Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயகத்தின் பொருண்மியத்தை கட்டி எழுப்பி உரிமை வெல்ல முயல்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(வேறொரு தலைப்பிற்கு பதிலாக எழுதப்பட்ட கருத்தாயினும் தாயகத்தின் இன்றைய தேவை கருதி இங்கு தனித்தலைப்பில் இணைத்திருக்கிறோம். இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள் நிலைப்பாடுகள்.. இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள் நிறைகள்.. அவற்றை எவ்வாறு சீர்செய்வது.. எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.)

தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.

புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்குக்கிழக்கு எங்கனும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும். பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும்.

தமிழர்கள் தமிழர் பிராந்தியங்களின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு தமிழர் தேசத்தின் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.

கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி சிங்கள ஆதிக்கத்திற்கும் எதிரான எமது அரசியல் விடுதலைக்கான குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.

தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் சிங்கள ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து இந்திய சீன முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது தேசத்தின் உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை அடுத்த நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் அழிவோடு ஐரோப்பா எப்படி எழுச்சி கண்டதோ அப்படிக்கு நாமும் எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

சிங்கள ஆதிக்க சக்திகளும் இந்திய சீன ஆதிக்க சக்திகளும் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது அரசியல் உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.

ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது தேசத்தின் வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச் செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது சிங்கள ஆதிக்கத்தில் இருந்து நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.

எமக்கான நவீன துறைமுகங்கள்.. விமான நிலையங்கள்.. வைத்தியசாலைகள்.. பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது தேசம் எங்கனும் நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.

வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.

வெறுமனவே தமிழீழம் அமையும்.. அப்போது மட்டுமே ஊருக்குப் போக வேண்டும் கட்டுமானம் கட்ட வேண்டும் என்றிருப்பதும் நன்றல்ல. அதேபோன்று ஏதோ கொலிடேக்குப் போனம் இடம்பார்த்தம் விடீயோ எடுத்தம் என்ற நிலையும் இல்லாமல் போக வேண்டும்.

பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் எனிப் போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது. இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.

கள்ளக்காட் போட்ட தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. அது இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசை அரசியல் ரீதியில் தமிழர்களின் தேவையைச் சொல்லிக் கொண்டிருக்க நிறுவிக்கொண்டு தாயகத்தை எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். சிங்கள ஆதிக்கம் மற்றும் இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது. தமிழீழம் வரும் வரை காத்திராமல் நாம் இன்றே செயற்பட வேண்டும்.

தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப்பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கு ஒரு நம்பகமா பலமான கட்டமைப்பு வேண்டும் ,இல்லாவிடில் இதை அமுல் படுத்த முடியாது,தனிநபர்கள் இதில் முதலீடு செய்யும் பொழுது அது தனிநபர் லாபத்திற்குதான் போகும் அதாவது சுயநலத்துடன் தான் செயற்படுவார்கள்.பொதுநலத்துடன் செயற்படக்கூடிய மனிதர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

முன்பு புலிகள் இருந்தார்கள்....... அவர்களின் அரசியல் பிரிவினர் இன்று உயிருடன் இருந்துஇருந்தால் நீங்கள் கூறியவைகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியிருக்கலாம் ....எமது துரதிஷ்டம் அவர்களையும் அழித்துவிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோல் சென்ரர் திறக்கப் போவதாக ரேடியோவில விளம்பரம் போகுது. இதுவும் பொருண்மியத்தை கட்டி எழுப்புமோ அல்லது உழைப்பைச் சுரண்டுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஏற்கனவே இது பற்றி சுகன்,வொல்கனொ என்பவர்கள் எழுதியுள்ளார்கள்...எல்லோருக்கும் எமது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்பது ஆசை தான் ஆனால் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் இது சாத்தியமா...கல்வி சம்மந்தமான முதலீடு என்பது கொஞ்சம் பரவாயில்லை எப்படியோ இலங்கை அரசுக்கு வருமானம் போனாலும் முன்னேறப் போவது எம் மாணவர்...ஆனால் ஏனைய துறைகளில் முதலீடு என்பது இலங்கை அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்காதா....இதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்தால் நாம் இங்கு புறக்கணிப்பு செய்வது தேவையற்றது அல்லவா...நாம் ஒரு பலமான நிலைக்கு வராமல் இது எல்லாம் சாத்தியம் அற்றது என்பது என் கருத்து....உங்கள் கருத்தையும் எழுதுங்கள்...நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்து,

சிங்களத்தின் பொருளாதாரத்தை வளர்காமல் தமிழர்களது பொருளாதாரத்தை வளர்க்கவேண்டும்.

