Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்

Featured Replies

உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்:

அன்புடையீர்,

தாயகத்தில் இனவாதிகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னியில் இன்னுமோர் சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தெருநாய்களாக தவிக்கவிடப்பட்டு உள்ளார்கள். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வியாதிக்காரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற துணிவில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு தனது சகல வளங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை உச்சரீதியாக பிரயோகித்து தமிழர் தாயகத்தில் இனஅழிப்பை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று இங்கு செய்தியில் காட்டினார்கள்; ஓர் தாய் வன்னியில் கதறி அழுது தனது கஸ்டங்களை கூறுவதை; ஒவ்வொரு இடம்பெயர்வின்போதும் ஒவ்வொரு பொருட்களாக, சொத்துக்களாக இழந்து இப்போது தன்னிடம் அடகுவைக்க எஞ்சி இருப்பது ஒருசோடி காதணிகளே என்று அவர்கூறி இருந்தார். ஆனாலும்.. இந்த இக்கட்டான நிலமையிலும் அவர் இறுதியாக கூறிய வார்த்தை உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. "ஆக்கிரமிப்பு இராணுவத்தை அவர்கள் வந்தவழியாகவே நாங்கள் பழைய இடத்துக்கு துரத்தி அடித்து கலைப்போம்!" என்று அந்தத்தாய் உறுதியுடன் கூறி இருந்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு தாயக விடுதலைப் போராட்டத்தில் தற்போது இல்லாத நம்பிக்கை, உறுதி தாயகத்தில் வாழ்கின்ற மக்களிடம் காணப்படுவதற்கு காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோருக்கு தாயகத்தில் நடைபெறும் விடயங்கள் வெறும் அன்றாடச் செய்திகளே. இதற்கு நேர் எதிர்மாறாக, தாயகத்தில் வாழும் மக்களிற்கு இது வாழ்வா, சாவா என்கின்ற உயிர்வாழ்விற்கான போராட்டம்.

எப்படியும் வாழலாம் என்று விரும்பிய பல இலட்சம் தமிழர்கள் தென்னிலங்கைக்கும், தென்னிந்தியாவிற்கும், உலகில் வெவ்வேறு நாடுகளிற்கும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமது இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்தார்கள். எனினும், இப்படித்தான் வாழவேண்டும் என்று விரும்பிய தன்மானம் உள்ள சில இலட்சம் தமிழர்கள் தாயகத்தில் வாழ்வா, சாவா எனப்படுகின்ற விடுதலைப் போராட்டத்தில் தம்மை நேரடிப் பங்காளிகளாக இணைத்துக்கொண்டார்கள்.

விடுதலைப் போராட்டங்கள் என்பவை எப்போதும் ஓர் இனம் அல்லது பகுதி நசுக்கப்படும்போதே எழுகின்றன. ஒவ்வொரு புரட்சியின் பின்னாலும் ஓர் நியாயபூர்வமான காரணம் இருக்கின்றது. சமமான வசதிகள், வாய்ப்புக்கள், சுதந்திரமான வாழ்வு என்பன கிடைக்கும் இடங்களில், சந்தர்ப்பங்களில் எப்போதும் அதிக அளவில் ஒற்றுமையே நிலவும். அங்கு பிணக்குகள் தோன்றினாலும் அவை குறுகிய காலத்தில் மறைந்துவிடும். இந்தவகையில், தாயகத்தில் விடுதலைப்போராட்டத்தை சிறீ லங்கா இனவாத அரசே ஆரம்பித்து வைத்தது.

"நோய்நாடி நோய் முதல்நாடி

வாய்நாடி வாய்ப்பச் செயல்!"

என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஓர் பிரச்சனை ஏற்பட்டால் அதன் மூல காரணத்தை கண்டு அறிந்து, அதன்பின்னர் அப்பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பிரச்சனைக்கான மூலகாரணம் கண்டு அறியப்படாதவரை பிரச்சனை தீரப்போவதில்லை. சிறீ லங்கா இனவாத அரசு காலங்காலமாக ஒரே தவறை திரும்பவும், திரும்பவும் செய்துகொண்டு இருக்கின்றது. இன்றும் தாயகத்தில் இதுவே நடைபெறுகின்றது.

பல்வேறுவிதமான அடக்குமுறைகளை பிரயோகிப்பதன் மூலம் தமிழினத்தை அடிபணியவைத்து தமக்குகீழ் அடிமைகளாக வாழவைக்க சிங்கள பேரினவாதிகள் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றார்கள். பேரினவாதிகளின் இந்த அடக்குமுறை இன்று மிகப்பாரிய இன அழிப்பாக தாயகத்தில் விசுவரூபம் எடுத்து இருக்கின்றது. உலக வல்லரசுகளினதும், அவற்றின் முகவர்களினதும் ஆசியுடன் 'பயங்கரவாத ஒழிப்பு' என்கின்ற முகத்திரையுடன் சிறீ லங்கா இனவாத அரசு 'தமிழின அழிப்பில்' இறங்கி இருக்கின்றது.

'நேற்றைய பயங்கரவாதி நாளைய சுதந்திர தியாகி' என்று ஓர் பொன்மொழி இருக்கின்றது. நெல்சன் மண்டேலோ தொடக்கம் மகாத்மா காந்திவரை அனைத்து சுதந்திர தியாகிகளுமே வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவ்வாறே தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் மீதும் நுனிப்புல் மேயும் அரசியல் ஞானிகளினால் - இந்த அஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுகளினால் பயங்கர வாத இலச்சினை பொறிக்கப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் அதர்மம் மேலோங்கும். ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும் என்று கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் சொல்லி இருக்கின்றார். அளவுக்கு மிஞ்சிய வலியினை அனுபவித்த பின்னரே ஓர் தாய் குழந்தையை பிரசவிக்கின்றாள். தாயகத்தில் தற்போது மக்கள்படுகின்ற வேதனைகள் எல்லாம் ஓர் பிரசவத்திற்கான அறிகுறியே தவிர தாய்நாட்டின் மரணத்துக்கான எச்சரிக்கை மணி அல்ல. ஒவ்வொரு தடவையும் சிறீ லங்கா பேரினவாத அரசு ஏற்படுத்துகின்ற தடைக்கற்கள் தாயக மக்களுக்கு படிக்கற்களாகவே அமைந்துவிடுகின்றன.

ஓர் உதாரணத்தை கூறினால், 1983ம் ஆண்டு இனக்கலவரம், அதன்பின்ரான இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாக பல இலட்சம் தமிழ்மக்கள் அகதிகளாக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தனர். சிங்கள இனவாதிகளும் சிறீ லங்கா நாட்டைவிட்டு தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் ஓடித்தப்புவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இப்போது இடம்பெயர்ந்து உலகின் ஒவ்வொரு மூளையிலும் ஒதுங்கியுள்ள இந்த அகதிமக்களின் வளங்கள் தாயகபோராட்டத்திற்கு மிகுந்த பலத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீ லங்கா இனவாத அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக அவர்கள் தமிழ்மக்களிற்கு வைத்த பொறிக்கிடங்கினுள் சிங்கள இனவாதிகளே மீளமுடியாதவாறு அகப்பட்டுக்கொண்டார்கள். அதாவது ஒவ்வொரு தீமைக்குப்பின்னாலும் ஓர் நன்மை இருக்கின்றது. குறுகியகால நோக்கில் ஓர் விடயம் வேதனையை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் அதேவிடயம் பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்.

