Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    12
    Points
    15791
    Posts
  2. தமிழ்சூரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    10
    Points
    5566
    Posts
  3. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    13683
    Posts
  4. பகலவன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    1905
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/28/13 in all areas

  1. வணக்கம் ஜெயபாலன் அண்ணா, மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி. எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும். ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும் உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும் கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது. உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது. அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும், அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும். ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள் என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது. உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது. உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன். என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன். அது வரைக்கும் நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது, என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன். நன்றி
  2. அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன், நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன். ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழனை தான் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவோ / கடத்தவோ முடியும் என்று, அதுவும் வெளிநாட்டு தலைவர்கள் வந்து சென்று சில நாட்களில், உலக ஊடகங்களே உற்று நோக்கும்போதே செய்ய முடியும் என்று சிங்களம் காட்டிய போது, அதை எங்கள் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்த தவறி விட்டனவே என்று நான் கவலையுடன் இருந்த போது உங்கள் விடுதலை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த வேளையில் உங்கள் விடுதலைக்கு உதவியவர்களுக்கு உங்கள் யாழ் கள உறவாக நானும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன். வன்னி எங்கும் எத்தனையோ தமிழ் மக்களை பலிகொடுத்த போது உலகெங்கும் தொலைபேசி எடுத்து மக்கள் கதறி அழுதபோது பேசாமல் இருந்த உங்கள் நண்பர் நோர்வே சுந்தரலிங்கம், வன்னிவிளாங்குளத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இருபது வினாடிகளில் நோர்வேயில் இருக்கும் உங்கள் நண்பர் சுந்தரலிங்கத்துக்கு எடுத்து சொன்னபோது (கவனிக்க அந்த மக்களுக்கு உங்களின் நண்பரின் தொலைபேசி இலக்கம் கிடைத்த விதம் உங்களுக்கு தான் தெரியும், சில வேளைகளில் நீங்கள் தொலைபேசி எடுக்க சொல்லித்தான் கத்தினீங்களோ TID இற்கு தான் வெளிச்சம்) உங்கள் நண்பர் ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு முதலில் நன்றி. மக்களை கதற கதற கொன்ற சிங்கள பயங்கரவாதிகளின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, உங்களின் கத்தலை கேட்டு உங்கள் அம்மாவின் சமாதிக்கு அழைத்து சென்றமைக்காக அவர்களின் மனித நேயத்துக்காக நன்றிகள். (நீங்கள் உங்கள் அம்மாவின் சமாதிக்கு உண்மையிலேயே சென்றிருந்தால் உங்கள் அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்.) எத்தனயோ பள்ளிவாசல்கள் உடைக்க பட்ட போதும், ஹலால் எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் எரிக்கபட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் கலவரங்கள் நடந்த போதும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அமைச்சர் ஹக்கீம், உங்களுக்காக அமைச்சு பதவியில் இருந்துகொண்டே அரசை எதிர்த்து பேசியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள். உங்களைப்போல எத்தனயோ தமிழ் கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், சிங்கள அரசால் கொல்லப்பட்டபோது, அவர்கள் நல்லவர்கள், பொய் பேசாதவர்கள் என்று ஒரு வார்த்தை கூட பேசாத பஷீர் சேகுதாவுத் அவர்கள், உங்களை புகழ்ந்தமைக்காக நன்றிகள். நடுநிலை வகிக்கவந்த தங்களை கூட பொருட்படுத்தாமல், பச்சை குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் சிங்கள