Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19163
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2963
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/14/20 in all areas

  1. களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் காவியம் கதிர்காம கந்தன் கும்மிப்பாடல்
  2. நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் (2) பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் புரியாத பலபேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்( 2) திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும் (2) கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா அருமையான அறிவுரை இன்று ரசித்தேன் தேன் தேன் *****
  3. லண்டனில் மாவீரர் வாரம் தவிர்த்து நான் கண்ட அளவில் தமிழ் மக்கள் அதிகளவு சமூகம் தந்த நிகழ்வாக பாலா அவர்களின் இறுதி நிகழ்வு இருந்தது. ஜெரி அடம்ஸ்சுக்கு ஐ ஆ ஏ- சின்பெயின் இல் இருந்ததை போன்ற ஒரு வகிபாகம் இவருக்கும் தமிழர் அரசியலில் இருந்திருந்தால் தமிழர் அரசியலின் போக்கு வேறு விதமாக அமைந்திருக்கலாம். கண்ணீர் அஞ்சலிகள்.
  4. மனிதரில் இருக்கும் தெய்வத்தை விட்டுப்போட்டு அங்க இங்க தேடுறம்..😢..😢
  5. இரண்டு முருங்கக்காய் மட்டும்... திருடவும். 🤣
  6. வணக்கம் வாத்தியார்....! பெண் : மீன் தொடாத பூனையா தேன் தொடாத தேனீயா ஆண் தொடாத பெண்மையா அள்ளி திண்னையா பெண் : லட்சம் பெண்ணில் உள்ளது என் மொத்தம் தன்னில் உள்ளது முத்தம் மொத்தம் எத்தனை எண்ணிச் சொல்லையா பெண் : தாகமின்னு வந்துபுட்டா தண்ணியில பேதமில்ல மோகமின்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்ல பெண் : தொட்டாச்சி தொட்டாச்சி தொடாதது எல்லாம் தொட்டாச்சி ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி பெண் : அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிடு எந்த இடம் அழகு அதிகம் அந்த இடம் கொள்ளையிடு....! --- ஓ போடு---
  7. துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004 அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் தென்பகுதிகள் நோக்கி முன்னேறிவரும் புலிகள் அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டினுள் இருந்த பகுதிகளை புலிகள் சனியிரவு விடுவித்தனர். மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கருணாவின் பிரதான தளமான கஞ்சிகுடிச்சியாறு புலிகளின் அணிகளால் தளபதி ஜனார்த்தனன் தலைமையில் மீட்கப்பட்டது. இதேவேளை புலிகளின் விசேட படையணிகள் மட்டக்களப்பின் தென் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிவருவதுடன், அப்பகுதிகளில் தமது நிலைகளைப் பலப்படுத்தியும் வருகின்றன. திருக்கோயில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்த கருணா குழுவினர் புலிகள் அப்பகுதிநோக்கி முன்னேறியபோது எதுவித எதிர்ப்புமின்றி விலகிச் சென்றதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். தளபதி ஜனார்த்தன் தலைமையிலான படையணி அம்பாறை மாவட்டத்தில் இன்னும் கருணாவின் கீழிருக்கும் போராளிகளை அவரிடமிருந்து விலகிச் செல்லுமாறு அறிவித்து வருகின்றனர்.
  8. துரோகதின் நாட்காட்டி : நாள் 10, சித்திரை 2004 வாகரைப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த புலிகள் சனிக்கிழமை மாலையுடன் வெருகல் ஆற்றிற்கு தெற்கே அமைந்திருந்த வாகரைப் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின்கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டுவந்துள்ளனர். புலிகளின் ஜெயந்தன் படையணி இப்பகுதியினுள் நுழையும்பொழுது கருணா குழுவினரிடமிருந்து எதுவித எதிர்ப்பும் இருக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வாகரையைத் தமது கட்டுப்பாடின்கீழ் கொண்டுவந்துள்ள புலிகள் அப்பகுதியில் தமது நிலைகளைப் பலப்படுத்திவருவதோடு, பனிச்சங்கேணி கரையோரப்பகுதிகளையும் அதனோடு அண்டிய பிரதேசத்தையும் பலப்படுத்திவருகின்றனர். புலிகளின் ராணுவ நடவடிக்கை தொடங்கிய நாட்களில் அப்பகுதியினை விட்டு வெளியேறிய மக்கள், அப்பகுதி மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். தமிழர் தாயகத்திலிருந்து துரோகி கருணாவை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம் - விடுதலைப் புலிகள் தெரிவிப்பு புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்குவதாக அறிவித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கெதிரான ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பணிமனை சார்பாக அதன் பேச்சாளர் தயா மாஸ்ட்டர் தெரிவித்தார். புலிகளின் அறிக்கையின் விபரங்கள் வருமாறு, "புலிகளியக்கத்திலிருந்து தனித்துச் செயற்படப்போவதாக அறிவித்திருக்கும் கருணா தலைமைக்கெதிராகவும், மக்களுக்கெதிராகவும் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.