புறக்கணி சிறீலங்கா கொள்கைக்கு பங்கம் வராமல் பார்கவேண்டும்.

எமது உறவினர் தவிர்த்து மற்றவர்களையும் பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.

வெளிநாட்டவர் அதிகம் இருக்கும் யாழ்பாணத்தை மட்டும் உயர்த்தாமல், போராளிகளை அதிகம் தந்த மட்டக்களப்பு மக்களையும் பொருளாதார ரீதியில் உயர்த பாடு பட வேண்டும்.

சடுதியாக பெரும் பணத்தை அங்கே கொண்டு போய் போட்டு, தமிழர்புனர்வாழ்வுகழத்தின் பணம் முடக்கபட்ட நிலையை அடைய கூடாது.

நேசக்கரம் உதவி போன்று உதவி செய்யலாம் லாபம் வராமல் எவ்வளவு காலத்துக்கு மக்கள் பங்களிப்பு செய்வார்கள்.

அவர்களது பங்களிப்புக்கான ஒரு சிறிய லாபத்தை கொடுத்து அவர்களது மற்றய முதலீடுகளையும் இதற்குள் ஈர்க வேண்டும்.

பெரும் லாபம் வந்தால் அதை யார் அடைவது, முத்லீட்டாளர்களுக்கு பங்காக பிரித்து கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழர்களது பங்குமார்கட் ஆரம்பிக்கபடவேண்டும்.

இதை எந்த அமைப்பு செய்யும், அதற்காக நாம் எவ்வளவு காலம் காத்து இருக்க வேண்டும்.

யாரும் செய்ய மாட்டார்கள் நாம் செய்யவேண்டும், குறிப்பாக நான் செய்ய வேண்டும்.

என்னில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எங்கள் ஊரில் ஒரு போறூட் என்று ஒரு நிறுவனம் இருந்தது, நோர்வேயினது, பெரும் பணத்தை கொண்டு வந்து அங்கே போட்டு, எமது ஊரவருக்கு சிறு சிறு தொகைபணத்தை கடணாக கொடுத்து சுயதொழில்களை ஆரம்பித்து வைத்தார்கள், அதற்கான சிறிய வட்டியையும் அ்றவிட்டார்கள். அவர்கள் கொடுத்த பணம் எமது மக்களிடம் இல்லாதது ஆனால் அவர்கள் திருப்பி மாதா மாதம் கொடுத பணமும் வட்டியும், கொடுக்ககூடிய தொகை. ஈற்றில் அவர்களது வருமானத்தை கொண்டு எமது ஊரில் நிலமும் வாங்கி இரண்டு மாடி அலுவலகத்தையும் திறந்தார்கள். அவர்களும் வளர்ந்தார்கள் எமது மக்களும் பொருளாதாரத்தில் முன்னேறினார்கள். இ்றிதியில் போரில் எல்லாம் அழிந்து விட்டது.

அதே முறையில் நாம் ஆரம்பிக்க வேண்டும்.

போரிலே எல்லாவற்றையும் இழந்தாலும் இங்கே பொருளாதார வளம் அழியவில்லை.

தங்கள் தங்கள் ஊரில் கிராமிய வங்கிகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

ஓவ்வொருவரும் குறைந்தது 1000 யூரோகளை பங்களிக்க வேண்டும், கிராமியமட்டத்தில் வங்கிகளை ஆரம்பிக்க வேண்டும் அந்த வங்கிகளுக்கு அந்த கிராமங்களின் பேரையே வைக்கலாம்.

கிராமங்கள் சேர்ந்து நகர வங்கியை ஆரம்பிக்க வேண்டும்.

நகரங்கள் சேர்ந்து மாவட்ட வங்கிகளை ஆரம்பிக்க வேண்டும்.

மாவட்டங்கள் சேர்ந்து தமிழர் வங்கியை ஆரம்பிக்க வேண்டும்.