தாயகத்தில் வாழ்வியல் ஆதாரம்தேடி நியாயபூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டிய தார்மீக பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ்மக்களிற்கும் உள்ளது. எமது நாளாந்த வாழ்வை எடுத்துக்கொண்டால் சில கருமங்களை ஆற்ற ஒருவர் மட்டும் போதும். சில கருமங்களை ஆற்ற இருவர் போதும். சில கருமங்களை ஆற்ற பலர் வேண்டும். நீங்கள் முத்துக்குளிப்பதுபற்றி அறிந்து இருப்பீர்கள். ஒருவர் தனியாகச் சென்று முத்துக்குளிக்க முடியாது. ஆகக்குறைந்தது கடலின் அடியினுள் ஒருவரும், கடலின் மேற்பரப்பில் இன்னொருவரும் பாதுகாப்பான முத்துக்குளித்தலுக்கு தேவை. தாயக விடுதலைப் போராட்டமும் இவ்வாறானதே! பல இலட்சம் தமிழ் மக்கள் கைகொடுத்து இழுக்கவேண்டிய தேர் இது!

ஓர் கடிகாரத்தில் பெரியமுள் சுற்றினால்தான் சிறியமுள் சுற்றும். பெரிய முள் தனது நகர்வை நிறுத்திவிட்டால் சிறிய முள்மூலம் தன்னிச்சையாக அசையமுடியாது. தாயக மக்கள் சிறியமுள் என்றால் நாங்கள் பெரியமுள்...! புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் தடுமாற்றம் இல்லாத தொடர்ச்சியான வேலைத்திட்டங்களே தாயகத்தில் உள்ள மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டங்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்யும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வினைத்திறனுடன் பணியாற்றவேண்டிய ஓர் முக்கியதேவை எப்போதும் இருந்துவருகின்றது. இங்குள்ள தமிழ்மக்கள் தமது தாயக உறவுகளுக்காய் சர்வதேசத்தின்முன் ஓங்கிக்குரல் கொடுக்கும்போது சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள்கூட தமது இன அழிப்பு இயந்திரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றார்கள் அல்லது அதன் வேகத்தை சற்று குறைக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் வாய்மூடி மெளனிகளாக - மெளனசாமிகளாக - வாயினுள் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு - உம்மாண்டிகளாக இருக்கும்போது சர்வதேசம் எமது இந்த மெளனத்தை சிறீ லங்கா தீவிரவாத அரசு செய்கின்ற தாயக மக்களின் இன அழிப்பிற்கு நாங்கள் கொடுக்கும் அங்கீகாரமாக எடுத்துக்கொள்கின்றது.

எனவே, சிறீ லங்கா பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தினமும் நடாத்துகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களிற்கு உலகெங்கனும் வாழும் தமிழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு விதமான போராட்டங்களை செய்யவேண்டிய தேவைகள் இருக்கின்றன. 'வாழ்வா அல்லது சாவா' என்ற வாழ்வியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயக மக்கள் தினம்தினம் படும் வேதனைகள் கண்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற பல்லாயிரம் தமிழர்கள் இரத்தக்கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்.. இவர்களால் சரியான முறையில் தமது உள்ளக் குமுறல்களை, எதிர்ப்புக்களை சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படுத்த முடியவில்லை.

இதற்கான காரணங்கள் எவை? வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதா? இல்லையே..! எம்மவர்களிடம் வளங்கள் தாராளமாகவே இருக்கின்றன. அப்படியாயின் பயம் காரணமா? இல்லையே..! பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் இவற்றை நம்மவர்கள் தாராளமாகவே பயன்படுத்தி வருகின்றார்கள். அப்படியாயின் சரியான தலமை ஒன்று இல்லாது இருப்பது காரணமா? அப்படியும் இருக்கமுடியாது. ஏனெனில்... சிறந்த தலமைகளின் வழிகாட்டல்களுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை பலநூறு அமைப்புக்களும், ஊடகங்களும் செய்து வருகின்றன. அப்படியாயின் இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற மக்கள் தமது உணர்வுகளை பொத்திப்பொத்தி வைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடியது என்ன? உங்களுக்கு விடை தெரிகின்றதா?

விடை இலகுவானது. எம்மவர்களிடையே காணப்படும் ஒற்றுமை இன்மையே - எமக்குள் நாம் பிணக்குப்பட்டுக்கொண்டு இருப்பதே வினைத்திறனான முறையில் எம்மவர்கள் செயல் ஆற்றுவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது.

இது இங்கு கட்டுரை ஆசிரியனாகிய நான் உருவாக்கிய எதேச்சையான ஓர் விடை அல்ல. பலருடன் தாயகமக்கள் தற்போதுபடும் அவலங்கள் பற்றி பேசும்போது அவர்கள் இதைத்தான் சொல்லி கவலைப்பட்டுக் கொள்கின்றார்கள். 'நம்மவர்கள் - நம்மவர் அமைப்புக்கள், சங்கங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொதுவான சில விசயங்களிலாவது ஒற்றுமையாக எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து காரியம் ஆற்ற மாட்டார்களா? அப்படியான ஓர் பொற்காலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஏற்படாதா?' என்கின்ற ஆதங்கத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

கூட்டாளிகள் பிரிந்தால் எதிரிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள். ஒற்றுமையின் பலம் பற்றி பலநூறு கதைகளை நாங்கள் எல்லோரும் சிறுவயதில் வாசித்து, கேட்டு, அறிந்து இருக்கின்றோம். விதம், விதமாக... வகை, வகையான ஒற்றுமையின் பலத்தை வலியுறுத்தி எத்தனை எத்தனை கதைகளை எங்களுக்கு கூறினார்கள்...! ஆனால்.. எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் தான்...!

எம்மவர் ஒருவர் அல்லது எம்மவர் அமைப்பு ஒன்று ஆக்கபூர்வமான ஓர் செயற்திட்டத்தை ஆரம்பித்தால் அவருடன் அல்லது அந்த அமைப்புடன் கருத்து முரண்பாடு உள்ளவர் அல்லது ஏற்கனவே பிணக்குப்பட்டவர் குறிப்பிட்ட அந்த ஆக்கபூர்வமான செயற்திட்டத்தை நேரடியாக எதிர்ப்பார் அல்லது மறைமுகமாக குழப்புவார் அல்லது ஆதரவு கொடுக்காமல் விலகி இருப்பார். இவ்வாறு இவர் ஆக்கபூர்வமான ஓர் செயலுக்கு ஆதரவு கொடுக்காமல் இருக்கும்போது இவர்சார்ந்த சமூகவட்டம் - இவர் தலமையின் பின்னால் செல்கின்ற மக்கள் கூட்டமும் குறிப்பிட்ட ஆக்கபூர்வமான செயற்திட்டத்துக்கு ஆதரவு கொடுக்காமல் விலகிச் செல்கின்றார்கள்.