தமிழ்த் தேசியத்திற்கெதிரான சக்திகள் அவரின் பின்னால் நிற்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாவின் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரும் முகமாக நாம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பதோடு கிழக்கில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையினையும், அசெளகரியங்களையும் களைய முயன்றுவருகிறோம். ரத்தம் சிந்துதலையும், உயிரிழப்புக்களையும் எம்மால் முடிந்தவரையில் தவிர்க்கும் முகமாக எமது நடவடிக்கைகள் அமையப்பெற்றிருக்கின்றன. தன்னால் பலவந்தமாக இணைக்கப்பட்ட அப்பாவிச் சிறார்கள் மீண்டும் தமது பெற்றோருடன் இணைவதை கருணா தொடர்ச்சியாகத் தடுத்து வருவதுடன், புலிகளியக்கத்தில் மீள இணையவிரும்பும் போராளிகளையும் தடுத்துவருகிறார். கருணாவின் சுயநலச் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் போராளிகளையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கிருக்கிறது. ஆகவே, கருணாவை எமது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்திருக்கிறோம். கருணாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த பல போராளிகள் எம்முடன் வந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள். தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கும் முகமாக இப்போதுவரை கருணாவுடனிருக்கும் ஏனைய போராளிகளையும் அவரை விட்டு விலகி எம்முடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் நாசகார துரோகச் செயற்பாடுகளுக்குல் பலியாகும் முன்னம் தமது பிள்ளைகளைப் பெற்றோர் கருணாவிடமிருந்து பிரித்து அழைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்".
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 கருணா துணை ராணுவக் குழு மீதான நடவடிக்கையினை புலிகளின் "ஜெயந்தன்" படைப்பிரிவே முன்னின்று நடத்தியது புலிகளின் மிகச்சிறந்த தாக்குதல் அணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியே கருணா துணைராணுவக்குழுவுக்கெதிரான பல்முனைத் தாக்குதலை முன்னின்று நடத்தியது. ஜெயந்தன் படையணியின் நடவடிக்கைக்கெதிராக துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர்களான ஜிம் கெலித் தாத்தா மற்றும் ரொபேர்ட் ஆகியோர் நடத்த முயன்ற எதிர்த்தாக்குதல்களை புலிகள் மிகவும் வெற்றிகரமாக முறியடித்து, துணைராணுவக்குழுவுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். மட்டு - அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதி ரமேஷ் மற்றும் ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாந்தன் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து மாங்கேணி வரையான நீண்ட கரையோரப் பகுதியினைக் கைப்பற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்துவருகிறது. தளபதி ரமேஷ் புலிகளின் விசேட படையணிகளின் திடீர் தாக்குதல்களில் நிலைகுலைந்துபோன துணைராணுவக் குழுவினர் குறைந்தது எட்டு 120 மி மீ மோட்டார்களுடன் முன்னேறிவந்த புலிகளின் அணிகளிடம் சரணடைந்தனர். ஆரம்பத்தில் கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தளபதி பிரபாவேஇத்தாக்குதல்களில் பாலைச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்ட புலிகளின் கட்டளை மையத்தினை வழிநடத்தினார். புலிகளின் ஜெயந்தன் படையணி பெரும்பாலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் போராளிகளைக் கொண்டே அமைக்கப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தாண்டிக்குளம் - ஓமந்தை நடவடிக்கைகளில் புலிகள் இலங்கை ராணுவத்தின் மிகப் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் நடவடிகையான ஜெயசிக்குருவிற்கு எதிராக ஜெயந்தன் படையணி 1997 இலிருந்து 1999 வரை போரிட்டது. 1999 இறுதிப்பகுதியில் வன்னியின் தென்புறத்தே ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சிங்கள ராணுவத்தை தாக்கியழித்து, பின்வாங்கச் செய்ததில் ஜெயந்தன் படையணியே முன்னின்றது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன், சிங்கள ராணுவத்தின் பெருந்தளங்களில் ஒன்றான ஆனையிறவுத் தளம் மீதான புலிகளின் வெற்றிகரமான தாக்குதலிலும் ஜெயந்தன் படையணி கணிசமான பங்கினைச் செலுத்தியிருந்தது. முன்னேறிவரும் புலிகளின் அணிகளுக்கெதிராக எதிர்த்தாக்குதல்களை உப்பாறு மற்றும் கண்டலடி , பனிச்சங்கேணிப் பகுதிகளூடாக நடத்த கருணா துணைராணுவக் குழு முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வாகரை நோக்கி முன்னேற்றம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வெருகல் ஆற்றினைக் கடந்து வாகரை நோக்கி முன்னேறிவருவதாக அப்பகுதியிலிருந்து வாழைச்சேனையை வந்தடைந்த வாகரை வாசிகள் தெரிவித்தனர். விசேட தாக்குதல் அணிகள் தலைமைதாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் தாக்குதல் அணிக்கு பின்புலத்திலிருந்து ஆட்டிலெறிச் சூட்டாதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. கருணா - துணைராணுவக் குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளின்பொழுது, இக்குழுவின் வாகரைப் பொறுப்பாளர் ஜெயம் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பால்ச்சேனைப் பகுதியில் புலிகள் தற்போது தமது நிலைகளை அமைத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணை ராணுவக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம் கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான நடவடிக்கை தொப்டங்கியதிலிருந்து இதுவரையில் 300 இற்கு அதிகமான இளவயதுப் போராளிகள் சண்டையிடாது புலிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஆற்றின் தென்பகுதியிலும், வாகரைப்பகுதியிலும் கருணாவினால் பலவந்தமாக நிலைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அணிகளின் தளபதிகளில் ஒருவர் இச்சிறுவர்கள் பற்றி கூறுகையில், "அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டிருக்கிறோம், விரைவில் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். இதேவேளை கருணா துணை ராணுவக்குழுவினரால் வாகரைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் செலுத்திகளும் சரணடைந்த போராளிகளால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, வாகரையிலிருந்து 12 கிலோம்மீட்டர்கள் தொலைவில் கடலையண்டி அமைந்திருந்த கருணாவின் பாரிய தளம் ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கதிரவெளிப்பகுதியில் முகாமிட்டிருந்த கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர் "மார்க்கானின்" நிலைபற்றி இதுவரை தகவல்கள் வரவில்லை. இதேவேளை கருணாவின் சகோதரரான, துணை ராணுவக்குழு முக்கியஸ்த்தர் ரெஜி இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா துணை ராணுவக்குழுவின் வாழைச்சேனைக்கு வடக்கேயான மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பிரதேசத்தின் பொறுப்பாளராக இவர் கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல்களின் பொழுது தப்பிவந்த துணை ராணுவக் குழுவினருடன் இவரும் சேர்ந்து காலையில் வாகரைப் பகுதியை வந்தடைந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடந்த மோதல்களில் புலிகள் தரப்பிலும், துணை ராணுவக் குழு தரப்பிலும் மொத்தமாக எட்டுப்பேர் மரணமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. காயப்பட்ட துணைராணுவக்குழுவினரில் 7 பேர் வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் இருவர் மரணிக்க, மீதிப்பேரை கருணா குழு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ராணுவத்தினரின் உதவியுடன் கொண்டுசென்றதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர். இதேவேளை வாகரைப்பகுதியில் நடந்த மோதல்களில் காயப்பட்ட 5 பெண்கள் அடங்கலாக 8 துணை ராணுவக்குழுவினர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, சித்திரை 2004 யாழ்ப்பாண வைத்தியர்களை கருணா குழு விரட்டியதால் மட்டக்களப்பு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களை துணை ராணுவக்குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பலவந்தமாக விரட்டியதனை அடுத்து ஏனைய வைத்தியர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். ஆறு வைத்திய நிபுணர்கள் அடங்கலாக பதினொரு யாழ்ப்பாணத் தமிழ் வைத்தியர்கள் கருணாகுழுவினரால பலவந்தமாக விரட்டப்பட்டு பொலீஸ் காவலுடன் மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு வெளியேற்றப்பட்டனர். செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் இவ்வாறு கருணா குழுவினரால விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களை வந்தடைந்தனர். இதேவேளை மட்டக்களப்பு நகரிலிருந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையொன்று கருணா ஆதரவாளர்களால் சூரையாடப்பட்டபின்னர் தாக்கிச் சேதமாக்கப்ப்ட்டதாக மட்டக்களப்பு நகரப் பொலிஸார் பதிவுசெய்திருக்கின்றனர். கருணா குழுவெனும் துணை ராணுவக்குழுவினரின் பிரதேசவாத சுத்திகரிப்பினைக் கடுமையாகச் சாடிய மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் ஒருவர், "கருணா குழுவினரின் மிலேச்சத்தனமான இந்த பிரதேசவாத சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உண்மையிலேயே பாதிக்கப்படப்போவது மட்டக்களப்பு வாழ் மக்களே அன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்ல" என்று கூறினார்.