யாழ் மாவட்ட பெரும் நிதியை தமிழர் வங்கி மூலமாக மட்டகளப்பு போண்ற வங்கிகளுக்கு நகர்த்தி, கிராமிய வங்கிகள் ஊடாக அந்த மக்களின் பொருளாதாரத்தையும் வளர்த்து எடுக்க முடியும்.

பங்காளர்களுக்கு அவர்களது வட்டி வீதத்தை மின் அஞ்சல் மூலமாக மாதா மாதம் அனுப்புவதன் மூலம் அவர்களது பிற வங்கிகளின் சேமிப்பையும் தமிழர் வங்கிக்குள் ஈர்த்து கொள்ளலாம்,

பொருளாதார உதவியை பெற்ற மக்கள் அவற்றை இழக்க நேரிட்டால் அவர்களது பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்ப காப்புறிதி திட்டங்களை வங்கிகள் மூலமே உருவாக்கலாம்.

இதன்மூலம் வேறு சிங்கள வங்கிகள் எமது கிராமத்துக்குள் நுளைவதை தடுக்கலாம், வங்கிகளின் பங்கு மார்கட்டுகளையும் உருவாகலாம்.

இதன் சாதக பாதக கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன.

"எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு" அய்யன் வள்ளுவன்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து வேறு விடையத்தை உள்ளடக்கியது. ஆனால் புதிய இடுகையிலும் பார்க்க இவ்விடுகையுடன் கருத்தைத் தெரிவிப்பதே நல்லம் என நினை;க்கிறேன்.

வலிகாமப் பகுதி சிறு விவசாயத்திற்கே உகந்தது, ஆனால் அங்கு விவசாயத்தில் ஈடுபடுபவர்கட்கு நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய அறிவுவளத்தை கொடுக்ககூடிய நிறுவனங்கள் எதுவும் அவர்கள் மத்தியில் இல்லை. அதன்காரணமாக இராசாயன உரங்களை விளைநிலங்களில் இட்டு மண்ணைக் காலப்போக்கில் மலட்டுத்தன்மையடைய வைக்கும் ஒரு கைங்கர்யம் காலாகாலமாகவே றடைபெற்று வருகின்றது. இதைவிட நீர்முகாமைத்துவம் பற்றிய, அதாவது விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் தண்ணீரை எப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி எதுவிதமான தெளிவும் அவர்களிடம் இல்லை. இதன்காரணமாக காலப்போக்கில் குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இனிமேல் நான் கூறவருவதே மிகவும் முக்கியம், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் புன்னாலைக் கட்டுவன் வடக்குச்சந்திக்கும் தெற்குச்சந்திக்கும் இடைப்பட்ட பகுதிலில் இருக்கும் விவசாய நிலத்தின் மத்தியில் தற்போது பெரும்தொகை முதலீட்டில் ஐஸ் பக்டரி ஒன்றை நிறுவுவதற்கு ஒரு தொழிலதிபர் பொருமளவு காணியைக் கொள்வனவுசெய்துள்ளார். ஆரம்பித்துத் தொழிற்படப்போகும் நிறுவனத்திற்கான ஒரே மூலப்பொருள் நீர்மட்டுமே அதை அவர் பெற்றுக்கொள்ள வேறெங்கும் செல்லப்போவதில்லை ஆழ்கிணறுகள் அமைத்து அங்கேயே நிலத்தடியில் உறிஞசி எடுக்கப்போகிறார்கள், இதனால் காலப்போக்கில் அப்பிரதேசத்தின் நிலத்தடி நீரது தன்மை மறுபடும் ஆபத்தை அப்பகுதியில் வாழ்பவர்கள் எதிர்நோக்குவார்கள். ஆகவே தயவுசெய்து, யாழ இணையத்தள வாசகர்கள் யாராவது அப்பகுதியில் தொடர்புடையோராகவிருந்தால் தயவு செயது அத்தொழிற்சாலை அவ்விடத்தில் அமையாதிருக்க தற்போது அங்க வாழ்வோரை இதுவிடையத்தில் கரிசனையெடுக்கச் செய்யவும்.