இப்படியான நிலமை பலநூறு அமைப்புக் களினிடையேயும், பலநூறு தனிநபர் களினிடையேயும் விளங்கும்போது ஆயிரக்கணக்கில் ஒட்டுமொத்தமாக சிறிய சிறிய விசயங்களில் தமிழர் சமூக வட்டங்களிடையே பிரிவினைகள் தோன்றுகின்றன. மனித வலுக்கள் வீண்விரயம் செய்யப்படுகின்றன. வினைத்திறனான முறையில் ஓர் செயற்திட்டத்தை நம்மவர்கள் செய்வதற்கு இப்படியான பிரச்சனை மிகுந்த சவாலாக இருக்கின்றது.

கடைசியில் நடைபெறுவது என்ன? கடிகாரத்தின் பெரிய முள் தடுமாற்றம் கொண்டு நிலைமாறுகின்றது. தனது வேகத்தை குறைக்கின்றது. இது கடிகாரத்தின் சிறிய முள்ளின் அசைவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இறுதியில்....? தாயக மக்களின் நியாயபூர்வமான போராட்டம் இரும்புக்கரங்களினால் நசித்து நெரிக்கப்படுகின்றது. திட்டமிட்ட இனஅழிப்பு வெற்றிபெறுகின்றது. சிறீ லங்கா இனவாத அரசிற்கு தேவையானது இதுவேதான். தமிழர்களின் ஒற்றுமையே தமது இருப்புக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்பதை சிறீ லங்கா இனவாத அரசு மாத்திரம் அல்ல, தமிழினத்தை உலக அளவில் ஒடுக்க நினைக்கின்ற பல்வேறு புல்லுருவிகளும் மிகநன்றாகவே அறிந்து வைத்து இருக்கின்றார்கள். அப்படியாயின்...

நாம் செய்யக்கூடியது என்ன? எம்மவர்களிடையே ஒற்றுமையை கட்டி எழுப்புவது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை குழப்புபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? எம்மவர்களிடையே ஒற்றுமையை சிதைப்பவர்கள் பற்றி எச்சரிக்கை கொள்வது எப்படி? உலகத் தமிழர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணக்கூடிய வகையில்' சம்மேளனங்கள் ஏதாவது வைத்து இருக்கின்றார்களா? உலகில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் தம்மிடையே 'பலமான ஒற்றுமையை பேணி' ஏதாவது சம்மேளனங்கள் வைத்து இருக்கின்றார்களா?

ஏற்கனவே இருக்கும் சம்மேளனங்கள் வினைத்திறனானவையா? வினைத்திறன் உடையவையாக இருந்தால் ஏன் தமிழரிடையே ஒற்றுமையீனம் நிலவுகின்றது? நம்மவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க சிறு சிறு அமைப்புக்கள் பல பலநூறுசேர்ந்து உருவாகும் சம்மேளனங்கள் எப்படியான வேலைத்திட்டங்களை செய்ய முடியும்? சிறிய சிறிய அமைப்புக்களின் தலைவர்கள், தனிநபர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க தயாராக இருக்கின்றார்களா? நிரந்தரமான கைகோர்ப்புக்களாக இல்லாவிட்டாலும் தற்காலிக கைகோர்ப்புக்களுக்காவது நம்மவர்கள் தயாராக இருக்கின்றார்களா?

இவை எல்லாம் நம்மவரிடையே நடக்கக்கூடிய விசயமா? அல்லது ஓர் பகல் கனவா? இது வெறும் பகல் கனவாக இருந்தால் ஒன்றை மட்டுமே நிச்சயம் எதிர்வு கூறமுடியும். நடைமுறையில் நடக்கவேண்டிய இப்படியான விடயங்கள் தமிழருக்கு கனவாகினால் அது சிறீ லங்காவில் சிங்கள பேரினவாத சாம்ராச்சியத்தின் வெற்றிக்கும், தமிழர் தாயகத்தில் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிப்புக்குமே கட்டியம் கூறும்...!

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்த மடலின் எழுத்துருவுக்கு மாத்திரமே நான் சொந்தக்காரன். ஆனால்.. இங்கு கூறப்பட்டுள்ள, வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், சிந்தனைகள், உள்ளக் குமுறல்கள், மற்றும் உணர்வுகளின் சொந்தக்காரர்கள் உங்களைச்சுற்றி வியாபித்துள்ள சாதாரண தமிழ் மக்களே! எனவே நீங்கள் ஓர் ஊடகவியலாளர்களாகவோ, ஊடகங்களுடன் தொடர்புபட்டவர்களாகவோ அல்லாதுவிடின் ஊர்ச்சங்கங்கள், தமிழர் பொதுநல அமைப்புக்கள் சார்ந்தவர்களாகவோ இருந்தால் வாதங்களை தவிர்த்து இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளிற்கான உங்கள் பதில்களை விரைவில் நடைமுறை செயற்பாடுகளாக உலகெங்கும் வாழும் சாதாரண தமிழ் மக்களிடம் காண்பித்துவிடுங்கள்.

Edited by முரளி

நிதர்சனமான வரிகள்....

ஆகக் குறைந்தது ஒரு பொது வேலைத்திட்டத்தினை வரித்துக் கொண்டு எமக்கிடையே இருக்கும் பிளவுகளை பின் தள்ளி இணைதல் அவசியம். கனடாவை எடுத்துக் கொண்டால், ஏராளமான அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு பொது வேலைத்திட்டத்தினை வரைந்து அதற்கேற்றால் போல் நடைமுறை சாத்தியமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க முடியாதா? அதே போல் இங்கிலாந்து மற்றும் புலம் பெயர் தமிழர்கள் நிறைய இருக்கும் நாடுகளில் உள்ளவர்கள் இப்படியான ஒன்றை யோசிக்க மாட்டார்களா?

நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா கனடாவில் இருக்கிறீர்கள் ?????

இதோ நேற்று கனடா கந்தசாமி கோவிலில் நடந்தது

Wednesday, January 14, 2009

தமிழர் திருநாளில் உறுதி கூறுவோம் எம் உறவுகளைக் காப்போம்

இலட்சிய வெற்றிவரை ஓயோம் கனடியத் தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

தை பிறந்துள்ளது. உழவர் திருநாளாம் பொங்கல் மட்டுமல்ல, உலகில் பழைமை வாய்ந்த தொன்மையான தமிழினத்தின் புத்தாண்டும் கூட. ஆனால் பொங்கிப் பிரவகித்து, கூடிக் குதூதுகலிக்க எம்மால் முடியவில்லையே! ஏம் உறவுகள் ஈழத்தில் வாழ்வுக்காக ஒரு குருதியாற்றையே கடந்து கொண்டிருக்கிறார்களே! எம்மால் எப்படி முடியும்? உலகின் எட்டுக்கோடி தமிழினமும் தம் தொப்பூழ் கொடி உறவின் நிலை கண்டு தவித்து நிற்கிறதே! தை பிறந்தால் தமிழர் வாழ்வில் வழிபிறக்கும் என நம்பிக்கை கொள்பவர்கள் நாம். ஏம் உறவுகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றுவோம்.