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று புலிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் வடபகுதியைச் சேர்ந்த தமிழர்கள் கருணா குழுவின் கொலை மிரட்டலினையடுத்து ஆயிரக்கணக்கில் வெளியேறிவரும் நிலையில், அவர்களை வெளியேற வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது. கருணாவின் முறைகேடான நடத்தைகளுக்காக புலிகளியக்கம் அவரை வெளியேற்றியிருக்கிறது. தனிப்பட்ட ஆளாக இருக்கும் கருணா மட்டக்களப்பு அம்பாறை புலிகள் என்கிற பெயரில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருவதோடு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கெதிரான அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களை துன்புறுத்தி விரட்டிவரும் கருணா, அம்மக்களின் உடமைகளை அவரது துணை ராணுவக் குழு கொண்டும், இன ஒற்றுமையினைச் சிதைக்கும் சக்திகளின் துணைகொண்டும் சூரையாடி வருகிறார். கருணாவினால் வெளியிடப்படும் எந்த அறிக்கையினையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழினத்தின் ஒரு பகுதியினருக்கெதிராக கருணாவினால் இன்று மேற்கொள்ளப்படும் கட்டாய சொத்துப் பறிமுதல்கள், சொத்தழிப்புக்கள், கடத்தல்கள் ஆகியவை மனித நாகரீகத்திற்கெதிரான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் என்று நாம் கண்டிக்கிறோம். கருணாவினால் விடுக்கப்படும் எந்த அறிவுருத்தல்களையும் செவிமடுக்கவேண்டாமென்றும், தமது வாழிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வடபகுதித் தமிழர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் அயலவர்கள் அத்தமிழர்களின் பாதுகாப்பில் கவனமெடுக்கவேண்டும் என்றும், உதவிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். என்றும் அவ்வறிக்கை கோரியது.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களைப் பலவந்தமாக கருணா வெளியேற்றியதையடுத்து மட்டுநகரில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தன மட்டுநகர், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை ஆகியவிடங்களில் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தமிழருக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படுள்ளன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை கருணா 12 மணிநேர அவகாசத்தில் விரட்டியடித்ததையடுத்து பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் உயிர் அச்சத்தில் வடக்கு நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள். முதல் நாளில் மட்டும் குறைந்தது 5000 யாழ்ப்பாணத் தமிழர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் நோக்கிப் பயணித்ததாக மட்டக்களப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் அறியத் தந்தார். யாழ்ப்பாண தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கல்வியங்காட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான ஆடை நெசவு ஆலையும் மூடப்பட்டிருந்தது. தமக்கு கருணா குழு கொலை அச்சுருத்தல் விடுத்துவருவதால் தாம் வெளியேறுகிறோம் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பொலீஸிடம் கொடுத்த முறையீடுகளைப் பொலீஸார் கண்டுகொள்ளவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர். பாண்டிருப்பில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்திவந்த தர்மரத்தினம் எனும் வர்த்தகர் அவரது கடையிலிருந்த அனைத்துப் பண்டங்களும் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரும் அவரது குடும்பமும் கடத்திச் செல்லப்பட்டு, "இனிமேல் இங்கிருந்தால் உங்களைக் கொல்வோம்" என்று கருணா குழுவினரால் எச்சரிக்கப்பட்டு உடுத்திருந்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு செங்கலடி ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணத்தமிழர்களுக்குச் சொந்தமான பெருமளவு வீடுகளும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும் சூரையாடப்பட்டபின்னர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் மீதமிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து அன்றைய பொழுதுகளைக் கழித்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டக்களப்பிலிருந்து உடனே வெளியேறுமாறு கருணா அறிவிப்பு இன்று மட்டக்களப்பின் சகலவிடங்களிலிம் இருந்து யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடனேயே மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு துரோகி கருணா எச்சரித்திருப்பதால் மட்டக்களப்பில் அசாதாரணமான அச்சநிலையும் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கருணா துணை ராணுவக்குழுவுடன் இணைந்து சிங்களப் பொலீஸாரும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை உபயோகித்து யாழ்ப்பாணத்தமிழர்களை 12 மணிநேரத்திற்குள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறும் அல்லது விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தமிழர்களை கடுமையாக விமர்சித்த துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டதோடு, "யாழ்ப்பாணத்தமிழர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிணிகள், சாபக்கேடுகள்" என்றும் விழித்திருந்தன. மட்டு நகரில் பல்லாண்டுகளாக அரச அதிகாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கானோரை சகல அசையும், அசையா சொத்துக்களையும் அப்படியே விட்டு விட்டு வெறும் 500 ரூபாயோடு மட்டும் 12 மணிநேர அவகாசத்தினுள் வெளியேறவேண்டும் என்கிற எச்சரிக்கை நகர் முழுதும் கருணா குழுவினராலும், சிங்களப் பொலீஸாரினாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.