Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23958
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46979
    Posts
  3. முதல்வன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    657
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/23/20 in Posts

  1. அண்ணே இது இன்னொரு பரிமாணத்தை என் மனதில் தோற்றுவிக்கிறது. உண்மையில் தாயக மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை அறிய சுயாதீன தேசியம்சார் ஊடக அமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும். பலவேறு தரப்பிடம், பிரதேசம், பொருளாதாரம், கல்வியறிவு, முன்னாள் போராளிகள், போராளி குடும்பங்கள், புலி எதிர்ப்பாளர்கள், மதம், நகரம், கிராமம், புலம்பெயர்ந்தோர், பல்வேறு தொழில் சார்ந்தோர், சிங்கள பகுதியில் வாழ்வோர், என பல்வேறு samples இடம் ஒரு கேள்விக்கொத்தாக தகவல் திரப்படவேண்டும். இதற்கு கலந்துரையாடல், workshops போன்றவற்றையும் பயன்படுத்தலாம். Freelancer ஊடகவியலாளர்கள், தேசிய பற்றாளர்களை கொண்டு திரட்டப்பட்டும் தகவலை அடிப்படையாக வைத்து பயணிக்கவேண்டிய திசை ஆற்றப்படவேண்டிய களப்பணி என்பவற்றை தீர்மானிக்கலாம். இது ஒரு மக்கள் சக்தியூடாக நடாத்தப்படவேண்டும். ஊகங்களை விட தரவுகள் முடிவுகளை ஆணித்தரமாக்கும்.
  2. நன்றாக எழுதி இருக்கிறீங்கள் ரஞ்சித் அண்ணே. நான் இதில் மேலதிகமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஒரு எழுச்சிமிகு போராட்டத்தின் தோல்வியும் மக்களை விரக்தியுற அல்லது சோம்பல் நிலைக்கு தள்ளியுள்ளது. போராட்டத்தின் முறைதான் மாறியுள்ளது போரிடும் குணம் இன்னும் விரியமாகவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படவேண்டும். உதாரணமாக திலீபனின் நினைவுநாளை கொண்டாட முடியவில்லை என்றால் சிறையை நிரப்பவேண்டும். 20 000 மக்களை ஒன்றாக திரட்டினால் பொலீசால் சட்டத்தால் ஒன்றுமே செய்யமுடியாது. துணிந்து செய்ய நல்ல தலைமை வேணும், அவரை நம்பும் மக்கள் பலம் வேண்டும்.
  3. நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
  4. ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.... ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்தது கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள்ளு விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள். மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க. கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...வந்து ... மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள்ளு விடுறத பார்த்து பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன். கணவன் : மீண்டும் வாயடைத்தான்
  5. I இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை. இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது. ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை. ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்புவில் தமிழ் தேசியத்தில் மையம் கொள்கிறது. இதனாலேயோ என்னமோ -பிரபாகரன், பாலசிங்கம், போன்ற மிக சிலரைத்தவிர எம் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ் தேசியம் என்றால் மேடை ஏறி இனப்பெருமை பேசுவது, உரிமைக்காக குரல் கொடுப்பது என்பதுக்கு அப்பால் நகர முடியாமல் இருக்கிறது. யாழ் களத்தில் கூட இப்படி எழுதினால்- "பாரேன் இவர் எமக்கே வகுப்பெடுக்கிறார், நாம் போராட்டட்துக்கு எவ்வளவு செய்தோம்" என்பதாக எழுதுவார்கள். ஆனால் உண்மையில் நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விகளை நம்மை நாமே கேட்டு தெளிவாகியுள்ளோம்? இது இப்படி இருக்க "கிழக்கு தேசியம்" "அபிவிருத்தி சேர் தேசியம்" என்ற பதங்களுக்குள் எம்மக்கள் சிக்குண்டு போவதை நொந்து பலனேதும் இல்லை. மக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தேசிய அரசியலுக்குள் ஈர்க்கபடவேண்டும், மாணவர்களை ஈர்க்க வேன்டும் என்பததெல்லாம் சரியே, ஆனால் முதலில் அத்திவாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த அத்திவாரம்தான் தமிழ் தேசியம் பற்றிய தெளிவான புரிதலும், வராலாற்று பற்றிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையும். இவையின்றி நாம் ஒரு அரசியல் சித்தாந்ததை கட்டி எழுப்பினால் அது மூன்று வகையான மக்களையே பிரசவிக்கும். 1. வெற்று இனப் பெருமை பேசும் மூடர்கள் 2. சந்தர்பவாதிகள் 3. ஒரு கட்டட்டுக்கு மேல் இது "முழுதும் பொய்" என முடிவு கட்டி பாதை மாறுபவர்கள் ஆகவேதான் இந்த அடிப்படை சித்தாந்த கேள்விகளுக்கு விடை சொல்லாமல்- ஒரு ஜனரஞ்சக (populist) அரசியலாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது. ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் தமிழ் தேசியத்தை ஜனரஞ்ச வழியில் எவ்வளோ தூரம் கடத்தி வந்த போதும், அடுத்த 10 வருடட்தில், அங்கயனும், வியாழேந்திரனும் வெல்லும் நிலை வந்து, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலமே கேள்வி குறியாகி நிற்கிறதென்றால் அதன் காரணம் யாது? சித்தாந்த தெளிவின்மையே. ஆகவே இந்த திரியில் சில கேள்விகளை கேட்டு, நானும் வாசிப்பவர்களும் விளக்கம் அடைய முடியுமா என பரீட்சிக்க விழைகிறேன். இனம் என்றால் என்ன? ஆங்கில ரேஸ் (race), எத்தினிசிட்டி (ethnicity), நேசன் (nation) என்ற மூன்று பதங்களும் தமிழில் இனம் என்றே அழைக்கப்படுகிறன. ஆங்கிலத்திலும் கூட இவற்றுக்கு பல அர்தங்கள் உண்டு. இப்போதைக்கு நேசன்,எத்னிசிட்டி என்ற பதங்களை விடுவோம். ரேசை (race) மட்டும் பார்ப்போம். பொதுவாக ஒரு ஐரொப்பியரை அல்லது அமெரிக்கரை கேட்டால் தாம் காக்கேசியன் (Caucasian) ரேஸ், ஆங்கில/ஜேர்மன்/பிரென்சு எத்னிசிட்டி என்பார்கள். நாம் எப்படி? உலகளாவிய தமிழர்களின் ரேஸ் என்ன? ரேஸ் என்ற பகுப்பு ஒரு உயிரியல் பகுப்பு அல்ல. அது ஒரு சமூக படைப்பு (social construct). மனித மரபணுவில் வேறுபட்ட இனங்களை பகுத்தரிய முடியாது என்கிறது இக்கட்டுரை. https://www.nationalgeographic.co.uk/history/2019/02/race-and-ethnicity-explained சரி இந்த ரேஸ் எனும் பகுப்பு ஒரு சமூக கட்டமைவாகவே இருக்கட்டும். அப்படியானாலும் காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்? அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா? பிகு: என்னடா இதுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? என மண்டையை பிய்க வேண்டாம். நாம் ஒரு கட்டிடத்தின் அத்திவார செங்கல்லை பற்றி கதைக்கிறோம். மேலே உள்ள விதானத்தை பற்றி அல்ல என்பதை மறக்க வேண்டாம்.
  6. ஈழத்தமிழருக்கு முன்னால் இன்றிருக்கும் அரசியல்த் தெரிவுகள் என்னவென்று கேட்டிருந்தீர்களென்றால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பெரிய வேறுபாடில்லை. ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பார்த்தால் பின்வருபவை எனக்குத் தெரிகின்றன. 1. தமிழருக்கான சரியான தலைமைத்துவம் இன்மை. 2. தமிழ் அரசியல் தலைமைகளின் பிளவும், மொத்த இனத்தினையும் பிரதிநித்துவம் செய்வதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியும். 3. தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவான சக்திகளின் எழுச்சி. 4. நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலைக்கான நீதியின்மை. 5. தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் எமது தாயகம். 6. எமது தாயகத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிற்கு சிங்கள இனக்கொலை ராணுவம். 7. விடுவிக்கப்படாமலிருக்கும் தமிழ் அரசியல்க் கைதிகள். 8. நிரந்தரமாக தமது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கும் தமிழர்கள். 9. தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியும், சிங்களப் பேரினவாத அரசியலின் ஊடுருவலும். 10. தமிழரின் விடுதலைக்கெதிரான தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியலையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் இந்தியா. 11. வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழர் தாயகம். 12. தமிழர்களை பிரதேச ரீதியப் பிரித்தாள்வதில் பேரினவாதம் காட்டும் மும்முரமும், அது இன்று அடைந்திருக்கும் வெற்றியும். 13. திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டுவரும் இளைய தமிழ்ச் சமுதாயம். இவற்றினை விடவும் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். மற்றையவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். இவற்றினை எதிர்த்து அரசியல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இனி யோசிக்கலாம்.
  7. வணக்கம் வாத்தியார்........! ஆசிரியர் நிழலி : சுவி நீ ஏன் அந்த அறைக்கு செல்லவில்லை........! மாணவன் சுவி: ஐயா, உங்களது சக ஆசிரியர் நுணாவிலான் இப்படி ஏதாவது "குண்டக்க மண்டக்க செய்வார் என்று தெரியும் ஐயா......! 😢
  8. ரொம்ப நல்லது.. இங்கே சட்டப்படி இந்தி தமிழ் நாட்டுக்கு பொருந்தாது என "இந்திய அலுவல் மொழி 1976 விதிகள்" இருந்தும் திணிப்பு இருக்கிறது. அலுவலக மொழி விதி 1976
  9. ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்
  10. வணக்கம் வாத்தியார்......! ஆ: தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு நீ மாடு போல உழைக்கலியே - நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே.......! --- வந்தேண்டா பால்காரன்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.