அவர்களின் பேரவலத்திற்கு மருந்தாவோம். அதற்காக விரைந்து அனைத்தையும் செய்வோம் என உறுதி கொள்வோம். ஈழத்தமிழன் கேட்பது பிச்சையல்ல. உரிமை வாழ்வை. அவனது உண்மைக்கான போராட்டம், சத்தியத்திற்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். அது வென்றேயாக வேண்டும். அது தான் உலக வரலாறு. தமிழன் விடயத்தில் இதனை உலகம் எதிர்த்தாலும், மிதித்தாலும், எட்டு கோடி தமிழர் நாம் இருக்கின்றோம். துணை நிற்போம்.உலகில் புதிய சர்வாதிகார ஆட்சியின் நாயகனே! சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு அழிப்பின் கொடுன்கோலனே, ராசபக்ச, உன்னை உன் கூட்டத்தையும், உங்கள் நோக்கையும் தமிழினம் முழுமையாக அறியும்.

உன்னைப் பார்த்து, உன் வார்த்தைகளை நம்பி உலகம் மயங்கலாம், ஆனால் தேர்ந்து தெளிந்த தமிழினம், ஈழத்தில் மட்டுமல்ல உலகின் எட்டுத் திசைகளிலும் தெளிவாகவே உள்ளது.உன் கொடிய தமிழின அழிப்புப்போரை நிறுத்து, ஈழத்தமிழர்களின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை ஏற்று இலங்கைத்தீவில் அமைதி வாழ்விற்கு அனுமதி என உலகத்தமிழினம் இறுதியாக மீண்டும் வேண்டுகிறது.ஏம் தொப்புழ் கொடி உறவுகளே! கடந்த சில மாதங்களாக தாய் தமிழகத்திலும், தமிழர் வாழும் தேசங்களிலெல்லாம் நீங்கள் எட்டுக்கோடி பேரும் ஈழத்தமிழ் மக்களை நோக்கிக் காட்டும் ஒன்றுபட்ட எழுச்சி கனடிய தமிழ் மக்களாகிய எமக்கு நிறைவு தருகின்றது. எனினும், எம்முடைய முயற்சி முழுமையான வெற்றிபெற நாம் மேலும் இரண்டு மடங்கு கடுமையாக உழைக்கவேண்டும் என்பதே ஈழத்தில் எமது உறவுகளின் பேரவலம் சொல்லும் இன்றைய செய்தி.

தமிழர் தலைவர்களே! முதல்வர் கலைஞரே, அறிக்கைகளும் கவிதைகளும் ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை மாறாக மேலும் பேரவலத்தை அனுமதித்துள்ளது என்பதே இன்றைய யதார்த்தம். மேலும் தாமதியோம். ஓன்றுபட்ட இனமாக, ஓர்மம் கொண்ட மக்களாக காலத்தின் தேவைகருதிய காத்திரமான முடிவுகளை தமிழுக்காக, தமிழருக்காக உடன் எடுப்போம், விரைந்து செயற்படுவோம் என உறுதி கொள்வோம். செயலாற்றுவோம்.மனித குலத்தின் சீரிய வாழ்வே எமது விருப்பு எனக்கூறி விலங்குகளுக்கே சட்டம்போட்டுக் காக்கும் சர்வ உலகமே, உனக்கு ஈழத்தமிழினத்தின் அழிப்பில் மட்டும் ஏன் இந்தப் பெருமகிழ்ச்சி? கூடவே கொலையாளியுடன் கைகோத்து படுகொலைக்கு வேறு உடந்கை.

அதிலும் காந்திதேசத்தில் இருந்துமா இந்தத் துரோகம்? வேண்டாம் இந்த இரட்டை வேடம்;. ஈழத்தமிழினத்தின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட உரிமைகளை உடன் அங்கீகரியுங்கள். கொடுங்கோல் சிங்கள ஆட்சியைப் புறம் தள்ளுங்கள்.எட்டுக்கோடி தொப்புழ் கொடி உறவுகளே! தமிழர் இல்லாத தேசம் இல்லை இன்று. ஆனால் தமிழருக்கொன்றொரு தேசம் இல்லாமையால் தெரு நாய்களிலும் கேவலமாகியுள்ளது எம் வாழ்வு. வேண்டாம் இவ்இழிநிலை. ஈழத்தில் எம் உறவுகளைக் காப்போம். அவர் தம் வாழ்வியலை நிமிர்த்துவோம். உறுதியான தமிழர் தேசமாக நிலைநிறுத்துவோம். எம் இனத்திற்காக வாழ்வையே துறக்கும் வீரமா மறவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

அவர்தம் கரங்களைப்பற்றி உறுதிகொள்வோம். கனடியத் தமிழ் மக்கள் நாம,; உங்கள் அனைவருடனும் இணைந்து இன்றைய தமிழர் திருநாளில் உறுதிகொள்கின்றோம். இலட்சிய வெற்றிவரை ஓயோம் நாம்.அறிக்கையில் இணைந்து கொள்ளும் கனடிய தமிழர் அமைப்புக்கள்:

1. துன்னாலை கரவை மக்கள் ஒன்றியம்

2. கனடியத் தமிழர் மையம்

3. வட்டுக்கோட்டை மூளாய் வீதி ஒன்றியம்

4. சுழிபுரம் கிராம ஒன்றியம்

5. மதங்க சூலாமணி கலைக்கோயில்

6. கனடிய தமிழர் விளையாட்டுத்துறை

7. சதங்கை நத்தனாலயம்

8. மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்

9. நெல்லியடி மத்திய மகாவித்தியாலம் பழைய மாணவர் சங்கம்

10. உருத்திரபுரம் உதவும் கரங்கள்

11. தமிழ் இளையோர் அமைப்பு

12. வதிரி மக்கள் மன்றம்

13. இன்டோ கனடா டான்ஸ் அகடமி

14. அபிநயாலய நாட்டியாலயம்

15. நாட்டியா அபிநய சமப்பண கலைக்கூடம்

16. பருத்தித்துறை ஒன்றியம்

17. வரணி ஒன்றியம் இ

18. ராமநாதபுரம் மக்கள் ஒன்றியம்

19. முரசுமோட்டை-கண்டாவளை மக்கள் ஒன்றியம்

20. கெருடாவில் மக்கள் ஒன்றியம்

21. மட்டக்களப்பு நலன்புரிச்சங்கம்

22. தமிழர் தகவல் நிலையம்

23. கனேடிய வதிரி மக்கள் மன்றம்

24. உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்

25. டூறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம்

26. மட்டுவில் வளர்மதி இளைஞர் ஒன்றியம்

27. யோர்க் கலைப்பண்பாட்டு கழகம்

28. அனலைதீவு கலாச்சார ஒன்றியம்

29. திருகோணமலை நலன்புரிச்சங்கம்

30. கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் - ரொரன்ரோ

31. கனடா மாதகல் நலன்புரிச்சங்கம்

32. டூறம் தமிழ் ஒன்றியம் நல்லூர்

33. மேம்பாட்டுச்சபை

34. வேலணை மத்திய மகாவித்தியாலயம்

35. நயானாதீவு கனடய அபிவிருத்திச் சங்கம்

36. கரவெட்டி ஒன்றியம்

37. கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி

38. காவியாலய நடனப்பள்ளி

39. சிதம்பர கலைமன்ற நாட்டியாலயா

40. மண்டைதீவு மக்கள் ஒன்றியம்

41. கனடா காரை கலாச்சார மன்றம்

42. மயிலிட்டி மக்கள் மன்றம்

43. வல்வெட்டி மக்கள் ஒன்றியம்

44. ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்

45. பீல் கலைப்பண்பாட்டு கழகம்

46. கனடா சாவகச்சேரி நட்புறவுச் சங்கம்

47. கொக்குவில் இந்துக்கல்லூரி

48. பழைய மாணவர் சங்கம்

49. பூநகரி சமூக அபிவிருத்தி ஒன்றியம்

50. நெல்லியடி மக்கள் ஒன்றியம்

51. சண்டிலிப்பாய் ஐக்கிய சங்கம்

52. வட்டக்கச்சி ஒன்றியம்

54. தொண்டைமானாறு மக்கள் ஒன்றியம்

55. அளவெட்டி மக்கள் ஒன்றியம்

56. சென் கென்றீஸ் பமைய மாணவர் சங்கம் - இளவாலை

57. தென்மராட்சி சேவை நிறுவனம்

58. இராமநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

59. ஸ்காபுரோ கலைப்பண்பாட்டு கழகம்

60. கைதடி மக்கள் நலன்புரிக்கழகம் - கனடா

61. நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா

62. உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம்

63. சிலம்பொலி நாட்டியாலயம்

64. பாலவிமல நர்த்தனலயம்

65. நித்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி

66. கைதடி பாடசாலை முன்னேற்றச் சங்கம்

67. துணுக்காய் பாண்டியன்குளம் மக்கள் ஒன்றியம்

68. கரம்பன் சமூகநாத வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

69. அரியாலை ஒன்றியம் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம்

70. கோண்டாவில் கலைமகள் ஒன்றியம்

71. காட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்

72. சரவணை சேவா மன்றம்

73. பாடுமீன்களின் பொழுது

74. கனடிய தமிழ் இளையோர் முன்னேற்ற நிலையம்

75. தென் கோப்பாய் ஐக்கிய மன்றம்

76. கனடா தமிழ் கலைஞர்கள் சங்கம்

77. இணுவில் திருவூர் ஒன்றியம்

78. திலக நர்த்தனாலயம்

79. ரொரன்ரோ மத்தி கலைப்பண்பாட்டு கழகம்

80. வர்ண இசை நுண்கலைகூடம்

81. தென்மராட்சி சேவை நிறுவனம்

82. கனடிய தமிழ் மகளீர் மாமன்றம்

83. கனடா தமிழீழ மாலுமிகள் சங்கம்

84. கோண்டாவில் குமர கோட்டம்

85. முல்லை மாவட்ட மக்கள் ஒன்றியம்

86. அல்லாய் மக்கள் ஒன்றியம்

87. தரதாலய நாட்டியப்பள்ளி

88. குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா

89. மட்டுவில் நலன்புரிச்சங்கம்

90. கனடிய புத்தூர் வாழ் மக்கள்

91. ஆனைக்கோட்டை அடைக்கல மாதா கோவில் பங்கு மக்கள் ஒன்றியம்

மேலும் பல அமைப்புக்கள் மேலதிக விபரம் விரைவில்....

பதிவு

மன்னிக்கவும் பதிவு இணையத்தளத்தினை பார்க்காது விட்டு பல காலம் ஆகிவிட்டது...

எனது பதிலுக்கு பின்னராவது அதனை இங்கே வந்து தந்து பேருதவி புரிந்தமைக்கு என் நன்றி

நீங்கள் இருவரும் கனடாவில் இருக்கிறீர்கள் ஆனால் நேற்று அனைத்து சங்கங்களுக்கும் ஒன்று கூடி ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் உங்களுக்கு தெரியவில்லை

நீங்கள் பக்கத்தில் நடக்கும் ஒன்று கூடலில் பங்கெடுக்கவில்லை ஏன் நடந்ததே தெரியாது

மற்றவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்காமல் முதலில் உங்கள் சார்ந்த அமைப்புகளினூடாக பங்களிப்பு செய்யுங்கள்

ஏன் என்றால் ஏதோ ஒரு அமைப்பில் நீங்களும் உள்ளடக்கம்

36. கரவெட்டி ஒன்றியம்

:lol:

நீங்கள் இருவரும் கனடாவில் இருக்கிறீர்கள் ஆனால் நேற்று அனைத்து சங்கங்களுக்கும் ஒன்று கூடி ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் உங்களுக்கு தெரியவில்லை

நீங்கள் பக்கத்தில் நடக்கும் ஒன்று கூடலில் பங்கெடுக்கவில்லை ஏன் நடந்ததே தெரியாது

மற்றவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்காமல் முதலில் உங்கள் சார்ந்த அமைப்புகளினூடாக பங்களிப்பு செய்யுங்கள்

ஏன் என்றால் ஏதோ ஒரு அமைப்பில் நீங்களும் உள்ளடக்கம்

1. கனடா கந்தசாமி கோவிலில் இப்படி ஒன்று நடந்தது என்பது பற்று இன்று தமிழச்சியின் பதிவினை பார்த்த பின் தான் அறிந்து கொண்டேன். தமிழச்சு நேற்றே பிரசுரித்து இருந்தாவாயினும் சுகவீனம் காரணமாக பார்க்க முடியவில்லை

2. எந்த அமைப்பிலும் நான் இல்லை, அத்துடன் இங்குள்ள எந்த அமைப்பிலும் நான் என்னை என்றுமே இணைந்து கொள்வதாய் உத்தேசமும் இல்லை. ஆனால் அவை நடாத்தும் சகல நிகழ்வுகளிலும் இங்கு (கனடா) வந்து ஒன்ரரை வருடங்களில் எவ்வாறு நான் கலந்து கொண்டேனோ அவ்வாறு நிச்சயம் கலந்து கொள்வேன், அதே போல் என் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்

3. நான் மேலே எழுதி இருந்தவாறு, ஏதாவது பொது வேலைத்திட்டம் தீர்மானிக்கப் பட்டிருப்பின் அதனை தந்தால் சந்தோசம்

Edited by நிழலி

உண்மைக்குக் காலம் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா கனடாவில் இருக்கிறீர்கள் ???? :lol::(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தொடர்ந்து வரும் காலங்களுக்கு பல கவனயீர்ப்பு போராட்ங்கள், மகளீர் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்பு, ஊர் அமைப்புக்களின் கூட்டமைப்பு, மற்றும் ஊடகங்களாலும் முன்னேடுக்கப்படவிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு இதமான செய்தி

நல்லதொரு எடுத்துக்காட்டான முயற்சி

இன்னும் சில அமைப்புக்கள் இருக்கின்றன

அவையும் இணையவேண்டும்

http://www.pathivu.com/news/1294/34//d,view.aspx

நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா கனடாவில் இருக்கிறீர்கள் ?

