Jump to content

கோமகன் செப் Chéf இன் பக்குவம் 01


Recommended Posts

கிச்சடி

தேவையான பொருட்கள்:

பொன்னி அரிசி 3 கப் .

மைசூர் பருப்பு 1 கப் .

தக்காளிப் பழம் 3 அல்லது 4 .

செத்தல் மிளகாய் 8 அல்லது 9 .

உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு .

கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு .

மிளகாய்தூள் 1 1/2 கறண்டி .

மஞ்சள் சிறிதளவு .

செய்முறை:

பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 1/2 கறண்டி தூள் ஐயும் , மஞ்சளையும் போட்டு மூடியால் மூடி 2 விசில் விடுங்கள் . பிறசர் (Presher ) இறங்கியதும் திறந்து கொத்தமல்லிக் கீரையைப் போட்டு மூடி விடுங்கள் . கிச்சடி தயார் . இதுக்கு சேர்மதியாக பச்சடி செய்ய வேண்டும் .

பச்சடி

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் 6 .

யோகூர்ட் ( தயிர் ) 3 அல்லது 4 (125 g) பெட்டி .

பச்சை மிளகாய் 4 அல்லது 5 .

செய்முறை :

வெங்காயத்தை குறுணியாக வெட்டுங்கள் . சின்ன மிளகாயையும் வெட்டுங்கள் . வெட்டியதை தயிரில் போட்டு சிறிதளவு கொத்தமல்லி இலையை கிள்ளி போடுங்கள் . பச்சடி தயார் . பொரித்த அப்பளமும் இருந்தால் இன்னும் தூக்கும் .

பக்குவங்கள் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன பத்தியகாரர் சாப்பிடுற சாப்பாடுமாதிரிக்கிடக்கு.....வேலையிடத்திலை நாயடி பேயடி அடிச்சுப்போட்டு வந்து...பச்சடியும் சோறும் சாப்பிட எனக்கென்ன விசரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க பச்சடி கிச்சடி செய்ய இலகுவாய் இருக்கே. தாங்ஸ்.

Link to comment
Share on other sites

உதென்ன பத்தியகாரர் சாப்பிடுற சாப்பாடுமாதிரிக்கிடக்கு ஏதாவது எங்கட ஊர்சமையல் பற்றிய குறிப்பை இணைக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் மன்னிக்கவும் மிளகாயை மிழகாய் என எழுதி உள்ளீர்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறசர் குக்கர் இல்லாமல் செய்யேலாதா?

அத்துடன் கிச்சடியையும், பச்சடியையும் என்னத்துடன் சாப்பிடுவது?

Link to comment
Share on other sites

கோமகனுக்கு ஏன் இந்த ஆசை? அரிசியையும் பருப்பையும் சேர்த்து அவித்துவிட்டு கிச்சடி என்று பெயர் சூட்டல் வேறு! :D -- நெருஞ்சிக்கதையை தொடருங்கள். அது பிரமாதம்.

கிச்சடி - ரவையில் சேமியா, தக்காளி சேர்த்து செய்வார்கள் என்று நினைக்கிறேன். உப்புமாவின் வேறு வடிவம்.

பி.கு - கோவிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

உதென்ன பத்தியகாரர் சாப்பிடுற சாப்பாடுமாதிரிக்கிடக்கு.....வேலையிடத்திலை நாயடி பேயடி அடிச்சுப்போட்டு வந்து...பச்சடியும் சோறும் சாப்பிட எனக்கென்ன விசரே?

ஒருக்கா சாப்பிட்டு பாக்கிறது . பேந்து தூக்குதா படுக்குதா எண்டு பாப்பம் கு சா :lol::D :D :D .

கோமகனுக்கு ஏன் இந்த ஆசை? அரிசியையும் பருப்பையும் சேர்த்து அவித்துவிட்டு கிச்சடி என்று பெயர் சூட்டல் வேறு! :D -- நெருஞ்சிக்கதையை தொடருங்கள். அது பிரமாதம்.

கிச்சடி - ரவையில் சேமியா, தக்காளி சேர்த்து செய்வார்கள் என்று நினைக்கிறேன். உப்புமாவின் வேறு வடிவம்.

பி.கு - கோவிக்க வேண்டாம்.

அது ரவா கிச்சடி ...... இது பொன்னி அரிசி கிச்சடி...... சத்தான தீனியா தருவம் எண்டால் விடமாட்டியளே :D :D :icon_mrgreen: :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

பிறசர் குக்கர் இல்லாமல் செய்யேலாதா?

அத்துடன் கிச்சடியையும், பச்சடியையும் என்னத்துடன் சாப்பிடுவது?

கிச்சடிக்குள் , தக்காளிப் பழம் , மைசூர் பருப்பு , உறைப்பு பக்த்திலை பச்சடி + அப்பளம் , இதை விட வேறை என்ன கிருபன் வேணும் :icon_mrgreen: . மேலும் பிறசர் குக்கர் இல்லாமல் இது செய்ய முடியாது :) .

கோமகன் மன்னிக்கவும் மிளகாயை மிழகாய் என எழுதி உள்ளீர்கள் :unsure:

உரிமையுடன் பிழையை எடுத்துக் காட்டிய ரதி அக்காவிற்கு ஒரு ஓ...................... :D :D திருத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆ மஞ்சள் தூள் போடாத கிச்சடிய இப்பத்தான் பக்கிறேன் ரொம்ப நன்றி தோழர் கோமகன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
    • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
    • 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்)   வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.   திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது.   முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
    • அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை.  இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும்.    அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   
    • கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம் கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/310019
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.