பேரினவாத அரசாங்கம் குண்டு வீசி அழிப்பதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தும் கூட , ஒரு சொல்லுக்காக கூட வாய்திறக்காத தோழர் எரிக் சோல்கைம், கொட்டும் பனியிலும் தங்களின் உறவுகளுக்காக ஆயிரமாயிரம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் போராடிய போது மௌனமாக இருந்த தோழர் எரிக் சோல்கைம், ராஜதந்திர வழமைக்கு மாறாக உங்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விட்டமைக்காக என உளப்பூர்வமான நன்றிகள். வெள்ளிக்கிழமை கைது செய்தால் இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்து திங்கட்கிழமை தான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த முடியும் என்று இலங்கை சட்டங்கள் தெரிந்த உங்களை பற்றி கூட கொஞ்சமும் அறியாமல், ஒரு தமிழன் கைது செய்யபட்டிருக்கிறான் மனித உரிமைகள் மதிக்கபடுவதில்லை என்பதற்கு பதிலாக, இந்திய தேசிய விருது நடிகர்,புகழ் பெற்ற கவிஞர் கைது என்று கொள்ளை எழுத்தில் வியாபாரம் செய்த ஊடக நண்பர்களுக்கும் புரட்சி வாதிகளுக்கும் நன்றி. முக்கியமாக மெழுகுதிரி வெளிச்சத்தில் என்னை ஆதவன் பத்திரிகைக்காக சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பேட்டி எடுக்க வந்த மஞ்சுள வெடிவர்த்தன, இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் குற்றங்களே செய்யாமல் சிறையில் வாட, உங்களுக்காக விரைந்து செயற்பட்டமைக்காக நன்றிகள். இதைவிடவும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கதற கதற சுட சொன்னவரும், தமிழ் ஆண்களின் இரத்தம் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று, சிங்கள படையினருக்கு கட்டளை இட்டு எத்தனையோ இசைபிரியாக்களை கத்த கத்த அழிப்புக்கு மூல காரணமான கோத்தபாய, நீங்கள் கத்த கத்த உங்களின் இரத்தத்தை கடலுக்கு காணிக்கையாக்காமல் விட்டதுக்கு கோடான கோடி நன்றிகள். (சில வேளைகளில் அவனுக்கு தெரிந்திருக்குமோ நீங்கள் மற தமிழன் இல்லை என்று ) இறுதியாக நீங்கள் விடுதலையாகி வந்ததும், முதல் அறிக்கை என்ற பெயரில் எண்ணற்ற அறிக்கைகளை விடப்போறீங்கள் என்று உங்கள் முதாலவது அறிக்கையிலேயே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள். இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில் மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன். நன்றி. அன்புடன், பகலவன். பிற்குறிப்பு : ஜெயபாலன் ஐயா, உங்களை கருணாவிடம் இருந்து காப்பாற்றி உங்களை யார் என்று இப்போ உலகுக்கு காட்டியமைக்காக பொட்டம்மானுக்கும் நன்றி. உங்களை வைத்தியசாலையில் வைத்து கொல்லாமல் விட்ட குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் இற்கும் நன்றி. இன்னும் இரண்டு ஒரு வாரங்களில் நான் இலங்கைக்கு சென்று தமிழ்-சிங்கள நல்லிணக்கம் பற்றி பேச விரும்புவதால், என்ன மாதிரியான முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும் என்று உங்கள் ஆலோசனை தேவை. அத்துடன், எனக்கு தமிழ் அரசியல் படிக்க நிறைய நாள் ஆசை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பகுதிநேரமாக படிக்க கேட்ட போது, அவர் தனது வயதையும், நேரமின்மையும் சொல்லி உங்களை கேட்டு பார்க்க சொன்னார். உங்களுக்கு நேரமிருப்பின் இந்த மடலுடன் சேர்த்து அதற்கும் பதில் தாருங்கள் ஐயா.
  3. எரிக்சொல்கைம் யார்..???! புலிகளுக்கு அப்பால் அவர் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் சொந்தம்..???! புலிகளால் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சொல்கைம். அந்தச் சொல்கைமின் தயவில் தான்.. இன்று இணக்க அரசியல் செய்யப்புறப்பட்ட ஐயா உயிரோடு வந்திருக்கிறார். ஹக்கீம்.. சொல்லி 72 மணி நேரமாகியும்.. கோத்தா அசறவேயில்லை. ஆனால் ஹக்கீமிற்கு முதல் வாக்கு..! இப்ப கூட கோத்தாவிற்கு காயப்படாத கல்லெறிகள்.. இது தான் ஹக்கீம்.. சோவுதாவுக் சொல்லி அனுப்பினது..???! ஆனால்.. புலம்பெயர் மக்களின் முன்னெடுப்பில் சர்வதேச விசாரணை என்பது தான் ஐயாவையும் காப்பாற்றி இருக்குது. இந்திய ஊடகங்களுக்கு இந்தியாவை.. சிறீலங்காவை புகழ்ந்தளித்த.. புலிகளை விமர்சித்து அளித்த மோசமான செவ்விகள் அல்ல. மீண்டும் பொட்டம்மான்.. செஞ்சோற்றுக் கடனுக்காக. இந்தச் சம்பவத்தின் பின்னாவது ஐயாவின் மனநிலைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டால் உண்டு. இன்றேல்.... நாய் வால் கதை தான். எதுஎப்படியோ சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.