கனடா என்பது ஒரு குக்கிராமம். அதால எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சுடும். :unsure:

இப்பவாவது எமது செய்திகளை தனக்கு வேண்டியவருக்கு மட்டும் அனுப்பவதை விடுத்து

உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்ப முயலுங்கள்.

அனைத்து என்பதில் அனைத்து தமிழ் ஊடகங்களுக்குமாவது?

நாம் நம்மைத் தவிர வேறு எவரையும் அனுமதிப்பதில்லை. இனியாவது மாறுதல் ஒன்றைக் கொண்டு வாருங்கள்.

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டியவர்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.

சிறீலங்கா அரசு தமது செய்திகளையும் பரப்புரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கியுள்ளது.

கவனத்தில் எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கனடாவில் தொடர்ந்து வரும் காலங்களுக்கு பல கவனயீர்ப்பு போராட்ங்கள், மகளீர் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்பு, ஊர் அமைப்புக்களின் கூட்டமைப்பு, மற்றும் ஊடகங்களாலும் முன்னேடுக்கப்படவிருக்கின்ற
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை அனுப்பினாலும் போட மறுப்பவர்களை என்னவெண்டு சொல்லுறது. நீங்க என்னதான் செய்திதந்தாலும் நாங்க போடுறதத்தான் போடுவம். தமிழனுக்கு பிரயோசனமானதுகள் வெளிய விடமாட்டம் எண்டு அடம்பிடிக்கிறவைக்கு ஒரு வழியச் சொல்லுங்க

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் அதுபற்றி திரும்பவும் சொல்லவேணும். தாயகத்தின்ட பெயரில குளிர்காயுறத்துக்குத்தான் இந்த இணைய நண்பர் வட்டம் இருக்கா. அவைட கூட்டங்களில மாவீரர் கானம் இசைப்பினம். ஆனா ஒருதன்ட உயிர்ப்பிரச்சினை பற்றி ஒரு விசயம் நடந்தா அது பற்றி வெளிய தங்கட நண்பர் வட்டத்துக்கயே சொல்லமாட்டினமாம். இப்பிடியானவையள் வட்டமா இருந்துதான் என்ன சதுரமா இருந்துதான் என்ன. :)

:(:D:o

முரளி மிக நல்ல ஆலோசனைகளை காலத்தின் தேவை ஏற்ப வைத்துள்ளீர்கள்..

சரியான திட்டமிடலும் செயல்படுத்தலும் ஒற்றுமையும் சேர்ந்தால் மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்கும், தடைகளை உடைத்து அவ நம்பிக்கைகளை போக்கும்.. ஆகவே எல்லோரும் புதிய அத்தியாயத்தை தொடங்குங்கள்... எம்தாயக மக்கள், தாயக மண், அதனைக்காக்க போரடுபவர்கள் ஆகிய மூன்றும் எமது முக்கிய இலக்காகவும் தாயக மக்களுக்கு மண்ணிற்கு ஏற்படும் அழிவுகள், இழப்புகள் உலகின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு செல்வதன் மூலம் வரும் தற்கால, வருங்கால பாதிப்புக்களை குறைக்கவோ நிறுத்தவோ முடியும்.. சும்மா இருத்தல்,செய்திகளை மட்டும் தெரிந்துவிட்டு இயலாமையாக இருப்பது மிகத்தவறு... எம்மக்கள் வெளினாடுகளில் இருக்கும் மக்களை நம்பி இருக்கிறார்கள்.. நாம் உரிய வேலைகளை செயல்படுத்த வேண்டும் உடனடியாக...

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்,

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! இங்கு இந்தமடல் பொதுவாகவே எழுதப்பட்டு உள்ளது. கனடாக்காரருக்கு தனிப்பட எழுதப்பட்ட மடல் அல்ல. உலக என்பது தவிர கனடா எனும் சொல்லே இங்கு பயன்படுத்தப்படவில்லை. ஓர் பொதுவான சிந்தனை வெளிப்பாடாக எழுதப்பட்டு உள்ளது. மடலை பொறுமையாக முழுதுமாக வாசித்தவர்கள் மடலில் கூறப்பட்டுள்ள சிந்தனைகளை உள்வாங்கி இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். போய்சேரவேண்டிய இடங்களில் செய்தி போய்ச்சேர்ந்தால் சரி. எங்களுக்குள் இதுக்க பிணக்குப்பட என்ன இருக்கிது? ஒற்றுமையாக இருந்து தாயக மக்களின் அவலம் போக்க எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்திற்கெதிராக சர்வதேச சக்திகள் பயங்கரவாதம் என்ற நேர் கோட்டில் ஒருங்கிணைந்துள்ளன இந்த மாபெரும் சக்திக்கெதிராக எமது உரிமைப்போரை வென்றெடுப்பதற்கு; சிங்களம் எவ்வாறு பயங்கரவாதத்தை எமக்கெதிரான ஆயுதமாக எடுத்தார்களோ அதே போல் நாம் மனித உரிமையை ஆயுதமாக எடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

பொதுவாக பயங்கரவாதம் பொது மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பவர்களாகவே உலகம் பார்க்கின்றது,அவ்வகையில் பார்த்தால் எவ்வாறு விடுதலைப்புலிகளை இந்த பட்டியலில் உள்ளடடக்கினார்கள்?எவ்வாறு சிங்களத்தை மறந்துவிட்டார்கள்?

அமெரிக்கா ஈராக் எனும் நாட்டுக்கெதிராகப் படையெடுப்பதற்கு அந்த நாட்டை பயங்கரவாத நாடாகப்பிரச்சாரம் செய்தார்கள் அமெரிக்க மக்களிடம் கூட அதனைப்பிரச்சாரம் செய்வதற்கு விளம்பர நிறுவனங்களின் உதவிகளை நாடினார்களாம்.

இப்பொது எமது போராட்டங்கள் அதிகமாக அரசியல் மட்டங்களிலே நடைபெறுகிறது அத்துடன் மட்டும் நில்லாமல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மக்களிற்கும். எமது போராட்டம் அதிகமாக எடுத்து செல்லப்படவேண்டும்.

அதற்கு இலத்திரணியல் ஊடகங்களை பயன்படுத்தலாம் உதாரண்மக அமெரிக்க நாடுகளில் 75 வீதமானவர்கள் மின்வலை பாவிக்கிறார்கள்,ஐரோப்பாவில் அது 48 வீதமாக உள்ளது.வெகுஜன தொடர்பு ஊடக்ங்களான பத்திரிகைகள் தொலைக்காட்சி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்

சிங்களத்தின் மனித உரிமை மீறல்களை இதன் மூலமும் பிரச்சாரம் செய்யலாம் என நினைக்கிறேன்.

யாழ்கள உறவுகள் எமதுபோராட்டத்தை தர்க்கரீதியான நியாத்தை மின்வலையில் ஏற்றி சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட மக்களை சென்றடைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாமா?

இந்த திரியை ஆரம்பித்த முரளி அண்ணாவே அதனை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கெடுத்தாலும் கனடாக்காரரை வம்புக்கு இழுக்கவெண்டே ஒரு கூட்டம் இங்கே இருக்கின்றது.