மேலும் எமது தேசத்தை வளமாக் முதலீடுகளை நாம் செய்தல் வோண்டுமென்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை; ஆனால் புலம்பெயர் தேசத்திலிருந்து நாம் எதுவித திட்டமும் போடமுடியாது விருப்பமிருந்தால் புலத்திற்குப் போய் அங்கு முதலீடுகளில் ஈடுபடக்கூடிய துறைகளைப்பற்றி நாம் ஆராயவேண்டும் குறிப்பாக ஆரம்பத்தில் பரீடசை முறையில் பனம்பொருட்களை புலமபெயர் தேசங்களுக்கு நாம் நேரடியாகவே ஏற்றுமதிசெய்யக்கூடிய வாய்ப்பக்கள் அதிகமிருக்கின்றது. காரணம் அது முதலீடு அதிகமாகத் தேவைப்படாத விடையம். மற்றும் இங்கிருப்பவைகளைப்போல் வெதுப்பகங்களை நாம் புலத்தில் நிறுவலாம். காரணம் எதிர்காலத்தில் புலமபெயர் தமிழர்கள் அதிகமாகப் பயணம்செய்கின்ற வாய்ப்பக்கள் அதிகம் மற்றும் அவ்கட்கேற்றது போல் வதிவிட வசதிகளையும் இங்கிருந்தே ஏற்படுத்திக் கொடுக்கலாம் அதற்கம் ஒரு காரணம் இருக்கின்றது கடந்தகாலங்களில் புலமபெயர் தமிழர்களில் அனேகர் தங்கள் சொத்துக்களை வநதவிலை;கு வித்துப்போட்டு இப்போ ஊருக்குப் போய் எங்க தங்கிறது எனக்கேட்கினம் ஆகால் அவர்கட்குத் தக்கமாதிரி புலத்தில் வதிவிடங்கள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. சந்தர்ப்பம் கிடைக்குமபோதெல்லாம் நான் எந்தப்பிரச்சனை என்றாலும் எனது மண்ணிற்கு போய்வருவது வழக்கம் காரணம் எனது மண்ணின் வாசம் எப்போதும் எனது நாசியில் ஒட்டியிருக்க வேண்டுமென்பதால். அவ்வேளைகளில் நாங்கள் வாழந்த கழைய வாழக்கையில் ஒரளவையாவது அனுபவித்திடல்வோண்டுமென்பதுpல் கவனமாகவிருப்போன். அதேபோல் அனேகருக்கு அவ்விருப்பம் இருக்கலாம் அதனை நிறைவேற்றுவதைப்போல் சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்கலாம். அனேகர் தமது பிள்ளைகளை தங்கள் பிறந்த மண் இதுவென அறிமுகம் செய்து வைப்பதில்லை இதுவே நாம் செய்கின்ற தவறு தமிழுழம் கிடைத்தவுடன்தான் நாம் ஊருக்குப்போவோமென இருந்தால் எதுவம் உருப்படியாக நடைபெறாது. யாழில் இணையத்தில் ஓரிருவர் சேர்ந்தாலே பல இதில் கூறிய பலவிடையங்களைச் சாதிக்கலாம் அதற்கு உதாரணம் தூயா மற்றும் சயந்தன் ஆகியோர் சேர்ந்து வடலி புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தது. எத்தனையே பேருக்கு ஊருக்குப்போய், வாய்க்கால் வரப்பினில் ஓடும் தண்ணீரில் குளித்து ஆட்டுக்கறிப்பங்கெடுத்து ஆறஅமர இருந்து சிரட்டைக்குள்ப் போட்டு நக்கிச்சாப்பிடவும் ஒடியல்கூள் காய்ச்சி ஒன்றுகூடிக் குடிக்கவும் ஆசை இருக்கும் அவை நியாயமானவையே அவ்வாசைகளை நிறைவேத்தி வைப்பதனால் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தையம் நாம் ஏற்படுத்தலாமே? முதலில் சிறிய முதலீடு அதன்பின்பே படிப்படியான வளர்ச்சி. ஆரபிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