  4. கவிஞரை மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி! ஆனாலும் 'குரைப்பது' அல்லது 'கோபப்படுவது' இரண்டுமே கோழைகளின் செயல் என்பதே எனது கருத்து! ஒரு நாய் கடிக்கும் என அறிந்தும், நானும் திரும்பக் கடிக்கத் தான் போகின்றேன் என்று பிடிவாதம் பிடிப்பது வீரமாகாது! தனது மரணப்படுக்கையிலும், நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, உங்களிடம் சத்தியம் வாங்கிகொண்ட ஒரு தாயின் மனதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்! நீங்கள் நடந்து கொண்ட விதமானது, உங்களைப்பற்றி,அனாவசியமான வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது! மேலுள்ள உங்கள் அறிக்கையானது போதுமான 'விளக்கத்தை' அளிக்கவில்லை என்றே கருதுகின்றேன்! இது எனது தனிப்பட்ட கருத்தேயாகும்!
  5. ஐயாவின் இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்டேன். பல விடயங்களை சமகால யதார்த்தங்களோடு நின்று.. நியாயமாகவே பகிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது..! இருந்தாலும்.. இந்தியாவை மையப்படுத்தியே அவர் தமிழர்களின் உரிமையை தக்க வைக்க நினைக்கிறார்.. அதற்கு அப்பால் செல்ல பயப்படுகிறார்..!
  6. யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத றெம்ப அப்பாவிகள் இருக்கிறாங்கள். :lol:
  7. சபேசன், கவிஞருக்கு என்றைக்காவது தாயகம் போக வேண்டி தேவை இருக்கும் என்பதையும் அதற்காக எவரையும் நோகடிக்காமல் இருக்கும் தேவை இருப்பதையும் புரிந்து கொள்கின்றேன். அவ்வாறு தேவை இருப்பவர் தன் விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு பெரிய நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். பதிலாக மிக மோசமான மனித உரிமைகளை மீறியவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவேண்டி வந்த தேவை என்ன? நீங்கள் சொல்வது போன்று, அங்கு கைது செய்யப்பட்டு பின் (காசு கொடுத்தோ கொடுக்காமலோ) விடுவிக்கப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்து மெளனமாகி இருக்கின்றார்களே ஒழிய, தன்னை நல்லவிதமாக நடத்தினார்களோ என்றோ நெஞ்சு வலியால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுக்க போகும் போது ஒருவர் தன்னை கொலை செய்ய முனைந்தாரென்றோ, கோத்தாவை விட அவர் கொடியவர் என்றோ அறிக்கை விடவில்லையே? பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கையில் அவர்கள் முன் நின்று "அம்மாவின் சமாதியைப் பார்க்க விடு அல்லது சுட்டுக் கொள்ளு" என்று ஆக்ரோசம் கொண்ட கவிஞர் பல்லாயிரம் மைல்கள் கடந்து அறிக்கை விடும் போது மட்டும் நிதானமாக இருக்கின்றார் என்பதை நம்பவேண்டும் என்கின்றீர்கள்.
  8. இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்க தான் இவர தூக்கி உள்ள போட்டிட்டு விட்டு இருக்காங்க இவருடைய கைதில் ஆரம்பத்தில் இருந்தே எமக்கு நம்பிக்கை இல்லை....
  9. இப்படி ஒரு மலினமான விளம்பரமா...?? இருக்கும் இருக்கும்...
  10. ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .
  11. கவிஞர் ஐயாவை இந்தியாவின் ஒரு அலகாக இலங்கை பார்க்கிறதோ என்கிற சந்தேகம் உள்ளது. இதை கவிஞர்தான் விளக்க வேண்டும். ஆடுகளம் திரைப்படத்திற்கு தேசிய விருதை அவர்கள் கொடுத்தபோது நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டு என்று திரும்பிப் பார்த்தோம்.
  12. ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் . உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை. இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .
  13. என் விடுதலையை விரும்பி கருத்துத் தெரிவித்த அனைத்து யாழ்க்கள தோழ தோழியர்களுக்கும் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி. என்னைக் கொச்சைப் படுத்தியவர்கள்மீதும் வருத்தமில்லை. இனி சில வாரங்களின்பின் யாழ்களத்துக்கு வரும்போது உங்களோடு தொடர்புகொள்வேன். நன்றி - வ.ஐ.ச.ஜெயபாலன்
  14. சிவா அண்ணை... கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும் சொல்ல.... !!! விமர்சகர்களில் இரண்டு வகை.... புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்.... ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது... மற்றது புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால் வருவது... கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !! அதில் சந்தேகம் கிடையாது... இலங்கை அரசு எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மதிப்பது கிடையாது... இது அனைவருக்கும் தெரிந்த ஒண்று... அங்கு சுதந்திரமாக போய் அரசியல் வேலை செய்யலாம் எண்று கவிஞர் நினைத்து போய் இருந்து இருப்பார் ஆகில் இது அவரின் மிகப்பெரிய தவறு... இல்லை இணக்க அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு வேண்டியதை பெற போய் இருந்து இருப்பார் ஆயின் அவருக்கு இந்த நிலை வந்து இருக்க வாய்ப்பே இல்லை.... இண்டைக்கு கவிஞர் வெளியால் விடப்பட்டதுக்கும் கூட தமிழ் ஊடகங்களே மிகமுக்கிய காரணம்... கவிஞரின் கைதை செய்தவர்கள் எந்த சீருடையிலும் வரவில்லை என்கிறது தகவல்கள்... வளக்கமான காணமல் போனோர் பட்டியலில் போய் இருந்து இருக்க வேண்டியவரை முக்கிய செய்தியாக்கி காப்பாத்திய அனைத்து ஊடகங்களுக்கும் முதலில் நண்றி...
  15. ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... என்.சரவணன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில். “...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...” எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட. ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட. முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர். அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர். யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம். பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார். அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.” ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார். கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை. அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன. இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது. 10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர். அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள். அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள். இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே. அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார். இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன. யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை. ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு. அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது. ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.​ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99429/language/ta-IN/article.aspx
  16. கவிஞர் ஜெயபாலன் குற்றமற்றவர்- நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2013-11-23 இலங்கையின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்களை வா.ஐ.ச ஜெயபாலன் வெளியிடவில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் நேற்று மாலை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். வா.ஐ.ச ஜெயபாலனின் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் ஜெயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசியலைக் கடந்து இலக்கியவாதி என்ற அடிப்படையில் ஜெயபாலனின் அறிமுகம் தனக்கு உள்ளதாகவும் அவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தமிழ், முஸ்ஸிம் உறவு குறித்தும் நல்லிணக்கம் குறித்தும் கரிசணையுடன் ஜெயபாலன் செயற்பட்டதாகவும் அவர் கூறினார். ஜெயபாலனை வெளிநாட்டவர் என கருதிவிட முடியாது, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டவர் என அமைச்சர் சுட்டிக் காட்டினார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் ஜெயபாலன் செயற்பட்டதாக கூறிய கருத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மறுத்தார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஜெயபாலன் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் துறையில் ஒப்படைப்பதற்காக வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹண தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=97478&category=TamilNews&language=tamil
  17. தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட பின்பு, கூட்டமைப்பினருடன் காலம் தள்ளுவது இலங்கைக்கு மிகவும் இலகுவாக உள்ளது! இந்தியாவின் நிலையம் இது தான்! எனவே, கூட்டமைப்புக்கு எதிராகப் புதியதொரு தலைமை உருவாவதை, இலங்கை ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது! குறிப்பாக ஜெயபாலன் போன்றவர்களுக்கு, முஸ்லிம்கள், சில சிங்களவர்களின் 'பின்புல ஆதரவு' பின்னணியில் உள்ளது! அத்துடன் இனப்பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடிய பின்புலமும் இவரிடம் உள்ளது! அனந்தியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட படம் வெளியானதும், தமிழ்த் தலைமைகளும், இந்திய அவதானிகளும், சிங்களத் தலைமையும் விழித்துக்கொண்டன என்பதே உண்மையாகும்! ஜெயபாலன், நீண்ட காலங்கள் புலத்தில் வாழ்ந்திருந்தாலும், பேராசிரியர் நுஹ்மான், போன்றவர்களுடனும், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடனும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் உருவான அரசியல் வாதிகளுடனும், பல புத்தி ஜீவிகளுடனும் தொடர்புகளைப் பேணியே வருகின்றார்! ஜெயபாலனுடன் ஒரு பிடிவாதக் குணம் எப்போதும், இவருடன் இணைந்தே பிறந்தது போல உண்டு! இப்போது கூட சிங்களப் புலனாய்வாளர்களுடன் 'சண்டை' பிடித்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்! எம்மைப்போல அன்றி, இலங்கை அரசு மிக நீண்ட தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகின்றது ஏன்பதைய இந்தக் கைது வெளிக்காட்டி நிற்கின்றது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.