ஜயா மற்றவர்கள் மீது விரலை நீட்டாது நான் என்ன செய்கிறேன், செய்தேன், செய்யவேண்டும் என்று சிந்தித்தோமென்றால் எமது இலட்சியத்தை இன்னும் துரிதமாக்கலாம் என்பது எனது கருத்து.

அதாவது தமிழர்களின் இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை மற்றவர்களை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கும் நேரமல்ல இது.

உடனடியாக எங்களால் முடிந்த செயலில் இறங்குவோம்.

எங்களது வேண்டா வாதங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்போம்.

இணைவோம் தமிழராய்!

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பேதங்களை மறவுங்கள் தாயக மக்களுக்காய் ஒன்றுபடுங்கள் தாயகத்தில் அல்லல்படும் உறவுகளை 'எனது" அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி என்று நினையுங்கள் தயவு செய்து பேதங்களை மறந்து காலத்தின் கட்டாயத்தின் பேரில் இணையுங்கள்!

தாயக மக்களின் மனித அவலங்களை சிறு பிரசுரங்களாக வெளியிடுங்கள், கொத்தணிக் குண்டுகளின் படங்களை வெளியிடுங்கள், பொது இடங்களின் தாக்குதல் அழிவு படங்களை திகதி குறிப்பிட்டு வெளியிடுங்கள். மக்களின் இன்னல்களை வெளியிடுங்கள்.

பிரித்தானியா வாழ் தாயகஉறவுகள் பிரித்தானியா பிரதமர், வெளியுறவு அமைச்சர் அவர்களின் கருத்துக்களில் பல மாற்றங்கள் தென்படுகின்றன அவர்களை அணுகுங்கள் எமது மக்களின் இன்னல்களை ஆதாரங்களுடன் சமர்ப்பியுங்கள்

அனைத்து தாயக உறவுகளுக்கும் என் பணிவான வேண்டுகோள் மேலே நான் கூறியது அறிவுரை அல்ல...

தாயகத்தில் இருந்து ஓரு உறவு 'புலிக்குரல்'

நீங்கள் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா கனடாவில் இருக்கிறீர்கள் ?????

இதோ நேற்று கனடா கந்தசாமி கோவிலில் நடந்தது

Wednesday, January 14, 2009

தமிழர் திருநாளில் உறுதி கூறுவோம் எம் உறவுகளைக் காப்போம்

இலட்சிய வெற்றிவரை ஓயோம் கனடியத் தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள அவசர அறிக்கை

தை பிறந்துள்ளது. உழவர் திருநாளாம் பொங்கல் மட்டுமல்ல, உலகில் பழைமை வாய்ந்த தொன்மையான தமிழினத்தின் புத்தாண்டும் கூட. ஆனால் பொங்கிப் பிரவகித்து, கூடிக் குதூதுகலிக்க எம்மால் முடியவில்லையே! ஏம் உறவுகள் ஈழத்தில் வாழ்வுக்காக ஒரு குருதியாற்றையே கடந்து கொண்டிருக்கிறார்களே! எம்மால் எப்படி முடியும்? உலகின் எட்டுக்கோடி தமிழினமும் தம் தொப்பூழ் கொடி உறவின் நிலை கண்டு தவித்து நிற்கிறதே! தை பிறந்தால் தமிழர் வாழ்வில் வழிபிறக்கும் என நம்பிக்கை கொள்பவர்கள் நாம். ஏம் உறவுகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றுவோம்.

அவர்களின் பேரவலத்திற்கு மருந்தாவோம். அதற்காக விரைந்து அனைத்தையும் செய்வோம் என உறுதி கொள்வோம். ஈழத்தமிழன் கேட்பது பிச்சையல்ல. உரிமை வாழ்வை. அவனது உண்மைக்கான போராட்டம், சத்தியத்திற்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். அது வென்றேயாக வேண்டும். அது தான் உலக வரலாறு. தமிழன் விடயத்தில் இதனை உலகம் எதிர்த்தாலும், மிதித்தாலும், எட்டு கோடி தமிழர் நாம் இருக்கின்றோம். துணை நிற்போம்.உலகில் புதிய சர்வாதிகார ஆட்சியின் நாயகனே! சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பு அழிப்பின் கொடுன்கோலனே, ராசபக்ச, உன்னை உன் கூட்டத்தையும், உங்கள் நோக்கையும் தமிழினம் முழுமையாக அறியும்.

உன்னைப் பார்த்து, உன் வார்த்தைகளை நம்பி உலகம் மயங்கலாம், ஆனால் தேர்ந்து தெளிந்த தமிழினம், ஈழத்தில் மட்டுமல்ல உலகின் எட்டுத் திசைகளிலும் தெளிவாகவே உள்ளது.உன் கொடிய தமிழின அழிப்புப்போரை நிறுத்து, ஈழத்தமிழர்களின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை ஏற்று இலங்கைத்தீவில் அமைதி வாழ்விற்கு அனுமதி என உலகத்தமிழினம் இறுதியாக மீண்டும் வேண்டுகிறது.ஏம் தொப்புழ் கொடி உறவுகளே! கடந்த சில மாதங்களாக தாய் தமிழகத்திலும், தமிழர் வாழும் தேசங்களிலெல்லாம் நீங்கள் எட்டுக்கோடி பேரும் ஈழத்தமிழ் மக்களை நோக்கிக் காட்டும் ஒன்றுபட்ட எழுச்சி கனடிய தமிழ் மக்களாகிய எமக்கு நிறைவு தருகின்றது. எனினும், எம்முடைய முயற்சி முழுமையான வெற்றிபெற நாம் மேலும் இரண்டு மடங்கு கடுமையாக உழைக்கவேண்டும் என்பதே ஈழத்தில் எமது உறவுகளின் பேரவலம் சொல்லும் இன்றைய செய்தி.

தமிழர் தலைவர்களே! முதல்வர் கலைஞரே, அறிக்கைகளும் கவிதைகளும் ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை மாறாக மேலும் பேரவலத்தை அனுமதித்துள்ளது என்பதே இன்றைய யதார்த்தம். மேலும் தாமதியோம். ஓன்றுபட்ட இனமாக, ஓர்மம் கொண்ட மக்களாக காலத்தின் தேவைகருதிய காத்திரமான முடிவுகளை தமிழுக்காக, தமிழருக்காக உடன் எடுப்போம், விரைந்து செயற்படுவோம் என உறுதி கொள்வோம். செயலாற்றுவோம்.மனித குலத்தின் சீரிய வாழ்வே எமது விருப்பு எனக்கூறி விலங்குகளுக்கே சட்டம்போட்டுக் காக்கும் சர்வ உலகமே, உனக்கு ஈழத்தமிழினத்தின் அழிப்பில் மட்டும் ஏன் இந்தப் பெருமகிழ்ச்சி? கூடவே கொலையாளியுடன் கைகோத்து படுகொலைக்கு வேறு உடந்கை.