" தாயகத்தின் பொருண்மியத்தைக் கட்டியெழுப்பி உரிமையை வெல்வோம் " என்ற நெடுக்காலபோவான் அவர்களது கருத்தோடு நெருங்கிநிற்கும் விடயமாக இருப்பதால் இதனை இணைத்துள்ளேன். இவற்றை அலசுவதூடாக ஒரு சரியான, தகமை கொண்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான மையமொன்றினை நிறுவுதல் காலத்தின் தேவையாகிறது. விவாதிப்பதும் விவேகத்துடன் அடியெடுத்து வைப்பதும் அவசியமானது. ஏனெனில் நாம் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டுள்ளோம். இதுபோன்ற நகர்வுகளை சிங்களம் ஒடுக்கவே முனையும். இதற்கு மனித உரிமைபேசும் மேற்குக் கிழக்குப் பொருண்மியக் கூட்டணிகளும் துணைபோகும். தொலைநோக்குடனான திட்டமிடலும் செயலாக்கமும் தேவை. இது பெரும்பாலும் தமிழர்கள் உணர்ந்து கொண்டுள்ள விடயமுமாகும். இதற்கான மேலதிக மதிப்பீடுகளை தமிழர்கள் வாழும் நாடுகள் தழுவிய மட்டத்தில் மேற்கொண்டு ஒரு அணியில் இணைத்து ஒரு பெரும் நிறுவனமாக பரிணமிக்கச் செய்வோமாயின் காலத்திற்கேற்ற விதத்தில் நகர்ந்து ஒரு உரிய இடத்தைப் பிடிக்கலாம். இதனூடாக தமிழினத்தினது பொருண்மிய பலத்தினூடாக எம்மையும் இவ்வுலகைத் திரும்பிப்பார்க்க வைக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67441

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈசன் தொழில்நுட்ப பக்கத்திற்கு பக்கத்தில் இதை பொருளாதார தளமாக வைக்க வேண்டும். தமிழ் ஈழம் சமூக, பொருளாதார, சுற்றுசூழல் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவனவன் காந்தத்தில டிரெயின் விடுறான், எங்கட ஊரில இன்னும் தண்டவாளம் இல்லை. ஆனால் இதுவே ஒரு விதத்தில் சிறந்த நிலை கூட. நாங்கள் இப்போது உலகில் உள்ள அத்தனை சிறந்த விடயங்களையும் எங்களது உறவுகளிடம் இருந்து பெற்று ஒரு முன்மாதிரி நாட்டை கட்டியெழுப்பலாம்.

பொருளாதரத்திட்கு அதுவும் நமது ஈழத்திற்கு மிகவும் தேவையானது தெருக்கள். இங்கே நான் படித்த ஒரு சுவாரிசியமான தகவல். அந்த இரசிய பொருளாதார அறிஞ்சரின் பெயர் மறந்து விட்டது. கேள்வி: நாம் பொருளாதரத்தை கட்டி எழுப்ப என்ன செய்யவேண்டும்? பதில்: தெருக்களை போடுங்கள். கேள்வி: பின் என்ன செய்யவேண்டும்? பதில்: இன்னும் தெருக்களை கட்டுங்கள். கேள்வி: அதன் பின்? பதில்: இன்னும் தெருக்களை கட்டுங்கள்.

சீன பழமொழி நேற்று படித்தது: பணக்கரார் ஆவதற்கு முதலில் தெருவை கட்டு.

திரு நாடார்(திராவிடர்) சீனருடன் வியாபாரம் செய்ய பாவித்த இமைய மலை பாதையை சீனா புதுப்பிக்கிறது.

"There is an old Chinese saying, 'To get rich, build roads first'," says the Chinese team's engineer Zhang Peng.

When this road is built, I won't have to carry this heavy backpack up and down

"When this road is ready, living standards and the economy around here will improve," he says.

"Nepalese people will be able to visit Lhasa, in Tibet, and other parts of China, and Chinese tourists and businessmen will come here."

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8480637.stm

இப்போது தமிழர் அங்கு சென்று தமிழ் பகுதிகளில் பெரும் பணம் முதல் செய்ய முடியாது. எனக்கு தெரிஞ்சு செல் போன் டவர் போட போய் இருந்த காசையும் விட்டுட்டு வந்திருக்கினம். சிங்களவனும் லஞ்சம் வேண்டி, ரவை வேண்டி எங்களுக்கே சுடுவான். அவன் வேற பொருளாதார சரிவால் சரிய தயாராகிறான் இப்ப போய் நாங்கள் அவனை தூக்கிவிடக்கூடாது. தமிழ் ஈழம் கிடைத்தவுடன் கட்டியெழுப்ப திட்டங்கள் தயாராக இருக்கவேண்டும். இப்போது இருக்கும் தொழில்நுட்பத்துடன் பத்து வருடங்களில் எமது நாட்டை கட்டியெழுப்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.