு பாட்டுக்குள் வைத்து இருக்கவில்லை சுயமாக செயற்படுகிறிங்கள், ஆகாவே உங்களால் மனதில் தோன்றியதை சொல்லலாம்.

சொந்த பெயரில் கருத்து எழுதுவதுக்கு என்ன தயக்கம் ? யாருக்குமே தயக்கம் இல்லை ஆனால் சொந்த பெயரில் எல்லத்தையும் எழுத சங்கடம் ஒன்று இருக்கும் அல்லவா?

அதே போல தமிழ் தேசியத்துக்காக ஒரு பெயர் கவிதை பகுதிக்கு ஒரு பெயர் என்று பாவிகலாமா?

அனாலும் உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் என்று தெரியும் அது ஒரு பக்காமக இருகாது 2 பக்கமுமே ...

வினித்

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.

பல தேவைகளுக்காக

பல இடங்களுக்கு போய் வரும் தேவை உண்டு.

அதனால் இந்த இணைப்புடன் யாழில் இருந்து வெளியேறுகிறேன்.

இனி எந்தவொரு காரணம் கொண்டும் இங்கு வரமாட்டேன்.

எனக்கும்

விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு போதும் பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.

அதுபோல

இலங்கை அரசுடனோ அல்லது வேறு நாட்டு அரசுகளோடோ கூட

பிரச்சனை ஏற்பட்டது இல்லை.

ஒரு இயக்கத்தில் இருந்த காலத்தில்

முமுக்கியமான ஒருவரை கடத்திய காலத்தலேயே

எனது சகோதரி ஒருவர் மலேசியாவில் இருந்து அனுப்பிய

பார்சல் ஒன்றை பெற

அடையாறில் இருந்த புலிகளின் காரியாலயத்துக்கு சென்று வந்துள்ளேன்.

அது அப்போதைய தருணத்தில்

எம்மவரை வியக்க வைத்த நிகழ்ச்சி...... :unsure:

அப்போதும் எதுவித பிரச்சனையும் எனக்கு இருந்ததில்லை.

நான் இருந்த இடத்திலிருந்து வெளியேறிய போது

ஒரு சிலரால் மட்டும் எனக்கு தொடர் பிரச்சனைகள் இருந்தன.

அவர்கள் இப்போது உயிரோடு இல்லை.

அது சாதாரணமாக எவருக்கும் வரக் கூடியதே :lol:

அதனால் நான் இங்கு கூட

அந்த நட்புகளை தொடரவுமில்லை

அவர்களுக்கு எதிராக போகவுமில்லை.

வேறு எவருடனும் இணைய விரும்பவும் இல்லை.

இது நான் எடுத்த

சரியான முடிவு என்றே கருதுகிறேன்.

இதை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை.

இங்கு சுவிஸ் வந்த பின்னர்

எனக்கு தெரிந்த நண்பர்களான

அரசியல் தெரியாதவர்களோடு

அரசியல் கதைக்கப் போய் ஏற்பட்ட பிரச்சனைகள்

தமிழருக்கு எதிரானவன் எனும் நிலைப்பாட்டை தோற்றுவித்தது.

கருத்துகளை கருத்துகளால் சந்திப்பதை விட

அவர்களது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத போது

ஒருவனை அழித்து விடுவதிலேயே

கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இது தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறது............... :lol:

தனிப்பட்ட வித்தில் ஏற்படும்

பிரச்சனைகளைக் கூட

தேசிய பிரச்சனையாக்கக் கூடிய

புத்திஜீவிகள் புனைப் பெயர்களில் வலம் வருகிறார்கள்.

இங்கும் இருக்கவே செய்கிறார்கள். :lol:

பல வேளைகளில்

எல்லா இடங்களிலும் பறைசாற்ற முடியாது?

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்

எனக்கும் யாழ்பாணத்துக்கும் என் தந்தை வழி தொடர்புகள் இருந்தாலும்

நான் அங்கு தொடர்ந்து வாழ்ந்ததில்லை.

பல முறை சென்று வந்திருக்கிறேன்.

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் மட்டும்

ஒரு சில மாதங்கள் என் பயிற்சி காலத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

அப்போது ஜெயமான்ன என்ற முகாமையாளருடன் சென்றுள்ளேன்.

(இவர் பின்னர் ஒரு காலத்தில் டெலோவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்)

பின்னர் சிங்கப்பூருக்கு போன பின்

எனக்கும் இலங்கைக்குமான தொடர்பு மிக குறைவானது.

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இவை இனி தேவையில்லை.

அமைதியாக யாழ் களத்தை விட்டு விடைபெறுகிறேன்.

இனி ஒரு போதும்

எந்த ஒரு பெயரிலும்

இங்கே வர மாட்டேன்.

இங்கு

இதுவரை என்னோடு

இணைந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட

அல்லது

கருத்துகளை படித்த அனைவருக்கும்

நன்றி , வணக்கம்!

1983ல் நடந்த இனக் கலவரம்

மனதை பாதித்தது.

அந்த உணர்வு தவறான முடிவுகளை எடுக்க வைத்ததாக

இப்போதும் உணர்கிறேன்.

இல்லாவிடில் இந்த பிரச்சனைகள் எழாது இல்லையா?

இது தவறன புரிதல் அஜிவன் அண்ணா

அது சரி விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையா? அல்லது இங்கு எழுதிய கருத்துகக்ள் விமர்ச்சனைத்தையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்படுகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.