அதிலும் காந்திதேசத்தில் இருந்துமா இந்தத் துரோகம்? வேண்டாம் இந்த இரட்டை வேடம்;. ஈழத்தமிழினத்தின் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட உரிமைகளை உடன் அங்கீகரியுங்கள். கொடுங்கோல் சிங்கள ஆட்சியைப் புறம் தள்ளுங்கள்.எட்டுக்கோடி தொப்புழ் கொடி உறவுகளே! தமிழர் இல்லாத தேசம் இல்லை இன்று. ஆனால் தமிழருக்கொன்றொரு தேசம் இல்லாமையால் தெரு நாய்களிலும் கேவலமாகியுள்ளது எம் வாழ்வு. வேண்டாம் இவ்இழிநிலை. ஈழத்தில் எம் உறவுகளைக் காப்போம். அவர் தம் வாழ்வியலை நிமிர்த்துவோம். உறுதியான தமிழர் தேசமாக நிலைநிறுத்துவோம். எம் இனத்திற்காக வாழ்வையே துறக்கும் வீரமா மறவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.

அவர்தம் கரங்களைப்பற்றி உறுதிகொள்வோம். கனடியத் தமிழ் மக்கள் நாம,; உங்கள் அனைவருடனும் இணைந்து இன்றைய தமிழர் திருநாளில் உறுதிகொள்கின்றோம். இலட்சிய வெற்றிவரை ஓயோம் நாம்.அறிக்கையில் இணைந்து கொள்ளும் கனடிய தமிழர் அமைப்புக்கள்:

1. துன்னாலை கரவை மக்கள் ஒன்றியம்

2. கனடியத் தமிழர் மையம்

3. வட்டுக்கோட்டை மூளாய் வீதி ஒன்றியம்

4. சுழிபுரம் கிராம ஒன்றியம்

5. மதங்க சூலாமணி கலைக்கோயில்

6. கனடிய தமிழர் விளையாட்டுத்துறை

7. சதங்கை நத்தனாலயம்

8. மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்

9. நெல்லியடி மத்திய மகாவித்தியாலம் பழைய மாணவர் சங்கம்

10. உருத்திரபுரம் உதவும் கரங்கள்

11. தமிழ் இளையோர் அமைப்பு

12. வதிரி மக்கள் மன்றம்

13. இன்டோ கனடா டான்ஸ் அகடமி

14. அபிநயாலய நாட்டியாலயம்

15. நாட்டியா அபிநய சமப்பண கலைக்கூடம்

16. பருத்தித்துறை ஒன்றியம்

17. வரணி ஒன்றியம் இ

18. ராமநாதபுரம் மக்கள் ஒன்றியம்

19. முரசுமோட்டை-கண்டாவளை மக்கள் ஒன்றியம்

20. கெருடாவில் மக்கள் ஒன்றியம்

21. மட்டக்களப்பு நலன்புரிச்சங்கம்

22. தமிழர் தகவல் நிலையம்

23. கனேடிய வதிரி மக்கள் மன்றம்

24. உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்

25. டூறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம்

26. மட்டுவில் வளர்மதி இளைஞர் ஒன்றியம்

27. யோர்க் கலைப்பண்பாட்டு கழகம்

28. அனலைதீவு கலாச்சார ஒன்றியம்

29. திருகோணமலை நலன்புரிச்சங்கம்

30. கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் - ரொரன்ரோ

31. கனடா மாதகல் நலன்புரிச்சங்கம்

32. டூறம் தமிழ் ஒன்றியம் நல்லூர்

33. மேம்பாட்டுச்சபை

34. வேலணை மத்திய மகாவித்தியாலயம்

35. நயானாதீவு கனடய அபிவிருத்திச் சங்கம்

36. கரவெட்டி ஒன்றியம்

37. கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி

38. காவியாலய நடனப்பள்ளி

39. சிதம்பர கலைமன்ற நாட்டியாலயா

40. மண்டைதீவு மக்கள் ஒன்றியம்

41. கனடா காரை கலாச்சார மன்றம்

42. மயிலிட்டி மக்கள் மன்றம்

43. வல்வெட்டி மக்கள் ஒன்றியம்

44. ஊரெழு மக்கள் ஒருங்கிணைப்புக் கழகம்

45. பீல் கலைப்பண்பாட்டு கழகம்

46. கனடா சாவகச்சேரி நட்புறவுச் சங்கம்

47. கொக்குவில் இந்துக்கல்லூரி

48. பழைய மாணவர் சங்கம்

49. பூநகரி சமூக அபிவிருத்தி ஒன்றியம்

50. நெல்லியடி மக்கள் ஒன்றியம்

51. சண்டிலிப்பாய் ஐக்கிய சங்கம்

52. வட்டக்கச்சி ஒன்றியம்

54. தொண்டைமானாறு மக்கள் ஒன்றியம்

55. அளவெட்டி மக்கள் ஒன்றியம்

56. சென் கென்றீஸ் பமைய மாணவர் சங்கம் - இளவாலை

57. தென்மராட்சி சேவை நிறுவனம்

58. இராமநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

59. ஸ்காபுரோ கலைப்பண்பாட்டு கழகம்

60. கைதடி மக்கள் நலன்புரிக்கழகம் - கனடா

61. நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா

62. உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம்

63. சிலம்பொலி நாட்டியாலயம்

64. பாலவிமல நர்த்தனலயம்

65. நித்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி

66. கைதடி பாடசாலை முன்னேற்றச் சங்கம்

67. துணுக்காய் பாண்டியன்குளம் மக்கள் ஒன்றியம்

68. கரம்பன் சமூகநாத வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

69. அரியாலை ஒன்றியம் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம்

70. கோண்டாவில் கலைமகள் ஒன்றியம்

71. காட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்

72. சரவணை சேவா மன்றம்

73. பாடுமீன்களின் பொழுது

74. கனடிய தமிழ் இளையோர் முன்னேற்ற நிலையம்

75. தென் கோப்பாய் ஐக்கிய மன்றம்

76. கனடா தமிழ் கலைஞர்கள் சங்கம்

77. இணுவில் திருவூர் ஒன்றியம்

78. திலக நர்த்தனாலயம்

79. ரொரன்ரோ மத்தி கலைப்பண்பாட்டு கழகம்

80. வர்ண இசை நுண்கலைகூடம்

81. தென்மராட்சி சேவை நிறுவனம்

82. கனடிய தமிழ் மகளீர் மாமன்றம்

83. கனடா தமிழீழ மாலுமிகள் சங்கம்

84. கோண்டாவில் குமர கோட்டம்

85. முல்லை மாவட்ட மக்கள் ஒன்றியம்

86. அல்லாய் மக்கள் ஒன்றியம்

87. தரதாலய நாட்டியப்பள்ளி

88. குருநகர் சமூக சேவை அமைப்பு - கனடா

89. மட்டுவில் நலன்புரிச்சங்கம்

90. கனடிய புத்தூர் வாழ் மக்கள்

91. ஆனைக்கோட்டை அடைக்கல மாதா கோவில் பங்கு மக்கள் ஒன்றியம்

மேலும் பல அமைப்புக்கள் மேலதிக விபரம் விரைவில்....

பதிவு

அய்யா தமிழ் வொய்ஸ் கனடாவில ஒருவர் இருவர் இல்லை எத்தினைபேர் சங்கம் சங்கமா வெள்ளி பாக்கினம்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.